Friday, September 08, 2006

காத்திருப்பு

-----------

பிளாஸ்டிக் பூக்களால்
கவரப் பட்டிருக்கலாம்

கண்ணாடி சுரண்டி
புகைப் பட மலர்களை
முகரத் துடித்திருக்கலாம்

அரும்புகள் தேடித்தான்
வந்திருக்க வேண்டுமென்று
அவசியமில்லை

ஒழுங்கற்ற, ஒளியற்ற
வீட்டை வட்டமடித்திருக்கும்
வாசல் தெரியாமல்
தெரிந்தும் கூட

மின் விசிரியை
கழற்றி வைத்து
காத்திருக்கிறேன்

வெகு நாளாய்
வரவேயில்லை
வெண்ணைப் பூச்சி..


No comments: