Thursday, December 07, 2006

சிட்டுக் குருவி

இந்தியில்: ரவிந்திர காலியா
தமிழில்: மதியழகன் சுப்பையா


கோடை காலத்தின் பிகாஷமான மதியப் பொழுது. இலை கூட அசையவில்லை. வெயிலின் கடுமை, அடர்ந்த காடுகளையும் தாண்டி உடலில் நெருப்பு நாக்குகளால் நக்கிக் கொண்டிருந்தது. இந்த கொடுமையான சீதோஷ்ணநிலையில் றுதலான விஷயம் சிட்டுக் குருவியின் மதூரமான குரல் மட்டும்தான். மதியத்தின் இந்த பேரமைதியில் அதன் குரல் மரம், செடி- கொடிகள் மீது பட்டாம்பூச்சியாய் தாவிக் கொண்டிருந்தது.
அந்தக் குரலின் இனிமையை பற்றிக் கொண்டே நான் வெளியில் தோட்டத்திற்கு கிளம்பினேன். மரத்திற்கு கீழே போடப் பட்டிருந்த கட்டிலில் படர்ந்தேன். குருவி அமைதியாகி விட்டாள், சுற்றுசூழல் கொழுந்து விட்டு எரிவது போல் இருக்கும். இப்பொழுது எல்லாம் எரிந்து சாம்பலாகி விடும். குருவி பேசியது என்றால் பிரலயம் இன்னும் வெகு தூரம் இருப்பது போல் இருக்கும். பூமியில் வாழ்வின் சின்னம் மிச்சமிருக்கிறது.
குருவி என்ன சொல்கிறாள் என்று எப்பொழுதும் ஒரு தெளிவின்மை இருந்து கொண்டே இருக்கும். பூமியில் உள்ள மற்ற ஜீவராசிகளைப் போல் குருவி ஏன் ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாள்? அவள் சொல்வதை எழுத்து வடிவமாக்க நினைத்திருதேன். னால் எழுத்தேட்டில் இவற்றை எழுத எழுத்துகள் இல்லை. நீண்ட காலமாக இந்த முயற்சியில் இருந்தேன். னால் எதுவும் காது என்று தெரிந்ததும் இந்த முயற்சியை கை விட்டு விட்டேன். னால் அவள் என்ன சொல்கிறாள் என்பது குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்துவிட்டேன். குருவி 'ஹர் ஹர் மகாதேவ்' என்று சொல்கிறது என்றும் காயத்திரி மந்திரத்தை பாடிக் கொண்டிருக்கிறது என்றும் வேத நூலின் ஏதோ ஒரு பாடலை படிக்கிறது என்றும் நான் விளங்கிக் கொண்டேன். இல்லை இது வெறும்பேச்சு உனக்கு உள்ளே இருக்கும் இந்துத்துவம் உன்னை இவ்வாறு சொல்ல வைக்கிறது. னால் குருவி 'அல்லா- ஓ- அக்பர், ' ஹே குதா-ரஹிம்' என்றல்லவா சொல்லிக் கொண்டிருக்கிறது. குருவி அல்லா, அல்லா என்றுதானே முனங்கிக் கொண்டிருக்கிறது? இல்லை குருவி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இல்லை காலிஸ்தானுக்கு தனியாட்சி கேட்கிறது. இப்படியெல்லாம் சொல்வது நிஜத்தை திசை திருப்பும் வேலையாகும்.
உண்மையில் அது தனது காதலனின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவனை ஒவ்வொரு ஒவ்வொரு இலையிலும் கிளையிலும் தேடித் தேடி கலைத்துப் போய் விட்டது. மிகுந்த மனக் கஷ்ட்டத்துடன் மரத்தின் ஏதோ ஒரு கிளையில் அமர்ந்தபடி அவனை அழைத்துக் கொண்டிருக்கிறது. எதாவது சாப்பிட்டதா என்று தெரியாது. ஒருவேளை இந்த குருவி பசியுடன் இருக்கிறதோ? காத்திருக்கா அமர்ந்தவள் பட்டினிப் போராட்டத்தை துவங்கி விட்டதோ? அவள் தற்கொலை முயற்சியில் ஏதும் இருக்கிறதோ என்னவோ? கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே இங்கே பறந்து கொண்டிருக்கும் போது கள்ளப்பருந்தின் பெயரைக் கேட்டுக் கொண்டாதோ? மனிதனின் மனதில் பலப்பல குழப்பங்கள் எழும்போது மரம், செடி பறவை பூச்சிகள் கியவை அதை விட்டு எப்படி விலக்கி வைக்க முடியும்? இவைகளும் இந்த சுற்றுச் சூழலின் அங்கம் தானே. சூறாவளியை விடவும் வேகமாய் சுழன்று அழிக்கிறது கலாச்சார சூழல். ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கடைகளின் வாசலிலும் பண்பாட்டுச் சின்னங்கள் பறந்து கொண்டிருந்தது. சம்பிரதாயங்கள் சுவரொட்டிகளைப் போல் சுவற்றில் ஒட்டப் பட்டு விட்டன. இப்படிப் பட்ட விஷமயமான உலகச் சூழலில் இந்தச் சிறிய சிட்டுக் குருவி மட்டும் எப்படி கலங்கம் இல்லாமல் இருக்க முடியும். அதனுடைய குரலைக் கேட்கும் போது அது இவ்விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறது என்றே படுகிறது.
கொஞ்ச நேரத்திற்கு குருவியின் குரல் கேட்கவில்லை. உடனே எனது பார்வை மரத்தின் உச்சிக்குப் போனது. குருவியைத் தேடியது. னால் குருவி கீழே கிளையில் அமர்ந்து இருந்தது. பாவம் அது மிக நீண்ட காலமாக ஒரு கூடு கட்டிவிட முழு முயற்சியில் இருக்கிறது. இந்த நேரம் கூட அதன் வாயில் ஒரு காய்ந்த புல் இருந்தது.
அது புல் அல்ல, அது ராமக்கல். அது கட்டப் போவது கூடு அல்ல ராமர் கோயில். ராமனின் மகிமை உலகம் அறிந்த ஒன்றாகும். திடீரென மசூதியிலிருந்து பாடல் ஒலி கேட்டதும் எனது கவனம் கலைந்தது. நானும் கற்பனையில் என்னென்னமோ எண்ணி விட்டேன். எனக்கு நினைவு இருக்கிறது இந்த கட்டிடத்தின் மிகச் சரியாகப் பின்னால் மசூதி இருக்கிறது. அதற்கு முன்னால் லமரத்தடியில் ஹனுமான் கோயில் இருக்கிறது. இந்நேரம் நான் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருந்து பார்க்கையில், கோயிலின் மேல் கலசமும் அதன் பின்னால் மசூதியின் கூம்பு வடிவக் கூறையும் தெரிந்தது. நான் கிழக்கு நோக்கி முகம் காட்டி அமர்ந்து விட்டாள் வலதுபுறம் கோயிலும் இடதுபுறம் மசூதியும் இருக்கிறது என்று சொல்லிவிட முடியும். இவைகளுக்கு இடையில்தான் எனது வீடு இருக்கிறது.
குருவி தனது அறிவினை வெளிப் படுத்தும் வகையில் கோயிலுக்கும் மசூதிக்கும் இடையில் தனது கூட்டினை கட்ட இடம் தேர்ந்து இருந்தது. கோயிலின் ஒரு பொந்தில் தனது கூட்டினை கட்டுவதிலிருந்தும் மசூதியின் கலைவேலைபாட்டு ஜன்னல்களிலும் று இன்ச் இடத்தில் தனது கூட்டினை கட்டிக்கொள்வதிலிருந்தும் குருவியை யார் தடுத்திருக்க முடியும். னால் குருவி இவ்வாறான மத விஷயங்களில் விழுந்துவிட விரும்பவில்லை.
குருவி தனது கூட்டை கட்டும் கடும் முயற்சியினை வெகு நேரமாகப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது புல்-மெல்லி குச்சிகளை தேடிக் கொண்டுவரும். சிறிது நேரம் இளைப்பாரும். இரண்டு மூன்று முறை தனது குயில் போன்ற குரலால் அங்கு உரைந்திருக்கும் அமைதியை உடைக்கும். பின் மெல்லிய குச்சிகள் தேடி மாயமாகி விடும். இந்தக் குருவி எதற்காக இத்தனை அழகான ஒரு கூட்டினை கட்டுகிறது என்றுத் தெரியுமா? இதற்கு முன் இந்தக் குருவி எங்கே இருந்திருக்கும். தனக்காக ஒரு இல்லம் அமைத்துக் கொள்ளப் போகிறதா? இல்லைதான் தங்கிக் கொள்ள ஒரு இடம் அமைத்துக் கொள்ளப் போகிறதா? இப்படியாக பலக் கேள்விகள் என்னுள் எழுந்தது.
