Tuesday, September 18, 2007

பரிட்டவணை




'கொஞ்சம் வெளியிலிருமா...'
அம்மாவின் வலி வாசகம்
மனம் பிசைக்கும்

கைவிரித்து விமானம் ஓட்டி
வாசல் நுழைகையில்
'இங்கே வ...ரா...தே...' என்ற
அக்காவின் கெஞ்சுதலில்
உயிர் துடிக்கும்

'யம்ம்ம்மா.. ரொம்ப வலிக்கே!'
படுக்கையில் சுருளும்
தங்கை கண்டு
உடல் நடுங்கும்

'ஒன்னுமில்லடா, நீ போ..'
ஈரக் கண்களுடன்
புன்னகைக்கும் தோழி கண்டு
இரக்கம் சுரக்கும்

'இன்னைக்கு முடியலங்க'
ரசச்சாப்பாடு தரும்
மனைவி கண்டு
இதயம் துடியாய் துடிக்கும்

இப்பொழுதெல்லாம் நானும்
உடலெங்கும் பல்லறுவா வெட்ட
முட்டுக்கு மேலும் கீழும்
குத்தல் வலியுடன்
அடிவயிற்றைப் பிடித்து
அழுது கொள்கிறேன்.

மதியழகன் சுப்பையா,மும்பை

Thursday, August 16, 2007

ஒருத்தர் கூடவா இல்லை??? என்ன கொடுமைடா இது.......?

அன்புத் தோழர்களுக்கு,
வணக்கம்.
இன்னும் சிவாஜி திரைப்படம் குறித்தும் காசு பெறாத விஷயங்கள் குறித்தும் மயிர் பிழக்கும் விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தொடரட்டும். மன்னிப்புகளுடன் சிறு அறிவிப்பு. மும்பையிலிருந்து ''அணி'' என்றப் பெயரில் கவிதைக்கான இதழ் வெளிவந்து கொண்டிருக்கிறது. நன்கொடைகள், சந்தாக்கள் கேட்டகவில்லை படைப்புகள் தாருங்கள். அடுத்த இதழ் தயாரிப்பு ஆயத்தமாகி விட்டது. ஏற்கனவே அறிவித்தபடி இந்த இதழ் ''விமர்சன சிறப்பிதழ்'' நூல் விமர்சனங்கள்., விமர்சனங்கள் குறித்த கட்டுரைகள் அவசியப் படுகின்றன. கவிதைகளும் கவிதைச் சார்ந்த கட்டுரைகளும் தொடர்ந்து அனுப்புங்கள். அல்லது இதில் ஈடுபாடுடையவர்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.
ஆர்வமானவர்கள் அனுப்பி வையுங்கள். விபரமானவர்கள் விரைந்து செயல் படுங்கள். புரிந்து கொண்டவர்களுக்கு இத்தனை போதுமானது.
மேலும் ''அணி'' இதழ் சார்பாக குழந்தைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்ட சிறுகதைகளை தொகுக்கும் முயற்சியும் உள்ளது. பங்குத் தொகையாக எதுவுமில்லை. படைப்புகளை மட்டும் தாருங்கள்.
மாதிரி இதழுக்கு எழுதுங்கள்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி:
MADHIYALAGAN SUBBIAH,
10/1-B, TRIVEDI & DESAI CHAWL,
D'MONTE LANE, MALAD (W),
MUMBAI-400064.

PHONE: 09323306677
E-mail: madhiyalagan@rediffmail.com

Wednesday, July 25, 2007

"அணி' 5 - சிற்றிதழ்


தொடங்கிவிட்டது மும்பை மழை !


தமிழகத்தைப் போல சிறுதுளி, தூறலாய் என்றெல்லாம் தொடங்காது! ஆரம்பமே அமர்க்கள அட்டகாசம் தான் ! கடந்த மழைக் காலங்களின் அவஸ்த்தைகள் ! அவலங்கள், துயரங்கள் யாவும் தூறலாய் விழுகின்றன ! வருணா ! கொஞ்சம் அடங்கியே இருண்ணா!
வெயில் காலத்தில் ஆரம்பித்த "அணி' 5ன் பணிகள் மழைக்காலத்தில் மலர்ந்து மனம் வீசுவதன் காரணங்களை புத்திசாலி வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுண்டு என்றாலும் எவ்வித எதிர்வினைகளுமில்லா இலக்கியப் பணி (!) கூட கலிப்பூட்டுவது தான் ! உணர்ந்த தமிழன் ஒருத்தர்கூடவா இல்லை! பாரதி தீர்க்கதரிசி.
திருமுதுகுன்றத்தில், புதினக் கலைஞர்
ச. தமிழ்ச்செல்வி முன் கையெழுத்து நிகழ்ந்த "பெண் படைப்பாளிகளின் சந்திப்பு' நல்லதொரு தொடக்கம். ஆண்டுக்கொருமுறை படைப்புகளோடு கூடி தொகுத்து புத்தகமாய் பிறக்க இலக்கிய தேவி அருள் வேண்டும். தோழியர் யாவருக்கும் அணியின் வாழ்த்துக்கள்.
அணியின் கவிதைகள் குறித்து கூர்மையாய் விமர்சிக்கும் நண்பர் ஒருவரின் கூற்றிது : அணியில் பெண்களின் படைப்புகளும், பெண்ணிய படைப்புகளும் அதிகமாகவும் கௌரவமாகவும் வெளிவருவது சிறப்புக்குரியது. அணியின் படைப்புகள் ஆய்வுக்குரியன. வழிகாட்டிகளின் கடைக்கண் பார்வையில் அணி விழுந்தால் நல்லது.
அணியின் மதிப்புரைக்காக நிறைய புதிய கவிதையும், கவிதை சார்ந்ததுமாக நூல்கள் வந்தவண்ணமிருப்பது மகிழ்ச்சியளித்தாலும் உடனடியாக மதிப்புரை எழுதி உற்சாகப்படுத்தவியலாததில் அணிக்கு வருத்தம் தான். "விமர்சன சிறப்பிதழாக கொண்டு வந்து கடன் தீர்ப்போம் அண்ணா!' என தம்பி மதி சூழுரைத்துள்ளான். நினைத்தாலே இனிக்கும்! நிச்சயம் நடக்கும்!
இந்த இதழில் கூட்டுக்கவிதை மற்றும் சொட்டுக் கவிதை என இரு புதிய முயற்சிகளை பதிவு செய்துள்ளோம். தேர்ந்த ரசனை மூக்குகள் புதிய வாசனையை மோப்பம் பிடித்து விடும்தானே.
அணி சார்பாக ஒரு சிறுகதை தொகுப்பு கொண்டுவர உத்தேசம் சிறுகதைகள் குழந்தைகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு எட்டுப் பக்கத்திற்குள் இருப்பின் நலம். போட்டுத் தாக்குங்க கதைக் காரர்களே !
ஆனந்த விகடனில் சுஜாதா கற்றதும் பெற்றதும் பகுதியில் அணி உட்பட சில பல சிற்றிதழ்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. இது குறித்து தமிழக நண்பர்களிடமிருந்து சிறு அசைவு கூட இல்லை என்பதில் ஒரு திருப்தி. பாரதியின் தீர்க்க தரிசனம் தான் என்னே.

அன்புடன்
அன்பாதவன் மதியழகன் சுப்பையா

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கல்யாண மாலை

கீதாஞ்சலி பிரியதர்ஷினி

மெல்ல நீர்த்துக் கொண்டிருக்கிறது இசை
அறைக்குள் அரூபமாய் உலவும் வெப்பத்தில்
தயவு செய்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என யாரோ பயணி விட்டு போன உடமை கடிகார முட்களோடு கனக்கிறது பெரு நாய்கள் வளர எழுப்பப்படும் காம்பவுண்டுக்குள் மினுங்குகின்றன வீட்டு உரிமையாளனின் கண்கள் நல்லதாய் பொறுக்கி எடுத்துக் கொள், தக்காளி
பழங்களை பச்சை மூங்கில் தட்டில்
வைப்பவள் அன்பானவள் நெடுஞ்சாலை சிக்னலில் கல்யாண முறம் கிடைக்கிறது
குட்டைப் பாவாடை அணிந்த பெண்ணொருத்தியுடனும் சீறிப் பறக்கும் பயிற்சி விமானங்களுடனும் கழிந்து கொண்டிருக்கிறது எனது மாலைப் பொழுது

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மகசூல்

கைக்கு அகப்பட்டதை
சுருட்டிக் கொண்டு சாமார்த்தியமாய்
கரை ஒதுங்குகிறான் கட்டுமரக்காரன்

ரகசியமாய் புதைக்கப்பட்ட
என் மூதாதையர்களின் காதல்
மொத்தமாய் குவிய
அநாமத்தாய் பரப்பிக் கிடந்த மணலில்
சுவாரஸ்யமான கனவுகளை
முகம் புதைத்துத் தேடும் அவர்களை
பார்த்த சங்கோஜத்தில்
தலைகுனிந்தபடி
என் உடன் வந்தோர்

"கடைசியாய் ஒரு முத்தம் மட்டும்'

எழும்பிய அலைகளால் நிராகரிக்கப்பட்ட
சில மாலைகளும் முழுத் தேங்காயும்
அவனுக்கானதில் என் பலவீனம்
உடல் எங்கும் உப்பி பெருத்து
மூச்சாய் வெளியேற தூரத்தில் மிதந்துப் போன
புகையோடு கரைந்து போனது.

மறுப்பேதும் பேசாமல் போன என்னை
அவசரமாய் தன்னை ஒளித்துக் கொண்ட
அந்த நண்டிடம் கேட்டிருக்கலாம்

வம்புல மாட்டாம கடந்து போகிறான்
கிளி ஜோசியக்காரனும்

பொழுதுபோயி ரொம்ப நேரமாக
தங்கையாய் மனைவியாய் அம்மாவாய்
ஆளுக்கொரு திசையில்...

வந்து போனதற்கு சங்குமாலையும்
கருவாட்டு வாசனையும்
ஆளுக்கு கொஞ்சம் ஈரமும்
அவரவர் பைகளில்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கூட்டுக்கவிதை

ஒரு அறையை

தட்டிக் கொண்டிருக்கிறேன்
எதிர்பாராத பொழுதொன்று
எப்பொழுதும் என் அருகில்
மெல்லத் தாடி நரைத்த
ஒரு கிழவன்
மூதாட்டியின் பாதத்தில்
பணிந்து விலகுகிறது
அந்திப் பொழுது

மாலை மயங்கிச் சரியும்
மலைகளுக்கு அடியில்
முணுமுணுத்துச் செல்கிறாள்
ஒரு நாடோடிப் பெண்
தன் முரட்டு வரிகளை
என் செடிகளுக்கு
உன் நிழலும்
என் கொடிகளுக்கு
உன் உயரமும் தாம் பச்சையம்

பச்சையமெனில்
பச்சையம்மன்
மீனாக்ஷி
கையில் கிளி
பச்சைக் கிளிகளுக்கு
வானமே சொந்தம்
கவிஞர்களும் ஒரு விதத்தில்
பச்சைக் கிளிகள்தாம்.

அப்பாஸ் * உமாபதி சண்முகம் * மகரந்தன் * விக்ரமாதித்யன் நம்பி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஜீவமுடிச்சு

வட்டத்துக்குள் புள்ளியாய்
தவித்து நிற்கிறாய் ஆரம் சூழ
அச்சு நகர்கிறது
புள்ளியிலிருந்து விலகி

தனிமையின் கணங்களில்
காணாமல் போனது
மென் புன்னகை

வாழ யத்தனித்த பருவங்களில்
உடலோடு தூக்கி எறிதலும்
உதாசீனப் பார்வையும்
வெளித் தள்ளியது
குடலிலிருந்து வெளியேறும் மலமென

நோகாமல் விட்டெறியும் கல்லில்
கண்ணீராய் கசிந்தது துக்கம்
நீர்ப்பசையற்ற தொண்டைக் குழிக்குள்
முள்ளாய் குத்தும் பந்தம்
திணறிய குமட்டலில் வழிந்தது
ரத்தமும் உறவுச்சீழும்
புதுக்காற்றில் உயிர்த்தது
ஜீவ முடிச்சு

அரங்கமல்லிகா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

புறந்தள்ள முடியாத புதுக்கவிதைகள்

கவிஞர் மருதூர் மறவனின் முதல் கவிதைத் தொகுப்பான "கிளி இறகு' அவரது மனித நேயத்தையும், கூர்த்த சிந்தனையையும், வாழ்வை கூர்ந்து நோக்கும் பார்வையையும் நமக்குக் காட்டுகின்றது. கவிஞர் தாமரை அணிந்துரையில் கூறியுள்ளபடி, வாழ்க்கையை அதன் முரண்பாடுகளை, காலபிணக்குகளை சின்னச் சின்ன நிகழ்வுகளில் இழையோடும் பசிய நினைவுகளை தன் எளிய சொற்களால் இதம் தரும் இனிய கவிதைகளாக ஆக்கி இருக்கிறார். ஒரு கலைஞனுக்குரிய கவிஞனுக்கு வேண்டிய அழகு உபாசனை அவருக்கு வாய்த்திருக்கிறது.
தனக்கு கனிப்பளித்த இளமை தன்பிள்ளைக்கு சிறையாய் அமைந்துள்ள தடர்த்த சோகத்தை காலச்சிறை என்கிற கவிதை சொல்கிறது பலவித முதல் அனுபவங்கள் பலருக்கு இனிய நினைவுகளும் சிலருக்கு வாழ்க்கையை குடிக்கும் துயரமாகவும் இருப்பதை "முதன் முதலாக' கவிதையில் காட்டுகிறார். கவிஞரின் வானம் பார்க்கும் பூமிகள் சமகாலப் பார்வை கொண்டதாகும். மழைநீர் சேகரிப்பு பலன்களை கலைரசனையோடு "மழை அறுவடை' கவிதை சொல்கிறது. "வரிசைமீறல்' கவிதைகளில் கவிஞரின் உயிர் இரக்கம் மனித நேயம் பிற ஜீவன்களின் நேயமாகவும் கசிவதை உயிர் இரக்கத்தில் நையாண்டியாகவும் வான்வழியில் அனுதாப உணர்வோடும் வெளிப்படுகின்றன. வாழ்வில் வாய்ப்பு பெற்றவர்க்கே வாழும் அதிர்ஷடம் நேர்வதை நிகழ்வு தகவு ஆதங்கத்தோடு சொல்கிறது. "அன்புள்ள திருடா' மென்மை பூக்க வைக்கும், அழகான அனுபவ ஆதங்கத்தைக்காட்டுகிற சிறப்பான கவிதை நாம் அனைவருக்கும் நேர்ந்திருக்கிற ஒரு யதார்த்தக்காட்சியை பொறுப்பு கவிதையில் மீளப்பார்க்கிறோம். தண்ணீர்க்குழாயை லாவகமாக திறந்து குடிக்கிற குரங்கு அதை மூடும் பொறுப்புணர்வு இல்லாததைக்காட்டும் கவிஞர் சமுதாயத்திலும் இப்படி இருக்கிற பொறுப்புணர்வற்ற மாந்தரை இடித்துக் காட்டுகிறார். "செவித்திறன்' என்கிற கவிதை ஒரு அருமையான அங்ககவிதை சுற்றுப்புறச்சூழல் கேட்டில் சிந்தனையாளர்களையே அதிகம் பாதிக்கிற ஒலிமாசு பற்றி அற்புதமாகப் பேசுகிறது கவிதை இது நயமான நையாண்டி "பாதுகாப்பு' என்கிற கவிதையும் மனித பண்பின் அவலத்தை நையாண்டி செய்கிற கவிதைதான். பூட்டு தண்ணீர்க் குவளை பெருமாள் கோவிலுக்குதான் என்று சிரிக்கிறார் கவிஞர் இன்னும் இப்படி நிறைய யதார்த்தம் காட்டும் இயல்பான வலிந்து கட்டாத கவிதைகள். அங்கதமும் நகைச்சுவையும் அநேக கவிதைகளில் நம்மை மகிழ்விக்கின்றன. ஒரு படைப்பாளிக்கு இது அமைவது பெரிய வரம் ! கவிஞர் மருதூர் மறவனுக்கு அது கிட்டி இருக்கிறது "தீவுகள், மீசை, எழுதுகோல், விகிதக்கணக்கு' போன்ற கவிதைகள் அதை நிரூபிக்கின்றன.
புதுக்கவிதைகளைப்புறந்தள்ளுபவர்களுக்கு விண்ணப்பமாய் ஒரு நயமான கவிதையை "மரபுத்தோழர்' என்ற தலைப்பில் கவிஞர் எழுதி இருக்கிறார். மரபுக்கவிதை நடப்புக்கு சரிப்பட்டு வராது, நேர அருமை என்றெல்லாம் வாதிடுகிறார். சுவையற்ற நுனிக்கரும்பின் சாராய் இன்று அதிகபுதுக்கவிதைகள் இருப்பது தான் மரபுக்கவிதைகளின் புறந்தள்ளலின் ரகசியம் மருதூர் மறவனின் புதுக்கவிதைகள் போல மனிதநேயமிக்க ஆதரிக்கும் சமுதாயமும் அனுபவ யதார்த்தங்களை இவ்வளவு எளிதாய் ரசமாய் அழகாய்ச் சொல்லமுடிந்தால் புதுக்கவிதையை யாரும் புறந்தள்ளப் போவதில்லை. "கிளி இறகு' மூலம் கவிஞர் மருதூர் மறவன் அதை மெய்ப்பித்திருக்கிறார்.

வே. சபா நாயகம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
லிமரைக்கூ..
விண்மீன்த் துளி


வெடியில் இழந்தது உறவை
வேட்டைக் காரனின் உயிர் வெறியைச்
சொல்லி அழுமொருப் பறவை

தடம் மாறும் அரசியல்
ஆள்பவர்க் கதிர்ச்சி தந்து நிறம்மாறும்
ரேஷன் கடை அரிசியல்

அள்ளிக் குடித்தோம் ஊற்றில்
உள்ளங்கைச் சில்லிட, நீர்நிலை வறள
சுமக்கிறோம் "வாட்டர் பாட்டில்'

தூரிகையெடு துளி மைத் தொடு
உயிரைத் தந்து உணர்வைக் கலந்து
ஓவிய மாக்கிக் கொடு

மலையிடை மறைந்தது கதிரொளி
இருள் வானம் தவித் தழுக
எழுந்தது விண்மீன் துளி.
பஸ்ல போற அய்யா
தின்னு பாரு தேனா யினிக்கும்
இது எங்க ஊரு கொய்யா

நீரின்றி காயும் ஆறு
நித்தம் மணலெடுத்து குழி பறிக்கும்
மணல் லாரி நூறு

நேற்று வரையிது செல்பேசி
நிலவே உன் குரல் வழிய
இன்றோ காதல் பேசி

துயிலாத குயிலின் கீதம்
வறண்டு காய்ந்தவன் கேட்ட போதில்
மனசெல்லாம் அன்பின் ஓதம்

எழுதினார் நிறைய லிமரைக்கூ
எதிர் வீட்டு விருந்துக்கு வந்த
இளம் வயது குமரிக்கு.

பாரதி இளவேனில்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

புதையல்
வலி
சத்தாரா மாலதி

யோசனைகளே முடிந்துபோன
வேலையில்லா அவஸ்தையில்
கடமைகளின் சிடுக்குகளில்
சக்களத்தி அறையின்
கிளுகிளுப்புகளில்
தூரங்களில் விலகிப்போன
ஈரங்களில் சமூக சோகங்களில்
போலி வேஷங்களில்
உடல் நலிவு அதிர்வுகளில்
காற்றுக்காய் நீருக்காய்
தேட்டைகளில்
பணவேட்டைகளில்
நல்லவரும் மிதித்து விட்ட
விபத்துகளில்
சுகம் நீ
வலிக்கூற்றின் அணு அணுவே
சுகம் நீ
எலும்புக்குள் மஞ்ஞைக்குள்
சில்லிட்டு அறிவுத் திப்பிகளில்
புரையோடவிட்டு
வரும் வலியே நீ சுகம்.

விமர்சக விகடங்கள்
சு. வில்வரத்தினம்
நூல் வெளியீடு ஒன்று நிகழ்ந்தது
நால் வகைக் கிரியைகளும் நடந்தேறியபின்
நூலை இவர் விமர்சிப்பார் எனவும்
எழுந்தார் ஒருவர் எழுத்தாளர்.

வந்தார் அரங்கில் சபையை
வடிவாக நோட்டம் விட்டே
எங்கோ ஒரு மூலையில் இருப்போனை
இலக்கியத்தில் எளியோனாகச்
சிந்தையில் "பாவம்' கொண்டு
சின்னச் செருமலோடு ஆரம்பித்தார்

"....எளிமையாய் விளக்கப் போனால்
இதற்கொரு கதை சொல்வேன்'' என்று
கதை சொல்லத் தொடங்கிய மனுஷன் ஓர்
கழுதையின் மேலே தொற்றி
கழுதையை விட்டிறங்கிப் பின்னொரு
குதிரையின் பிடரி மயிர் பிடித்தேறியப்
பெருவெளிச் சவாரி செய்து பின்
குதிரை விட்டிறங்கி உடனே
குரங்கொன்றின் வாலைப் பற்றி...

இப்படியே
கதை கதையாம் காரணமாம்
காரணத்துக்கோர் கதையாம் என்று
பலகுட்டி ஈன்றபன்றியை போல
குட்டிக்கைகளை ஈன்ற களைப்பில்
குலைத்தள்ளி நின்றவேளை

குட்டிக் கதைகளின் கும்பலின் இடைநழுவி
விமர்சனம் மெல்ல எங்கோ விடை யூர்ந்தேகிற்று.

விடை பெறுகிறேன் என்று இவரும்
விமர்சனம் அன்று தமது
"விகடனம்' முடித்துக் கொண்டே,
கதிரையில் அமர்ந்தார் அல்லர்
தமது
கை வாகனம் இவர் தந்தாரன்றே !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
சூர்யோதயா கவிதைகள்


தீப மரத்திலிருந்து
கண்கவர் வண்ணம்காட்டி
அழைக்கிறது ...
உண்பதற்கான தூண்டலோடு
விலக்கப்பட்ட கனி.

உரசுதலின் பங்கின்றியும்
தீப்பற்றி எரிகிறது
நீராதாரங்களின்றிக்
காய்ந்து கிடக்கும் காடு.

வலையெடுத்து வந்த
விசைப்படகில் பயணிக்கிறது
தூண்டில் புழுக்களைப்
புறக்கணித்த மீன்.

கையகப்படுத்துகையில்
காட்டிய தீவிரம் தணிகிறது
நிதானமாய்ப் பெறும்
நிவாரண நிதிகளால் ..

கடந்து ஆக்கிரமிக்கவே
ஆரவாரிக்கின்றன
கரைகளை நிர்மாணிக்கும்
அலைகள்.

அமைதி காத்தே அடக்கிவிடுகின்றன
இலாவகமாய்த் தீவுகள்.

***

அதட்டிப் படுக்கவைத்து அமைதி காத்தால்
துயில் கொள்ள மறுக்கிறது குழந்தை.

சோ×ட்டி வயிறு நிறைத்து
ஓடி விளையாட விட்டு உடல் வருத்தி...
நாவசைத்துத் தாலாட்டி
தொடைதட்டித் தூளியாட்டி...
தூங்கச் செய்கிறாள் தாய்.

உடல் அசைவோ இனிய ஓசையோ
வேண்டப்படுகிறது துயிலுக்கு..
அலைப்புறுத்தும் உணர்ச்சிகள்தான்
வாயில்களாகின்றன அமைதிக்கு.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வன்கால்கள்

அடர்ந்த வனாந்தரத்தில்
சுற்றி அலைகிறேன்
வெளியேறும் வழிதேடித்தேடி
சிக்கித் தவிக்க நசுங்கி
விழும் உடல் யானைப் பள்ளத்துள்.
முட்டி மோதி எதிரொலிக்கின்றன
கூக்குரல்கள்.

சிதறும் மனத்துகள்கள்
நடுங்கும் கால்கள்
வருகை நோக்கும் விழிகள்
குழிக்குள் அலையும் உடலை
தூக்கி நிறுத்தும் மென்கரங்கள்

பசியாறும் உடல் தடவி
சற்றே தளர்ந்து
ஆசுவாசிக்கையில்
மீளாக் குழிக்குள் தள்ளிக் கையுதறி
நடக்கிறது வன்கால்கள்.

தி. பரமேஸ்வரி.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இயந்திர பொம்மை
ஹிப்ருவில் டாலியா ரவிகோவிட்ச்
தமிழில் பல்லவிகுமார்

அந்த இரவில் நானொரு
இயந்திர பொம்மையாக இயங்கினேன்
இடதுபக்கம், வலது பக்கம்
இன்னும் எல்லா பக்கமும்
இயன்றவரை திருப்பப்பட்டேன்
அதில், தடுமாறி விழுந்ததில்
முகத்தில் காயமும்
மேலும் பல சிதைவுகளும் ஏற்பட்டன
திறமையானதொரு
தொழிலாளியின் கரங்களால்
தெரியாதபடி
அவைகள் சரிசெய்யப்பட்டன.

அதன்பின் நான் மீண்டும்
அதைப் போன்ற ஒரு அழகிய பொம்மையானேன்
எல்லோரையும் சமமாக ஏற்று
எல்லோருக்கும் கீழ்படிந்து
எல்லாவற்றையும் ஏற்கலானேன்,
என்றாலும் விரைவிலேயே
முறிந்த கிளையைப் போல
முகம் திருப்பி வித்தியாசமாக
பார்க்கப்படும் ஒரு
பொம்மையாக மாறினேன்
இறுதியில் மெல்லிய வேர்கள்
இறுகி சுருள்வதைப் போல நான் மாறும் வரை
இது தொடர்ந்தது.

அதன்பின் நான் பந்தினைப் போல
அங்குமிங்கும் நடனமாடத் தொடங்கினேன்
அப்போதும் அவர்கள்
என்னை பூனையுடனும், நாயுடனும்
இருக்கவே செய்தனர்.
எனது எல்லா நடவடிக்கைகளும்
எல்லைக்குள் தான் நடைபெற்றன.
எண்ணிக்கைக்கும் உட்படுத்தப்பட்டன
எவ்வித மாறுபாடுகளும்
இல்லாததாகவே
அவைகள் தொடர்ந்தன.

ஆனாலும்,
எனக்கு தங்க முடிகள் தரித்தனர்
எனக்கு நீலக்கண்களும் வாய்த்தன
தோட்டத்திலுள்ள பூக்களின்
அழகிய வண்ணங்களில்
ஆறுடைகளும் கிடைத்தன.
இதற்கும் மேல்
செர்ரிகளின் அலங்கரிப்பில்
செழித்த வைகோலாலானக்
குல்லாய்களும் கூட சூடப்பட்டன.

