Tuesday, September 26, 2006

சிகப்பு மாளிகை

இந்தியில்: ஷிவானி
தமிழில்: மதியழகன் சுப்பையா


தாஹிரா தனக்கு அருகில் இருந்த பர்த்தில் படுத்திருக்கும் தனது கணவனை பார்த்து ஒரு பெருமூச்சு இழுத்தபடி புரண்டு படுத்தாள். போர்வையால் மூடப் பட்டிருந்த ரஹமான் அலியின் உயரமான தொந்தி வண்டியின் ட்டத்திற்கு ஏற்றபடி அதிர்ந்து கொண்டிருந்தது. இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. தாஹிரா தனது மென்மையான மணிகட்டில் கட்டியிருந்த வைரத்தால் செய்யப் பட்ட கடிகாரத்தை ராய்ந்தாள். எவ்வளவு நேரமாக மணியடித்துக் கொண்டிருக்கிறது என்று சலித்துக் கொண்டாள். இரவு முழுவதும் அவள் ஒரு கண்ணைக் கூட மூடவில்லை. பக்கத்து பர்த்தில் அவளது கணவனும் அதன் கீழ் பர்த்தில் அவளது மகள் சல்மாவும் ழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். தாஹிரா பயத்தில் அதிர்ந்து எழுந்து உட்கார்ந்தாள். கணவன் கூப்பிட்டதும் வந்திருக்கக் கூடாது என்றும் எதாவது சாக்குபோக்கு சொல்லியிருக்கலாம் எனவும் யோசித்தாள். காலத்தாலும் மாறுபட்ட சூழலாலும் மறைந்து போயிருந்த காயத்தை அவளே கிளரி விட்டாள். இனி அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
ஸ்டேஷன் வந்து விட்டது. தாஹிரா கருப்பு பட்டு புர்காவை இழுத்து கொண்டாள். பெரிய சூட்கேஷ், புதிய சுருள் படுக்கை, ஏர் பேக், வெள்ளிக் குடுவை கியவற்றை இறக்கி வைத்து விட்டு ரஹமான் அலி தாஹிராவின் கையை ஒரு கண்ணாடி பொம்மையை இறக்குவது போல் கவனமாகவும் அமைதியாகவும் இறக்கினான். சின்னதாக ஒரு தள்ளு பட்டால் கூட உடைந்து விடுவாளோ என்று எண்ணுமளவுக்கு அவன் அவளை காத்தான். சல்மா ஏற்கனவே குதித்து இறங்கியிருந்தாள்.
தூரத்திலிருந்து கைகளில் கருப்பு தொப்பியுடன் தூரத்திலிருந்து ஓடி வந்த ஒரு ள் மூச்சிறைத்தபடி ரஹமான அலியை கட்டிப் பிடித்துக் கொண்டார். பின் அவனை இடுப்போடு சேர்த்து இறுக்கித் தூக்கி காற்றில் சுற்றினார். அந்த இருவர் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருகி ஓடியது. '' சரி, இவர்தான் மாமுவாக இருக்கும்'' என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டாள். மகளைப் பார்த்து மாமு உடனடியாக அணைத்துக் கொண்டார். '' உண்மையில் இஸ்மத் தான், ரஹமான்'' என்றபடி அவர் சல்மாவின் கைகளில் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். '' அதே கண்கள், அதே முகம், அதே உருவம். இஸ்மத் இல்லையென்பதால் குதா நமக்கு இன்னொரு இஸ்மத்தை அனுப்பி வைத்துள்ளார்.'' என்றார் மாமு.
தாஹிரா முகத்தை கல்லாக இறுக்கிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். அவளது இதயத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை யாரால் பார்க்க முடிந்தது? அதே ஸ்டேஷன், மஞ்சள் பூக்கும் அதே அரளிச் செடி. கடந்த பதினைந்து ண்டுகளில் இந்த சிறிய ஸ்டேஷனை யாராலும் மாற்ற முடியவில்லைதான். ''வா பேட்டி, வெளியே கார் நிற்கிறது'' என்று மாமு அழைத்தார். மேலும் ''சிறிய ஜில்லாதான். னால் அல்டாப் முதன்முதலாக தனது பணியில் இங்குதான் இடமாற்றம் செய்யப் பட்டான். இன்ஷாஅல்லா, இனியாவது ஒரு பெரிய நகரம் கிடைக்குமா?''