மறுநாள் காலையில் பார்த்தேன். கூடு முழுமையடைந்து இருந்தது. இதோ அந்தக் குருவி இந்தக் கூட்டின் அங்கத்தினர் கி விட்டது. குருவிக்கு முகவரி கிடைத்து விட்டது. எனது முகவரியும் குருவியின் முகவரியும் ஒன்றாகவே இருந்தது. இனி குருவி தனது காதலனுடன் கடிதத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். தனக்கு ரேஷன்கார்டு செய்து கொள்ளலாம். தனக்காக ஓட்டுரிமை பெற்றுக் கொள்ளலாம். தனது அடையாள அட்டைக் கூட செய்து கொள்ள முடியும்.
கொஞ்ச நாட்களிலேயே எனக்கும் குருவிக்கும் இடையில் மிக நெருங்கிய நட்பு ஏற்பட்டு விட்டது. ஒருநாள் வீட்டின் ஒலித்துளையில் வந்து அமர்ந்து கொண்டு என்னோடு வினா விடை பழகிக் கொண்டிருந்தது. இன்று ஏன் நீங்கள் வெளியில் வரவில்லை? கேட்டது குருவி. எனக்கு முன்னால் உட்கார்ந்தபடி சிகரெட் புகைக்கவில்லையே ஏன்? கேள்விகள் அடுக்கப் பட்டது.
''வருகிறேன்! வருகிறேன். நீ உனது ராகத்தினை துவங்கு நான் வந்து விடுகிறேன்'' என்றேன்.
அதனுடன் நட்பு உண்டானதிலிருந்து எனது பொழுது மிக நன்றாக கழிகிறது. இந்த ஒரு வார நட்பின் ழத்தில் குருவியானது பைரவி ராகத்திலிருந்து ஜை ஜைவந்தி ராகம் வரை எல்லாவகை ராகங்களையும் பாடிக் காட்டி விட்டது.
குருவியின் ஊர் சுற்றல் கொஞ்சம் குறைந்து போயிருந்ததை நான் உணர்ந்தேன். எப்பொழுதும் தனது கூட்டிலேயே காணப் பட்டது. ஒருநாள் காலை நான் மகிழ்ச்சியால் பைய்த்தியமாகி விட்டேன். அதன் அக்கம்பக்கத்தில் மேலும் இரண்டு சின்னச் சின்னக் குருவிகள் உட்கார்ந்து இருந்தது. புதிய அங்கத்திருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப் பட்டது. வீடு மகிழ்ச்சிப் பாடல் பாடத் துவங்கியது. புதியக் குருவிகள் மிகப் பாதுகாப்பாக வளர்க்கப் பட்டது. அவைகளின் மிகச் சின்னச் சின்ன அசைவுகள் குறித்தும் வெகு நேரம் விவாதிக்கப் பட்டது.
ஒருநாள் திடேரென குருவியைக் காணவில்லை. குஞ்சிக் குருவிகள் தனியாகக் கிடக்கிறது. மதியம் வெளியில் வந்து பார்த்தபோதும் குருவியைக் காணவில்லை.
குஞ்சிக் குருவிகள் இரண்டும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அவை தனது தாய் குறித்து என்னிடம் புகார் சொல்வது போல் இருந்தது. நான் அவைகளுக்கு உதவலாம் என்று எண்ணினேன். னால் இந்த நேரம் அவர்களுக்கு என்னத் தேவையாக இருக்கும் என்பது பற்றி எனக்குத் தெரியாதே. மாலையாகி விட்டது குருவி இன்னும் திரும்பவில்லை. எனது கவலை அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்தக் சின்னக் குருவிகளின் நிலை என்னவாகும்?. இந்தக் குருவிகளுக்கு யார் உணவு கொடுப்பார்கள்? இவைகள் இன்னும் ஒழுங்காய் பறக்கப் பழகிக் கொள்ளவில்லையே. நல்ல விஷயம் என்னவென்றால் குருவி தனது கூட்டை மரத்தின் உச்சிக் கிளையில் கட்டியிருந்தது. இல்லையெனில் இதற்குள் பூனை அந்தக் குருவிக் குஞ்சுகளை ஏப்பம் விட்டிருக்கும். பலமுறை அந்தப் பூனை குருவிக் குஞ்சுகளை எச்சில் ஊறியபடி ஏக்கப் பார்வை பார்ப்பதை நான் பாத்திருக்கிறேன். பூனௌ கொஞ்ச நேரத்திற்கு அங்குமிங்கும் துள்ளிக் குதித்து வெறிகொண்டு உற்சாகமாகும். னால் குருவிக் குஞ்சுகள் பூனைக்கு எட்டாத உயரத்தில் இருந்தது. கலைத்துப் போய் பூனை திரும்பி விடும்.
குருவி இன்னும் திரும்பவில்லை, திரும்பக் கூடாது என இருக்கிறதோ. நான் இரவில் டார்ச் எரித்து பார்த்தேன். இரண்டு குஞ்சுகளும் அமைதியாய் உட்கார்ந்திருந்தன. தனது அம்மா எங்கே இருக்கிறாளோ? வழி தவறி விட்டாளோ? அவை எவ்வளவு நேரம்தான் பசியோடு இருக்கும்? அந்தக் குஞ்சுகள் பாவம் என்ன நினைத்துக் கொண்டிருக்குமோ?
நேற்று வரை எனக்கு குருவியின் மீது நிறைய அன்பு இருந்தது. னால் இன்று நான் அதன் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். நான் அதனை ஒரு தாய்மை நிறைந்த தாயகத்தான் கண்டு உணர்ந்திருக்கிறேன். தனது இந்தக் பிஞ்சுக் குழந்தைகளுடன் அது இந்த அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்ளும் என்று கற்பனைக் கூட செய்ததில்லை. நான் இருந்த கோபத்திற்கு அது மட்டும் என் முன்னால் வந்து நின்றால் ஓங்கி நான்கைந்து அரைகள் விட்டிருப்பேன். சமாதானப் படுத்திக் கொண்டு குஞ்சுக் குருவிகளை அழைத்தேன். இருளில் இருந்து வந்த அழைப்பொலியைக் கேட்டுக் குஞ்சுகள் இரண்டும் தனது இறக்கைகளை படபடத்தது. நான் கொண்டு வந்திருந்த கடலைகளை கூட்டில் எரிந்து விட்டு கனத்த மனதுடன் வந்து படுத்துக் கொண்டேன்.
''இப்பொழுது பேசாமல் படுத்துத் தூங்குங்கள். ஒரு குருவிப் பின்னால் இப்படியா பைய்த்தியம் பிடித்து அலைவது'' மனைவி கடிந்து கொண்டாள். ''ஒருவேளை அது இடையில் எப்பொழுதாவது வந்து தனது குஞ்சுகளுக்கு உணவு கொடுத்து விட்டுப் போயிருக்கலாம் இல்லையா'' என்று என்னை சமாதானப் படுத்தினாள்.
''இல்லை, அது வரவேயில்லை. குஞ்சுகள் இரண்டும் பட்டினியால் வாடிக் கிடக்கின்றன. கூட்டில் கடலைகளை போட்டுவிட்டு வந்திருக்கிறேன் கொறித்துக் கொள்ளட்டும்'' என்று மனைவிக்கு பதிலளித்தேன்.
'' போங்க, போய் பாட்டிலில் பால் நிரப்பி கொடுத்து விட்டு வாருங்கள்'' மனைவி விஷமமாகச் சொல்லிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டாள்.
''பெண்கள் அனைவரும் சுயநலக்காரர்கள். அந்தக் குருவியைப் போல'' நான் அனலாகி பதில் சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டேன்.
காலையில் தூக்கம் கலைந்ததும் எரிகின்ற கண்களை கசக்கிக் கொண்டு கூட்டினைப் பார்த்தேன். குருவியைக் கூண்டில் பார்த்து மகிழ்ச்சி கரைபுரண்டது. தாய்க் குருவி தனது இரண்டு குஞ்சுக் குருவிகளுக்கு நடுவில் கர்வமும் புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு தாயைப் போல் அமர்ந்திருந்தது. பிள்ளைகளுக்கு தனது அலகால் மாறிமாறி எதையோ ஊட்டிக் கொண்டிருந்தது. நானும் நாற்காளியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். தாய் பிள்ளைகளின் பாசப் பரிமாறல்களையும் கொஞ்சல்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன். மதியம் னதும் குருவி பரபரத்தது. அந்த தோட்டத்தையே தனது தலையில் தூக்கி வைத்துக் கொண்டது போல் கம்பீரமானது. மதியத்திற்குப் பின் வேறு ஒரு செய்தி கிடைக்கப் போகிறது என்று நான் கொஞ்சமும் உணரவில்லை.
மாலையில் வெளியில் வந்ததும் கூண்டில் குருவி மட்டுமல்ல குஞ்சுகளில் ஒன்றைக் காணவில்லை. ஒரேயொரு குஞ்சு மட்டும் தனியாக இருந்தது. ஒருவேளை பருந்து எதாவது ஒரு குருவிக் குஞ்சை தூக்கிக் கொண்டு போயிருக்குமோ? என்று எனக்கு அச்சமாக இருந்தது. னால் அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. கூட்டுக்கு மேலு பாதுகாப்பு கவசம் இருக்கிறதே. பருந்தின் பார்வை இந்தக் கூட்டில் பட வாய்ப்பே இல்லையே. அப்படியானால் தாய்க் குருவியும் ஒரு குஞ்சுக் குருவியும் எங்கே போய் விட்டன. நான் அதிக நேரம் கவலைப் படும்படியாக இல்லை. சின்னக் குருவி ரப்பர் மரச்செடியின் கீழ் உட்கார்ந்திருந்தது. நான் அதை நோக்கிப் போகையில் அது பறந்தோடி அடுத்த கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து பறந்து சீதாப்பழ மரக்கிளையில் அமர்ந்தது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தாவித் தாவிப் பறந்தது. அது பறக்கும் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பது மிகத் தெளிவாய் விளங்கியது. தனது முயற்சியைக் கண்டு தானே புலங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை பறக்கும் போது ஒரு சிறிய தொலைவை நிச்சயித்து கடந்து வெற்றிக் காண்கிறது. பின் அது குருவிகள் கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டது. அவைகளின் மத்தியில் அது ராஜகுமாரியைப் போல் காணப் பட்டது. குருவிகள் அனைத்தும் இரை பொறுக்கிக் கொண்டிருந்தன. அவைகளுக்கு மத்தியில் இந்தச் சின்னக் குருவி தனது கழுத்தை நிமிர்த்தி மிக கம்பீரமாக உட்கார்ந்திருந்தது. மற்றக் குருவிகள் அதன் பாதுகாவலர்களைப் போலும் சேவகர்களைப் போலும் காட்சியத்தன.
''நீயும் எதையாவது பொறுக்கிக் கொள். உனக்கு உணவு பொறுக்கத் தெரியாதா?'' நான் கேட்டேன். மேலும் '' நீயும் சாப்பிட்டுக் கொள் உனது தங்கைக்கும் கொண்டு கொடு'' என்றேன்.
குருவி எனது பேச்சைக் கேட்கவில்லை. கூட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. இப்பொழுது இரண்டு குஞ்சுக் குருவிகளும் கூட்டில் உட்கார்ந்து ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருந்தது. பெரியக் குருவி தனது முதல் பறத்தல் அனுபவத்தை ஒப்புவித்துக் கொண்டிருந்தது. பறக்கக் கற்றுக் கொண்ட பிறகு கூட்டிலா தங்கும் சிறிது நேரத்தில் அங்கிருந்து மாயமாகி விட்டது. இப்பொழுதும் தாயையும் மகளையும் காணவில்லை. நான் நீண்ட நேரம் அவர்கள் இருவருக்காக காத்திருந்தேன் னால் அவர்கள் திரும்பவில்லை.
''ஊர் சுற்றிங்க ரெண்டும் கிளம்பிட்டுங்க'' என்று கூட்டில் தனியாக இருந்த குஞ்சுக் குருவியிடம் சொன்னேன். '' உன்னுடைய தாயும் சகோதரியும் ஊர் சுற்றக் கிளம்பிவிட்டார்கள். அவர்களுக்கு யார் குறித்தும் எந்த பயமும் இல்லை. அவர்கள் திரும்பி வந்தால் அவர்களுடன் பேசாதே. அவர்களுடன் 'கா' விட்டு விடு. அவர்களை பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்'' என்று குருவியை சமாதானப் படுத்தினேன்.
இரவு வெகு நேரம்வரை அவை இரண்டும் திரும்பவேயில்லை. மனைவியையும் பிள்ளையையும் காணாது தவிப்பதைப் போல் நான் தவிப்பும் கவலையும் கொண்டேன். தாய் குருவியின் இந்த பொறுப்பற்ற ஊர்சுற்றல் விவகாரம் ஒரு நாள் முன்னமே தெரிந்து போன விஷயம்தான். அந்த சின்னக் குருவியின் இவ்வாறான செயலால் தான் நான் இத்தனை கோபமும் கவலையும் கொண்டுள்ளேன். பிறந்து இன்னும் நான்கு நாட்கள் கூட கவில்லை அதற்குள்.......
''இதுக்கு பெயர்தான் இறக்கை முளைப்பது என்பது. புதிதாக முளைத்திருக்கிறது இல்லையா அதனால் தான் இப்படி அலைகிறது'' நான் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் வெளியில் போய் சின்னக் குருவியைக் கூட பார்க்கவில்லை. சிட்டுக் குருவியின் குடும்பத்துடன் எனக்கு உறவு அறுந்து போனது.
மறுநாள் காலைக்குள் மீதமிருந்த அந்தக் குருவிக்கும் இறக்கை முளைத்து விட்டது. அது தனது தனிமையின் காரணமாக கவலை கொண்டதாக தெரியவில்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தது போலவே பட்டது. அது மீண்டும் மீண்டும் கூட்டிலிருந்து பறந்து தாவி ரப்பர் மரச் செடியின் இலையில் அமர்ந்து போகும். அவ்வாறு அமரும் போது இலை தாழ்ந்து போகவே கீழே வழுக்கி விழும். ஒவ்வொரு முறையும் அது விழுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும். கொஞ்ச நேரத்திற்கு கூட்டில் அமைதியாக இளைப்பாரும் பின் மீண்டும் இந்த விளையாட்டிற்கு சென்று விடும்.
'' அட முட்டாளே! இலையில் இல்லை. கிளையில் உட்கார்.'' நான் கத்தினேன். குருவி எனது எச்சரிக்கையையும் அக்கரையையும் கண்டு கொள்ளாது வழுக்கி விழும் விளைட்டை தொடர்ந்தது. மதியத்திற்குள் இந்த சின்னக் குருவியும் கொஞ்சம் தேறி விட்டது.
'' போச்சுடா, இதற்கும் இறக்கை முளைத்து விட்டது போல'' என்றேன் நான்.
அந்தக் சின்னக் குருவி அங்குமிங்கும் பறந்து மரத்தின் அடிக்கு வந்து போவது எனக்குள் பயத்தை ஏற்படுத்தியது. இது நிச்சயமாய் பூனைக்கு இரையாகிப் போகப் போகிறது. நான் மிக நீண்ட நேரமாக அதற்கு காவலாய் இருந்தேன். இந்தக் குருவிக்கு தன்னைப் பற்றியக் கவலை இல்லை. இதன் தாய் மற்றும் சகோதரி குருவிக்கு இதனை பற்றியக் கவலை இல்லை. இந்தக் குருவிகளுக்குத்தான் இலவசமாக காவல்காரன் கிடைத்து உள்ளானே. நான் முனுமுனுத்துக் கொண்டேன். அது கூட்டுக்கு வரும் வரை நான் தோட்டத்திலேயே உட்கார்ந்து இருந்தேன்.
மிகக் கடுமையான அதிருப்தியுடன் இனி இந்தக் குருவிகளுக்காக நான் என் நேரத்தை வீணடிக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி எடுத்துக் கொண்டேன். குழந்தைத்தனமும் துரோகமும் இவைகளின் உடலெங்கும் நிறைந்து உள்ளது. முதலில் இவைகள் தன் இனிமையான குரலால் வசப் படுத்தும், வேடிக்கையான செயல்களால் கவர்ந்து கொள்ளும் பின் இறக்கை முளைத்தவுடன் பறந்து காணாமல் போய் விடும். நான் இனி மதிய நேரத்தில் தோட்டத்திற்குப் போக மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டேன்.
மாலையில் நான் உற்சாகமாக புன்னகைத்துக் கொண்டே வெளியில் வந்தேன். கூட்டைப் பார்த்தேன் கூடு வெறுமையாகக் கிடந்தது. அதில் யாரும் இருந்தார்கள் என்பதற்கான அடையாளமும் இல்லை. நான் அங்கிருந்த அனைத்து மரங்களின் கிளைகள் இலைகள் என்று எனது பார்வையை படபடவென ஓட விட்டேன். னால் குருவிக் குடும்பத்தின் ஒரு சின்ன அடையாளமும் அங்கு தென் படவில்லை. எனக்கு பெரிதாக அதிர்ச்சி ஏற்படவில்லைதான் காரணம் நான் என்னை இந்த நிலைக்காக கொஞ்ச கொஞ்சமாக தயாராகி விட்டிருந்தேன். எனக்குத் தெரியும் இந்த கடைசிக் குருவியும் என்னை விட்டு போய் விடும் என்பது நிச்சயமாகத் தெரியும்.
நான் நிம்மதி பெருமூச்சு விட்டபடி பசும் இலைகளிலும் வண்ணப் பூக்களிலும் தாவிக் கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகளின் நடனத்தை கண்டு ரசிக்கலானேன். இதற்கிடையில் மரக் கிளைகளில் எங்காவது குருவிகள் என்னுடன் கண்ணாம்மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.கொஞ்ச நேரத்தில் எனது பார்வை கோயில் கலசத்தில் பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்து விட்டேன். குருவியின் குடும்பம் அங்கு உட்கார்ந்திருந்தது. கவலையில்லாமல், வருத்தமில்லாமல், மிக்க மகிழ்ச்சியாக. சின்னச் சின்ன இடைவேளையில் குருவிகளின் அலகுகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும் பின் பிரிந்து விடும். அவைகளின் சுதந்திரத்தை கண்டு நான் மிகு மகிழ்ச்சி கொண்டேன். அவை மூன்றும் அங்கு உல்லாசமாய் சுற்றுலாப் பிரயாணிகளைப் போல் மகிழ்ந்து கொண்டிருந்தன.
மனைவி எனக்கு மிக அருகில் இருந்து நகர்ந்த அவளை நிறுத்தினேன். '' அங்கே பார். சின்னக் குடும்பம் மகிழ்வான குடும்பம். அவை மூன்றும் எத்தனை உல்லாசமாகவும் மகிழ்ச்சியாகவும் கோயில் கலசத்தில் உட்கார்ந்து இருக்கின்றன'' நான் மனைவியை பார்க்கச் செய்தேன்.
''அவை மூன்றையும் ஒன்றாகப் பார்ப்பது எத்தனை சந்தோஷமாக இருக்கிறது. அவை கோயில் கலசத்தில் ஏன் உட்கார்ந்து இருக்கின்றன என்று உனக்குத் தெரியுமா?'' நான் கேட்டேன்.
''ஏன் அப்படி உட்கார்ந்து இருக்கின்றன?'' மனைவி கேட்டாள்.
'' ஏனென்றால் இவை அனைத்தும் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்து உள்ளன. சில பழக்கங்களுக்கு பிறப்பு காரணமாக இருக்கிறது. அவை ஓய்வு எடுத்துக் கொள்ளத்தான் கோயில் கலசத்தில் உட்கார்ந்து இருக்கின்றன என்பது சும்மா விஷயம்.'' என்றேன் நான்.
''உங்க மூளையில் அழுக்கு படிந்து போய் விட்டது'' மனைவி சிடுசிடுத்தாள். ''கொஞ்ச நேரம் முந்தான் அவைகள் மசூதியின் உச்சியில் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தேன். மசூதியில் தொழுகை அழைப்புப் பாடல் சத்தம் கேட்டதும் அவைப் பறந்து வந்து கோயில் கலசத்தில் உட்கார்ந்து கொண்டன. இதெல்லாம் ஒலிப்பெருக்கியின் வேலைதான் வேறொன்றுமில்லை'' என்றாள் மனைவி.
நான் உடைந்து போய் விட்டேன். கோயிலில் ரத்தி பூசை துவங்கியதும். அவை மூன்றும் வெவ்வேறு திசைகளில் பறக்கத் துவங்கியது. கொஞ்ச நேரத்தில் அவை மூன்றும் தோட்டத்தில் வந்து இறங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை அவை கூட்டைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
உண்மை என்னவென்றாள். குருவி என்னை முற்றிலும் மறந்தே போனது. பகலில் எப்போதாவது தோட்டத்தில் காணப் படும். தனித்தனியாக அல்லது மொத்தம் மூன்றுமாக. பிறந்த இடத்தின் ஈர்ப்பு இவர்களை இங்கு இழுத்து வருகிறதோ என்று நினைத்துக் கொள்வேன். பிறப்பிடம் என்ற வார்த்தையையே நான் வெறுக்கத் துவங்கினேன். னால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உறுதியாக என்னால் சொல்லவும் முடியும். ஏனென்றால் இங்கு ஒரு குருவிதான் பிறந்தது, கடவுள் இல்லை.
------------------------------------------------------------------------------
ரவிந்திர காலியா: இவர் இந்தி இலக்கிய உலகில் மிகவும் அறியப் பட்ட எழுத்தாளர். இவரது மனைவி மம்தா காலியாவும் இந்தி இலக்கிய உலகில் பிரபலமான நாவல் எழுத்தாளர் மற்றும் கதாசிரியர். ரவிந்திர காலியா மிகவும் உயிர்ப்பான மனிதர். தனது எழுத்தில் எப்பவும் ஜீவனை வைத்து எழுதுபவர்.
இவர் கடந்த ண்டுகளில் தனது படைப்புகள் மூலம் இலக்கிய உலகில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் கடும் விவாதங்களையும் துவக்கி வைத்தார்.
இவரது எழுத்தில் புதுமையும் புரட்சி எண்ணங்களும் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் தைரியமும் அடங்கி உள்ளது. இவரது கதைகள் முதுகெழும்போடு நிமிர்ந்து நிற்கிறது. விவாதங்களை துவக்கி வைக்கிறது.
கதைகளில் மட்டுமல்ல தனது சொந்த வாழ்க்கையிலும் ரவிந்திர காலிய ஏற்ற இறக்கங்களையும் பல வண்ண மாற்றங்களையும் கண்டு கடந்து உள்ளார்.
இவர் இதுவரை சுமார் இருபத்நான்கு புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது 'குதா கி சலாமத்'' என்ற நாவல் குறிப்பிடும்படியானது. ''நவ் சால் கி சோட்டி பத்னி', 'காலா ரஜிஸ்டர்', ' கரிபி ஹட்டாவோ', 'பாங்கே லால்'' 'கலி-கூச்'', 'சகை யா நீம்'' மற்றும் 'சத்தாயிஸ் சால் கி உமர் தக்'' போன்ற புத்தகங்கள் குறிப்பிடும் படியானவை.

Friday, December 01, 2006

பரதேசி

இந்தியில்: மம்தா காலியா
தமிழில்: மதியழகன் சுப்பையா

எங்கள் குடும்பம் வித்தியாசமானது. மூன்று சகோதர-சகோதரிகளும் மூன்று நாடுகளில் வாழ்கின்றனர். ஒவ்வொருவரும் மற்றவருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். பிரிவு துயரம் அதிகமாக வாட்டும் போது தொலை பேசிகளில் அழைத்து நீண்ட நேரம் பேசி றுதலடைவார்கள். அன்பு நிறைந்த வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொள்வார்கள். அடுத்த ண்டு கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் என்று உறுதி சொல்வார்கள். கொஞ்ச நாட்களுக்கு மனது அமைதியாகிக் கிடக்கும் மீண்டும் இதே கதை தொடரும்.
முதலில் அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். லக்பத்கோட்டின் பெரிய வீடும் சிரியதாகப் பட்டது. அங்கேதான் அனைவருக்கும் திருமணம் னது. அனைவரும் வேலை வாங்கிக் கொண்டது அங்கிருந்ததான். அண்ணன் அங்குள்ள பெரிய பள்ளியில் சிரியராக பணியாற்றி வந்தார். சகோதரி பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியர் பணியில் இருந்தார். நீரத் கபூர்தாலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தான்.
அண்ணன் பத்திரிக்கைகளை மிக கவனமாக வாசிப்பார். அமர்ஜித் பத்திரிக்கைகளை புரட்டிக்கூடப் பார்க்க மாட்டாள். நீரத் கல்லூரி சென்று பல பத்திரிக்கைகளை வாசித்து விடுவான். அவனுக்கு இலக்கியத்தில் அதிக ர்வம் இருந்தது.
அண்ணனுக்கு கனடா செல்லும் வாய்ப்பு தெரிந்தது. பத்திரிக்கைகளில் கனடாவில் பள்ளிகளில் பல பொறுப்புகளுக்காக ட்கள் தேவை என்ற விளம்பரங்கள் அவரது பார்வையில் பட்டது. அண்ணனும் அண்ணியும் நான்கு படிவங்களை வாங்கி வரச் சொன்னார்கள். வீட்டில் இது குறித்து கடுமையான விவாதம் ஏற்பட்டது.
'' அண்ணன் தம்பி இரண்டு பேரும் போய் விட்டால் எங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்.'' என்று அம்மாவும் அப்பாவும் கேட்டார்கள். ''அமர்ஜீத் இருக்கிறான், பங்கஜ் இருக்கிறான் மற்றும் உங்கள் சொந்தம்பந்தம் எல்லாம் இங்கேதான் இருக்கிறது. உங்களுக்கு என்ன கவலை'' என்று அண்ணன் சொன்னார்.
''பிள்ளைகளின் கைகள் படவில்லை என்றாள் சொர்க்கம் எப்படி கிடைக்கும்?'' அம்மா அழத் துவங்கினாள்.
