Wednesday, September 13, 2006

இது தான் காதலா?



1.
சிற்பங்களோடு
ஓவியங்களோடு
புகைப் படங்களோடு
புணரத்துடிக்கிறேன்

புத்தகங்களை
முகர்ந்துவிட்டு
மூடி விடுகிறேன்

கிள்ளி எறிந்துவிட
நினைக்கிறேன்
விறைத்த உறுப்பை

உறுப்பில் இல்லை
கோளாறு என்பதை
உணருவதே இல்லை.

2.
கட்டம் போட்ட துணி விரிப்பில்
தலையனை அடுக்கி
அழகாய் இருந்தது

வியர்வையாலும்
இந்திரியச் சகதியாலும்
ஈரமாகிப் போகிறது நாளும்

ஒதுங்கி சுருங்கி விடுகிறது
கசங்கி நைந்து
கிழிந்து விடலாம்
விரைவில்

இன்றும்
சுத்தம் மணக்க
பூப்போட்ட துணி விரிப்பில்
தலையனை அடுக்கி
அழகாய் இருக்கிறது.






3.
பறவைகளை பிடிக்காது உனக்கு

பூக்களை கசக்கி முகர்வாய் நீ

மழையை திட்டித் தீர்த்திருக்கிறாய்

வீட்டைச் சுற்றிய எல்லா மிருகமும்
உதைப் பட்டிருக்கு உன்னிடம்

அலறல் சங்கீதத்தை
அப்படி ர௪சிப்பாய்

எப்படி அழைக்கிறாய்
'டேய்! செல்லம்! என.

4.
நான் தனிமையில்
இருக்க வேண்டும்

முதலாளியின் கட்டளைகள்
பீயைப் போல்
துடைத்து விடு

நண்பர்களின் நினைவுகள்
இறகு போல்
பிடுங்கி விடு

குடும்பத்தாரின் பரிவுகள்
மலர்களைப் போல்
கிள்ளிவிடு

உடல் துவாரங்கள்
வழியாய் என்னுள்
ஊற்றி நிறை

நான் தனிமையில்
இருக்க வேண்டும்
உன்னில் மிதந்தபடி.






5.
இதுவரை
நான் பெற்ற
முத்தச்சுகங்களை
மொத்தமாய்
ஓர் நாள் உன்னிடம்
ஒப்புவிக்கையில்
வெளியில் ௪¢ரித்து
உள்ளுக்குள்
அழுதிருப்பாய்.

6.
நான்கடி விலகி நின்று
பே௪சிய போது

தோளில் கைப் போட்டபடி
நடந்த போது

கெஞ்௪சிக் கேட்டு
முத்தம்
கொடுத்த போது
பெற்ற போது

சந்திப்புகளில் பரிசுகளை
திணித்த போது

மணிக் கணக்கில்
காத்திருந்த போது

பல நிலைகளில்
மெளனமாய் இருந்து விட்டு

உடல் பிசைந்து
உச்சம் கண்ட
ஒரு பொழுதில் கேட்டாய்
'இதுதான் காதலா? என .









7.
பகல் முழுவதும்
தேக்கி வைத்து
இரவில் ஈரப் படுத்துகிறாய்

எச்௪சிலில் ஊறி
உருவான புழுக்கள்
ப௪சியால் நெளிகிறது
வீடெங்கும்

நொடிப் பொழுதுகளில்
வடிந்து விடுகிறது
உன் காதல்
துளிகளாய்

உன் காதல் சுனை
வற்றி வரண்டு
போய்விடும் நாளில்
துவங்கிடக் கூடும்
என் காதல்.

8.
நேற்றைய
நகக்கீறல்களோடு
இன்றையதை ஒப்பிட்டு
உறுதி செய்து கொண்டாய்

நாயாய் முகர்ந்து
நாற்றத்தில்
மாற்றமில்லையென
அறிந்து மகிழ்ந்தாய்

வழக்கமான் இரு
வார்த்தைகளை
கூறினாய் கரகரப்புடன்

உடலை உருவிக்கொண்டு
சோர்ந்து விழுந்தாய்

கோடாய் வழிகிறது
உன் காதல்.




9.
என் ஏவல்களை
கடமையாகக் கொள்கிறான்

என் அலங்காரங்களால்
கலவரப் பட்டிருப்பான்


என் இயல்பான
தொடுதல்களை
தெய்வத்தின் தீண்டுதலாய்
உணர்வான் போலும்
சிலிர்த்துக் கொள்வான்

உள்ளாடையின் கொக்கி
மாட்டிவிட்டது முதல்
முகம் பார்த்து பேசுவதில்லை

இப்பொழுதெல்லாம்
அக்காவென்று விளிக்காமலே
பேச முனைகிறான்.

6 comments:

யாத்ரீகன் said...

that was very powerful words expressing the deepest of thoughts... great work..

VSK said...

இதற்குத்தான் சொன்னார்களோ
அந்தரங்கங்கள் புனிதமானவை என்று?

விரித்துத் சொல்லப்புகின்
விஞ்சுவது விரசமே!

சொல்ல வேண்டியவரிடம் விட்டுவிட்டு
பொது இடத்தில் வைத்தல்

சொல்பவர்க்கும் சுகமில்லை
வேண்டியவர்க்கும் மரியாதை இல்லை.

VSK said...

//Not for publishing//

தவறான புரிதலுக்கு வருந்துகிறேன், நண்பரே!
கவிதையின் வீச்சுக்கள் ஆழமானவை என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆனால், நான் சொல்ல வந்தது, அவை உங்களுக்கும், மற்ற ஒருவருக்கும் இடையே நிகழ்ந்த நிக்கழ்வுகள்!
அவற்றைப் பொதுவில் வைக்கும்போது, நீங்கள் அனுபவித்த உணர்வினை படிப்பவரால் தவறாகக் கொச்சைப்படுத்தி விரசமாகப் பார்க்கக் கூடும் என நான் நினைத்தேன்.

மற்றபடி, புனிதம், அசிங்கம் என்றெலாம் நான் கவிதையின் உட்பொருளைச் சொல்லவே இல்லை.

இதை வைத்து, மற்றவர்கள் வேறு விதமாய் கற்பனை செய்யக்கூடும் அதனால் உங்களுக்கும் சுகமில்லை, யார் குறித்து இது எழுதப் பட்டதோ, அவர்களுக்கும் மரியாதை இல்லை என்னும் மனித உணர்வில் எழுதினேன்.

விளக்கமாக விவரித்து எழுதாமைக்கு உங்கள் மன்னிப்பைக் கோருகிறேன்.
வேறு யாருக்குப் புரியாவிடினும், உங்களுக்குப் புரியும் என நம்பினேன்.

சொல்லப்போனால், நீங்கள் குறிப்பிட்ட தலயணை ஈரம், போன்றவைகளைப் பற்றி நானே எனது பாலியல் பதிவில் எழுதி இருக்கிறேன்.
எனவே, நான் ஆபாசமாகக் கருதவில்லை அதை.

இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

நன்றி.

[இது பதிவுக்கு அல்ல.]

VSK said...

//Not for publishing//

could you please send me again to my mail id I have given? Thanks.

கார்த்திக் பிரபு said...

emmadiyov padam kaattiyirukkireergalE..valthukkal

மெளலி (மதுரையம்பதி) said...

//விரித்துத் சொல்லப்புகின்
விஞ்சுவது விரசமே!//

சரியாக சொன்னீர் ஸ்கே....இது விரசத்தின் உச்சமே.