மாமுவின் ஒரே மகன் அல்டாப்பின் திருமணத்திற்காக பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறான். அல்டாப் போலீஸ் அதிகாரியாக இந்த ஊருக்குத்தான் மாற்றலாகி வர வேண்டுமா? தாஹிரா மீண்டும் மனதுக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தாள்.
வீட்டை அடைந்ததும் பாட்டி சந்தோஷத்தில் பைய்த்தியமாகிக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டும் ரஹமான் அலியைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். சல்மாவைப் பார்த்தமாத்திரத்தில் தாஹிராவை கவனிக்க மறந்து விட்டாள். '' ஹே அல்லா, இது என்ன உன் அற்புதம், இஸ்மத்தை அப்படியே அனுப்பி விட்டாயே!'' என்றாள் பாட்டி. '' உண்மைதான் அம்மி ஜான், இவள் இஸ்மத் பாவைப் போல்தான் உள்ளாள். கொஞ்சம் மருமகளின் முகத்தையும் பாருங்களேன். இதே பாருங்கள் தேவதையை'' என்றபடி டாஹிராவின் புர்காவை விலக்கினாள் மருமகள். '' அல்லா, இது முகமா இல்லை நிலவின் துண்டா? பாருங்கள் பொன் விளக்கின் ஒளியைப் போல் அல்லவா மின்னுகிறது'' என்றாள் பாட்டி.
தாஹிரா வெட்கத்தால் தலை குணிந்து கொண்டாள். பதினைந்து ண்டுகளில் முதல் முறையாக மாமியார் வீட்டிற்கு வந்திருகிறாள். மிகுந்த சிரமத்திற்குப் பின் இந்த விசா கிடைத்திருந்தது. மூன்று நாட்கள் இருந்து விட்டு மீண்டும் பாகிஸ்தான் போய் விடுவாள். னால் இந்த மூன்று நாட்களும் எப்படிக் கழியும்?
'' வா மருமகளே, மாடியில் இருக்கும் அறையில் ஓய்வு எடுத்துக் கொள். நான் சாயா அனுப்புகிறேன்'' என்றபடி சின்ன மாமி மேலே வரை உடன் வந்தாள். ரஹமான் கீழே மாமுவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். சல்மாவை பாட்டி தனது மடியில் போட்டுக் கொண்டு கொஞ்ஜிக் கொண்டிருந்தாள். அடிக்கடி அவளது நெற்றியில் கைகளால் தடவி விட்டபடி '' என்னுடைய இஸ்மத், என் செல்ல மகள்'' என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.
தாஹிரா அந்த ஏகாந்த அறைக்குள் வந்ததும் புர்காவை எறிந்து விட்டாள். அடைக்கப் பட்டிருந்த ஜன்னலைத் திறந்தவுடன் அவளது இதயத் துடிப்பு சற்றே நின்று துடித்தது. அவளுக்கு முன்னாள் சிகப்பு மாளிகை நின்று கொண்டிருந்தது. சடபடவென ஜன்னலை மூடிவிட்டு கட்டிலில் விழுந்து எழுந்து உட்கார்ந்தாள். '' கடவுளே, என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்?'' அவள் தனது முகத்தை மூடிக் கொண்டு அழத் துவங்கினாள். யாரைத்தான் அவள் குற்றம் சொல்ல முடியும். இந்தியாவில் எந்த இடத்திற்குப் போனாலும் அங்குள்ள ஒவ்வொரு சிறு கல்லும் அவள் மேல் மலை போல் இடிந்து பொழியத்தான் செய்யும். அவளது கணவனுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அப்பாவி ரஹமான் அலி, அவனது பவித்திரமான கண்களில் தாஹிராவுக்காக அன்பு கங்கையாக வழிந்து கொண்டிருக்கிறது. அந்த அன்புதான் அவளை வளர்ப்பு மான் குட்டியைப் போல் க்கி தன்னுடன் கட்டிக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ரஹமான் அலியிடம் அவள் என்ன சொல்வாள் பாவம்?
