Wednesday, April 04, 2007

எது லாபம்?

ங்கிலத்தில்: பிரெட். ஐ. கென்ட் தமிழில்: மதியழகன் சுப்பையா

அமெரிக்க வாழ்வு முறையின் மைய காரணமாக இருந்த லாப முறை குறித்துப் பேசுவது பேஷனாக இருந்தது கண்டு பெரிதும் அதிருப்தியில் இருந்த பள்ளி மாணவன் ஒருவன் தனது தாத்தாவுக்கு 'அடுத்தவர்களின் உழைப்பை பயன்படுத்தாமல் லாபத்தை பெறுவது எப்படி, விளக்கம் கொடுக்கவும்' என்று கடிதம் ஒன்று எழுதினான். அவனது தாத்தா பிரெட்.ஐ . கென்ட், எல்.எல்.டி, நியு யார்க் பல்கலைக் கழக கவுன்சிலின் தலைவராக இருந்தார். மேலும் அவர் பெடரல் ரிசர்வ் போர்டின் முன்னால் இயக்குனராகவும் இருந்தார். முனைவர் கென்ட் தனது பேரனின் கேள்விக்கு பதில் எழுதினார்.

அன்பு பேரனுக்கு,
உனது கேள்விக்கு என்னால் முடிந்த அளவு எளிமையாக பதில் சொல்ல முயற்சிக்கிறேன். லாபம் என்பது, அமைக்கப் பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து அடுத்தவர்களுக்கும் நிறுவன உரிமையாளருக்கும் கிடைக்கும் வருவாய் என்பதாகும். பண்டைய காலத்தில் இந்த லாபத் திட்டம் எவ்வாறு உருவானது என்பது குறித்து பார்க்கலாம். நூறு பேர் கொண்ட ஒரு சமுகம் குறித்து சொல்கிறேன். அவர்கள் அனைவரும் நாள் முழுவதும் கடுமையாக வேலை பார்த்தப் பின்னும் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள இயலாதவர்கள்.
இந்த பண்டைய சமுகம் ஒரு மலையடிவாரத்தில் அமைந்து இருந்தது. இவர்களுக்கு தண்ணீர் மிக அத்தியவசிமானது. அந்த மலையின் உச்சியில் உள்ள ஒரு பொய்கையைத் தவிர வேறு எங்கும் நீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால் அந்து நூறு பேரும் தினமும் மலை உச்சிக்கு ஏறி நீர் கொண்டு வரவேண்டிய கட்டாய நிலை. இவ்வாறு மலை உச்சிக்கு ஏறி நீர் கொண்டுவர ஒருவருக்கு ஒரு மணி நேரம் பிடிக்கும். இது நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது. ஒருமுறை அந்த நூறு பேர்களில் ஒருவன் தாங்கள் மலைக்கு மேலிருந்து இறங்கும் திசையில்தான் நீரின் ஓட்டம் இருப்பதை உணர்ந்தான். மலையடிவாரத்தில் தனது வீடுவரை மேலிருந்து கீழாக ழமான ஒரு ஓடையை வெட்டினான். அது முடியும் இடத்தில், தன் வீட்டருகே ழமாக ஒரு தொட்டியையும் கட்டினான். இந்தப் பணிகளில் அவன் தினமும் முழுமையாக ஈடுபட்டான். மற்ற தொன்னூற்றொன்பது பேர்களும் இவனது செயல்களை வினோதமாகப் பார்த்தனர். அவர்களுக்கு இவன் செய்யும் வேலை பற்றிய எந்த அக்கரையும் இல்லை.
ஒரு நாள் அந்த நூறாவது மனிதன் தனது வீட்டருகே கட்டிய தொட்டிக்கு மலை உச்சியிலிருந்து நீர் கொண்டுவரும் முயற்சியில் வெற்றி கண்டான். மலை உச்சியிலிருந்து நீர் அவனது வீட்டருகே கட்டிய தொட்டியில் நிறைந்தது. கூடி நின்று வேடிக்கைப் பார்த்த அந்த மலையடிவார மக்களிடம் ஒரு யோசனை சொன்னான். நாளுக்கு ஒரு மணி நேரம் செலவு செய்து நீர் கொண்டு வரும் மற்ற தொன்னூற்றொன்பது பேரிடமும் தனது உற்பத்திக்காக தினமும் ஒவ்வொருவரும் பத்து நிமிடங்கள் ஒதுக்கினால் தனது தொட்டியிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தான் அந்த நூறாவது மனிதன். இவ்வாறாக அந்த நூறாவது மனிதன் நாளுக்கு தொள்ளாயிரத்து தொன்னூறு நிமிடங்களை மற்றவர்களிடமிருந்து பெருகிறான். தனது தேவைகளுக்காக நாளுக்கு பதினாறு மணி நேரங்கள் அவன் இனி செலவு செய்ய வேண்டியதில்லை. அவன் மிகப் பெரிய லாபத்தை பெற்றுக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் மற்ற தொன்னூற்றொன்பது பேர்களுக்கும் அவனது இந்த திட்டத்தின் மூலம் நாளுக்கு ஐம்பது நிமிடங்கள் அதிகம் கிடைத்தது.
