
அக்குள் வாடையில்
முகம் புதைக்கச் சொல்கிறாய்
எச்சில் சுவைத்து
மெய்மறக்கச் சொல்கிறாய்
உடலால் உடல் தடவி
ஒத்தடம் கொடுக்கச் சொல்கிறாய்
மூச்சுத் திணறுகிறேன்
மோகச் சுவாசம் என
தப்பாய் புரிகிறாய்
வார்த்தைகளால் நிலை
சொன்னேன் புரியவில்லை
உணர்வாயென்பது பொய்
கதவடைத்துப் போகிறாய்
வந்ததும் கதவடைக்கிறாய்
வீடெங்கும் மனக்கூடெங்கும்
புழுக்கம் புழுக்கம் புழுக்கம்
மதியழகன் சுப்பையா
மும்பை
1 comment:
தமிழ்ப் பதிவுலகத் தரத்துக்கு இது கனமான கவிதை ;) நல்லா இருக்கு.
Post a Comment