பாகிஸ்தான் பிரிவினையின் போது பாதிக்கப் பட்டவர்களுள் தாஹிராவும் ஒருத்தி. அப்பொழுது சுதா என்ற பெயரில் பதினைது வயது பூங்கொடியாக இருந்தாள். அவள் தனது சகோதரியின் திருமணத்திற்காக மாமாவுடன் முல்தான் வந்திருந்தாள். கலவரத்தின் நெருப்பு அவளை பொசுக்கி விட இருந்தது. முஸ்லீம் வன்முறையாளர்களின் கும்பள்அவளை பசித்த நாய்களைப் போல் கடித்துக் குதர இருந்தது. அந்த நேரத்தில்தான் தேவனைப் போல் வந்தான் ரஹமான் அலி. அவர்கள் விடமாட்டார்கள். இந்துக்கள் அவர்களின் மகள்களையும் மனைவிகளையும் விட்டார்களா என்ன? னால் ரஹமான் அலியின் அன்பான பேச்சின் இனிமை கயிறாக அவர்களைக் கட்டிப் போட்டு விட்டது. மெலிந்த தேகத்துடன் வெளிரிப் பொயிருந்த ரஹமான் கனத்த மேகத்தைப்போல் அவர்கள் மேல் வார்த்தைகளால் படர்ந்து விட்டான். சுதா காப்பாற்றப் பட்டு விட்டாள் தாஹிராவாக மாற்றப் பட்டு. ரஹமானின் இளம் மனைவியையும் இப்படித்தான் கலவரக்காரர்கள் சிதைத்து விட்டார்கள். இவன் மட்டும் தப்பித்து ஓடி வந்து விட்டான். உயிர் பிழைத்து வந்தாலும் உடலிலும் மனதிலும் காயங்களை சுமந்தபடிதான் வந்தான். சுதா எவ்வளவோ யோசித்தாள். ரஹமானும் அப்படித்தான். னால் அவர்களை கலவரபூமி அதிகம் யோசிக்க அனுமதிக்கவில்லை. அதனால் இருவரும் தங்கள் இருவரின் கடந்த கால வாழ்க்கை குறித்து ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளாமலேயே சூழ்நிலையின் காரணமாக சமாதானமாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். தாஹிரா கவலைப் பட்டாள் அவளை சந்தோஷப் படுத்த வானத்திலிருந்து நட்சத்திரங்களை பறித்து வந்து கொடுப்பான் ரஹமான் அலி. அவள் சிரித்து விட்டாள் தன்னை அற்பணித்து விடுவான்.
ஒரு வருடம் கழித்து மகள் பிறந்ததும் மிச்சம் சொச்சம் இருந்த தயக்கமும் தடையும் முற்றிலும் விளகி விட்டிருந்தது. தற்போது தாஹிரா அவனது மகளுக்கு தாயாக இருந்தாள். அவனது நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தாள். ரம்பத்தில் கராச்சியில் அவன் ஒரு சிறிய பெட்டிக் கடை வைத்திருந்தான். இப்பொழுது அவன் ஒரு டிப்பார்ட்மெண்டல் ஸ்டோருக்கு முதலாளியாக இருந்தான். சுமார் பத்து ங்கிலோ- இந்திய அழகிகள் அவனது கட்டளைப் படி டிக் கொண்டிருப்பார்கள். சுறுசுறுப்பாக அமெரிக்க நாய்லான் மற்றும் டேக்ரான்களை விற்பனை செய்வார்கள். எழும்பும் தோலுமாக இருந்த ரஹமான் அலி காற்று நிறைத்த விளையாட்டுப் பொம்மையைப் போல் ஊதிப் புடைத்து விட்டான். அவனது தொந்தி பெருத்து இருந்தது. கழுத்து நிமிர்ந்து, மார்பு விரிந்து விட்டது, அவனது பேச்சில் இயல்பாகவே அமெரிக்க பாணி கலந்து விட்டது.
னால் நீல வண்ண பூச்சேலையில் பொதிந்த, வைரத்தைப் போல் மினுமினுப்புடன் இருக்கும் தாஹிரா யானைத் தந்தத்தால் ன கட்டிலில் இன்னமும் கவலையுடன் புரண்டு கொண்டிருந்தாள். மார்ச் மாத இளம் குளிரிலும் வியர்வை துளிர்க்கச் செய்யும் மெல்லிய வெப்பத்தில் தாஹிராவுக்கு பாகிஸ்தானில் மதியத்தின் கடும் வெளியிலில் தண்ணீரில் இருந்து எடுத்து வீசப் பட்ட மீனைப் போல் துடித்துக் கொண்டிருந்தாள்.
சந்தோஷம் கொடுக்கும் ஹோலி பண்டிகை அவளது பாகிஸ்தானிய வாழ்வில் எப்பொழுதும் வர வாய்ப்பில்லை. மிருதுவான குளிர்ந்த குங்குமத்தின் வண்ணத்தாலான புடவை கட்டியிருந்தாள். இளமை பொங்கும் அவளது கணவன் ஏதோ புத்தகத்தை கையில் வைத்துப் படித்துக் கோண்டிருந்தான். தலையின் சுருண்ட முடிக் கொத்து அவனது முன் நெற்றியில் படர்ந்து இருந்தது. கையில் வைத்திருந்த சிகரெட் பாதியிலேயே அணைந்து விட்டிருந்தது. குங்கும வண்ணத்தில் முந்தானை கண்ணில் படவே அவன் முகத்தை இன்னும் குனிந்து கொண்டான். தளிர் போல இருக்கும் அவனது இளம் மனையின் குறும்பு பார்வையை நேரே பார்க்க இயலாமல் பாவம் துடித்துப் போவன் அவன். அவனுக்குப் பின்னால் மெதுவாக நடந்து வந்து அவனது கன்னத்தில் குங்குமச் சாந்தை பூசி விட்டு விரைந்தோடிப் போய் அம்மாவுடன் பலகாரம் செய்ய உட்கார்ந்து கொண்டாள். அவளைத் தேடிப் போன அவனைப் பார்த்து தனது மாமியாரின் பார்வையில் படாதபடி அவனைப் பார்த்தாள், அவன் தனது சிவந்த நாக்கை வெளியில் நீட்டி அவளை கிண்டல் செய்தான். அவள் முல்தான் செல்வதாக இருந்தபோது '' சுதா, முல்தான் போக வேண்டாம்'' என எத்தனை முறை சொல்லியிருப்பான். னால் துர்பாக்கியத்தின் மேகங்கள் அவள் தலைக்கு மேல் வட்டமடிப்பது அவளுக்கு எங்கே தெரியும்?. ஸ்டேஷனில் விட வந்திருந்தார். இதே ஸ்டேஷனில்தான். இதே மஞ்சள் பூக்கும் அரளி மரமும்தான் இருந்தது. இதே காட்டுப் பகுதிதான். மாமாவுடன் பொட்டனத்தைப் போல் கிளம்பிய அவள் நிமிர்ந்து பார்க்கக் கூட அவகாசமில்லாமல் போய் விட்டது. வண்டி கிளம்பியதும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிமிர்ந்து இறுதியாக அவனை ஒருமுறை பார்த்தாள். அதுதான் அவள் விழுங்கிய அமுதத்தின் கடைசி சொட்டு.
சுதா செத்துப் போய் விட்டாள். இப்பொழுது இருப்பது தாஹிரா. அவள் தனது நடுங்குகின்ற கைகளால் மீண்டும் ஜன்னலைத் திறந்தாள். அதே சிகப்பு மாளிகை தெரிந்தது. அவளுடைய சைக் கணவன் வக்கிலின் மாளிகை. இரவு ராணி மலர்ச் செடி ஏறி அமர்ந்திருக்கும் மாடியின் மூன்றாவது அறை தெரிந்தது. அங்கே அவளது எத்தனையோ இன்பமயமான இரவுகள் கழிந்திருக்கிறது. வக்கில் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை. திருமணம் செய்து கொண்டிருக்கலாம். ஒருவேளை குழந்தைகளுடன் கூட விளையாடிக் கொண்டிருக்கலாம் யாருக்கு தெரியும். கண்கள் மீண்டும் பொழியத் துவங்கின. ஒரு மாறுபட்ட மோகத்தால் அவள் அதிர்ந்து குளுங்கி அழுது கொண்டிருந்தாள்.