'' நாங்கள் அங்கு சென்றதும் உங்கள் இருவரையும் அழைத்துக் கொள்வோம். அதுமட்டுமல்லாமல் அமர் மற்றும் பங்கஜ்க்கும் அங்கேயே வேலை பார்த்துக் கொள்ளலாம்'' என்றார் அண்ணன் தனது முடிவில் உறுதியாகவும் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பாமலும்.
மாலையில் நீரத் கபுர்தாலாவிலிருந்து திரும்பியதும் ''நீ சரியான சுயநலக்காரனாகி விட்டாய். யாரிடமும் சொல்லாமல் வெளிநாடு போக திட்டம் போட்டு விட்டாய், அப்படித்தானே!'' என்று அப்பா கேட்டார்.
நீரத் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். விஷயத்தை கேட்டவுடன் கடுமையாக கோபம் கொண்டான். ''எனக்காக முடிவெடுக்க இங்கு யாருக்கும் உரிமையில்லை. அது கனடாவாக இருந்தாலும் சரி டிம்பகண்டாக இருந்தாலும் சரி, நான் போக மாட்டேன்'' என்றான் உரக்க. அண்ணன் விட வில்லை ''இங்கு நீ வாங்குவதை விட நாற்பது மடங்கு அதிகம் அங்கு சம்பளம் கிடைக்கும் நம் வீட்டின் தரித்திரம் காணாமல் போய் விடும்'' என்றார்.
''நம் வீட்டின் தரித்திரத்தை நீங்கள் கழுவுங்கள். எனக்காக யாரும் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டாம்'' என்று உறுதியாக மறுத்தான்.
'' அட! முட்டாள் பயலே! நீ கையெழுத்துப் போட்டால்தான் படிவத்தை அனுப்ப முடியும்'' என்றான் அண்ணன்.
''படிவம் எங்கே இருக்கிறது, கொடுங்கள் அதை கிழித்து விடுகிறேன்'' நீரத் எழுந்தான்.
படிவத்தை அவனது கையிலிருந்து அமர்ஜித் படிவத்தை பிடுங்கிக் கொண்டான். பங்கஜும் அங்குதான் இருந்தான்.
'' உனக்கு போக வேண்டாம் என்றால் கொடுத்து விடு. நாங்களாவது இந்த நரகத்திலிருந்து வெளியேறிப் பார்க்கிறோம்'' அண்ணி த்திரப் பட்டாள்.
நீரத்துக்கு கோபம் தலைக்கேறியது ''எதை நரகம் என்கிறீர்கள்?. இந்த வீட்டையா இல்லை அந்த வீட்டையா இல்லை தனது வேலையையா? கனடா மோகம் உங்களுக்கு இந்த வீட்டை நரகமாக்கி விட்டதா?'' என்றான்.
'' இங்கே என்ன இருக்கிறது? பகல் முழுவதும் மாட்டைவிட கேவலமாய் உழைத்த பின்னும் எண்ணிக் கொடுத்தது போல் அற்பமாக கிடைக்கும் பணத்தை கொண்டு என்னதான் செய்ய முடிகிறது. நாலுபேருக்கு டியுஷன் எடுத்தாதான் வீட்டு செலவுகளை கொஞ்சமாவது சமாளிக்க முடிகிறது. இப்ப ஏதோ நல்ல காலம் பிறக்கப் போகிறது என்று நினைத்தேன் னால்...'' என்று அண்ணி கோபபெருமூச்சு விட்டாள்.
'' போங்க பிள்ளைகளா, போங்க, நீங்கள் வெள்ளக்காரங்க ஊருக்கு போய் பாருங்க'' என்று அம்மா சிர்வாதம் கொடுத்தாள்.
இப்படியாக ஒவ்வொருவராக நான்கு பேரும் போய் விட்டார்கள். எங்களாலும் பஞ்சாப்பில் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. நீரத்துக்கு அலஹாபாத் பல்கலைக் கழக்கத்தில் வேலை கிடைத்து விட்டது. அதன்பின் நாங்கள் அனைவருமே அலஹாபாத்வாசியாகி விட்டோம்.
இதற்கிடையில் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். அண்ணனின் மூன்று குழந்தைகள் மற்றும் அமரோவின் பிள்ளைகள் சீனு-மீனு கியோர் புகைப்படமாக சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பற்றி செய்திகள் கிடைத்துக் கொண்டே இருந்தது. சைன்டி பியானோ வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறாளாம். நீதா சொஷியல் வர்க் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்கிறாளாம் மற்றும் பாவனாவின் திருமணம் அங்கேயே ஒரு பணக்காரப் பையனுடன் நிச்சயிக்கப் பட்டுள்ளதாம். எங்கள் நினைவுகளில் அவர்கள் இன்னும் குழந்தைகளாகவே இருந்தார்கள். இங்கிருந்து போகையில் '' நாங்கள் போகமாட்டோம், எப்படியாவது திரும்பி வந்து விடுவோம்'' என்று அழுதது நினைவுக்கு வந்தது.
இந்த முறை அண்ணி போனில் பேசுகையில் ''பாவனா, எங்களின் மிக நெருங்கிய நண்பர் ரிச்சர்ட் இந்தியா வருகிறார். ஒரு வாரம் ராஜஸ்தான் சுற்றிவிட்டு அலஹாபாத் வருவார். ஒரு வாரம் அங்கேயும் தங்குவார். அவர் தங்குவதற்கு நல்ல ஏற்பாடு செய்யுங்கள். வீட்டை சுத்தப் படுத்திக் கொள்ளுங்கள். குப்பைகள் இல்லாமல், கொசு, பல்லி என எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரிச்சர்ட் ஒரு டாக்டர். உங்கள் அண்ணன் அவருடன் வருவதாக இருந்தது னால் அவருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனக்கு உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் வருகையில் எங்களை எப்படி உபசரித்து கவனிக்கிறீர்களோ அப்படியே அவரையும் கவனியுங்கள்.'' என்று சொன்னார்.
இந்த போன் வந்தபின் வேலைகள் தாம் தூமென ஜோராக நடந்தது. நான் சக்கரத்தைப் போல் சுழன்று கொண்டிருந்தேன். வீட்டையும் குடும்பத்தையும் உற்றுப் பார்த்தேன். இரண்டிலும் கோளாறு இருந்தது. வீடு முற்றிலும் அருங்காட்சியத்தைப் போல் இருந்தது.
சாப்பாட்டு அறையில் அம்மாவின் படுக்கை விரிக்கப் பட்டிருந்தது. வரவேற்பரையில் பிளாஸ்டர் பெயர்ந்து இருந்தது. உள்ளே இருந்த அறையை பிள்ளைகள் தங்களின் கம்யூட்டர் அறையாக மாற்றி வைத்திருந்தார்கள். படிக்கும் அறையில் துணிகள் இறைந்து கிடந்தது. அலங்காரப்பெட்டி படிகளில் வைக்கப் பட்டிருந்தது. சமையலறையில் பாத்திரங்கள் குப்பைகளைப் போல் கிடந்தது. என்னால் தேவையான பாத்திரங்களை எடுத்துக் கொள்ள சிரமமாக இருந்தது. இந்த சிறிய வீட்டில் அன்பின் காரணமாகவும் நிர்பந்தத்தாலுமே நாங்கள் வாழ்ந்து வருகிறோம் வேறு சிறப்பான காரணங்கள் எதுவும் இல்லை.
''அண்ணியின் விருந்தாளி மூன்று நாட்கள் கழித்து வர இருக்கிறார். நீங்கள் உங்கள் அறையை சுத்தப் படுத்துங்கள். உங்கள் அறைக்கு பக்கத்து அறையில் அவரை தங்க வைக்கலாம் என்றிருக்கிறோம். உங்கள் அறையைப் பார்த்தால் என்ன நினைப்பார்.'' என்று பிள்ளைகளைப் பார்த்து சொன்னேன்.
பிள்ளைகள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. இரண்டாவது முறை அவர்களிடம் கொஞ்சம் அதட்டலாக சொன்னதும் மன்னு தனது அறையில் கிடந்த புத்தகங்கள் மற்றும் சி.டி.க்களை எங்கள் அறையில் வந்து எறிந்து விட்டுப் போனான்.
வீடு முழுவதும் சிதரிக் கிடந்தவைகளை பரண் மேல் போட்டேன். அலமாரிகளின் மேல் அடுக்கினேன். தொட்டிச் செடிகளை தேர்வு செய்து வரிசையாக வைத்தேன். ஒரு பைய்த்தைப் போல் வீடு முழுக்க குனிந்து நிமிர்ந்து ஓடி டி வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தேன்.
நீரத் கொஞ்சம் கோபப்பட்டான் ''ஏன் இப்படி சிரமப்படவேண்டும். வீடு எப்படி இருக்கிறதோ அப்படியே இருக்கட்டுமே. அப்படி அந்த வெளிநாட்டுக்காரனுக்கு கஷ்டமாக இருந்தால் தானகவே ஹோட்டலில் போய் தங்கி விடுவான்'' என்று சிடுசிடுத்தான்.
எனக்கு இந்த தர்க்கம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இந்தியாவில் எழுதப்படிக்கத் தெரிந்த பெண்கள் இப்படித்தான் குடும்பம் நடத்துகிறார்களோ என்று அவன் நினைத்து விட்டால். அதுமட்டுமில்லாமல் கனடாவில் இருக்கும்அண்ணிக்கும் வருத்தமாக இருக்கும்.
மூன்று நாட்கள் முழுமையாக கடுமையான போராட்டம் செய்து சாதாரண அறையை சிறப்பு அறையாக மாற்றி விட்டேன். வீடு முழுவதிலும் இருந்து பொறுக்கி எடுத்து நல்ல சுத்தமான பொருட்களை அந்த அறையில் வைத்தாயிற்று.
படுக்கையில் நான்கு இஞ்ச் போம் மெத்தை போட்டாச்சு. சுவற்றில் பிகாசோ மற்றும் டா வின்சி ஓவியங்களின் போட்டோபிரின்ட் தொங்க விட்டாயிற்று. புதிய டர்க்கிஷ் பைகள், மேற்கத்திய நாட்டு மாடலில் கழிப்பறை, புதிய ஜக், மற்றும் குட்டையான ஒரு பிரிட்ஜ்ஜும் அறைக்குள் வைத்தாயிற்று.
இத்தனை ஏற்பாடுகளையும் பார்த்த அன்னு ''வாஹ! மம்மி! இந்த அறை உண்மையில் வெளிநாட்டு அறையைப் போல் இருக்கிறது. இங்கே ஒரு மேம் மட்டும் இல்லை அவ்வளவுதான்'' என்று சிரித்துக் கொண்டான்.
'' அன்னு, ப்ளிஜ், உன்னுடைய மியுசிக் சிஸ்டத்தை இங்கு கொண்டு வந்து வை. ஒரு வாரம் மட்டும்தானே. அடுத்த வாரம் வரைக்கும்தான் சரியா'' என்றேன். நான் அவனை கேட்டேனா கட்டாயப் படுத்தினேனா தெரியவில்லை.
கொஞ்சமும் தயங்காமல் முனுமுனுக்காமல் எனது இரு பிள்ளைகளும் தங்கள் உயிருக்கும் மேலாக கருதும் மியுசிக் சிஸ்டத்தை சிறப்பு அறையில் பொறுத்தி விட்டனர். நான் அங்குமிங்கும் தேடித்தேடி பாக், பித்தோவன் மற்றும் மோஜார்ட் போன்றவர்களின் கேசட்களை மேஜையில் வைத்தேன். '' நாங்கள் கொஞ்சம் பாப் வைத்து விடுகிறோம் இல்லையென்றால் அவனது மண்டனை சூடானாலும் கி விடும்.'' என்று பிள்ளைகள் தெரிவித்தனர். அவ்வாறு செய்தனர்.
றரை அடி உயர ரிச்சர்ட் பார்க்கர் வீட்டிற்குள் நுழைந்ததும் அறையே நிறைந்தது போல் இருந்தது. அவன் வந்தது அறையில் ஒரு உயிர்ப்பு தெரிந்தது. அவன் எல்லோருடனும் உற்சாகமாக அறிமுகமாயினான். அம்மாவுக்கு அவன் கைகளை குப்பி ''நமஸ்டே'' என்றான்.
நான் அவனுக்காக சீஸ் சான்ட்விச் ஏற்கனவே செய்து வைத்திருந்தேன். மிகச் சுருக்கமாக சாயா தயார் செய்தேன். பழைய வேலைக்காரி மாலதிக்கு மனம் நிறைவாயில்லை. இவ்வளவு தொலைவிலிருந்து வந்திருக்கும் விருந்தாளிக்கு வெறும் சீஸ் சான்ட்விச் மற்றும் சாயா போதுமா? அவள் உடனடியாக உருளைக்கிழங்கு- வெங்காயம் பிசைந்து பக்கோடா செய்து விட்டாள். மேலும் பப்படம் பொறித்து விட்டாள். இத்தனையும் பார்த்து ரிச்சர்ட் அசந்து போய் விட்டான். அவன் கபக்கென்று ஒரு பக்கோடாவை வாயில் வைத்தான் உடனே '' ஊ.... ஓ....... '' எனக் கத்தினான்.
பக்கோடா கடும் சூடாக இருந்தது. ரிச்சர்ட் நாற்காளியிலிருந்து குதித்தான். வாயிலிருந்த பக்கோடாவை வெளியில் எடுத்தான். பிள்ளைகளைப் பார்த்து '' ஸாரி'' என்று சிரித்தான். பின் பக்கோடாக்களை ஊதி ஊதி வாயில் போட்டு மென்றான்.
''டெலிஷியஸ்'' என்றபடி பக்கோடா தட்டில் நான்கில் மூன்று பங்கை காலி செய்து விட்டான். அவனுக்கு சாயாவும் பிடித்திருந்தது. எங்களின் உபசரிப்பும் உழைப்பும் அவனை மகிவித்துக் கொண்டிருக்கிறதா இல்லை அவனுடைய மூட் நன்றாக இருக்கிறதா என்று சொல்ல முடியவில்லை.
மாலையில் நாங்கள் ரிச்சர்டை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றோம். அவனுக்கு ஒவ்வொரு பொருளைப் பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பழக்கமிருந்தது.
''அந்தப் படிக்கட்டுகளை யார் செய்தார்கள், எந்த நூற்றாண்டு?''
''இந்த சிலையகள் எந்தக் கடவுளுடையது''
''இத்தனை கடவுள்கள் இருக்கிறார்களே, நீங்கள் கன்பியூஸ் கி விட மாட்டீர்களா?''
'' இந்த படகோட்டி எப்பொழுதிலிருந்து படகோட்டுகிறான்?, அவனுக்கு என்ன வயது இருக்கும்?''
உண்மை என்னவென்றால், ரிச்சர்ட்டின் அனைத்து கேள்விகளுக்கும் எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வீட்டிற்கு வந்ததும் நம் ஊரையும் சுற்றத்தையும் பற்றி எவ்வளவு குறைவாக தெரிந்து வைத்திருக்கிறோம் என்று உணர்ந்தோம்.
'' நீரத், ரிச்சர்ட்டை டவுசர் மற்றும் பனியன் மாட்டிக் கொண்டு வெளியில் செல்ல வேண்டாம் என்று சொல், துணி மாட்டிக் கொண்டு வெளியில் போகச்சொல்'' என்றாள் அம்மா முகத்தை இருக்கிக் கொண்டு.
னால் ரிச்சர்டுக்கு கடும் சூடாக இருந்தது. அவன் கனடாவின் எல்பர்டோ பகுதியைச் சேர்ந்தவன். அங்கே சீதோஷ்ணநிலை பூஜியத்திற்கும் கீழ் பல டிகிரி குறைவாக இருக்கும்.
எங்கள் அனைவருக்கும் ங்கிலம் தெரிந்திருந்தாலும் அவனது உச்சரிப்பை புரிந்து கொள்ள சிரமமாய் இருந்தது. எப்படியாவது சமாளிக்கலாம் என்ற ரீதியில்தான் பேச்சு நடந்து கொண்டிருந்தது. அம்மா மற்றும் பிள்ளைகளுக்கு எந்த சிரமமும் இல்லாமால் இருந்ததை கண்டேன். அவர்கள் அனைவரும் ஒன்றாக ரிச்சர்ட்டுடன் அமர்ந்து டீவி பார்த்தனர். அண்ணி தனது கனடா அலுவலகம் மற்றும் வீட்டின் படப்பிடிப்பு அடங்கிய வீடியோ கேசட் அனுப்பி இருந்தார்கள். அதை வீ.சி.ரில் போட்டு ரிச்சர்ட் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் உச்சரிக்கும் வார்த்தைகளால் நாங்கள் புரிந்து கொள்ள இயலாததை அவனது செய்கையால் புரிய வைத்தான். அனைவரும் சிரித்து மகிழ்வோம். மொழியை பயண் படுத்தாமல் அம்மாவுக்கும் அவனால் விளக்கம் சொல்ல முடிந்தது. துவக்கத்தில் அம்மாவுக்கும் ரிச்சர்ட்க்கும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தேன், இப்பொழுது அம்மாவுக்கு எனது உதவி தேவையில்லை.
'' அவன் பேசுறது நல்ல புரியுது'' என்றாள் அம்மா.
ரிச்சர்ட்க்கு ஒதுக்கப் பட்ட அறையில் பல்லிகள் மற்றும் எலிகள் வழக்கம் போல் வந்துவிடக் கூடாது என்று முதல்நாள் இரவு இறைவனை வேண்டிக் கொண்டேன். கொசுக்களை விரட்ட ஏற்கனவே பல ஏற்பாடுகளை செய்து வைத்தாயிற்று.
சாப்பிடும் போதும் பயம் நிலவியது. முழுக்க முழுக்க சைவ உணவுகளை வைத்திருந்தோம். ரிச்சர்ட்டுக்கு உணவு பிடித்திருந்தது. தண்ணீர் கொதிக்க வைத்ததுதான் னாலும் ரிச்சர்ட் அதை குடிக்கவில்லை. அவன் மாலதியிடம் ''சாயா'' கேட்டான்.
கனடாவிலிருந்து அவன் இந்தியின் இரண்டு மூன்று வார்த்தைகளை கற்று வந்திருந்தான். '' அச்சா!, ஹாங்! நஹி! '' கிய வார்த்தைகளின் உச்சரிப்பும் அவற்றின் அர்த்தத்தையும் தெரிந்து வைத்திருந்தான்.
ஒவ்வொரு வெளிநாட்டவரும் கஜுராகோ பார்க்க சைப் படுவார்கள் என்று நாங்கள் ஒரு டூரிஷ்ட் பஸ்சில் இருக்கை பதிவு செய்து இருந்தோம். அவனிடம் அதை தெரிவித்தோம். அவன் தலையை ட்டியபடி ''நோ, ஐ பிளான் டு கோ டு சார்நாத்'' ( இல்லை, நான் சார்நாத் போக திட்டமிட்டு இருக்கிறேன்). ''சார்நாத்க்கு நாம் அனைவரும் மற்றொருநாள் காரில் போகலாம்'' என்றான் நீரத் மேலும் '' நீங்கள் இந்தியாவில் பார்க்க வேண்டி வந்த இடங்களை முதலில் பார்த்து விடுங்கள்'' என்று முடித்தான்.
டிரி ப் நாலேட்ஜ் அதாவது போதி விருட்சத்தை பார்க்க வேண்டும் என்று சொன்னான். ரிச்சர்ட்டின் சகோதரி அவனிடம் புத்தரின் போதனைகள் மற்றும் அவர் குறித்த விபரப் புத்தங்களை வாங்கி வரும்படி சொல்லியிருக்கிறாளாம் அவற்றை வாங்க வேண்டும் என்று சொன்னான்.
நாங்கள் வேலைக்கு விடுப்பு எடுப்பது காத காரியமாக இருந்தது. '' நான் தனியாக போய் விடுவேன். நீங்கள் என்னை வண்டியில் மட்டும் உட்கார வைத்து விடுங்கள்'' என்றான் ரிச்சர்ட்.
''இப்ப என்ன அவசரம். வந்து நான்கு நாட்கள் கூட தங்கவில்லை'' நல்ல உபசரிப்பாளர்களைப் போல் நாங்கள் அவனிடம் கேட்டுக் கொண்டோம்.
அவன் தனது டயரியை எடுத்து ஒருமாதம் அவனது பயணக் கால அட்டவனையைக் காட்டினான்.
''புதிய இடங்களில் போக உனக்கு பயமாக இருக்காதா?'' நான் கேட்டேன்.
'' உங்களுக்கு என்னிடம் பயமாக இருக்கிறதா? இல்லைதானே! பின் நான் ஏன் உங்களிடம் பயப்பட வேண்டும்? உலகம் முழுவதும் மனிதன் ஒரேமாதிரியாகத் தானே இருக்கிறான்'' என்றான் ரிச்சர்ட் புன்னகை பூத்தபடி.
''னால் உன்னிடம் எங்கள் மொழி இல்லையே, உனது தேவைகளை எப்படி தெரிவிப்பாய்?''
''எப்படியோ சமாளித்து விடுகிறேன்'' என்றான் நம்பிக்கை குறைக்காமல்.
'' இந்த நாட்டில் எவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களோ அத்தனை கெட்டவர்களும் இருக்கிறார்கள். யாராவது கெட்டவர்கள் கையில் சிக்கிக் கொண்டால், அப்பொழுது...?'' என்று நீரத் பயம் தெரிவித்தான்.
'' இந்தியாவில் தண்ணீரைவிட மோசமான எதிரி இந்தியாவில் உனக்கு கிடைக்காது என்று கனடாவில் உனது அண்ணன் சொல்லயிருக்கிறார்'' என்றான் ரிச்சர்ட் பூரிப்போடு.
கஜுராகோவுக்கான முன்பதிவை ரத்து செய்து விட்டோம். அடுத்த இரண்டு நாட்களை அவன் பெரும்பாலும் வீட்டிலேயே கழித்தான். மதியம் அவன் னந்த் பவன் பார்த்து வந்தான். இரவு சாப்பாட்டின் போது நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
ரிச்சர்ட்டுடன் பரிச்சயமாகி பழகி விட்ட காரணத்தால் அன்னு-மன்னு மிக இயல்பாக இருந்தனர். மன்னு தண்ணீரை கிளாசில் ஊற்றும் நேரம் தடுமாறி மேஜையில் சிந்தி விட்டான்.. எனக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது.
'' எத்தனை முறை சொல்வது, நீங்கள் இருவரும் சின்ன மேஜையில் சாப்பிட்டிருக்கலாம் இல்லையா?'' நான் முனுமுனுத்துக் கொண்டே துணியை தேடிக் கொண்டிருந்தேன். அது கிடைத்தபாடில்லை.
''உங்களுக்கு துளிர் விட்டுப்போச்சு, பெரியவர்கள் மத்தியில் புகுந்து உட்கார்ந்து கொள்வது பிள்ளைகளுக்கு அழகா சொல்லுங்கள்?'' என்றேன் நான். இன்னும் பேச வேண்டும் போல் இருந்தது. பகல் முழுவதும் கடுமையான வேலைக் கடுப்பையும் அவர்கள் மேல் கொட்டியிருப்பேன். அடக்கிக் கொண்டேன். குடும்ப சுமை காரணமாக நான் திட்டத் துவங்கினால் எனக்கு போதை தலைக்கேறி என்னை நானே கட்டுப் படுத்த முடியாமல் கிவிடும். கோபத்தில் ஜன்ம ஜன்ம குற்றங்களை பட்டியலிடத் துவங்கி விடுவேன். வருத்தத்துடன் மன்னு சாப்பாட்டை விட்டு எழுந்து விட்டான். '' மன்னு, நான் உனது நண்பன் தானே, நான் சொல்வதை கேட்பாய்தானே. ப்ளிஸ், சாப்பிட்டுக் கொள்'' என்று ரிச்சர்ட் கெஞ்சினான்.
''எனக்கு பசியில்லை'' மன்னு கோபமாய் பதில் சொன்னான்.
மன்னு எழுந்ததும் அன்னுவும் தனது சாப்பாடை விட்டு '' நானும் சாப்பிட மாட்டேன்'' என்று எழுந்து கொண்டாள்.
அப்போது அம்மா அவர்களை அழைத்து '' என் குட்டிப் பிள்ளைகளா இங்கே வாங்க நான் உங்களுக்கு சாப்பாடு ஊட்டுகிறேன். அதோடு அந்த புத்திசாலிப் பூனையின் கதையும் சொல்கிறேன் வாங்க! வாங்கடா '' என கரம் நீட்டி அழைத்தாள்.
இவர்கள் இருவரும் சின்னப் பிள்ளைகளாக இருக்கும்போது பாட்டியிடம் கதைகள் கேட்டுக் கொண்டே அவர் கையால் தான் சாப்பிடுவார்கள். னால் இப்பொழுது பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்கள். னால் சாப்பிடுகையில் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
இருவர் முகமும் ஊதிப் போய் விட்டிருந்து.
அம்மா அவர்களைப் பார்த்து '' யார் என்னிடம் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கு ஒரு ரூபாய் தருவேன்'' என்றாள்.
இருவரும் அம்மாவின் படுக்கையில் ஒரே துள்ளலில் ஏறிக் கொண்டார்கள். மாலதி ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்து அம்மாவிடம் கொடுத்தாள். அம்மாவின் பேச்சின் இனிமையில் லயித்து அவர்கள் இருவரும் அத்தனை ரொட்டிகளையும் சாப்பிட்டி முடித்தார்கள்.
எனது மூட் இன்னமும் சரியாகவில்லை. எங்கள் வீட்டில் ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்து விட முடியாது. குழந்தைகளுக்கு அறிவுரை கூறி அவர்களை திருத்தினால் பெரியவர்கள் கெட்டு விடுகிறார்கள். இதனால்தான் என்னவோ ரிச்சர்ட் இங்கிருந்து சீக்கிரமாக கிளம்புகிறானோ, என நான் கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.
சாப்பாட்டுக்குப் பின் சாயா குடித்தபடி ரிச்சர்ட், ''உங்கள் விருது உபசரனைகளையும் என்னை நீங்கள் வரவேற்று கவனித்த முறையையும் நான் என்றும் மறக்கவே மாட்டேன். உங்கள் குடும்பத்தில் எனக்கு மிகுந்த அன்பு கிடைத்தது'' என்றான்.
'' இங்கு நடந்த குளருபடிகளையும் சேட்டைகளையும் கூட மறக்கமாட்டீர்கள் அப்படித்தானே'' நான் கேட்டேன்.
'' அய்யோ, இதையா சேட்டைகள் என்கிறீர்கள், இவைகளுக்காக எங்கள் நாட்டில் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தின் அநாகரீகம் என்று குறிப்பிடும் இந்த குதுகலமும் கும்மாளும் சந்தோஷமும் எங்கு கிடைக்கும். என்னைப் பாருங்கள் எனது பனிரெண்டு வயதிலிருந்து நான் தனியாக இருக்கிறேன். அம்மா அப்பா விவாகரத்து செய்து கொண்டார்கள். நான் அம்மாவுடன் இருந்தேன். இரண்டு வருடங்கள் சென்றதும் அம்மா வேறு திருமணம் செய்து கொண்டார். பின் நான் அப்பாவுடன் இருந்தேன். அதற்குப் பின் ஓராண்டு சென்று அப்பாவும் திருமணம் செய்து கொண்டார். எனக்கு எங்கும் இடமில்லை.'' என்றான் ரிச்சர்ட் அவனது முகத்தில் கவலை மற்றும் ஏக்க ரேகைகள் புடைத்தன.
''இப்பொழுதுதான் நீங்கள் பெரியவராகி விட்டீர்களே'' என்றேன் நான்.
'' னால் நான் எவ்வளவு தனிமையாக இருக்கிறேன், ஒரு விஷயம் சொல்லட்டுமா!, அங்கே அல்பர்ட்டாவில் நாங்கள் அனைவரும் தனியாக இருக்கிறோம் தீவுகளைப் போல் மிகத் தனியாக. நீரத் குடும்பத்தை விட்டு கனடா வராதது மிகச் சரியானது என்று உனது அண்ணனும் அடிக்கடி சொல்லுவார்.'' என்று ரிச்சர்ட் மூச்சிழுத்தான்.
நீரத்க்கு தன் மேல் பெருமையாக இருந்தது. '' ரிச்சர்ட், நான் எனது ரொட்டிக்காக எனது தாய் மண்ணை விட விரும்பவில்லை. அதில் உறுதியாக இருந்தேன். எனது வேலை எழுதுவதும் படிப்பதும் தான். பணம், பாராட்டு, அவமானம் என எது கிடைத்தாலும் இங்கேயே கிடைக்கட்டும் என்று இருந்து விட்டேன். ஏழு கடல் தாண்டி சென்று விட்டால் என் குரலை யார் கேட்பார்கள். எனது வார்த்தைகளில் இருந்த வாசனை போய் விடும்'' என்று தனது பெருமையை வார்த்தைகளில் வெளிப்படுத்தினான்.
'' ராயிட்'' ரிச்சர்ட் உணர்ச்சிவசப் பட்டான். '' உனது அண்ணனுக்கு இந்த வருத்தம் இருக்கிறது. உங்கள் வீட்டில் சாப்பாட்டு நேரத்தில் மூன்று தலைமுறையினர் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறீர்கள். இது எங்கும் கிடைக்காத பெருஞ்சுகம். பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு கீழ்படிந்தவர்களாகப் பார்த்து எனக்கு பல ண்டுகள் கி விட்டது. மூன்று தலைமுறைகள் ஒரு கூறையின் கீழ் மிக அன்பாகவும் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் இருப்பது வியப்புக்குறிய விஷயம். உங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சரியான அளவில் அன்பும் அரவனைப்பும் கிடைக்கிறது. அவர்கள் வாழ்வில் ஓங்கி வளர இதுவே காரணமாக இருக்கும். இது மிகப் பெரிய விஷயம். இதை எப்பொழுதும் தாழ்வாக நினைக்காதீர்கள். நீங்கள் நல்வரம் பெற்றவர்கள். சந்தோஷப் படுங்கள்'' என்று ரிச்சர்ட் கண் கலங்கினான்.
ரிச்சர்ட் காலையில் பனாரஸ் கிளம்பி விட்டான். னால் எனக்கு வாழ்க்கை முழுமைக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனான். அந்த பரதேசி வெறும் பயணி மட்டுமல்ல.
------------------------------------------------------------------------------

மம்தா காலியா: கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் எழுத்தாளர் மம்தா காலியா தனது எழுத்துப் பயணத்தை துவங்கினார். கதை -நாவல் துறைகளில் பெண்கள் சொற்பமாகவும் கட்டுப்பாட்டு வளையங்களுக்குள் சிக்கியபடியும் எழுதி வந்தார்கள். னால் அதையும் மீறி பல பெண் படைப்பாளர்கள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். அவர்களுள் மம்தா காலியா குறிப்பிடத்தக்கவர்.
மம்தா காலியா தனது படைப்புகளில் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறார். மேலும் போராட்டமய வாழ்க்கையில் ணும் பெண்ணும் சம போராளிகள் என்று தனது படைப்புகளில் வலியுறுத்தி வருகிறார்
வீடு குறித்த பிரக்ஞை மட்டுமல்லாமல் சமூக உணர்வும் அதன் மேம்பாடு குறித்தும் பெண்கள் சிந்தித்து வந்துள்ளனர் என்பது இவரது எழுத்துகளில் வெளிப்படுகிறது.
1940ல் நவம்பர் 2ம் தேதி பிருந்தாவனத்தில் பிறந்தார். டெல்லி, மும்பை, பூனே, நாக்பூர் மற்றும் இந்தோர் கிய நகரங்களில் சுற்றிச்சுற்றி தனது கல்வியை கற்றுத் தேர்தார். இவரது தந்தை விதாபூஷன் அகர்வால் துவக்கத்தில் கல்வித்துறையிலும் பின் வானொலியிலும் பணியாற்றினார். இந்தி மற்றும் ங்கில இலக்கியத்தில் மேதையாக விளங்கினார். தந்தையின் ளுமை மம்தாவையும் முழுமையாக க்ரமித்துக் கொண்டது.
'அன்பு என்ற வார்த்தை தேய்ந்து தேய்ந்து சப்பையாகி விட்டது. இப்பொழுது அந்த வார்த்தையின் புரிதல் கூட நமக்கில்லை' என ழமாகவும் கூர்மையாகவும் தனது மொழியை பயன் படுத்தி கவிதைகள் எழுதத் துவங்கினார். துவக்ககாலத்தில் நிறைய கவிதைகளை எழுதிய இவர் திடீரென கதை இலக்கியத்திற்கு தாவி விட்டார்.
தனது கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் எந்தப் புனைவும் இல்லாமல் எதார்த்தமாகவும் அவர்களின் உறுதியும் அறிவும் வெளிப்படும் விதத்தில் படைத்தார். வாழ்வின் மேடு பள்ளங்களை பயமின்றி தனது இலக்கு நோக்கி நகரும் க்ரோஷமான மற்றும் எந்நிலையிலும் பின் வாங்காத பெண்களின் இயல்பு குணத்தை வார்த்தைகளில் செதுக்கினார். எதுவானாலும் சத்தியத்தையும் பண்பாட்டையும் கைவிடாத பெண்களின் குணத்தை தனது கதைகளில் வெளிப்படுத்தினார்.
மம்தா காலியா கடந்த முப்பத்மூன்று ண்டுகளாக இலக்கிய உலகில் இயங்கி வருகிறார். பெண்களின் முன்னேற்ற அமைப்பு பணி மற்றும் அலகாபாத் பட்டப்படிப்பு கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
மம்தா பிரபல எழுத்தாளர் ரவீந்திர காலியாவின் மனைவியாவார். இந்த இலக்கிய தம்பதிகளுக்கு அனிருத் மற்றும் பிரபுத் என்ற மகள்கள் உண்டு.
இவரது படைப்புகளில் 'சுட்காரா' 'உஸ்கா யவ்வன்' 'ஜாஞ்ச் அபி ஜாரி ஹை'' 'பிரதிதின்' மற்றும் ' சர்சித் கஹானியான்'' போன்ற கதைத் தொகுப்புகள் பிரபலமானவை.
மேலும் 'பேகர்' ' நரக் தர் நரக்' 'பிரேம் கஹானி' மற்றும் 'ஏக் பத்னி கே நோட்ஸ்' கிய நாவல்களும் பிரசித்தம். இவரது ' தோட்' என்ற நாவல் தற்போது சர்ச்சையில் உள்ளது.
இவர் தனது கதைகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக சர்ஸ்வதி சம்மான் விருது, உத்திரப் பிரதேச மாநில இலக்கிய விருது, யஷ்வந்த் சம்மான் விருது மற்றும் கொல்கத்தாவின் அபினவ் பாரதி விருது கியவை குறிப்பிடத்தக்கவை.