Tuesday, March 28, 2006

தனிமைக் காய்ச்சலில் அரற்றும் மென்மனசு

நூல் மதிப்புரை:பாரதி இளவேனில்

மல்லிக்கைகாடு-
கவிதைகள்- மதியழகன் சுப்பையா

'' வாழ்க்கையில் ஒரு அனுபவத்தை நாம் பெறுகிறபோது சிந்தனைப் பூர்வமாகவும்இ உணர்ச்சிப் பூர்வமாகவும் அதனைப் பெறுகிறோம். இப்படி சிந்தனையையும் உணர்வெழுச்சியையும் ஒரே நேரத்தில் எந்த அளவுக்குத் தரக்கூடியதாக ஒரு கவிதை இருக்கிறதோ அந்த அளவுக்கு அது சிறப்புடையதாகிறது. உண்மையான கவிதைகள் வாழ்க்கையின் சிக்கல் மிகுந்த நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு பயிற்சியாகவே எழுதப்படுகின்றன. கவிஞன் இந்த வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கிறானோ இல்லையோ வாழ்தலின் நுட்பங்களைப் புரிந்து கொள்கிறானோ இல்லையோ அவன் இந்த சிக்கல்களையும் நுட்பங்களையும் சக மனிதர்களான வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராகி விடுகிறான். இங்கே தான் அந்தரங்க கவிதையும் கூட சமூகக் கவிதைதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் ஒரு மனிதன் சொந்த சாபாசங்களை பொதுவானவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தகுந்ததாகி விடுகிறது'' என்பார் கலைவிமர்சகர்இ கவிஞர் இந்திரன் ( இந்திரன்: தொகுப்பு: சுந்தரபுத்தன்) வேக உணவுஇ வேக வாழ்வு மற்றும் அதிவேக உறவுகள் அதே வேகத்தில் முறிவுகள் என எல்லாம் வேகமயமான மும்பை மாநகரின் ஒரு மூலையில் தனித்து இருந்து கொண்டு தனது வாழ்வைஇ வலிகளைஇ நுட்பமான உணர்வுகளை கவிதைகளாய் பதிவு செய்திருக்கும் இளைஞன் மதியழகன் சுப்பையாவின் முதல் கவிதை தொகுதி இந்த ' மல்லிகைக்காடு'. மதியழகனின் மிகப்பெரிய பிரச்சனை மனப் பகிர்வுக்கு வாய்ப்பில்லாத தனிமை. '' தனிமை இனிமையல்ல உனக்கு தனிமை இனிமையல்ல எனக்கு தனிமை இனிமையல்ல நமக்கு தனிமை இனிமையல்ல எவர்க்கும்''என அங்கலாய்க்கும் மதியழகனைப் பார்த்து வாசகன் கேட்கக்கூடும் '' அவ்வளவு பெரிய மாநகரத்தில் உனக்குத் துணையாய் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை...!'' உணமைதான்! ஓடும் ஒவ்வொரு ரயிலிலும் யிரக்கணக்கில் பயணம் செய்யத்தான் செய்கிகிறார்கள்! னாலும் கவிஞர் உணர்வது பெருங்கூட்டத்துள் ஒருவனாக... மதியழகனே விளக்குகிறார் மாநகரம் குறித்து.... கேட்போம். '' இது இரைச்சல் காடு காது நிரம்பி சத்தங்கள் மனிதர்கள் மிருகங்கள் வினைப்பொருட்கள் எல்லாமே ஒலி எழுப்பியபடி சில ரசிக்கும்படி... சில கடுப்பாக்கும் அமைதி அமைவதில்லை எப்போதும் ஓசையற்றவை உயிரற்றவையாகக் கூட உணரப்படுகிறது ஓசையோடு வாழ்ந்தால் இசைபட வாழலாம்'' உயிரோடிருப்பதன் குறியீடாகவே மதியழகனின் முனகல் ஓசைகளாக மல்லிகைக் காடு தொகுதியைச் சொல்லலாம்.. ம்! இவை தனிமைக் காய்ச்சலில் அரற்றும் மென்மனசின் ஒப்பாரி...! இந்தத் தனிமை நோய்க்கு ஒரு சிறு மருந்தாய் மதியழகனுக்கு கிடைத்திருப்பது பெண் தோழமை! அதனாலேயே பெண் மனம் புரிந்த கவிதைகளைத் தர முயற்சிக்கிறான் கவிஞன். '' எப்படியெல்லாம் பேசி இவ்வுறவு வளர்ந்தது நினைவில்லை எப்படியெல்லாம் பேசி இவ்வுறவு முறிகிறது தெரியவில்லை னாலும் பேசுவோம் இவ்வுறவு வளர்ந்து முறிந்து முறிந்து வளர்ந்து... தொடர'' னாலும் ண்மன அல்லாட்டம் வார்த்தைகளால் இதயங்களை குத்திக் கிழிக்கிறதையும் உணர்வது ஒரு நல்ல சங்கதி: '' அதிருமென் பேச்சொலியால் உதிர்ந்து போகிறதுன் மனப்பூ''மதியழகனின் கவி உலகம் உரையாடல்களினல் உருவாக்கப் பட்டுள்ளதோ.... பேசுவது குறித்துப் பல கவிதைகள். மற்றவர் பற்றி மணிக்கணக்கில் பேசும் நெருக்கங்களிடம் ஏக்கமாய் கேட்கிறார். '' என்னைப் பற்றி யாரிடமாவது என்றைக்காவது .... எப்பொழுதாவது ?''