''தாஹிரா, எங்கே இருக்கிறாய்?'' என்ற ரஹமான் அலியின் குரலைக் கேட்டதும் தாஹிரா உடனடியாக சுருட்டிக் கட்டப் பட்ட படுக்கையை பிரிக்கலானாள். ரஹமான் அலி அவளது ஈரமான கண்களைக் கண்டதும் முட்டிட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான். ''தாஹிரா, என்ன கி விட்டது, தலையேதும் வலிக்கிறதா? போ, போய் படுத்துக் கொள். இந்த வேலைகளை எல்லாம் நீ செய்ய வேண்டாம் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். யார் கேட்கிறார்கள். இந்தா இப்படி நாற்காலியில் உட்கார். படுக்கையை நான் அவிழ்க்கிறேன்.'' வெள்வெட் மெத்தையில் பட்டு போர்வை விரித்து தாஹிராவை படுக்க வைத்து விட்டு சர்பத் எடுத்து வரப் போய் விட்டான். சல்மா வந்து தலையை அழுத்தி விட்டாள். '' திருஷ்டி பட்டிருக்கும் வேறு என்ன.'' என்றாள் பாட்டி. உடனடியாக உப்பும் வத்தலும் எடுத்து வந்து திருஷ்டி சுற்றி நெருப்பில் எரிந்தார்கள்.
அவளுக்கு அன்பாகவும் செல்லமாகவும் தட்டிக் கொடுத்து விட்டு அனைவரும் போய் விட்டார்கள். பக்கத்தில் படுத்திருந்த ரஹமான் அலி புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவள் ஓசையில்லாமல் ஜன்னலருகில் போய் நின்று கொண்டாள். வெகு நாட்களாக தாகத்தில் இருந்தவனுக்கு குளிரிந்த நீர் ஊற்று கிடைத்தது போல் இருந்தது. தண்ணீர் குடிக்க குடிக்க தாகம் அடங்காமல் இருப்பது போலும் இருந்தது. மூன்றாவது மாடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த வீட்டில் இரவுச் சாப்பாடு தாமதமாகத்தான் முடியும். சாப்பாட்டிற்குப் பின் அவர்களுக்கு பால் குடிக்கும் பழக்கமும் இருந்தது.
இத்தனை ண்டுகள் கழிந்த பின்னும் அந்த வீட்டின் ஒவ்வொரு பழக்கமும் இரண்டாம் வாய்ப்பாட்டைப் போல் நினையில் இருந்தது. சுதா, சுதா! நீ எங்கிருக்கிறாய்? அவளது மனதுக்குள் கூப்பிட்டுக் கொண்டாள். நீ ஏன் உனது கழுத்தை நெரித்துக் கொள்ளவில்லை.? நீ ஏன் கிணற்றில் குதித்து செத்துப் போகவில்லை.? பாகிஸ்தானின் கிணறுகள் காய்ந்து போய் விட்டனவா? நீ மதத்தை விட்டு விட்டாய் னால் நம் பண்பாட்டையுமா விட்டு விட்டாய்? அன்பின் பிரவாகத்தை திருப்பிக் கொண்டாய் னால் தொடர்பு அறுந்து போகவில்லையே. ஒவ்வொரு ஹோலியும், திவாளியும் ஒவ்வொரு விழாவும் உனது இதயத்தில் சம்மட்டியாய் அடித்துப் போகவில்லையா? ஒவ்வொரு ஈத்தும் உன்னை சந்தோஷத்தில் ஏன் நிரப்பி விட வில்லை? இதோ உனக்கு எதிரே நீ புகுந்த வீட்டின் மாளிகை உள்ளது. போ, போய் அவர்களின் கால்களில் விழுந்து உனது பாவத்தை கழுவிக் கொள். தனது அழுகையை நிறுத்திக் கொள்வதற்காக துப்பட்டாவை வாய்க்குள் வைத்து அழுத்திக் கொண்டாள்.
ரஹமான் அலி மீண்டும் புரண்டு படுத்தான். அவனது அசைவில் படுக்கை சரசரத்தது. கால்கள் அழுந்த சத்தமில்லாமல் தாஹிரா மீண்டும் வந்து விட்டாள். காலையில் எழுந்த போது செகனாயி முழங்கிக் கொண்டிருந்தது. பல வண்ணங்களில் பட்டும் பாவடையும் கட்டிக் கொண்டு ஜரிகை மின்னும் துப்பட்டாக்களுடன் வைரம் மற்றும் முத்துக்கள் மின்ன வீட்டில் கூட்டம் கமகமத்துக் கொண்டிருந்தது. சீருடை பேண்ட்காரர்கள் தயாராய் இருந்தார்கள். அவர்களின் காக்கி உடையும் சிகப்பு வண்ண ஜரிகையும் சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருந்தது. ஊர்வலத்தில் வீட்டின் அனைத்துப் பெண்களும் வருவார்கள். ஒரு பஸ்சில் பட்டுத் துணியால் அலங்கரித்து இருந்தார்கள். நீளமாக கண்களில் மை தீட்டிய இளம் பெண்கள் போதை கொண்டவர்களைப் போல் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பஸ்சில் ஏறிக் கொண்டிருந்தார்கள். கிழவிகள் தங்கள் வெற்றிலைப் பெட்டிகளை தூக்கிக் கொண்டு சவுகரியமாக இடம் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இந்த அலங்கார ஊர்வலத்திற்குப் பின்னால் கருப்பு புர்கா அணிந்த படி தாஹிரா தயங்கி தயங்கிச் சென்று கொண்டிருந்தாள். அவள் தன்னுணர்வை இழந்தவள் போல் நடந்து கொண்டிருந்தாள். இப்படித்தான் ஒரு மாலையில் இவளும் அலங்கரித்துக் கொண்டு மணமகளாக இந்த ஊருக்கு வந்திருந்தாள். பஸ்சில் மின்னும் சிகப்பு பட்டுத்துணியில் பொதிந்து வந்திருந்தாள். னால் இன்று இந்த கருத்த புர்கா. இந்த புர்கா அவளது முகத்தை மட்டுமல்ல அவளது கடந்த காலத்தையே இருட்டில் மூழ்கடித்து விட்டிருந்தது.
''யப்பா, யாராவது வக்கில் சாஹப் வீட்டிற்கு அழைப்பு சொன்னீர்களா?''
என்று பாட்டி கத்திக் கேட்டதும் தாஹிராவின் இதயம் வெளியில் வந்து துடித்தது போல் இருந்தது.
''அழைப்பு சொல்லியாச்சு அம்மா'' மாமு பதில் சொன்னார். '' அவரது உடல்நிலை சரியில்லையாம், அதனால் தான் வரவில்லையாம்'' என்று முடித்தார்.
''ரொம்ப நல்ல மனிதர்'' என்றபடி பாட்டி வாயில் வெற்றிலையை நிரப்பினாள். வெற்றிலை டப்பாவை மூடி வைத்தபடி '' இந்த நகரத்தின் மிகப் பெரிய வக்கிலின் மகன், னால் பொண்டாட்டி புள்ளைன்னு ஒன்னும் கிடையாது. கலவரத்தில் அவரது மனைவி செத்துப் போனதுக்கப்புறம் கல்யாணமே பண்ணிக்காம இருந்திட்டார்'' என்று வெற்றிலையை மென்றாள்.
ரொம்ப கோலாகலமாக திருமணம் முடிந்தது. நிலவுத் துண்டைப் போல் அழகான மனமகள் வந்து விட்டாள். அன்று மாலை அவர்கள் சினிமா பார்க்க திட்டமிட்டு இருந்தார்கள். புதுத் தம்பதிகள், பாட்டி, பெண்கள், இவர்களோடு வீட்டில் வேலைப் பார்ப்பவர்களும் சிங்காரித்துக் கொண்டு சினிமாவுக்கு கிளம்பினார்கள். னால் தாஹிரா போகவில்லை. அவளுக்கு தலை வலித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு தலையும் காலும் இல்லாத காதல் பாடல்களை கேட்டும் சக்தி இல்லை. அந்த அறையில் தனியாக சத்தமில்லாமல் படுத்துக் கிடக்க விரும்பினாள். பிரியமான இந்தியாவின் கடைசி மாலை.
எல்லோரும் போய் விட்ட பின் அவள் பெரிய விளக்கை ஏற்றி ளுயரக் கண்ணாடியின் முன்னாள் நின்றபடி தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள். காலமும் மாறுபட்ட ஒரு மதக் காலாச்சாரமும் அவளது அழகை அபகரித்துக் கொள்ளவில்லை. அந்த பெரியப் பெரிய விழிகள், அடர்ந்த கூந்தல் தந்தத்தில் செதுக்கப்பட்டது போன்ற வெள்ளை தேகம் என எல்லாம் அப்படியே இருந்தது.
அவள் ஒரு இளம் பெண்ணின் தாய் என்றால் யார்தான் நம்புவார்கள். எங்குமே அவளது அழகில் காலத்தின் சின்ன சிராய்ப்பு கூட இல்லை. நாளைக்கு அவ்ள் நான்கு மணிக்கு கிளம்பி விடுவாள். அவளுக்காக எல்லாவற்றையும் தவிர்த்து தனிமையிக் வாடிக் கொண்டிருக்கும் கடவுளாக மதிக்கத்தக்க அவரை ஒருமுறை கூடவா பார்க்கக் கிடைக்காது? ஒரு சைத்தானிய சிறுவனின் கண்களைப் போல் அவளது கண்கள் மின்ன ரம்பித்தது.
படபடவென தனது புர்காவை மாட்டிக் கொண்டு வெளியில் வந்தாள். கால்களில் மின்னலின் வேகம் வந்து விட்டது. னால் சிகப்பு மாளிகையில் அருகில் வந்ததும் வியர்த்துப் போய் விட்டது. மாளிகையின் பின்னால் இருக்கும் படிக்கட்டு அவளுக்கு நினைவில் இருந்தது. அந்த வழியாகப் போனால் அவரது ஜன்னலின் அருகே கொண்டு போய் விட்டு விடும்.
அவளது ஒவ்வொரு அடியும் பத்து மனதுகளால் யோசித்து நகர்ந்து கொண்டிருந்தது. இதயம் துடித்துக் கிழிந்து வாய்க்கு வந்து கொண்டிருந்தது. னால் இப்பொழுது அவள் தாஹிரா இல்லை. பதினாறு ண்டுகளுக்கு முன்னிருந்த புது மணப்பெண் சுதாவாக இருந்தாள். மாமியாரின் பார்வையில் படாமல் கணவனின் கன்னத்தில் குங்குமம் பூச போய்க் கொண்டிருந்தாள். அவரை பார்க்க நிற்கும் இந்த விலைமதிப்பற்ற கனத்தில் ரஹமான் அலியின் நினைவு கிஞ்சித்தும் இல்லை. இறுதி படிகளுக்கு வந்து விட்டாள். மூச்சை ழமாக இழுத்து விட்டாள். கண்களை மூடி மனதுக்குள் ''ஹே! ஈஸ்வரா, உனது பாதத்தில் இந்த வைர மோதிரத்தை காணிக்கையாக்குகிறேன் ஒருமுறை அவரை என் கண்களில் காட்டி விடு, னால் அவர் என்னைப் பார்க்காதபடி பார்த்துக் கொள்'' என்று வேண்டத் துவங்கினாள்.
நீண்ட காலத்திற்குப் பின் பக்தை கடவுளிடம் வேண்டியிருக்கிறாள். நிறைவேற்றாமல் இருப்பாரா? கண்களில் கண்ணீர் நிரைந்த நிலையில் அவள் தான் கடவுளாக நினைப்பவனைப் பார்த்து விட்டாள். அதே கம்பீரமாக தோற்றம், வெள்ளை பைஜாமா மற்றும் மெல்லிய வெள்ளைக் குர்தாவில் அப்பொழுது பார்த்தது போல் இருந்தான். மேசையில் அபாகியவதி சுதாவின் புகைப்படம் இருந்தது. அந்தப் புகைப்படத்தில் நகைகள் மாட்டி ஒய்யாரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள் சுதா.
''பார், மனது நிறையப் பார்த்துக் கொள், போதும் இப்பொழுது ஓடு தாஹிரா ஓடு!'' அவளது காதில் கடவுள் ஈஸ்வரனே வந்து சொல்வது போல் இருந்தது.
சுதா மீண்டும் மறைந்து விட்டாள், தாஹிரா விழித்துக் கொண்டாள். எல்லோரும் சினிமா பார்த்துவிட்டு திரும்பும் நேரமாகி விட்டது. இறுதி முறையாக கண்களால் தனது கடவுளின் பாதத்தூசிகளை எடுத்துக் கொண்டு ளில்லாத ஈஸ்வரன் கோயிலை நோக்கி ஓடினாள். இந்த கோயிலில் எத்தனை வேண்டுதல்களை வேண்டியிருக்கிறாள். அந்த கோயிலில் சிரம்தாழ்த்தி கும்பிட்டு இறுதியாக ''ஹே! ஈஸ்வரா, அவரை சந்தோஷமாக வைத்திரு. அவரது கால்களில் முள் கூட குத்தாமல் பார்த்துக் கொள்'' என்று இறுதியாக வேண்டிக் கொண்டாள். வைர மோதிரத்தை கழட்டி காணிக்கையாக வைத்து விட்டு மூச்சிறைக்க ஓடி வீடு வந்து சேர்ந்தாள்.