(ஹிப்ருமொழியின் பிரபலமான பெண்கவிஞர்களில் டாலியா ரவிகோவிட்ச் முக்கியமானவர். இவரது படைப்புகளில் பெண்ணிய சிந்தனைகளும் வாழ்வியல் பிரச்சனைகளும் நிரம்பி இருக்கும் நவீன போக்குடன் கூடிய உணர்ச்சிகரமான கவிதைகளை படைப்பதில் இவர் வல்லவர்.)
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

சின்னச் சின்னச் சுகங்கள்...

வேறு வேறாய் இருந்த நம்மை
வேர்களாக்கிக் கொண்டது காதல் !

உன்னை அழகாய்க் காட்டுவது
அலங்காரமல்ல என் காதல் !

அண்மையில் புதிதாய் என்ன நூல் வாங்கினாய்?
என்கிறாய் சொல்லட்டுமா...?
நேற்றைய சந்திப்பில் என்
சட்டைப் பொத்தானில் சிக்கிக் கொண்ட
உன் புடவை நூல்தான் !

என் வீட்டு விசேசம் ஒன்றிற்கு
வந்து போனாய் நீ அதுமுதல்
நீ வந்து போனதே விசேசமாகிவிட்டது
என் வீட்டுக்கு !

கூறுகெட்ட காகம் குயில் முட்டையைத்
தன் முட்டையென்று அடைகாத்தது மாதிரி
நாமிருவரும் நட்பென்று
அடைகாத்திருக்கிறோம் காதலை !

சேர்ந்து நின்றவாறு புகைப்படம் எடுத்தால்
பிரிந்து விடுவோம் என்கிறாய்
அப்படியானால் வா சேர்ந்து நின்றவாறு
கண்ணாடியாவது பார்ப்போம் !

நான் வந்தால் நகர்ந்து விடுமுன்
தோழிதான்
உனக்கு நானெழுதிய
முதல் காதற்கடிதம் !

அ.சரவணராஜ்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வண்ணத்துப் பூச்சியின் குற்றம்

இரவின் கரையோரம்
அறையொளிரும்
குழல் விளக்கை முத்தமிட்டு
ஒளி நதியில் தன் வர்ணங்கள் கரைய
நீராடுகிறாள் வண்ணத்துப் பூச்சி ஒருத்தி

தேவ ராஜ்யத்தை
அழுக்காக்கிய குற்றத்துக்காக
மெய் பொய்கள் ஊசலாடும்
விசாரணை முடிவில்
பகலின் விளிம்பில்
அவளைக் கழுவிலேற்றி
இறகுச் சிலுவையை
எறும்புகள் சுமக்கத் தீர்ப்பெழுதி

பிலாத்துவின் கை கழுவலோடு
நழுவிகிறான் கடவுள்
கருணை மிகுந்து
இயல்பாய் புலருகிறது பொழுத
மரண அவஸ்தை ஏதுமின்றி.

பிலாத்து ரோம் பேரரசின் "யுதேயா' பகுதி ஆளுநர். மக்களின் நிர்பந்தத்துக்கு பணிந்து இயேசுவை சிலுவையில் அறைய ஆணை பிறப்பித்தவர்.

பொ. செந்திலரசு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நட்பின் சுகந்தமும் காதலின் வலியும்

உயிர்த்தீ (கவிதைகள்)
நளாயினி தாமரைச் செல்வன்

“கவிதை மொழி வாழ்வின் மவுனத்தையும், வாழ்வு சார்ந்த அதிர்வுகளையும் கூர்மையாக்குவது மனதில் ஏற்படும் நமைச்சல்களையும், ஏக்கங்களையும், இழந்தவைகளையும் நினைவுபடுத்தக் கூடியது. கவிதை மனதை உற்சாகப்படுத்தக் கூடியது. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு குரல் பேசும்; எதிர் குரல் கேட்கும்” எனக்குறிப்பிடும் விமர்சகர் முனைவர் அரங்க. மல்லிகா (நீர் நிரம்பிய காலம் பக் : 132) வின் சிந்தனையை பிரதிபலிப்பது போன்று நெய்யப்பட்டவை நாளாயினியின் கவிதைகள்
நட்பின் சுகந்தமும் காதலின் வலியும் உணர்த்தும் எளிய சொல்லாடல்களால் எனினும் அழுத்தமான உணர்வுகளால் தொகுத்த கவிதைத் தொகுப்பாக ‘உயிர்த்தீ’ பெண்ணியம் சிந்தனைகள் பரவலாகப் பேசப்படும் இந்தக் காலக்கட்டத்திலும் பெரும்பான்மை பெண்கள் அனுபவிக்கும் மனவேதனைகளுக்கு வார்த்தைகளேயில்லை. அதிலும் பிறந்த மண் விட்டு புகலிடம் தேடி உலக உருண்டையின் அட்ச, தீர்க்க ரேகைகளுக்குள் ஒளிந்து கொள்ள இடம் தேடியவையும் ஈழச் சகோதரிகளின் துயரம் சொல்ல இயலாதது. வாழ்வின் மீது கவியும் அரசபயங்கர வாதம் ஒரு புறமெனில் பாலியல் வன் கொடுமைகளும், இருத்தலுக்கே இயலாமல் போகும் வாழ்வியல் பிரச்னைகளும் மறுபுறம். சொந்தமண்ணை வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறும் அவலத்தோடு, வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் விசா வேண்டி சான்றிதழ் துணைவியாக யாருடனோ இருக்க வேண்டிய கட்டாயம். அயல்நாட்டு சமையலறைகளில் பணிப் பெண்களாக வாழ்க்கையைத் தள்ளும் பரிதாபம்..... இப்படியெல்லாம் இணைந்து துரத்தும் ஈழப்பெண்டிரின் வாழ்வில் கவிதைக்கும் இடமுண்டு என்பது சற்றே ஆறுதலான சங்கதி. மாறிவரும் சமூக வாழ்வியல் சூழலில் பெண் மனதுபடும் ஊசலாட்டத்தை படம் பிடிப்பவையாக நளாயினியின் உயிர்த்தீ கவிதைகள். சுவாரசியமும், துன்பமும், ஏக்கமும், ஆசைகளுமாய் நிலும் பயண வழிக் குறிப்புகள் தாம் இக்கவிதைகள எது நட்பு... எது காதல்.. எந்தச் சூழலில் நட்பு காதலாகிறது என்பதெல்லாம் புரியாத ஒரு மாய அவஸ்தையின் தொகுப்பாக நளாயினியின் படைப்பாக்கம் மூலம் ஈழம் பெற்றோரோ டென்மார்க் கில் வாழ்வதோ சுவிட்சர்லாந்தில்.. இப்படியொரு வாழ்வு தமிழக பெண் படைப்பாளிகளுக்கு இதுகாறும் வாய்க்காதது. இத்தனைச் சோகத்திலும் தன் மெல்லிய உணர்வுகளை கண்டுபிடித்து கோர்த்திருப்பது நளாயினின் வெற்றி
“எப்படி வேண்டுமானாலும் / இருந்துவிட்டு போகட்டும்
இப்போதாவது கண்டு பிடித்தேனே
எந்தன் மனசைஉந்தன் நினைவுகளோடு
நீர்த்தடாகத்துள் விழும் மழைத் துளியாய்
கண் மூடி இறங்கி ரசிக்கிறேன்”
ஆண் பெண் நட்பு என்பது வரையறைக்குட்பட்டது. அதே நேரம் மிக மிக அவசியமானது. இதை புரிந்தவராய் நளாயினி எழுதுகிறார்.
“நாம் எல்லாம் / காதலை மட்டுமே / சுவாசித்து பழகியவர்கள் / ஆண் பெண் நட்பை/ சுவாசிக்கப் பழகவேண்டும்.” அதற்கான காரணத்தையும் அவரே விளக்குகிறார்.
“காதல் தனது ஆட்சியை / பள்ளியறையில் முடித்துக்கொண்டு/ மூச்சடங்கிப் போகிறது
நட்பு அப்படியல்ல / இதயத்தின் இதயத்துள் / உணர்வின் உணர்வுகள் / புதுப்புது அர்த்தங்களை / வாழ்வின் எல்லை வரை / தருவதாய்.”
நட்பின் ஆழம் அதிகமாகி அதன் எல்லைகள் விரிவடைகிற போது சிலநேரம் அது காதலாகி விடவும் வாய்ப்பிருக்கிறது.
“உனக்குள்ளும் பல / கசங்கிய கவிதைகள்
எனக்குள்ளும் தான் / அதனால் தான் / நாள் நட்பை / தேர்ந்தெடுத்தோமா”
என்று வினா எழுப்புவரே ‘உன்னையே தந்துவிடேன்’ என உரிமை எழுப்பும் கOகுகுஉகுஐஙஉNஉகுகு உருவாகும் தருணம் நோக்கி நகர்கிறார். அப்படி காதல் வயப்படும் போது சூழல் மாற்றத்தில் “அரவணைத்து / அதன் / இறுக்கத்தில் என் சோர்வு / தொலைக்கும் / உன்பிடி” எனக் காமம் கலப்பதும் இயல்பாகிறது. இவை மாறிவரும் பண்பாட்டு சூழலின் பதிவுகள். மனசுக்குள் பரவும் மெழுகு வெளிச்சமாய் நட்பு குறித்த சிந்தனைகள் பரவும் போதே கருத்த நிழலாய் காதலும் காமமும்... பெண் மெழுகாய் உருகுவது காலமாற்றம் அல்லாது இருத்தலியல் பிரச்னையுங் கூட.
“ யாரோ சாய்த்து விட்டுப் போன / செடியை எடுத்து / பக்குவமாய் நீர் ஊற்றி / வளர்த்தெடுத்தாய் / பூத்துக்குலுங்கி / காய்த்துக் கனிந்து / அறுவடையாகும் நேரம் / இது யாருக்கும் சொந்தம் /” என்பவை துயரம் நிறைந்த புலம் பெயர் வாழ்வைச் சொல்லும் நுடக வரிகள்... வாழ்வின் யதார்த்தங்கள். நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட ஒரு அறை மயக்க அவஸ்தையில் எழுதப்பட்ட இக்கவிதைகளை எதிர்கொள்ள ஒரு புதுமனசு தேவைப்படுகிறது. அதை புரிந்தவராய் நளாயினி இருப்பது சின்னதொரு நிம்மதி.

“ எத்தனைக் கவிதைகள் / எழுதி ஒளித்து வைத்திருக்கிறேன் /
கலைஞர் ஏற்பர் / சமூகம் ஏற்காது பார்”
இன்றையச் சூழலில், பெண்களின் படைப்புகள் பலராலும் பல்வேறு விதமாக விமர்சிக்கப் படுகையில் நளாயினியின் படைப்புகளும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளக் கூடும். ஆனாலும் படைப்பாளி அஞ்சவோ, ஒளிந்துகொள்ளவோ,தேவையில்லை, ஏனெனில் இவை, வாழ்தலின் இயலாமையில் குறைந்த பட்சஇருத்தலின் பதிவுகள்.

அன்பாதவன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கடைசி ஆசை
மௌனம் இரமேசு


தொடரும் தோல்விகளால்
தொய்ந்து துவளாமல்

எனக்கான தாலாட்டை
இசைத்த வண்ணமேயிருக்கணும்
விஸ்கியின் ஒவ்வொரு சொட்டும்

மதுபான விடுதியின் தனித்த அறையில்
தாணிக்கோணி மெழுகுகள் கசியும்
மெல்லொளியில்

மேசையின் எதிர்புறத்திலிருந்து
சிநேகம் பூத்து பால்யங்கள் கிளறி

கைகுலுக்கி பிரிந்த பிறகும்

விரியும் ஞாபகங்களில்
அகப்படாமல் அலைக்கழிப்பது
உன் முகமா? என் முகமா?

சுவரில் பட்டுத் தெறித்து
திரும்பவும் இருந்த இடத்திலேயே இருந்து
குரூதம் பூக்கும் இம்மியும் உடைந்திராத
கண்ணாடிக் கோப்பைக்கு முன்
மண்டியிடுவதற்கு முன்பாக...

அந்தரத்தில் மிதந்து உயிரினிழை திரித்து
அதிகாலையில் பகல்களைப் பருகும்
அதே முகம் சிதைத்த பிம்பம்
இன்றின் கனவிலும்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இரவின் கண்கள்

மிகப்பெரும்
கண்காணிப்பாளனாக
காத்திருக்கிறது இவ்விரவு

மாத்திரை போட்டுக் கொண்டு
மனைவி பக்கத்தில் வந்து
படுத்துக் கொள்வோரை
கண்காணிக்கிறது அது.

தன் ஆண்மையை
ஆக்ரோஷமாக அறிவிக்கும்
பலரின் பிதற்றல்களை
உற்று நோக்குகிறது அது

ஒரு பைத்திக்காரனைப் போல இயங்கும்
அவர்கள் வெறிச் செயல்களை
வெறுமனவே வேடிக்கை பார்க்கிறதது

விதையே ஊன்றாமல்
விருட்சம் வளர்ந்துவிட்டதாய்
கற்பிதம் கொள்ளும்
பலரின் பாவனையை
பரிதாபமாகப் பார்க்கிறது

ஓர் இரவுக்குத் தெரியும்
எப்படி ஓர் அதிமேதாவி கூட
அடி முட்டாளாக மாறிவிடுகிறதென்பது

உடலின் வன்முறை
கட்டவிழ்ந்து துள்ளும் சாகசமும் பின்
எதுவுமின்றி அது சிறுத்துப் போகும்
நகைச் சுவையையும் நன்கறியுமது
ஓர் இரவு எதுவும் செய்வதில்லை
சும்மாவேனும் வேடிக்கை பார்க்கிறது.

தபசி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

விரல் வழியே சொட்டு சொட்டாய்...

திறந்திருந்தது; நுழைந்தாய்
கதவைச் சாத்தினேன்
மறந்தது, இன்னொரு வழி

நினைவுகள் உரசலில்
பற்றிக் கொள்ளும்;
தெரியும் வெளிச்சம் அவள்

காமத்தின் முகமூடி
காதல்;
பருகியதும் பறக்கும் வண்டு

சு. பொன்னியின் செல்வன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நினைவுக்கு வரும்

கோடை விடுமுறை வெயில்
சுவர்களில் மோதியே
உடைந்து கொண்டிருக்கும் கனவுகளை
உயிர்ப்பிக்க வருவார்கள் நண்பர்கள்...

கத்தி அரிவாளுடன் புறப்படுவோம்...
குழந்தைகளை அழைக்கும் தாயாய்
எங்களையும் அழைக்கும்
பனை ....

உயரம் பாராமல் தரம் பார்த்து
வெட்டி உண்போம்...

காக்கையன் பத்தாம் வகுப்பு
மூக்கையன் பன்னிரெண்டாம் வகுப்பு
செவலை கல்லூரி படிப்பு
வயது பார்க்காமல் வாதம் செய்வோம்...

முற்றிய கரும்புத் தோட்டம் அருகிலே
எங்களையும் அழைக்கும்
கிணற்றங்கரை மேலிருந்து
கரும்புடன் மென்று துப்புவோம்
கடந்தகால நினைவுகளை....

கிணற்றில் குளித்து கண்சிவக்க
முகம் காட்டுவது சூரியனா? நிலவா?

அப்போது தான் நினைவுக்கு வரும்
மதிய உணவுக்காக வாங்கி வரச் சொன்ன அரிசி.

நாற்றாங்கால்

அ. சரவணன்
இளங்கலை இலக்கியம் இரண்டாமாண்டு
சி.பா.அ. கல்லூரி, மயிலம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அன்னைத் தமிழ்க் காக்க ஆர்த்தெழு

அன்னைத் தந்திட்ட அன்பு மொழி
அழகுத் தமிழ் என்பதை அறிந்திடு
உன்னை வளர்க்கும் உயிர்மொழி
ஓங்கு தமிழ் ஒன்றேதான் என்றறி
கண்ணைப் போல அன்னையைக் காப்பதுதான்
தனயன் அவனது தலைசிறந்த கடனாகும்
விண்ணைப் போல உயர்ந்துள்ள தமிழையே
விரைந்து நீயும் வளர்க்கவே விரைந்திடு.

பொன் மொழியாம் தமிழதனைப் போற்றிடு
பொங்கிவரும் உணர்வினால் நீஉளம் பூரித்திடு
என்றும் தமிழே உன்னிரு விழிகள் என உணர்ந்திடு
ஏழ்க்கடலுக்காப்பாலும் இலங்கிவரும் நன்மொழி
அன்று அந்த அருந்தமிழ் அறிஞரெலாம்
ஆன்ற தமிழ்மொழியினை ஆருயிராய்க் கொண்டனர்
சென்ற நூற்றாண்டில் வாழ்ந்திட்ட செம்பருதிமால் கலைஞரும்
சேர்ந்து உன் சிறப்பினை செம்மொழியெனச் செப்பினார்.

இன்றந்த மொழியுமே ஏற்றம் பெற்று வளர்ந்திட
எழுக நீயும் தமிழனே ! எழுக நீயும் எழுகவே !
நன்றிந்த தமிழினை நன்கு நீயும் காத்திட
நாளும் சோராதுழைப்பாய் தோழனே !
சென்றிடும் திசையெலாம் செந்தமிழே முழங்கிட
சேர்ந்தே நீயும் சிறப்பாக உழைத்திடு
பொன்னுலகம் காணவே புறப்படு ! புறப்படு !!
போற்றி வளர்க்கப் புறப்படு ! புறப்படு !!

பாவலர் தமிழவன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இந்தியக் கவிஞர் வரிசை
பனிமலைப் பிரதேசத்தில் ஒரு கவிஞன்
ரஹமான் ரஹி

மலைமுகடுகளில் பனி துஞ்சும் காட்சி கவிதை சுனையை இன்னும் ஆழப் படுத்தலாம். இந்த காட்சியை கண்டு உணர்ந்து மனதிலும் தனது மொழியின் வனப்பான வார்த்தைகளிலும் பதிவு செய்ய வேண்டி கவிஞர்கள் காஷ்மீர் என்னும் அழகு கொஞ்சும் மாநிலத்திற்கு பயணப் படுகையில் அங்கேயே அந்த காட்சியின் மடியில் பிறந்து தவழ்ந்த ஒருவன் கவிஞனாகவும் இருந்து விட்டால் அவனது கற்பனைக்கும் கவிதைக்கும் முட்டு போட முடியுமா? அப்படி ரசித்து வாழ்ந்த கவிஞர் தான் ரஹமான் ரஹி. இவர் தனது கவிதைகளிலும் விமர்சனங்களிலும் புதுமையையும் புரட்சியையும் விரவி எழுதியவர். இவர் தனது படைப்புகளை எழுத தேர்ந்த சொற்கள் காஷ்மீரி மொழிக்கு புதுமையையும் வளமையையும் கூட்டியது.
ரஹமான் ரஹி 1925ம் ஆண்டு மே திங்கள் 6 ம் நாள் பிறந்தார். அப்துல் ரஹமான் என்பது இவரது இயற்பெயர் இவர் எழுத்துலகில் ரஹமான் ரஹி என்ற புனை பெயரில் எழுதி வந்தார். தனது இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவரை அவரது தாய்மாமன் வளர்த்து ஆளாக்கி உள்ளார். இளமையிலேயே கவிதை ஆர்வமும் நிகழ்வுகளை பகுத்துணரும் நுண்ணறிவும் பெற்றிருந்தார். 1984ம் ஆண்டு மக்கள் சேவைத் துறையில் சிறிது காலம் பணியாற்றினார் “கித்மத்”என்ற உருது மொழி நாளிதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தார். பத்திரிக்கை பணி இவரை இன்னும் வளர்த்தது. உலக நிகழ்வுகளை உண்ணிப்பாக கவனித்து உள்ளார். இந்த கால கட்டத்தில்தான் முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முற்போக்கு எழுத்தாளர் அமைப்பின் சார்பாக வெளிவந்த "குவாங் போஷ்' என்னும் இலக்கிய இதழில் ஆசிரியர் பணியை திறம்பட செய்தார். தனது கருத்துகளில் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் இடம் தராமல் வெளிப் படுத்தி வந்தார். மக்கள் பிரச்சனைகளை மக்கள் மொழியில் பதிவு செய்தார். பலப் பிரச்சனைகளுக்கு ஆக்கமான பலத் தீர்வுகளையும் கொடுத்தார். காஷ்மீர் கம்யூனிஸ்ட் கட்சியின் துவக்கம் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் அதன் கலைக்குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டார். ரஹமான் பெர்ஷியா மற்றும் ஆங்கில மொழிகளில் தனது முதுகலைப் பட்டத்தை (1952) ஜம்மு காஷ்மீர் பல்கலைக் கழகத்திலிருந்து கற்றுத் தேர்ந்த இவர் மொழியாளுமை கொண்டு விளங்கினார். தனது கருத்துகள் தூய்மையான இலக்கியமாகி இலக்கியவாதிகளால் சிலாகித்துப் பேசும் படி மட்டும் இருந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த இவர் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதினார். 1953 முதல் 1955 வரையிலான காலகட்டத்தில் டெல்லியிலிருந்து உருது மொழியில் வெளியான
“ஆஜ்கல்” நாளிதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றி வந்தார். இதழ்களில் ரஹமான் ரஹி பணியாற்றிய கால கட்டங்களில் இருந்த ஒரு தகிப்பு அதன் பின் இல்லை எனலாம்.
ரஹமான் ரஹி “லல்லா” என்று செல்லாமாக அழைக்கப் பட்ட லால் டெட் அவர்களின் படைப்புகளால் பெரிதும் கவரப்பட்டார். லால் டெட் என்ற பெண்மணி புனிதரும் கவிஞருமாக கருதப் படுகிறார். காஷ்மீரி மொழியில் ல்லலாவின் சொற்றொடர்கள் இல்லாமல் பேசமுடியாத அளவுக்கு அவர் பிரபலமானவர் மேலும் காஷ்மீரின் பக்தி மற்றும் பழைய இலக்கியங்களின் பால் அதிக ஆர்வமும் மரியாதையும் கொண்டிருந்தார். ரஹமானுக்கு மூத்தவரும் அவரது சமகாலத்து கவிஞருமான தினாநாத் நாதிம் படைப்புகளின் தாக்கம் ரஹமான் படைப்புகளிலும் இருந்தது. ரஹமானின் ‘காக்கஹஎஜெஹர்பிஷ்மான்’ என்ற கவிதையும் (விடப் புன்னகை) ‘பைசலா’ (தீர்வு) என்ற தலைப்பிட்ட கவிதையும் முற்போக்கு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இவரது படைப்புகளில் “நவ்ரோஜ்எசபா”, “சேனாவேனி சாஜ்” மற்றும் “ சியாத்ரோடாஜரேன்மான்ஜ்” ஆகியன குறிப்பிடத் தக்கவை. இவரது விமர்சனங்கள் அடங்கிய “கஹவத்” என்ற நூலும் காஷ்மேரி மொழியில் ஆகச் சிறந்த நூல்களில் ஒன்றாக கருத்தப் படுகிறது.
ரஹமான் ரஹி ஆங்கிலத்திலிருந்து பல நல்ல படைப்புகளை காஷ்மீரி மொழியில் மொழி பெயர்த்து இருக்கிறார். ‘டாக்டர் பாவ்டச் மற்றும் பாபா பாரித் ஆகியன அவரது மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத் தக்கது. இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்து உள்ளது. இன்னும் பல விருதுகளையும் வாங்கி உள்ளார். குறிப்பாக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பிலும் இந்திய அரசு சார்பிலும் 1989ல் பெல்லோசிப் வாங்கி உள்ளார். சமீபமாக 2004ம் ஆண்டிற்கான ‘ஞானபீட” விருதையும் பெற்று அந்த விருதுக்கு பெருமை சேர்த்து உள்ளார். ஞானபீட விருது பெற்ற முதல் காஷ்மீரி கவிஞர் இவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
ரஹமானின் கவிதைகளில் உள்மன குழப்பங்கள், மனித வாழ்க்கை, சுய மற்றும் சமூக பிரச்சனைகள் ஆகியன உலகப்பொதுவான கருத்துகளாக கருவாகி ஏற்றம் பெற்றுள்ளது.

நான்கடிகள்

எனது வார்த்தைகளுக்கு மதிப்பிருக்குமா
நாளைய விமர்சகர்கள் தீர்வு செய்யட்டும்
ஆனால் பிரவாகமெடுக்கும் நீர்ச்சுனையை தேடுவேன்
அவை உங்கள் நிகழ்கால வேதனை போக்குமென்றால்


நிகல்கள்

விதியை வினவுவதை விட்டு நம்பிக்கை வளருங்கள் கிட்டும் சிறிய பொழுதையம் கொண்டாடுங்கள் நம்பிக்கை வலையில் நுழையும் ஐயங்களைப் போல் மிகுதியாய் மிதிபட்ட நகரச்சாலை ஊடுறுவுகிறது
வனத்தில்கனவுகளை தீமையிடம் காட்டிய கண்களை திறக்கிறேன் விம்மியெழுந்த இளமை சிதைகிறது வன்மையால் சுழற்றுங்கள் பார்வையை கொஞ்சும் அழகை காணலாம். ஒற்றைச் சிந்தனை மற்றும் வெளியில் ஓற்றைக் காகம் விண்மீன்கள் படைக்குமென் நாட்கள் கடந்து போனது மூளையை கசக்குகிறேன் எனக்கொரு பெயர் வேண்டி நம்பிக்கைகள் அனைத்தும் மலைச்சரிவு பசுமையானது சுய உணர்வுகள் படம் விரிக்காத பாம்பானது தெய்வங்கள் சகலமுமென் நிழல்களாயின அசுரங்கள் அனைத்துமென் சலனச் சித்திரமாயின அவைகள் முழுமையும் பொருள் நிறைந்த சேஷ்ட்டை குரங்குகளாயின
புனிதர்களை களவாட மரங்களுக்கு தலைவாறுங்கள் எவ்வகை வழிகாட்டலிது மற்றும் எத்தகு கரையிது திசைக்காட்ட இயலாது, இருளில் நீரிலலையும் படகு ஓ! நடனக்காரியே, நிர்வாணத்தை வட்டமிட்டாடு.

தமிழில் : ஆனந்த செல்வி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

லிமரைக்கூ

வாயில் வரவழைக்கிறார் லிங்கம்
கடவுளையே கண்டதாய் பணியும்
பக்தைகளுக்கு அவராலே ஏற்படுத்தும் மானபங்கம்

மாட்டை பதம்பார்க்கும் சாட்டை
இழுக்க முடியாமல் மூட்டைகள் அடுக்கி
கடக்க முயல்கிறார் பேட்டை

பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு
மசோதா நிறைவேறும் முன்னே
எதிர்கட்சியின் கலக குறுக்கீடு
***

ஓட்டப்பந்தயத்தில் வென்றான் பரிசை
திரையரங்கில் முந்த முடியாமல் தவிக்கிறார்
நிற்குது நீண்ட வரிசை

தமிழன் வாழ்வில் இசை
குத்து பாட்டில் திரையுலகம் உருள
மக்களின் மனங்களில் பசை

காவிரி பங்கீட்டில் கருநாடகம்
தமிழக அரசின் கண்களைக் கட்டி
நடத்திக் காட்டுதுபுது நாடகம்


கன்னிக்கோயில் ராஜா


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எதிர்கால வரலாறு
சந்ததியர்க்கு உணர்த்தும்
நடந்த சாதித் தகராறு.

எல்லை இல்லா வானம்
இணையுடன் சுற்றிதி திரிந்து
குருவி பாடுகிறது கானம்

மாமிசம் தின்ன ஆவல்
சந்தைக்கு சென்று வாங்கி வந்தாள்
கொண்டை இல்லா சேவல்.

காலையில் சூரிய உதயம்
கண்ட உடன் மகிழ்வு கொண்டது
விழித்து எழுந்த இதயம்


பறவை விரித்தது இறகு
காற்றை இழுத்து வானத்தில் பறந்து
உதிர்ந்தது ஒரு சிறகு.

பெற்றோரின் அறிவுரை
கேட்டு நடவாத பிள்ளைக்கு
தயாராய் உள்ளது சிறை
பொன்குமார்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஹைபுன்

டண்... டண்.. தொடர்ந்து ஒலிக்கும் பள்ளி இறுதி மணி முற்றும் பெறாத எழுத்துக்களோடு கரும்பலகை... தன் முடியை அணிந்து கொள்ளும் சிகப்பு மை பேனா
தொடரும் என அறிவிப் போடு மூடும் புத்தகம்... புத்தகங்களை பையில் திணிக்கும் குழந்தைகளின் அவசரம். வெளிக்கிளம்பும் பொழுதில் தேடுதல் வேட்டை... பயம் கலந்த ஏமாற்றம் கலந்த பயபடபடப்பு
மூங்கில் கூடையில் மிட்டாய்களோடு கிழவி.... முகத்தில் முழு நிலவு பிரகாசம்...
மெதுவாய் போங்க மேஜையில் பிரம்பு அதிர ஆசிரியர் முன்பு மோதி வெளியே ஓடும மாணவக் கூட்டம்...
உயிர் பெறும் சிறகுகள் விரிய உற்சாக ஒட்டம் பசிக்களைப்பு மறந்த சந்தோஷம்.
விளையாட்டு நேரங்களை
விழுங்கியே விடுகின்ற
வீட்டுப்பாடங்கள் .......


மெல்ல நகர் வதாய் கொள்ளும் கடிகார முட்கள். நிமிஷங்களும் யுகங்களாய் நகரும். அவசர அவசரமாய் மறையும் மேற்குச் சூரியன் பறவைக் கூட்டம் கூடுகள் நோக்கி
நொடிக் கொருதரம் நிமிர்ந்து ஏமாந்து போகும் மனசு. சோகம் தாங்கிய விழிகள். அலையசைக்கும் கடல் ஈரமணற் பரப்பு
கடந்து போகும் காலடிகளில் தேடுதல் வேட்டை முடியாக்காரணணங்களால் பிரிந்து போட்டு விளையாடும் விடலைக் காற்று.
உடைந்த படகுகள் முதுகு சாய்ந்த காதலர்கள் உதடுகளில் மௌன உச்சரிப்புக்கள்..
ஏக்கமாய் ஏறிடும் கண்கள்.... புள்ளியாய் தோன்றி வரும் காதலி விண்ணில் முளைந்த நட்சத்திரங்கள் முகத்திலும்...
நிலவின் வருகை ... நட்சத்திர புன்னகை தொடர்கிறது சந்தோஷ ஆலை...

வந்துவிட்ட காதலி
அவசர ஓட்டம்
கடிகார முட்கள்...

நிலாகிருஷ்ணமூர்த்தி


சொட்டுகள் ஒருசோதனை முயற்சி
கே. விழியரசு

கால மாற்றத்திற்கேற்ப கலையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன அவ்வகையில் கவிதைக் கலையிலும் பல மாற்றங்களை நாமறிவோம். பிறமொழிக் கவிதை வடிவங்கள் தமிழுக்கு வந்தாலும், அவற்றைப் பின்பற்றி பல கவிஞர்கள் இயங்கினாலும் நவீனக் கவிதையின் வளர்ச்சிக்கு அவ்வப்போது தமிழ் கவிதை உலகில் சோதனை முயற்சிகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சொட்டு கவிதையை “ஐந்து வரிகளில் எழுத வேண்டும்” இக்கவிதையில் உவமை இருத்தல் கூடாது. அப்படியே காட்சிப்படுத்த வேண்டும் இது காட்சிக்கவிதை (படிமம்) எனலாம். இஃதே இலக்கணம்.

1 இலக்கணம் எளிது
எழுதுதல் எளிது
சுவை மிக்க
சொட்டு கவிதை
சிந்தைத் தொடும் ...

1 இழுத்துச் செல்கிறது மாடு
இசைந்துச் செல்கிறது வண்டி
இலக்கு கொள்கிறான் வண்டிக்காரன்
அடைந்தது அதுகளும் அவனும்
வென்றது உழைப்பு ...

1 நீ இறந்த பின்
பெயர் மாறும்
சொத்துக்கள்
ஒரு போதும் நிலைப்பதில்லை
உன்னுடையதாய் ...

1 வீட்டின் வாசல்
விரிந்த வானம்
வானத்தில் நிலா
வட்ட வடிவில்
ஒளியற்று “ பகலில்”
-----------------------------------------------------------

இயைபு துளிப்பா(லிமரைக்கூ)

பதவியில் இருக்கும்வரை கூட்டம்
பதவி பறிபோன பின்
அனைவரும் எடுப்பர் ஓட்டம்

வெளிச்ச வெள்ளத்தில் சிரிப்பு
வேதனை பெருகிடின் நடிகைகள்
சாதனை மறந்து மரிப்பு

குழந்தை விரும்பிடும் பாடசாலை
குடிக்கப் பணம் வேண்டும் தந்தை
கூட்ட அனுப்புகிறான் தொழிற்சாலை

வாக்குறுதி அளித்தே ஓட்டு வேட்டை
வென்று அமைச்சரான பின்னால்
வாயைப் பிளந்தே பணவேட்டை

அன்றாடம் கல்யாணம் மதுரை மீனாட்சிக்கு
அகவை கடந்தும் வரன் வரவில்லை
முதிர் கன்னியாய் அன்பு தங்கச்சிக்கு

மு. பாலசுப்பிரமணியன்


இணைய இதழ் அறிமுகம்5
திண்ணை. காம்
இலக்கிய உலகம் ஒரு மாறுபட்ட உலகம். இங்கு பதிவுகள் என்பது அத்துனை அவசியமான ஒன்று. கலை இலக்கியங்கள் அனைத்துக்கும் மேடையும் அங்கிகாரமும் அவசியமாகிறது. இதில் சுதந்திரம் பறிக்கப் படாமல் இருக்கும் இடங்களைத்தான் பலரும் விறும்புவது. எழுத்தாளர்கள், கவிஞர்கள், இன்னும் இலக்கியவாதிகள் என அனைவருக்கும் ஒரு தளம் தேவைப்படுகிறது. இவர்களை பாராட்ட, விமர்சிக்க வாசகர்களும் இந்த தளத்தின் அங்கத்தினரே. அச்சு பத்திரிக்கைள் தோன்றிய வரலாறு குறித்தும் எது முந்தி, எவை முன்னோடி, அதன் வடிவம் யாது என பலவகைத் தகவல்களையும் ஆவண மையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மின் பதிவுகள், மின் பத்திரிக்கைகள் இந்தியாவுக்கு அறிமுகமாகிய சுமார் இறுபது ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் பரவலும் பிரபல்யமும் ஆனது கடந்த பத்தாண்டுகளில்தான். கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ புதிய இணைய தளங்கள் தமிழ் இலக்கியதிற்கென அறிமுகப்படுத்தப் பட்டு விட்டது. இவை அனைத்திற்கும் முன்னோடியாக இருப்பதும் இன்றளவும் தோய்வில்லாமல் தடையில்லாமல் இயங்கி வருவது திண்னை என்னும் இலக்கிய இணைய தளம்தான். தமிழகத்தின் மிகப் பெரும் படைப்பாளிகள் மற்றும் உலகின் அனைத்து மூலைகளிலும் இருக்கும் படைப்பாளிகள் வந்து குவியும் ஒரு தளம் திண்ணை என்றால் மிகையாகாது.

திண்ணையில் கவிதைகள் பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பலராலும் அனுப்பப் பட்ட முக்கிய கவிஞர்கள் பலரின் படைப்புகளை படித்த மகிழலாம். கதைகள் பகுதியில் தொடர் கதைகள் மற்றும் சிறுகதைகள் மொழி பெயர்ப்புகள் படிக்கக் கிடைக்கிறது. அரசியலும் சமூகமும் பகுதியில் நிகழ் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்து பலரது கருத்துகளும் விமர்சனங்களும் முன் வைக்கப் படுகிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் பகுதி மிகவும் வியக்கத்தக்கப் பகுதியாகும். திரைப்படத் துறையினர் பற்றிய அந்தரங்களை அம்பலப் படுத்தி ஒருவித அரிப்பு சுகத்தில் இருக்கும் இதழ்கள் மத்தியில் முகமெங்கும் கேள்விக்குறி மின்ன வைக்கும் கட்டுரைகளை வழங்குவதும்; அணு ஆயுதங்கள், இயற்பியல் ஆய்வுகள் குறித்தும் என அள்ள அள்ள குறையாமல் அறிவியல் சுரங்கமாக இந்தப் பக்கம் கிடக்கிறது. கலைகள் மற்றும் சமையல் பகுதியில் அவ்வப்போது சமையல் குறிப்புகளும் கலை வேலைப்பாடுகள் குறித்த விபரங்களும் படிக்கக் கிடக்கிறது. இலக்கியக் கட்டுரைகள் பகுதியில் நூல் விமர்சனங்கள், புத்தக அறிமுகங்கள், கருத்துகள், விவாதங்கள் என பல மடிப்புகளைக் கொண்டுள்ளது. நகைச்சுவையும் வித்தியாசமானவையும் பகுதி தலைப்பிற்கேற்பவே உள்ளது. ஆனால் இந்தப் பகுதியில் மிகச் சிலரே பங்கீடு செய்வது தமிழ் மக்களின் நகைச்சுவை உணர்வு பஞ்சத்திற்கு உதாரணமாக இருக்கிறது. கடிதங்கள் அறிவிப்புகள் பகுதியில் திண்ணை படைப்புகள் குறித்த கருத்துக் கடிதங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் இலக்கிய மற்றும் இன்னபிற நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

திண்ணையில் காணும் படைப்பாளிகளைப் பார்க்கையில் கொஞ்சம் மிரட்சியாகவும் உள்ளது. மிகத் தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கி வரும் அனைவரது படைப்புகளையும் இங்கு காண முடிகிறது. சமீபமாக திண்ணை தளம் புதுப் பொலிவு பெற்றுள்ளது. மேலும் புத்தக விற்பனை மற்றும் இலக்கிய இணைய தளங்கள் சிலவற்றிற்கான இணைப்புகளையும் தன்னுடன் இணைத்து உள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் இந்த தளம் புதுப்பிக்கப்படுகிறது. மின்னஞ்சலில் பெறப்படும் படைப்புகள் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னரே தளத்தில் ஏற்றப்படுகிறது. ஆனால் படைப்புகளுக்கு தடையில்லை. விவாதம் என்ற பெயரில் சிலர் தங்கள் சுய பகைகளை தீர்த்துக் கொள்வதையும் அநாகரீகமான வார்த்தைகள் கொண்டும் எவ்வகையிலும் பயன்தராத படைப்புகளை வெளியிடாமல் இருக்கவுமே இந்த தணிக்கை.

திண்ணை இணைய தளத்தின் வெற்றிக்கு காரணம் படைப்பாளிகளின் தரமான பங்களிப்புகள் ஒரு காரணம் என்று சொல்லலாம். வாசிக்க சிரமம் இல்லாமல் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதும் சினிமா நட்சித்திரங்களின் புகைப்படைகளையும் அனாவசிய விளம்பரங்களையும் தவிர்த்து இருப்பது பாராட்டிற்குரியது.

இலக்கியம் பயிலவும் உலக இலக்கியவாதிகளுடன் கைகுலுக்கவும் ஓர் இடமாக திண்ணை விளங்குகிறது என்பதே அதற்கான அடையாளம்.

இணையம் : www.thinai.com
மின்னஞ்சல் : editor@thinnai.com
-------------------------------------------------------------

பெரும்பாம்பு

கூடலின் பிந்தைய அமைதியை
துடைத்தெறிந்து ஒலிக்கிறது தொலைபேசி

விரல்களால் பற்றி காதோடு இழைக்கிறேன்
அதன் துளைகள் வழியே
பீறிடுகின்றன எண்ணற்ற பாம்புகள்

நொடிப்பொழுதில் சட்டைகளை உரித்துக்
கண்ணியொன்றைப் பின்னுகின்றன
பிளவுப்பட்ட நாக்குகளால்
உறுப்புகளைத் துழாவி ருசிக்கின்றன

என்னுடலெங்கும்
பிசுபிசுப்பான செதில்தடங்கள் பரவ
முட்டையிடவும் குட்டியீனவும்
இடம்தேடித் திரிகின்றன

கலவியுறாத செழித்த பாம்புகள்
என் கருத்த தசைகளின் மேல்
பற்களை அழுத்துகின்றன

விஷத்தில் குளித்த எழுத்துக்கள்
நீலம்பூத்த என் தோலிலிருந்து
நுரைத்துப் பொங்க

எல்லாப் பாம்புகளையும் விழுங்குகின்றேன்
நானே பெரும்பாம்பாகி.
------------------------------------------------

ஆத்ம தோழி

புரவியின் மினுமினுப்போடு
என்னை முத்தமிட்டு எழுப்புவாள்

குளிப்பாட்டி என்னுடல் முழுக்க
அலங்காரப் பூச்சிடுவாள்
எங்கிருந்து வருகிறாள்
எங்குபோகிறாள் தெரியவில்லை

அவள்தான் மலைகளுக்கப்பால்
என்னுயிரை வைத்திருக்கிறாளாம்

அப்பள்ளத்தாக்குகளின் முரட்டுச்சுவர்களில்
பட்டுத்திரும்பும் குரல்
என்னுடையதாம்.

மலைப்பயணம் குறித்தான ஆவலை
வெளியிடும் போதெல்லாம்
ஆற்றங்கரை மண்மேடுகளையும்
கிளைகளில் தொங்கும் காற்றையும்
சொல்லித் திசைத் திருப்புவாள்

காலடியில் நழுவும் குழிகளும்
கெட்டித்துப் போன சொற்களும்
என் கேவலை அதிகரிக்கின்றன

தடித்தயென் துக்கம் தாளாது
தொலைவிலிருக்கும் மலைப்பாதையை
அடையாளம் காட்டுகிறாள்

ஒருவேளை
நீங்களிதைப் படித்து முடிக்கும்போது
என்னை நான் அடைந்திருக்கலாம்.

சுகிர்தராணி

------------------------------------------------------------

திலகாவின் பகல்கள்


திலகாவின் பகல்கள்
வெறுமையானவை
விதிகளின் கீழ் இயங்குவை
எதிர் சுவரில் சரிந்து விழும்
வெய்யிலின் பரப்பில்
அபூர்வமாய் கடந்து மறையும்
பறவையின் நிழலும்,
வடகங்கள், வானொலி
கீரைக்காரியுடனான பேரமும்
நிரப்பப்பட்ட பகல்கள் அவளுடையவை;
திலகாவின் இரவுகள்
திலகாவினுடையதே இல்லையென்பது
முன் அறிந்ததே;
அயர்ச்சியுடைய பகல்களிலிருந்து
அவனை மீட்டெடுகின்ற
மாலை வேளையில்
களைத்து வீடு திரும்புகிற
நமக்கு தினசரி தவறாது
ஒரு கோப்பை தேனீரும்,
மிதமான புன்னகையும் வழங்குகிறாள்
என்றாவது ஒருநாள்
அக் கோப்பைத் தேநீரில் இனிப்பு
தூக்கலாகவோ, குறைவாகவோ
மாறி விடுகின்ற தருணத்திலிருந்து
துவங்குகிறது நமது பதட்டம்.

மேஜையில் கிடக்கிறார்
பாப்லோ நெரூடா

முழுவதுமாய் புகைக்கப்பட்ட
சிகரட் துண்டுகள்
சாம்பல் கிண்ணத்தில்

செந்நிற மதுப்புட்டியில்
சற்றே மீதமிருக்கிறது

இசைத்தட்டில் வழிகின்ற
வயலினின் மென்கேவலுக்கேற்ப
நைலான் சுருக்கில்
நிர்வாணமாய் ஆடுகிறது
நடராஜனின் உடல்

தற்கொலைகள்
விரக்தி மட்டுமின்றி
நிறையும் சார்ந்தவை.

பா. திருச்செந்தாழை

---------------------------------------------------------------

உலகக் கவிஞர் வரிசை

பச்சயம் சுரக்கும் கவிதாயினி
பினவுலா டவுளிங்

எல்லா உயிரினங்களிலும் வயதுக்கு ஏற்ப உடலிலும் மனதிலும் மாற்றங்கள் இயற்கையாக நிகழ்வது வியப்பிலும் வியப்பு. இதில் கலையுணர்வு மரபில் வருவதா அல்லது வளர்ப்பில் வருவதா என்ற கேள்விக்கு யாரால் பதில் சொல்ல முடியும். கவிதை என்பது ஓர் உணர்வு. அனுபவங்களும் உணர்வுகளும் மனதுள் பதிவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றை கலை இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யும் திறமை உள்ளவர்கள் அனைவரும் தான். ஆனால் பயிற்சியாலும் இடையறாத சிந்தனையாலும் சிறப்பு எய்துபவர்கள் சிலரே.
தோல்விகள், துரோகங்கள், பிரிவுகள் என ஒருவரது வாழ்வில் தவிர்க்க இயலாத விஷயங்கள் தான் ஒரு மனிதனை ஆக்கவும் அழிக்கவும் செய்கின்றன. தென் ஆப்ரிக்காவின் பிரபலக் கவிஞர் எழுத்தாளர் பினவுலா டவுளிங் கவிதை உணர்வுகள் தன்னுள் இருப்பதை மிக தாமதமாகவே தெரிந்து கொண்டுள்ளார். தன்னையும் மீறி அவர் எழுதி வைத்த சிலவைகளை மற்றொரு சந்தர்ப்பத்தில் வாசிக்கையில் அவை கவிதை என்பதை அடையாளம் கண்டுள்ளார். அதன்பின் அவரது அனைத்துக் கவிதைக்கணமும் அவ்வாறே அமைந்துள்ளது. கவிதை எழுத அவர் இதுவரை உட்கார்ந்தது இல்லையாம். கவிதைகள் அவைகளின் சவுகரியத்திற்கு ஏற்ற சமயத்தில் வந்து அவரை உட்கார வைத்து விடுமாம்.
பினவுலா கவிதைகள் எழுதத் துவங்கியது ஒரு விபத்து போன்றதுதான். புண்ணான தனது மனதுக்கு ஆறுதல் மருந்தாய் கவிதையை தேர்ந்துள்ளார். கல்கா விரிகுடா பேக்கரி ஒன்றில் பினவுலா வாசித்த "ஐ ஃபிளையிங்' (நான் பறக்கிறேன்) என்ற கவிதை பிடித்துப் போக எழுத்தாளர் கஸ் பெர்குஷன் பினவுலாவின் கவிதைகளை வாங்கி காராபேச் மூலம் வெளியிட்டார். பினவுலாவின் முதல் கவிதைத் தொகுதிக்கு "இன்கிரிட் ஜான்கர்' பரிசு வழங்கப்பட்டது. 2003ம் ஆண்டில் பினவுலாயின் அச்சில் வெளிவராத
"தூ வாஹ கர்ள் ஆப் தி யுனிவர்ஸ்' என்ற கவிதைத் தொகுதிக்கு சன்லாம் விருது வழங்கப்பட்டது. அவரது "வாட் போயட் நீட்ஸ்' என்ற முதல் நாவல் பென்குவின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
தென் ஆப்ரிக்காவின் கேப் டவுனில் 1962ல் பினவுலா டவ்ளிங் பிறந்தார். ஈவ் வான் டெர் பைல் மற்றும் பேடி டவ்ளிங் தம்பதியினரின் எட்டுக் குழந்தைகளில் ஏழாவது குழந்தையாவார். பினவுலா தனது ஆரம்கால படிப்பை யுசிடியில் முடித்தார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தப் பின் பிரெடோரியா சென்றார். அங்கு எட்டு ஆண்டுகள் யுனிஷியாவில் ஆங்கிலம் கற்பித்து வந்தார்.
1993ல் பீட்ரைஸ் என்ற பெண் குழந்தைக்கு தாயானார். அத்தோடு ஃபேய் வெல்டனின் படைப்புகளை ஆய்வு செய்து அதற்கான டாக்டரேட் பட்டம் பெற்றார். விகாகரத்து பெற்றப் பின் தனது சொந்த நகரமான கல்க் விரிகுடா வந்து சேர்ந்தார். அங்கிருந்தபடி கல்வி ஆவணச் செயலர், எழுத்து மற்றும் விரிவுரை போன்ற பணிகளை செய்து வருகிறார்.
சிறுகதைகள் முலம் எழுத்துலகில் காலடி வைத்த பினவுலா அவர் வசித்தப் பகுதியில் இருக்கும் பிரபல சைவ உணவு விடுதியில் சிறு நகைச்சுவை நாடகங்களை நடத்தி புகழ் பெற்றார். இதன் மூலம் கிடைத்த புகழாலும் அனுபவத்தாலும் பல இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
திடீரென அவர் கவிதைகள் எழுதத் துவங்கியது அவருக்கும் ஆச்சரியமான விஷயம்தான். அவரது கவிதைகள் மென்மையாகவும் வாசிக்க மிக எளிமையாகம், உற்சாகப் படுத்துபவையாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவை மேலோட்டமான கருத்துதான். அவரது கவிதைகளின் பின்னால் நெல்லிக்கனியில் மறைந்திருக்கும் தித்திப்பு போல மனதைத் தொடும் விஷயங்கள் இருப்பது மறுக்க இயலாதது.
இவரது கவிதைகளில் உள்ள அழகும் உள்ளர்த்தமும் எளிமையும் பத்திரிக்கை மற்றும் எழுத்தாளர்களால் பெரிதும் பாராட்டப் பட்டன. பினவுலாவின் கவிதைகளில் அவர் வாழும் சமூகம், அச்சமூக மக்கள், அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவரது நடவடிக்கைகளும் அன்புடனும் நகைச்சுவை உணர்வுடனும் அவரது கவிதைகளில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறான கவிதை மொழிக்கும் தனித்த மொழிப்புலமையும் திறமையும் அவசியமாகிறது. அது அவரிடம் உள்ளது.
தான் ஒரு சமூக ஜீவி, தனது பிரச்சனைகள், அனுபவங்கள், துன்பங்கள், மகிழ்ச்சிகள் அனைத்தும் சமூகம் சார்ந்தது. அதனால் அவைகளை சமூகப் படைப்பாக கொள்ளலாம் என்று ஒரு சமன்பாட்டை சொல்லுகிறார். ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.

பச்சைவீடு

மகளோடு மூன்று நாய்களுடனும்
பெரிய பச்சைவீட்டில் வசிக்கிறேன்.
இங்கு சகோதரியை காணலாம்
கண்டிப்பாய் சகோதரனையும்
மற்றும் தாயாரையும்
(பாட்டியையும் கூட)

கணவனை இல்லை
பூனையை இல்லை
சிலவேளைகளில் மக்கள்
பூனை பற்றி விசாரிக்கின்றனர்.

விழுகின்ற உணர்வுகள்


விழுகின்ற உணர்வுகளுடன்
முதல் சந்திப்பிற்கு வந்தேன்
விழுகின்ற உணர்வுகளால் பறந்தேன்
வழியில் உன்னை
சந்திக்கும் வேளையில்

“ உன் மீது காதலில்
விழுகிறேன் என்பதை சொல்ல
விரும்பவில்லை என்றாய்.

நான் “ஓ! செய். தயவு செய்து செய் !” என்றேன்
ஆழமாகவும் உண்மையாகவும்
சொல்லி விட்டாய்
“உன் மீது காதலில் விழுகிறேன்”

ஆழ்ந்து விழுகின்ற உணர்வுகளுடன்
முதல் சந்திப்பிற்கு வந்தேன்
நான் சுழல்ன்று கொண்டிருப்பதை
கண்டுகொண்டாய் நீ
என்னுள் சுழல்ன்று கொண்டிருந்தாய்.

காக்கும் முறைகள்


காதலை உனக்காக வைத்திருந்தேன்
முற்றத்தில் சங்கிலியால்
கட்டப் பட்டிருக்கும்
நேசிக்கப் படாத நாய் போல

காதலை எனக்காக வைத்திருந்தாய்
பிடித்தான புத்தகப்
பக்கங்களில் அழுத்தி மூடி

வைரத்தால் ரகசியமாக
வெட்டினாய் கண்ணாடி
போல் என்னை
கைகளைக் குப்பியபடியென்
பதுங்கிடம் காட்டியபடி

பணிவிடை குறித்து
கற்றுத்தர இயலுமென்னால்
ஆனால் உன்போல் செய்ய
கற்றுத் தாயேன்.

தமிழில் : ஆனந்த செல்வி

……………………………………………………………………………………………………….----------------------.

மதுக்கடை மரம்


மாமரத்தின் சுற்றளவிற்கு
ஆஸ்பெஸ்டாஸ் தகட்டை
வட்டமாய் அறுத்து
கூரை அமைத்தவன்
மாநகருக்கு குடிபெயர்ந்தும்
வேர்களை நேசிப்பவனாகவே
இருக்கக்கூடும்

மரத்தில் அறையப்பட்ட
ஆணிகளில்
வாளேந்திய
மதுரை வீரனுக்குக்கீழ்
பாசிப்பயிறும்
நிலக்கடலையும்
மொச்சையும்
பொட்டலங்களாய்
விளைந்திருந்தன

எச்சில் வாட்டர் பாக்கெட்டுக்கு
எவரிடமோ கையேந்தி நிற்கும்
நரிக்குறவருக்குத் தெரியாதபடி
கூரைக்குமேல்
விரிந்திருந்த கிளைகளில்
பறவைகள் ஒளிந்திருந்தன

வாடிக்கையாக வரும்
அரவாணிக்கு
ஒரு போதை வள்ளல்
பத்து ரூபாய் பரிசளித்ததை
ரசித்த
மரம்வாழ் கொசுவொன்று
யாருடைய கைத்தட்டலிலோ
சிகப்பானது

கோப்பைகளுரசிக்
கொண்டாட யாருமற்ற
தனியர்
மதுத்துளிகளை
சுட்டுவிரலால் நனைத்து
பூமிக்கு மும்முறை
சமர்ப்பணம் செய்ய
வேர்கள் சிலிர்த்தன

குளிர்பான பாட்டில்களின்
மிச்சத்திற்குள் இறந்து மிதந்த
எறும்புகளுக்காக
அழுத கனி ஒன்று
அழுகியது

அப்பாவின் திவசத்திற்கு
ஊருக்குப் போக
விடுமுறை கிடைக்காத
பணியாளன்
கூட்டிப் பெருக்கினான்
பாலிதீன் குப்பைகளையும்
உதிர்ந்த மாவிலைகளையும்
மறுநாள் புயலில் சாய
விரும்பியது மரம் .

