துணையெழுத்தின்றி
மதியழகன் சுப்பையா
எப்படியென்றால் என்ன?
இப்படித்தான் என்பது
யாரிட்ட விதி?
எப்படியும் என்பது
எதற்கும் ஒவ்வாது
இப்படியுமில்லாமல்
எப்படியுமில்லாமல்
எப்படித்தான் ????
கட்டுக்குள் அடங்குமா?
அடங்காது
திசைகளை தீர்மானிக்கத்
தெரியும் அதற்கு
தானே எழுதிக் கொள்ளட்டும்
அவரவர் கவிதைகளை
No comments:
Post a Comment