ரஹமான் அலி வீட்டிற்கு வந்ததும் அவளது வெளுத்துப் போன முகத்தைப் பார்த்து நாடி பிடித்துப் பார்க்கலானார். '' இப்படிக் காட்டு பார்ப்போம், காய்ச்சல் எதாவது இருக்கா? அடே, மோதிரத்தை எங்கே?'' என்று கேட்டான். அந்த மோதிரத்தை இந்த ண்டுதான் திருமண நாள் பரிசாக அவளுக்கு மாட்டி விட்டிருந்தான்.
''தெரியலை, எங்கயோ விழுந்து விட்டிருக்கிறது'' மிக மெல்லிய குரலில் தாஹிரா சொன்னாள்.
'' பராவாயில்லை'' என்றபடி ரஹமான் அலி குனிந்து அவளது குளிர்ந்த விரல்களில் முத்தமிட்டான். '' இந்த விரல்கள் உன்னதமானவை, இவற்றுக்கு வேறு வைர மோதிரம் வாங்கிக் கொள்ளலாம்'' என்றான்
தாஹிராவின் கண்கள் ஜன்னல் வழியாக இருட்டை ஊடுறுவி சிகப்பு மாளிகையில் பதிந்து இருந்தது. அதன் மூன்றாவது மாடியில் எரிந்து கொண்டிருந்த விளக்கு திடீரென அணைந்து போனது. தாஹிரா ஒரு பெருமூச்சு இழுத்தபடி ஜன்னலை மூடி விட்டாள்.
சிகப்பு மாளிகை இருளில் கழுத்துவரை மூழ்கி விட்டிருந்தது.




------------------------------------------------------------------------------------




ஷிவானி: எழுத்தாளர் ஷிவானி 17 அக்டோபர், 1923ல் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் பிறந்தார்.
மேற்கு வங்காளத்தின் சாந்தி நிகேதன் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
உத்திரப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் கல்வியை சாந்தி நிகேதனிலும் அதிகபடியான காலத்தை லக்னவிலும் கழித்தார். அவரது தாயார் குஜராத்தி மொழி நிபுனராகவும் அவரது தந்தையார் ங்கில எழுத்தாளராகவும் இருந்தனர். மலைப் பிரதேச வாழ்வும் குருதேவ் ரவிந்திரநாத் தாகூரின் கண்காணிப்பில் படிப்பும் அவரை மொழியில் மற்றும் எழுத்தில் சிறப்புத்தன்மை பெற்றுத் தந்தது. வங்காள இலக்கியம் மற்றும் பண்பாடு ஷிவானிடம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஷிவானியின் ''அமாதேர் சாந்தி நிகேதன்' மற்றும் 'ஸ்மிர்த்தி கலஷ்' என்ற புத்தகங்கள் வங்காள வாழ்க்கையை பிரதிபலிப்பவை.
' கிருஷ்ணகலி' என்ற நாவல் அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாக போற்றப் படுகிறது. இந்த நாவல் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்டு விட்டது. இவரது இலக்கிய்ச் சேவைக்காக இந்திய அரசு 'பத்மஸ்ரீ' விருது கொடுத்து கௌரவித்து உள்ளது. இவரது 'கரியே சிமா' கதையை இயக்குனர் வினோத் திவாரி திரைப்படமாக்கினார். 'சுரங்கமா' 'ரதிவிலாப்' 'மேரா பேட்டா' மற்றும் ' தீஸ்ரா பேட்டா'' கியன தொலைக்காட்சி தொடர்களாக்கப் பட்டுள்ளன.
இலக்கிய உலகில் நீங்க இடம் பிடித்த இவர் மார்ச் மாதம் 21, 2003ல் காலமானார்.
இவரது படைப்புகள் காலத்தால் அழியாமல் என்றென்றும் இருக்கும்படியானவை என்பது குறிப்பிடத் தக்கது.

No comments: