Saturday, April 21, 2007

டிவைன் லுனாடிக் மிஷன் (தெய்வீக பைத்தியங்களின் மிஷன்)





இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி
தமிழில்: மதியழகன் சுப்பையா


இனி அமெரிக்காவுக்கு என்ன அனுப்புவது? என்ற மிகப் பெரிய கேள்வி இந்திய நாட்டின் முன் நின்றது. காமசாத்திரத்தை அவர்கள் படித்து விட்டார்கள். யோகிகளை அவர்கள் பார்த்து விட்டார்கள். புனிதர்களையும் பார்த்து விட்டார்கள். சாதுக்களையும் பார்த்து விட்டார்கள். கஞ்சா மற்றும் சரஸ் அங்குள்ள இளைஞர்கள் குடித்து விட்டார்கள். இந்தியாவின் நாகப்பாம்பை அவர்கள் பார்த்து விட்டார்கள். இந்திய சிங்கத்தைப் பார்த்து விட்டார்கள். நடைபாதையில் புராதன சிலைகளையும் வாங்கி விட்டார்கள். ன்மீகம் மற்றும் தெய்வீகங்களையும் அவர்கள் தேவைக்கு அதிகமாகவே பெற்று வழிபட்டு வருகிறார்கள் அதற்குப் பதிலாக கோதுமை தந்து கொண்டிருக்கிறார்கள். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா என்றும் தொண்டை கிழித்தாயிற்று.
மகேஷ் யோகி, பால் யோகேஷ்வர், பால் போகேஷ்வர் போன்றவர்களுக்குப் பின் இனி என்ன? நான் ஒரு தேச பக்தன். னால் அமெரிக்காவின் குடிமக்களையும் அறிவேன். அவர்கள் கடுமையாக '' போர்'' கி விட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதாவது அதிகம் போரானா மனிதர்கள். பங்கு சந்தைகள் அவர்களுக்கு தேடி வந்து டாலர்களை கொடுத்துவிட்டுப் போகிறது. வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது, மதுபான பாட்டில்கள் இருக்கிறது. ஒவ்வொரு மாலையும் அவர்கள் குறைந்தது பத்து பதினைந்து பேர்களுடன் ''ஹவ் டு யு டூ'' செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களின் போரடிப்பு போய் விடுவதில்லை. பிறநாடுகள் மீது அமெரிக்கா எவ்வளவுதான் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினாலும் அது உற்சாகம் கொள்ளவில்லை. அதற்கு எதே தேவையாய் இருக்கிறது. அதுவும் இந்தியாவிலிருந்துதான் எதே தேவையாய் இருக்கிறது.
எனக்கு அமெரிக்கா குறித்து எவ்வளவு கவலை உண்டானதோ அதே அளவில் இந்தியர்கள் குறித்தும் ஏற்பட்டது. இந்தியர்களுக்கும் ஏதே தேவையாய் இருந்தது.
நமத இந்திய சகோதரர்கள் அங்கு டாலருக்காகவும் இங்கு ரூபாய்களுக்காகவும் எதை கொண்டுச் செல்வது.? ரவிசங்கரிடமும் அவர்கள் போராகி விட்டார்கள். யோகிகள், புனிதர்கள் போன்றவர்களிடமும் அவர்கள் கடும் போராகி விட்டார்கள். இனி அவர்களுக்கு புதிதாக எதாவது தேவைப் படுகிறது. போரடிப்பை முடித்துக் கொள்வதற்கும் உற்சாகப் பட்டுக் கொள்வதற்கும். இவைகளுக்குப் பதிலாய் அவர்கள் டாலர்கள் தர தயாராய் இருக்கிறார்கள்.
இந்த முறை இந்தியாவிலிருந்து ''டிவைன் லுனடிக் மிஷன்'' அழைத்துச் செல்லலாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் கும். இப்படியொரு மிஷன் இன்றுவரை போகவில்லை. 'டிவைன் லுனாடிக் மிஷன்' அதாவது 'தெய்வீக பைத்தியங்களின் மிஷன்' என்பது இந்தியாவிலிருந்து இது புது விஷயமாக இருக்கும்.
எனக்குத் தெரியும். அமெரிக்கர்கள் கண்டிப்பாக ''வீ ஹேவ் சீன் வன். ஹிஜ் நேம் இஸ் கிருஷ்ண மேனன்.'' (நாங்கள் ஒரு பைத்தியத்தைப் பார்த்திருக்கிறோம். அவருடையப் பெயர் கிருஷ்ண மேனன்) என்று சொல்வார்கள். அப்பொழுது நமது ஏஜென்ட் நீங்கள் பார்த்தவர் ''டிவைன்'' (தெய்வீகமானவர்) இல்லை. மேலும் அவர் பைத்தியமாகவும் இல்லை. அதனால் இந்த முறை உண்மையாக தெய்வீக பைத்தியங்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.
தெய்வீக அமைப்புகள் ஸ்மகலிங் (கள்ளக் கடத்தல்) செய்து கொண்டிருக்கின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியும். னால் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் ' சொர்கத்தில்' கூட ஸ்மகலிங் ( கள்ளக் கடத்தல்) செய்ய முடியும் என்பது தெரியாது தான்.
இது தெய்வீக துறையின் மூலமாக நடக்கக் கூடியது. இந்த பவித்திரமான இந்திய தேசத்தில் குஜராத் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒருவன் புனித நீரைக் கொடுத்து ஊரையே அழித்து விட்டான். இப்படிப்பட்ட ஒருவன் அமெரிக்கரை சொர்க்கத்திற்கு கடத்திச் செல்ல முடியாதா?
பொருட்களை திருடுவது மட்டுமல்ல திருட்டு, தெய்வீக திருட்டும் இருக்கிறது. ஒருவன் நீளமாக தாடி வளர்த்துக் கொண்டு தன்னுடன் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போய் '' எனது வயது யிரம் ண்டுகள். நான் யிரம் காலமாக இமய மலையில் நான் தவம் செய்து கொண்டிருந்தேன். ஈஷ்வரனுடன் நன் மூன்று முறை பேசியிருக்கிறேன்.'' என்று முகத்தில் பிரகாஷம் காட்டினார். இதனை நம்பத் தயங்கிய கூடியிருந்த அமெரிக்கரில் ஒருவர் சீடனிடம் ''ஏனப்பா, உனது குரு உண்மையைச் சொல்கிறாரா? அவரது வயது உண்மையிலேயே யிரம் ண்டுகள் தானா? '' என்று கேட்டான். அதற்கு சீடன் ''என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. காரணம் நான் இவருடன் கடந்த ஐநூறு ண்டுகளாகத்தான் இருக்கிறேன்'' என்றான்.
சீடனுக்கு ஐநூறு ண்டுகள் ஏற்கனவே கி விட்ட காரணத்தால் அவர் தனது தனி கம்பெனியை திறக்கலாம். னால் காமசாத்திரம், தெய்வீகம், யோகிகள், மற்றும் சாதுக்கள் என இந்தியாவின் அனைத்து சிறப்புகளும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி விட்டது. இனி நாம் ஒரேயொரு பொருளைத்தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதுதான் இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷன்- டிவைன் லுனாடிக் மிஷன்.
எனது அவசரமான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் 'இந்தியன் டிவைன் லுனாடிக் மிஷனை' உடனடியாக அமைக்க வேண்டும். என்னைவிட பெரியவர்கள் இந்த நாட்டில் உள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். னால் நான் இந்திய நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன். மேலாக அமெரிக்க சகோதரர்களின் போரடிப்பை போக்க கண்டிப்பாய் எதையாவது செய்ய விருப்பப் படுகிறேன்.
எனக்குத் தெரியும் யிரம் ண்டுகளாய் ' ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா' என்று சதா ஜெபித்தப் பின்னாரும் ரேஷன் கடையில் சர்க்கரை கிடைக்காமல் பிளாக்கில் வாங்க வேண்டிய நிலையாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்கர்கள் ''ராமா! கிருஷ்ணா!'' என்று பஜனை செய்து கொண்டிருப்பதால் என்ன கிடைத்து விடப் போகிறது? னாலும் செல்வம் மற்றும் அதிகாரம் கொண்ட மனிதர்கள் நிரைந்த வல்லரசு நாட்டு மக்கள் அமைதிக்கான வழிகள் கொஞ்சம் வித்தியாசமானதுதான். இந்த அமைதி இந்தியாவிலிருந்து கிடைத்து விட்டால் இந்தியாவுக்கும் பெரு¨மைதானே. இந்தியாவின் கௌரவம் கூடிவிடுமே.
''அமெரிக்க நாடு அடித்தளத்திலிருந்து காய முன்னேற்றத்திற்கு ஒரே தாவலில் சென்று விட்டது. அது இடையில் பண்பாட்டு நிலை வழியாக கடக்கவில்லை'' என்று பெட்டரண்ட் ரஸ்ஸல் தெரிவித்து உள்ளார். ஒரு நிலையை மறந்து விட்டுள்ளது. எனக்கு ரஸ்ஸலுடன் என்ன பேச்சு இருக்கிறது? 'டிவைன் லுனாடிக் மிஷன்' என்ற சர்வதேசிய வியாபாரத்தை துவக்க இருக்கிறேன். உலகத்தின் பைத்தியங்கள் சுத்தமான பைத்தியங்கள். னால் இந்திய பைத்தியங்களோ தெய்வீக பைத்தியங்கள்.
நான் 'டிவைன் லுனாடிக் மிஷன்' அமைப்பை ஏற்படுத்த நினைக்கிறேன். இதன் உறுப்பினர்களாக பைத்தியக்கார விடுதியில் சேர்க்கப் படாதவர்கள் மட்டுமே இருக்க முடியும். எங்களுக்கு பைத்தியக்கார விடுதிக்கு வெளியே இருக்கும் பைத்தியங்கள் வேண்டும் அவர்கள் தான் உண்மையான பைத்தியங்களைப் போல் நடிக்க முடியும். யோகிகளைப் போல் நடிப்பது மிகவும் எளிது. கடவுளைப் போல் நடிப்பது மிக மிக எளிது. னால் பைத்தியங்களைப் போல் நடிப்பதுதான் மிகக் கடினம். அதனால் மிகச் சரியானவர்களைத் தேடி வருகிறேன். எனது நண்பர்களான இரண்டொரு பேராசிரியர்கள் கண்ணில் பட்டார்கள். இவர்களை இந்த மிஷனுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.
மிஷன் உருவாகும், கண்டிப்பாய் உருவாகும். அமெரிக்காவில் நமது ஏஜென்சி இது குறித்து பிரச்சாரம் செய்யும். ''சீ ரியல் இண்டியன் டிவைன் லுனாடிக்ஸ்' (இந்திய தெய்வீக பைத்தியங்களைப் பாருங்கள்) நாங்கள் நியுயார்க் விமான நிலையத்தில் இறங்கியதும் நாங்கள் இறங்கும் விபரம் செய்தித்தாள்களில் அச்சாகும். தொலைக்காட்சிகள் தயாராய் இருக்கும்.
திருமதி ராபர்ட் திருமதி சிம்ஷனிடம் ' நீங்கள் உண்மையில் இந்திய தெய்வீக பைத்தியங்களைப் பார்த்தீர்களா?'' என்று கேட்பார்.
திருமதி சிம்ஷன் ''நோ!, இஸ் தேர் வன் இன் திஸ் கன்டரி, 'அண்டர் காட்?'' என்று சொல்வார்.
திருமதி ராபர்ட் ''மாம். நாளை இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷன் நியுயார்க் வருகிறது. வாருங்கள் நாம் பார்க்கலாம். 'இட் வில் பி எ ரியல் ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பிரியன்ஸ். (அது ஒரு நல்ல தெய்வீக அனுபவமாக இருக்கும்)''
நியாயார்க் விமான நிலையத்தில் யிரக்கணக்கில் ண்களும் பெண்களும் இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷனை காண கூடி நிற்பார்கள். அவர்களுக்கு வாழ்கையின் போரடிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். எங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும். மாலைகள் அணிவிக்கப் படும். நாங்கள் தங்குவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் படும்.
நாங்கள் தெய்வீக பைத்தியங்களின் நிகழ்ச்சியை வழங்குவோம். பைத்தியமல்லாத ஒவ்வொருவரும் உண்மையான பைத்தியங்களைப் போல் எப்படி நடிப்பது என்று ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கும். நுழைவுக் கட்டணம் ஐம்பது டாலர்களாக இருக்கும். அமெரிக்கர்கள் யிரக்கணக்கில் பனம் செலவு செய்து 'இந்திய தெய்வீக பைத்தியங்களை' தரிஷனம் செய்ய வருவார்கள்.
எங்கள் வியாபாரம் மிகச் சிறப்பாக நடக்கும். மிஷனின் தலைவனான நான் உரையாற்றுவேன். '' வி ர் ரியல் இந்தியன் டிவைன் லுனாடிக்ஸ். அவர் ரிஷிகல்ஸ் என்ட் முனிவர்ஸ் தவுசன்ட் இயர்ஸ் அகோ செட் தேட் தி வேய் டு ரியல் இண்டர்னல் பீஸ் என்ட் சால்வேஷன் லாயிஸ் துரு லுனான்சி''. (நாங்க உண்மையான இந்திய தெய்வீக பைத்தியங்கள். நமக்குள் அமைதியும் விடுதலையும் பைத்தியக்கார நிலையில் தான் இருக்கிறது என்று நமது ரிஷிகளும் முனிவர்களும் யிரம் ண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டிருக்கிறார்கள்.
அதன் பின் எனது தோழர்கள் விதவிதமான பைத்தியக்கார வித்தைகளை செய்து காட்டுவார்கள் டாலர் மழை பொழியும்.
இந்த மிஷனில் பங்கு பெற விரும்புவோர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். அவர்கள் உண்மையான பைத்தியமாக இருக்கக் கூடாது என்பதுதான் நிபந்தனை. உண்மையான சாதுக்களை சாதுக்கள் குழுவில் எப்படி சேர்த்துக் கொள்ள மாட்டர்களோ அதே போல் உண்மையான பைத்தியங்களை இந்த மிஷனில் சேர்த்துக் கொள்ள இயலாது.
அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் டெல்லியின் ராம்லீலா மைதானம் அல்லது செங்கோட்டை மைதானத்தில் மிகச் சிறப்பாகவும் பிரமான்டமாகவும் வரவேற்பு கொடுக்கப் படும். பிரதம மந்திரியை இதற்கு தலைமை தாங்க அழைத்துவர முயற்சி செய்வேன்.
அப்படி பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் அரசியல் வனவாசத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலர் கிடைத்து விடுவார்கள்.
டெல்லியில் உள்ள ''கடத்தல்காரர்கள்' எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள்.
கஸ்டம் மற்றும் என்போர்ஸ் துறையினருடனும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு எங்கள் மிஷனுக்கு தரவளிப்பார்கள் என நம்புகிறோம்.
வரவேற்பு நிகழ்ச்சியின் போது ''இது இந்திய தெய்வீகத்தன்மைக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும். நமது தெய்வீக பைத்தியங்கள் உலக மக்களுக்கு அமைதியையும் மோட்சத்தையும் பற்றிய செய்திகளை கொடுத்து விட்டு வருகின்றனர். நமது நாட்டில் இந்த தெய்வீக பைத்தியங்களின் இயக்கம் மேன்மேலும் வளரும் ''என்று உரையாற்றுவேன்.
''டிவைன் லுனாடிக் மிஷன்'' கண்டிப்பாய் அமெரிக்கா போக வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அரசியல் உறவு பலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்த பைத்தியங்களின் மிஷன் கண்டிப்பாய் போயாக வேண்டும்.

No comments: