Tuesday, September 05, 2006

குறுனைகள்-மதியழகன் சுப்பையா

குறுனைகள்
மதியழகன் சுப்பையா



1)

வேகமாய்
வேர்பிடிக்கிறது
ஓரிலைத் தாவரம்
இலைகள் குவித்து
கிளைகள் பரப்ப.

2)
பசுமை இலைகள்
சிறு- பெறு கிளைகள்
வண்ண, நறுமண
மலர்கள்
பழுத்த, சுவைமிக்க
கனிகள்
முடங்கிக் கிடக்கிறது
வீசி பிடித்து
விளையாடுவதை நிறுத்து
விதைத்துப்பார்
விந்தை புரிவாய்
அல்லேல்
விட்டெறி
தானே முளைத்து
வாழும்

3)
இலையுதிர்த்து
மெலிகிறது
மரம்
ஈரம் தேடி
அலைகிறது
வேர்கள்

No comments: