--------------------------
நின்றபடி நீரும்
நின்றபடியே மலமும்
கழிக்கிறார்கள்
பெருநரைக் கிழங்கள்
பொக்கை வாயால்
முத்தம் பதிப்பார்கள்
பெருநரைக் கிழங்கள்
பருவ மாற்றங்களில்
உடல் நலம் கெடுவார்கள்
பெருநரைக் கிழங்கள்
அதிகம் பேசுவார்கள்
அதிகம் கேட்பார்கள்
பெருநரைக் கிழங்கள்
இடைஞ்சலாய்
இருப்பார்கள்
பெருநரைக் கிழங்கள்
உண்ணும் போது
வாயு கழிப்பார்கள்
பெருநரைக் கிழங்கள்
கதை சொல்வார்கள்
பெருநரைக் கிழங்கள்
அனுபவம் பகிர்வார்கள்
பெருநரைக் கிழங்கள்
நல்ல நாட்களில்
செத்துப் போவார்கள்
பெருநரைக் கிழங்கள்.
No comments:
Post a Comment