Saturday, September 16, 2006

பெயரில் என்ன இருக்கிறது?



--------------------------

அன்றாடம் காய்ச்சியாய்
இருக்கிறார்கள்
தனசேகரன் -செல்வி
தம்பதியர்.

ஏழாம் வகுப்பில்
மும்முறை பெயிலாகி
எந்த வேலையும் கற்க
இயலாது திரிகிறான்
டம்பி மதிவாணன்.

ஏற்கனவே இருவரை
வெட்டிய வழக்கிலும்
இப்போது சிறுமியை
கற்பழித்த வழக்கில்
சிறை சென்றுள்ளான்
சித்தப்பா மகன் கருணாநிதி.

குடிகார கணவனுக்கு
வாழ்க்கைப் பட்டு
அழுது கொண்டிருக்கிறாள்
அக்கா இன்பவள்ளி.

தாத்தா- பாட்டி
அம்மா அப்பா கியோர்
முதலெழுத்து சேர்க்கையில்
பொறுக்கப் படுகிறது சில.

நாளும் நட்சத்திரமும்
முடிவு செய்வது சில

அபிமானிகள்
அன்புடையோர்
முன்னாள் காதலி/ காதலன்
எனவும் சில

தமிழார்வத்தில் சில.

கூப்பிட ஒன்றும்
குறிப்பிட ஒன்றும்
என்று சில.

யாருக்கும் பொருத்தமாய்
யாரும் தேர்வதில்லை
பெயர்களை

அதனால் இனி
அழைக்கப்பட வேண்டியவரிடம்
அபிப்ராயம் கேட்டு
சூட்டலாம் பெயர்களை.

மதியழகன் சுப்பையா.