அந்த நூறாவது மனிதனுக்கு தனது இந்த நீர் வியாபாரத்தின் காரணமாக நாளுக்கு பதினாறு மணி நேரம் கிடைத்தது. அவன் தனது இந்த பொழுதை மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கிப் பாயும் நீரையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நீர் தன்னுடன் கற்களையும் மரத் துண்டுகளையும் அடித்து வந்தது. இதனை கூர்ந்து கவனித்து வந்த அவன் ஒரு நீர்ச்சக்கரத்தை உருவாக்கினான். நீருக்கு சக்தி உள்ளது என்பதை முழுவதும் அறிந்து கொண்ட அவன் கடுமையான சிந்தனை மற்றும் உழைப்பிற்குப் பின் நீர்ச்சக்கரத்தை இயங்கும்படிச் செய்தான். இந்தச் சக்கரத்தின் மூலம் தனக்கான சோளங்களை அரைக்கும்படியான இயந்திரத்தை செய்து விட்டான்.
அந்த நூறாவது மனிதன் மற்ற தொன்னூற்றொன்பது பேர்களுக்கும் சோளங்களை அரைத்துக் கொடுக்கும் அளவுக்கு தனது இயந்திரம் சக்தி வாய்ந்தது என்பதை உணர்ந்தான். உடனடியாக அந்த நூறாவது மனிதன் மற்றவர்களிடம் '' நான் உங்களை எனது இந்த அரவை இயந்திரத்தில் சோளம் அரைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் னால் இதனால் உங்களுக்கும் மிச்சமாகப் போகும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு நேரத்தை மட்டும் எனக்கு கொடுத்து விட வேண்டும்'' என்று அறிவித்தான். அந்த தொன்னூற்று ஒன்பது பேரும் அதற்கு ஒத்துக் கொண்டனர். இவ்வாறாக அந்த நூறாவது மனிதன் கூடுதல் லாபத்தைப் பெற்றான்.
தொன்னூற்றொன்பது மனிதர்களும் கொடுத்த நேரத்தை பயன்படுத்தி தனக்காக மிகச் சிறப்பான ஒரு வீட்டைக் கட்டினான். தனது வீட்டில் வெளிச்சம் வர ஜன்னல்கள், இருக்க சவுகரியமான பெஞ்ச்கள் மற்றும் குளிரைக் கட்டுப் படுத்தவும் பாதுகாப்பளிக்கும் படியாகவும் நல்ல கதவுகளை செய்து கொண்டான். இப்படியாக அந்த நூறாவது மனிதன் தனது சிந்தனையால் புதிது புதிதாக கண்டுபிடிப்புகளை செய்து மற்ற தொன்னூற்று ஒன்பது பேர்களிடமிருந்தும் அவர்களுக்கு மீதமாகும் நேரத்தில் பத்தில் ஒரு பகுதியை தனக்காக செலவு செய்யும்படி கேட்டுக் கொண்டிருந்தான். இவ்வாறாக நூறாவது மனிதன் லாபத்தையும் மற்ற தொன்னூற்றொன்பது பேர்களும் சவுகரியங்களை பெற்று வந்தனர்.
இப்படியாக அந்த நூறாவது மனிதன் அத்தனை நேரமும் தான் விருப்பப் பட்டதை செய்ய மீதமாகிப் போனது. அவனாக விரும்பினால் எதாவது வேலை செய்து கொள்ளலாம் என்றாகி விட்டது. அவனது உணவு, உடை மற்றும் வீட்டுப் பராமரிப்பு என அனைத்தும் மற்றவர்களால் செய்யப் பட்டு வந்தது. அவனது மூளை தீவிர சிந்தனையில் இருந்தது. மற்ற தொன்னூற்றொன்பது பேர்களும் மேலும் அதிகபட்சமாக நேரத்தை மிச்சம் பிடித்து வந்தார்கள். இவை அனைத்தும் அந்த நூறாவது மனிதனின் சிந்தனையாலும் திட்டத்தாலும் தான் சாத்தியமானது.
அவனுக்கு ஒரு யோசனை, அந்த தொன்னூற்றொன்பது பேர்களில் ஒருவன் மட்டும் மற்றவர்களை விட மிகச் சிறப்பான ஷ¥க்களை செய்து வந்தான். தனக்கு கிடைத்த லாபத்தின் மூலம் அவனுக்கு உணவு, உடை மற்றும் சவுகரியங்களை செய்து கொடுத்து முழுநேரமும் மிகச் சிறப்பான ஷ¥க்களை செய்யும் படி நூறாவது மனிதன் ஏற்பாடு செய்தான். இனி மீதமிருக்கும் தொன்னூற்றெட்டுப் பேர்களும் தங்களுக்கான ஷ¥க்களை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது அந்த தொன்னூற்றொன்பதாவது மனிதனுக்காக மற்ற தொன்னூற்றெட்டு பேரும் தங்களின் நேரத்தில் சிறிது ஒதுக்கும்படி நூறாவது மனிதன் ஏற்பாடு செய்தான்.
நாட்கள் நகர்ந்தது, மற்றொரு மனிதன் மிக சிறப்பான முறையில் டைகளை செய்து வருவதை நூறாவது மனிதன் பார்த்தான். உடனடியாக அவனது முழு நேரத்தையும் டைகள் செய்வதற்கென்றே ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தான். இப்படியே போய்க் கொண்டிருந்தது.
நூறாவது மனிதனின் தூரதிருஷ்டியின் காரணமாக உழைப்பாளர்கள் மத்தியில் திறமையானவர்களின் ஒரு குழு உருவானது. அந்த நூறு பேர் கொண்ட சமுதாயத்தில் சிலரின் திறமைகளுக்கு தகுந்தவாறு மிகச் சிறப்பான பொருட்களை உருவாக்கும் பணியை செம்மைபட செய்தனர். இவ்வாறு சிறப்பாக தொழில் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்காக பணிகள் செய்யத்துவங்கியதும் அனைவருக்கும் மிகையான நேரம் மிச்சமாகி வந்தது. ஒவ்வொருத்தரும் இதில் ர்வம் காட்டத் துவங்கினார்கள். சோம்பேரிகளான ஒரு சிலரைத் தவிர. இவ்வாறு மற்றவர்களுக்கான பணிகளை செய்து தான் எப்படி சௌகரியப் படுவது என்று அனைவரும் சிந்திக்கத் துவங்கினார்கள். இவ்வாறாக அந்த புத்திசாலித்தனமான சமுகத்தில் ஒவ்¦ வாருத்தரும் தங்களுக்கான சிறப்பான இடத்தை பிடிக்க முனைந்தனர்.
னால் இப்படியல்லாமல், அந்த நூறாவது மனிதன் மலையடிவாரத்தில் நீர்த்தொட்டி செய்து மற்றவர்களிடம் ''நீங்கள் இதிலிருந்து நீர் எடுத்துக் கொள்ளலாம் னால் பத்து நிமிடத்தில் நீங்கள் செய்யும் உற்பத்திகளை எனக்குத் தந்துவிட வேண்டும்'' என்று மட்டும் சொல்லியிருந்தால் அவர்கள் திரும்பி ''நாங்கள் தொன்னூற்றோன்பது பேர்கள் நீயோ ஒருத்தன், நாங்கள் நினைத்தால் தண்ணீர் எடுத்துக் கொண்டு பதிலுக்கு உனக்கு எதுவும் தரமாட்டோம் '' என்று சொல்லியிருப்பார்கள். இப்படியாகியிருந்தால் தனது புத்திசாலித்தனத்தால் லாபம் ஈட்ட நினத்த அவனின் திட்டங்கள் என்னவாகியிருக்கும்? அவன் தனது தினப்பிரச்சனைகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கவேண்டியதுதான். அவன் விழித்திருக்கும் அத்தனை மணி நேரத்தையும் தனக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே செலவு செய்ய வேண்டியதாயிருந்திருக்கும். அந்த சமுகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போயிருக்கும். அன்றுவரை கடைபிடிக்கப் பட்டு வந்த முட்டாள்தனம் தொடர்ந்திருக்கும். வாழ்க்கை என்பது ஒவ்வொருத்தருக்கும் சுமையாகிப் போயிருக்கும். வாழ்க்கையை தொடர வேண்டி நாள் முழுவதும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதாயிருந்திருக்கும். வேலையைத் தவிர வேறு எதையும் அவர்கள் சிந்திக்கக் கூட முடியாததாயிருந்திருக்கும்.
னால் அந்த தொன்னூற்றொன்பது பேர்களும் நூறாவது மனிதன் சிந்திப்பதை தடுக்க முடியாது. அதனால்தான் இந்த சமூகமே முன்னேற்றம் கண்டது. அங்கு மேலும் ஒரு நூறு குடும்பங்கள் உருவாக உள்ளது. குழந்தைகள் வளர்ந்தவுடன் அவர்களுக்கும் இவ்வாறான வாழ்வுமுறை கற்றுக் கொடுக்கப் பட்டுவிடும். அங்கு போதுமான அளவு உற்பத்திகள் இருந்தது. அதனால் சிலரை தேர்வு செய்து அவர்களுக்கு ஊதியமும் கொடுத்து இளையவர்களுக்கு கற்றுத்தரும்படி பணி கொடுக்கலாம்.
புத்திக்கூர்மை கூடுகையில் இயற்கையை பயன்பாடாக மட்டுமல்லாமல் ரசிக்கும்படியாகவும் கொள்ளச் செய்கிறது. மனிதர்கள் இயற்கையின் அழகு காட்சிகளையும் மிருகங்களையும் ஓவியங்களாக தீட்டும் கலை பிறக்க வழி செய்தனர். இயற்கையில் கேட்ட ஓசைகள் மற்றும் மனிதனின் பேச்சொலிகள் கியன இசை உருவாக காரணமாய் இருந்தது. இவ்வாறான கலைகளில் ர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள் தங்களின் முழு நேரத்தையும் கலைகள் படைக்கவே செலவு செய்தனர். மக்களை மகிழ்விக்கும் தங்களின் கலைப் படைப்புகளுக்குப் பதிலாக சமூகத்திடமிருந்து உற்பத்திகளைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறு இந்த முன்னேற்றங்கள் நடந்து கொண்டிருந்தாலும் சமூகத்தின் ஒவ்வொருத்தரும் தங்கள் உற்பத்தியிலிருந்து எதையாவது பிறருக்கு கொடுத்தாலும் தானும் கட்டாயம் பிறரிடமிருந்து எதையாவது பெற்றே கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். பகை மற்றும் பொறாமை உணர்ச்சியின் காரணமாக தப்பான சட்டங்கள் பின்பற்றப் படும்வரை நேர்மையான உற்பத்தியாளர்களின் முன்னேற்றம் என்பது நிலையாகவே இருந்தது.
மற்றவர்களிடமிருந்து எதையும் பெறாமல் பிறருக்கு உற்பத்திகளை மட்டுமே வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் லாபம் என்று எதை குறிப்பிட்டுக் கொள்ளும்?
இந்தக் கொள்கைகள் தான் நமது கற்பனை சமூகத்தினைப் போல் அமெரிக்க நாட்டிலும் உள்ளது. லாபத்தினை எதிர்க்கும் சட்டங்கள் உற்பத்தியாளனின் முன்னேற்றைத்தை தடுக்கும் நடவடிக்கையாகும். அதனால் லாபம் என்பது பயப்படும் விஷயமல்ல. அதில்தான் அனைவரின் முன்னேற்றமும் அடங்கி உள்ளது.
இப்படி பிறர் நமக்காக உருவாக்கி வைத்து விட்டுச் சென்றுள்ள இந்த இயக்கத்தை தொடர வேண்டும் அதனை அழிக்க நினைக்கக் கூடாது. நாம் மற்ற மனிதர்களுக்கு நன்மையாக இருக்க வேண்டும் இல்லையெனில் இந்த உலகம் நமக்கு நன்மை நினைக்காது.

அன்புடன்,

தாத்தா.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அருமையான, எளிமையான விளக்கம்.மொழிபெயர்த்ததற்கு நன்றி

மதியழகன் சுப்பையா said...

மிக்க நன்றி ரவிசங்கர் அவர்களே!
நான் Blogகில் ஏற்றுவதை யாராவது படிக்கிறார்களா என்ற ஐயம் இருந்தது. நீங்கள் கருத்தும் சொல்லி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் நன்றி.
வாழ்த்துகள்.
தொடர்பில் இருங்கள்.

நிறைய அன்புடனும்,
ஒரேயொரு முத்தத்துடனும்,
மதியழகன் சுப்பையா