ஒருவர் பற்றி மற்றொருவர் பேசிக் கழியும் ஜன சமுத்திர மாநகரில் '' பேசாமலும்இ பேசப்படாமலும்இ இருக்கிறான்இ இயங்குகிறான்இ மதியழகன்'' எனத் தனக்குத்தானே நம்பிக்கை நம்பிக்கை நாற்றுகளை நட்டுக் கொள்கிற கவிஞன் மனமென்ன கண்ணாடி பாத்திரமா? ''இயல்பாய் பேசி விலகுகிறாய் நீ இயக்கமே தடைபட்டு நிற்கிறேன் நான்''உடைந்து சிதறும் இந்த உள்ளத்தை ஒட்ட வைக்கிறதொரு பசை ! அது காதல்... னால் பெருநகர வாழ்வில் சத்தியக் காதலோ சரித்திரக் காதலோ சாத்யம்தானா? ''முதல் காதல்இ என்னைப் பற்றி முழுமையாய் தெரிந்ததால் முறிந்தது இரண்டாம் காதல்இ என்னைப் பற்றி முழுமையாய் தெரியாததால் முறிந்தது மூன்றாவது காதலும் முறிந்த பின் கிடைக்கலாம் காரணம்''காதல்இ தோழமை என தொடரும் பயணம் காதலின் இணை நிகழ்வான காமத்துக்கும் தாவுகிறது. னாலும் விரசமோ பாசமோ துளியும் கலக்காத நாகரீகச் சொற்கள் கொண்டு அகத்தினைக் கவிதையாக்கத்திலும் வெற்றி கண்டுள்ள கவிஞனுக்கு ஏற்படும் மனச்சோர்வு ' தமிழ் சினிமா'' நாயகர்களைப் போல மரணத்தைப் பற்றி யோசிக்க வைக்கிறது. ''காம்பு பிரியும் காய்ந்த பூவைப் போல விழுந்துபடலாம் ஒரு நாள் அந்த வீர்யப் பறவை காத்திருக்கிறது இறுதி இறகு இற்று விழும்வரை...''னால் இலக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் சாலை சமிக்ஞை அல்லவோ ! அது எந்நாலும் சாவின் பாதையைக் காட்டாதென்ற உண்மை புரிந்த கவிஞன் உணர்ந்து எழுதுகிறான். '' எழுதுபவரின் யுள் முடியலாம் கவிதை இறவாது இன்றோ நாளையோ நான் மரித்து விடுவேன் இன்னும் தொடரும் அந்தக் கவிதை என்றும் தொடரும்''நவீன கவிதை நிகழ் வாழ்வைஇ சமகால நெருக்கடிகளைஇ நம்மைச் சுற்றியுள்ள உலகின் போக்கை எடுத்துப் பேச வேண்டும். இன்றைய புறப்பாடல் சமூகம் சார் விஷயங்கள் கவிதையில் இடம்பெறுவதை சிறப்பாகச் சொல்ல வேண்டும். வாழ்வு சார்ந்த நிகழ்வுகள் வார்த்தைப் படுத்தப் பெற வேண்டும். உள் உலகத்தைப் பேசுகிற அளவுக்கு வெளியுலகத்தையும் கவிதை காட்ட வேண்டும். தமிழில் நீண்ட காலமாகவே தமிழ்க்கவிதை சமூக நிகழ்வுகளைக் கண்டுக் கொள்ளாமலேயே இருந்து விட்டது. இனியும் அவ்வாறு இருத்தலாகாது. உள்ளும் புறமும் சேர்ந்தது தானே முழுவாழ்வு.'' என வலியுறுத்தும் கவிஞர் விக்ரமாதித்தியனின் வரிகள் ( தமிழ்க் கவிதை மரபும் நவீனமும் பக்கம் 97) முதல் தொகுப்பை தந்துள்ள மதியழகனுக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகின் திப் பெருங்கவிகள் அனைவருக்கும் தான். என்னதான் இருண்மைஇ அகம் என அழகியல் உச்சங்களில் எழுதினாலும் சமூகம் சாராத படைப்புகளை பெருவாரியான வாசகர்கள் ஒதுக்கி விடக் கூடும். இளையக் கவிஞரும் இதை உணர்வது எதிர் காலத்துக்கு நல்லது. மிக அழகான அச்சும் அமைப்பும் கலந்து ''மருதா'' வெளியீட்டிலா இத்தனை எழுத்துப் பிழைகள்! தொடர் வாசிப்பை தொந்தரவு செய்கிற அச்சுப் பிழைகள். அர்த்தங்களையும் புரட்டிப் போட்டு விடுகிற அபத்தம் சில கவிதைகளில் ஏற்பட்டிருப்பதை படைப்பாசிரியரும் பதிப்பாசிரியரும் உணர்வார்கள் என நம்புவோம். '' மழை கண்டதும் பிள்ளையாகிறாய் கை நிறையஇ கண் நிறைய உடல் நிறைய மழைவாங்கிக் கொள்கிறாய் வலுக்கிறது மழை கொட்டுகிறது மழை அடிக்கிறது மழை '' காதலின் முத்தத்தைப் போல மென்மையான இந்த கவிதைகளின் சாரலில் நனைபவர்களுக்கு கூடுதலாக கிடைக்கிறது '' மல்லிகைக்காட்டின்' சுகந்தம்....