லலிதானந்த்…………………………………………………………………………………………………………………………………………..

------------------------------------------------------------

எதிர் எதிரே நானும் நாயும்
தொட்டியில் சிலைகள்
பூசிய வீடு
சில நாட்களில்
சுவர்களில் கிறுக்கல்கள்
தரை எங்கும்
பென்சில் சிலேட்டுக்கள்
இறைந்து கிடந்த
பொம்மைகள்
கதவெங்கும ஸ்டிக்கர்கள்
இது
குழந்தைகள் உள்ளவீடு
நாடகங்களுக்கு மத்தியில்
ஒடும் கால பிரளயம்
போடும் சீரியல்களை தாண்டி
வந்து அமரும் நாற்காலிகள்
தொடர் இடைவேளையில்
ஊடகமாய் நகரும் பசியாறல்கள்
தினம் நடக்கும் இந்த
தொடர் ஒட்டத்தில் குதிரையாய்
வந்து விலகும் மாய உருவங்கள்
தினமுமாய் நாடகங்கள்
வாரஇறுதிவரை
ஆண்டவனின் ஒருநாள் ஒய்வு
அன்றும் நடக்கும் பிரளயத்தில்
நகரும் ரெஸ்டாரென்டுகள்
நாடகமாய் தினம் வாழ்வு

குமாரராஜன்
-----------------------------------------------------------

எல்லாம் தெரிந்தும்
எதுவும் பேசாத இதயம்
பேச வாய் எடுத்தபோது
சளசளவென
கண்ணில் நீர்துளி !

பனித்துளியின்
சந்திப்புத் தான்
பேசப்பேச
பரஸ்பரம் இழந்து
ஆழ்மனதை
படிவப் பாறையாய்
வடிவமைத்து விட்டது...

தனத்தின் அழுகுரல்
கேட்ட நேரம்
ரகசியங்கள்
அனல் வெடிப்புகளாய்
சிதறியது
காணாத கனவொன்றில் !...

திசையெட்டும்
எதிரொலித்தது
புகாரற்றுக் கிடந்த
என் பெயரை ?

இருள் சூழ்ந்த கிணற்றில்
இரவின் அமைதி !
ஈசலின் இரவோடு
இணைந்து போனது
வாழ்வின் ஒரு துளி ...

துயரத்தின் துருவங்கள்
சொட்டுகளாய்
சொட்டி சொட்டி
தீர்த்தமான நேர்த்திகளை
திராவகமாய்

ச. அன்பு

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

மதியழகன் சுப்பையா கவிதைகள்

நக்கல்

அக்குள் வாடையில்
முகம் புதைக்கச் சொல்கிறாய்

எச்சில் சுவைத்து
மெய்மறக்கச் சொல்கிறாய்

உடலால் உடல் தடவி
ஒத்தடம் கொடுக்கச் சொல்கிறாய்

மூச்சுத் திணறுகிறேன்
மோகச் சுவாசம் என
தப்பாய் புரிகிறாய்

வார்த்தைகளால் நிலை
சொன்னேன் புரியவில்லை
உணர்வாயென்பது பொய்

கதவடைத்துப் போகிறாய்
வந்ததும் கதவடைக்கிறாய்

வீடெங்கும் மனக்கூடெங்கும்
புழுக்கம் புழுக்கம் புழுக்கம்


உண்ணல்


புடலங்காய் நறுக்குகிறேன்
நாடகம் பார்க்கிறேன்
பாத்திரம் கழுவுகிறேன்
துணி துவைக்கிறேன்
குளிக்கப் போகிறேன்
சோறு சாப்பிடுகிறேன்
படுத்துக் கிடக்கிறேன்
பாட்டுக் கேட்கிறேன்
வயிறு வலிக்கிறது
சலிப்பாய் இருக்கிறது
ஒளிபுக ஒருதுளை
வளிபுக ஒருதுளை
இறக்கை விரித்து
சதுரமடிக்கிறேன்
சட்டத்திற்குள்

பருகல்


மிளகுரசம் இல்லையென்றால்
இறங்காது சாப்பாடு

குறைதலும் மிகுதலும்
குற்றமே உன்னகராதியில்

அடுப்பு தெய்வத்தை அன்றாடம் வேண்டியே
சமைக்கத் துவங்குவேன்

குறைசொல்லிக் கொண்டே
கும்பி நிறைக்கிறாய் கையை நமக்குகிறாய்

ரசம் தெளித்துவசைமொழிவாய்
தினம் தினம்

ஊறுகாய் தொட்டு
உண்டு படுக்குமென்
கால் நக்கி களிப்பாய்

தின்றல்

உடல் மொழி
அறியச் செய்தாய்
சைகையின்
பொருளுணர்த்தினாய்
செறுமல்களையும்
உருமல்களையும்
புரிய வைத்தாய்
இடம் ஏவல்
கவனிக்கச் செய்தாய்
குறிப்பறிந்து நடக்க
கற்றுத் தந்தாய்
ஆசான் போலானாய்
தலைமுறைகளுக்கு
தாரைவார்க்கிறேன்
அடிமை அணுக்களை

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பயணப்பாட்டு

மான் முதுகில்
உட்கார்ந்திருக்கும்
படகின் கண்கள்
சுற்றிச் சுற்றி பார்த்தபடி
குருவி.

மேடுபள்ளமான பாதை
குலுங்கவே இல்லை
படகு பயணம்

போகும் படகில் மனிதர்கள்
ரசித்தது
தண்ணீர் குடிக்க வந்த மான்.

படகின் விளிம்பில் நின்றபடி
ஒவ்வொருத்தரும் மறுத்து
ஒவ்வொரு பெயரை சொன்னார்கள்
எல்லாசாயலோடும் பொருந்தியது
புதரசைய நகர்ந்த மிருகம்.
முழுதாய் தெரியாத குழந்தை ஒன்று
என்னைப் போலவே
அமைதியாய்.

முன்னே போகும்
படகின் கையசைப்பில்
பின் தொடரும் மனசு.


யாரோ ஒருத்தர்
படமெடுத்தார்
செத்தாலும் இருக்கும்
படத்தில் குருவி

செந்தில் பாலா
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஐக்கூவில் சமத்துவபுரம்


புதுவை தமிழ்நெஞ்சன்

தேனீர் கடையில்
இரட்டைக் குவளை
சமத்துவபுரம்
பெரியார்பிறந்த மண் பகுத்தறிவு மண் என்றெல்லாம் போலியாக சொல்லிக் கொண்டிராமல் உண்மை நிகழ்வுகளை அப்படியே காணும் போது அதிர்ச்சியாகவும், சினமாகவும் இருக்கிறது.

சமத்துவபுரம்
கழிவு நீர் சுத்தம் செய்ய
அதே கருப்பன்
பாலபாரதியின் பார்வையில் மெய்யை பொய்யாய் சொல்பவரின் நடுவில் அதாவது செம்மறி மந்தையில் வெள்ளாடு போல நிமிர்ந்து சொல்கிறார்.

சாதி வேறுபாடுகளுக்கு
சர்க்கார் கொடுத்த சாட்சியங்கள்
சமத்துவபுரம்
நம் அறிவிற்கு எட்டும் படி மடையர்களின் தலையில் குட்டும் படி அரசின் திட்டம் உயர்øவானதல்ல மட்டமானது என்பதை மானவுணர்வோடு வெளிப்படுத்துகிறார்
எட்வின் ராஜ் .

சமத்துவபுரத்தில்
மலரத் தொடங்கியது
சாதி மல்லிகை
சாதி மல்லிகை என்பது நாம் வைத்த பெயர். மலரில் கூடவா சாதி என்பதை சுட்டெரிக்கும் சொல்லோடு அது சமத்துவபுரம் என்கிற இடத்தில் கருகாமல் மலர்வதை கண்டு கொதிக்கிறார் பொன்குமார்.

சமத்துவபுரம்
ஒரே குறை
ஊருக்கு வெளியே.
அரசு என்பது ஊருக்கு நடுவில் சமத்துவத்தை கொண்டு வராமல், வரவிரும்பாமல் சேரிகளும் அதில் இருப்பதால் அது வெளியே கொண்டு போக படுகின்ற இழி நிலையை சொல்கிறார் ஏ. வி. கிரி .

மனிதம் இழப்பதற்கு
சாதிகளையே உரமாக்குவோம
சமத்துவபுரம்
கவிமுகிலின் சிந்தனை வென்றால் சாதி எருவை மாந்த நேயம் பூக்கச் செய்யலாம்.

சமத்துவபுரத்தில்
சாதிப்படுகொலைகள்
மீண்டும் தலைப்புச் செய்தி
ஆலா நமக்கு சொன்ன செய்தி. மீண்டும் வருகிறது. எப்போது நிற்குமோ அன்றுதான் நாம் மாந்தர்களாவோம்.

ஒரே கட்சி
பல சாதிகளாய் ஆனது
சமத்துபுரம்
சாதிவேறுபாடுகள் நீங்க வேண்டும் என்பதற்காக உருவானது என்கிற சமத்துவபுரங்கள் சாதி புரங்களாக மாறிப் போன கேட்டை கேசவ் சுட்டுகிறார். பலசாதிகளாய் பிரிந்து அதுவும் ஒரு சாதிகளின் தொகுப்பான ஊர்தான் என்று சமத்துவ புரங்களால் சாதிகளை ஒழிக்க முடியாது என்பது தெளிவாக புரிந்து போனதொன்று. அப்படி இருக்க ஏனிந்த சமத்துவபுரம் என்கிற பெயர்.

தடியரசு என்றாலும் குடியரசு என்று பெயர் வைத்திருப்பது போலவா? ஆம் தமிழ்நாடு முழுவதும் சமத்துவபுரம் போலத்தான் இருக்கிறது. அது எப்போது சாதி, மதம், தீண்டாமை இல்லாத மாந்தர்கள் வாழுகின்ற நாடாகும்.... அன்றுதான் நாம் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டோம் என்பதாகும்.

ஊர் டீக்கடை
பெயர் சமத்துவம்
ரெட்டை டம்ளர்
இரட்டைக்குவளை இன்று மூன்றாகிவிட்டது. உள்ளூர் உயர் சாதி என்று சொல்லிக் கொண்டு நம்பிக் கொண்டிருப்போருக்கு கண்ணாடி குவளை, தாழ்த்தப்பட்டவர் என்பவர்களுக்கு மூங்கில் குழாயில் அல்லது அலுமினியக் குவளையில் கழுவி வைத்து விட வேண்டும். உள்ளூருக்கு வரும் அயலூர்காரர்களின் சாதி தெரியாமல் சிலர் உயர் சாதியாக இருந்து விட்டால் அலுமினியக்குவளையில் எப்படி கொடுப்பது தாழ்ந்த சாதியாக இருந்து கண்ணாடிக்குவளையில் கொடுத்து விட்டால் தீட்டாகி விடும் அல்லவா? எனவே நெகிழிக்குவளையில் தேநீர் கொடுக்கும் முறையில் இன்றுவரை தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வரும் கொடுமை தொடர்கிறது.

ஆனாலும் இந்தியா ஒளிர்கிறதாம் 400 கோடி விளம்பரத்தில் செய்கின்றனர். நம் வாழ்வீடுகளை ஒளிரச் செய்கின்ற எதையும் செய்யாத இந்த விளம்பரங்கள். தேர்தல் காலத்து பயன் கருதியே செய்யப்படுகிறது.

கொழுந்து விட்டு எரிகிறது
சமத்துவபுரத்தில்
சாதீ

வெ. கலிவாதன்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இரவில் தனியே

நீங்கள் எப்போதும் பார்க்கக்கூடும்
நள்ளிரவில் தனித்து ஒற்றையாய்
குழப்பம் பீறிட அல்லது
மௌன அமிழ்தலில் திளைத்த
இளம் பெண்ணொருத்தி
பேருந்தில் பயணித்தபடியிருப்பதை
உங்கள் பார்வை படிகிறது அவள்மீது
உங்கள் விரியும் கற்பனை
அவளைச் சட்டையுரிக்கிறது
ஆயிரம் சந்தேக விதைகளைச் சுமந்தபடி
இறுதியில் அவளுக்கான நிறுத்தம் ஒன்றில்
அகாலத்தில் இறங்கிப் போகிறாள்
நள்ளிரவில் பணிக்குச் செல்லும்
யாருடனோ கோபித்தபடி
கோபம் கரையும் பிறிதொரு
இடம் தேடுபவளாக
.............................................
.............................................
அந்த இருள் மெல்ல சூழ்கிறது
உங்களின் கறைபடிந்த பார்வையின் மீது

க. அம்ச பிரியா
--------------------------------------------------------------------------------

Wednesday, July 11, 2007

நிழல் நினைவுகள்


---------------------
1
தூங்கி எழுந்து போ
முகம் உப்பியிருக்கும்

கழிம்பு தடவி
பவுடர் பூசிக்கோ
எடுப்பாயிருக்கும்

வண்ணப் படமா
இதை மாட்டு

முழுப்படமா
இது வேண்டாம்

மார்பளவா
இதுதான் சரி

தலைத் தூக்கு
லேசா அப்படி
லேசா இப்படி
கிளிக்
-----------------------------------------------------


2.
வான் கூர்ந்து
சிந்திப்பது போல்

கன்னத்தில் கைவைத்து
புன்னகைத்து

கால் சட்டையில்
கைநுழைத்து
எங்கோ பார்ப்பது போல்

அறைமுகத்தில்
ஒளிபூசியபடி
மெழுகு வெளிச்சத்தில்
சட்டையில்லாமல்

பூங்காவில்
பூ பறித்தபடி
மரம் சாய்ந்தபடி
படியமர்ந்து
நிஜம் சிதைய
நிழல் பதிவுகள்
------------------------------------


3.
அதிகம் எடுக்கப்படாது
யுசு குறைஞ்சிடும்

சேர்ந்து எடுத்தா
பிரிஞ்சு போயிடுவோம்

எதிர்மறை எண்ணம்
எல்லாவற்றிலும்.
---------------------------------------------
மதியழகன் சுப்பையா
மும்பை

Tuesday, July 10, 2007

வாக்கு மூலங்கள் (மும்பையில் கடந்த ஆண்டு ஜூலை 11ல் மின் ரயில்களில் ஏழு வெடி குண்டுகள் வெடிக்கச் செய்யப் பட்டது.

குண்டு ஒன்று
-------------

தொப்பைகள்
வெடிக்க வேண்டும்

குருதியால் தொப்பலாய்
நனைய வேண்டும்

வெங்காயத் தோல்களாய்
உரிந்துதிர வேண்டும்

உறிஞ்சியவை உருவியவை
சிதர வேண்டும்

இத்தனை நெருக்கத்திலும்
விரிந்து நிற்பவனின்
கால் கவுட்டில் வை

காணாமல் போகட்டும்
திக்கக்காரன்

வெடித்துப் பரவட்டுமவன்
வீண் சதைகள்

கால்கள் கிழிந்து
பீய்ந்து கைகளில்
கிடைக்கட்டும்

ஐந்து கிலோவையும்
அப்படியே வை

அஞ்சலம் குஞ்சலம்
டும்.....டுப்......டும்

------------------------------------------


குண்டு இரண்டு
--------------

மகளீர் பாவம்
மகன்கள் பாவம்
கூடை வியாபாரிகள்
பாவம் பாவம்
இரண்டாம் தர
பயணிகள் பாவம்

வியர்வைப் பெருங்கடலில்
வித்தெடுப்போன் இவன்
நெஞ்சுக்குள் வை

தகரம் பிளக்க
தகுந்தாற் போல் வை

உடல்கள் சிதைக்க
உகந்தவை வை

எனக்குள் மானுடம்
கொன்றவனின்

இறுதிப் பயணம்
இதுவே குக

அறவொக்கத் தாடி
டுமீல்..... டமீல்..... டாமால்

---------------------------------------------

குண்டு மூன்று
------------

எங்கள் குதங்களில்
சூலம் குத்தியவனுக்கு

எங்கள் குரள்வளையில்
வாள் வீசியவனுக்கு

எங்கள் தலை பிளக்க
மூங்கில் ஓங்கியவனுக்கு

எங்கள் பிள்ளைகளின்
யோனி கிழித்தவனுக்கு

எங்கள் இலைகளில்
மலம் பரிமாறியவனுக்கு

எங்கள் முகங்களில்
உமிழ்ந்தவனுக்கு

வை... பெரிதாய்...வை

எல்லோக்க மைனா
டம்.....டிப்..... டமார்

-----------------------------------


குண்டு நான்கு
--------------------
பறவைகள் சிறகு
பட்டறை நெருப்பு

மின்னல் கீற்று
மெலிந்த காற்று

கடுஞ்சொல் வேகம்
கொலை வெறித் தாகம்

கஞ்சாக் காவி
அஞ்சாப் பாவி
யோக நாயி

ஐநூறு பேராம்
ஐந்து கிலோ?
று கிலோ?
ர்டிஎக்ஸ் அமுக்கு
எடையை பெருக்கு

மாமிச நாற்றம்
மற்றோருக்கும் அறிவி

எட்டாஸ் கோட்டை
டிம்....... டம்...... டும்

-----------------------------------------------


குண்டு ஐந்து
----------------

தண்டவாளம் பிடுங்கு
பெட்டிகள் நொறுக்கு
கண்களை பிதுக்கு
கல்லீரல் கசக்கு
இவன் தலை சிதரி
அவனுடல் சேர்பி
இருவர் கால்களும்
எலிக்குணவாக்கு
எறும்புகள் போங்கள்
எங்காவது போங்கள்
துரும்புக்கும் காது
துரோகம்
துவங்கி முழங்கட்டும்
நாசம்
ஒன்று..... இரண்டு....... மூன்.........

தொம்பன் பேட்டை
டக்கு.....புக்கு.......டபாக்

------------------------------------

குண்டு று
--------------
குழிகளில் சோறு
குழிகளில் நீரு
குழிகளில் வாழ்வு
குழிகளில் சாவு

கண்ணியில் கழுத்து
கால்களில் குண்டு
நெஞ்சுக்கு பீரங்கி
இதயத்துக்கு தோட்டா

உருவம் கண்டால்
உடம்பே சிவக்கிறான்
பெயரைக் கேட்டு
வெறியே கொள்கிறான்

பச்சை முட்களாம்
பிடுங்கி எரிகிறான்
காவிக் கனலை
நெஞ்சில் கொட்டுகிறான்.

என்ன பாவம்
எப்பொழுது செய்தோம்
தீவிரவாதியாய்
திரிகிறோம் தெருவில்

முடிவு கட்டுவோம்
முடித்துக் கட்டுவோம்

பஸ்பம் கட்டும்
பாவிப் பயல்கள்

தொஸ்குல் ராஜ்ஜா
பூம்.......டூம்......தூம்

-----------------------------------


குண்டு ஏழு
-----------------
தலைகள் எண்ணு
உடல்கள் எண்ணு
மொத்தம் எத்தனை
முடிவாய் சொல்லு
திருப்தி இல்லையா
திருப்பிக் கொல்லு

தப்பினாலும் செத்துப் போவான்
திடீர் கொலைக்கு தீவிரவாதி
திட்டக் கொலைக்கு அரசியல்வாதி
இவனை அடிப்போம்
அவனும் அழுவான்

பீதியில் நாடு
பிதுங்கிச் சாகும்
வீதிகளில் பயமே தேங்கும்

என்னை உன்னால்
அடிக்க முடியாது
உன்னை என்னால்
ஒடிக்கவும் முடியாது

ஏழாவது குண்டு
எச்சரிக்கை குண்டு

இதோ துவங்கினோம்
இனி தொடர்வோம்

அய்யோ... அம்மா.. அப்பா

------------------------------


மதியழகன் சுப்பையா,
மும்பை.

Friday, July 06, 2007

வெண்மையாக இருக்க வேண்டுமா உள்ளாடை?




பாராளுமன்ற உறுப்பினர் (எம்பி)க்கு கிடைக்கும் சம்பளமும் அரசு சார்பிலான சலுகைகளும்.

மாதச் சம்பளம் : ரூ 12,000

சட்டரீதியான செலுவுகளுக்காக மாதத்திற்கு : ரூ 10,000

அலுவலக செலவுகளுக்கான மதாத்திற்கு: ரூ 14,000


போக்குவரத்து சலுகை (கிலோ மீட்டருக்கு 8 ரூ) மாதத்திற்கு: ரூ 48,000 ( உதாரணமாக கேரளாவிலிருந்து டெல்லி வரை போக வர மொத்தம் 6000 கிமீ)


பாராளுமன்றக் கூட்டத்தின் போது போக்குவரத்துப் படி/ உணவுப் படி தினசரி : ரூ 500
முதல் வகுப்பு குளுகுளு (A/C) ரயிலில் பயணம் எத்தனை முறை வேண்டுமானாலும்: இலவசம் ( இந்தியா முழுவதும்)

விமானத்தில் பிஸினஸ் கிளாஸ் பிரிவில் ஆண்டிற்கு இலவசமாக: 40 முறை போய்வரலாம். ( உடன் மனைவி அல்லது பிஎ வை கூட்டிச் செல்லலாம்)

டெல்லி எம்பி ஹாஸ்டலில் தங்க எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் : இலவசம்

அவரது வீட்டு மின்சாரத்திற்கு : 50,000 யுனிட்களுக்கு இலவசம்.

லோகல் போன் கால் கட்டணம்: 1,70,000 கால்களுக்கு இலவசம்.

ஆண்டொன்றிற்கு ஒரு எம்பிக்கு மொத்த செலவு (எந்த கல்வித் தகுதியும் இல்லாதபோதும்) ரூ 32,00,000 ( அதாவது மாதத்திற்கு 2.66 லட்சங்கள்)

ஐந்து ஆண்டுகளுக்கு : 1,60,00,000

மொத்தம் 534 எம்பிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு: 8,54,40,00,000 ( சுமார் 855 கோடிகள்)


இத்துடன் எம்பிகளுக்கு லஞ்சம்+ ஊழல் இதில் கிடைப்பவை கணக்கில் இல்லை.

இப்படித்தான் நமது வரிப்பணம் கொள்ளையடிக்கப் பட்டு வருகிறது. அடிப்படை பொருட்களின் விலைகள் உயர்த்தப் படுகிறது

Thursday, July 05, 2007

பில் கேட்ஸ் மகளுக்கு திருமணம்


----------------------------------------

தந்தை: மகனே! நான் சொல்கிறப் பெண்ணத்தான் நீ மணந்து கொள்ள வேண்டும்.
மகன்: முடியாது. நான் என் விருப்பத்திற்கேற்ப பெண் பார்த்துக் கொள்வேன்
தந்தை: ஆனால் நான் உனக்காகப் பார்த்தப் பெண் பில் கேட்ஸ்சின் மகளாயிற்றே..?
மகன்: அப்படியானால்... ஓ.கே.


அடுத்து தந்தை பில்கேட்ஸை சந்திக்கிறார்.


தந்தை: உங்கள் மகளுக்காக நான் ஒரு வரண் கொண்டு வந்திருக்கிறேன்
பில் கேட்ஸ்: ஆனால் எனது மகளுக்கு திருமண வயதுகூட ஆகவில்லையே?
தந்தை: நான் பார்த்திருக்கும் வரண் உலக வங்கியில் வைஸ் பிரசிடென்ட்டாக இருக்கிறானே...
பில் கேட்ஸ்: ஆஹ! அப்படியானால் ஓ. கே..

இறுதியாக தந்தை உலக வங்கியின் பிரசிடென்ட்டை பார்க்கச் செல்கிறார்.

தந்தை: எனக்குத் தெரிந்த ஒரு இளைஞன் உங்கள் நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட்டாக இருக்க தகுதியானவர். சேர்த்துக் கொள்ளுங்களேன்.
பிரசிடென்ட்: மன்னக்கவும். ஏற்கனவே எங்களிடம் தேவைக்கும் அதிகமான அளவு வைஸ் பிரசிடென்ட்கள் உள்ளனரே..
தந்தை: இருக்கலாம். ஆனால் நான் சொல்லும் இளைஞன் பில் கேட்ஸ்சின் மருமகனாயிற்றே...
பிரசிடென்ட்: ஆஹ! அப்படியானால் நிச்சயம் சேர்த்துக் கொள்கிறேன்.

தொழில் செய்வோர்களின் சூத்திரம் இதுதான்.

நீதி: உங்களிடம் எதுவும் இல்லையென்றாலும் செயல்கள் சிறப்பாய் நடந்தேரும் ஆனால் உங்கள் எண்ணம் மட்டும் எப்பொழுதும் பாஸிட்டிவாக இருக்க வேண்டும். அதனால் எப்பொழுதும் பாசிட்டிவாக சிந்தியுங்கள்.

Wednesday, June 20, 2007

பேசி பேசி கைப்பேசி






1.
தொலைவில் இருக்கிறாய்
தொடர்பில் இருக்கிறாய்
கைப்பேசி உரையாடல்

2.
உன் மொழி பேசும்
மின் பொறி ஒன்று
கைப்பேசி

3.
பொத்தான் அழுத்தினால்
பொங்கும் சந்தோஷம்
கைப்பேசியில் கதைப்பாய் நீ

4.
கிரங்கித்தான் போகிறேன்
காது நிறைக்கும்
கைப்பேசி முத்தங்கள்

5.
மனம் வாடுகையில்
தன்சொல் தெளிக்குமுன்
கைப்பேசி உரையாடல்



மதியழகன் சுப்பையா

Tuesday, June 19, 2007

டார்ச் வியாபாரி



இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி
தமிழில்: மதியழகன் சுப்பையா


முதலில் அவன் முச்சந்தியில் மின்சார டார்ச் விற்றுக் கொண்டிருந்தான். இடையில் கொஞ்ச நாட்களாய் அவனைக் காணவில்லை. மீண்டும் நேற்றுதான் தென்பட்டான். இப்பொழுது அவன் தாடி வைத்திருந்தான். நீளமான ஜிப்பா மாட்டியிருந்தான்.
''ஏம்ப்பா, எங்கிருந்த? தாடி ஏன் வளர்த்திருக்க?''
'' வெளியூர் போயிருந்தேன். '' பதிலளித்தான். தாடியைப் பற்றிய கேள்விக்கு அவன் பதிலளிக்காமல் தாடியைத் தடவிக் கொண்டிருந்தான்.
'' ஏன் இன்னைக்கு டார்ச் வியாபாரம் பண்ணலியா?''
'' அந்த வேலையை இப்ப செய்யிறதில்லை! இப்ப த்மாவிற்குள் டார்ச் எரிய ரம்பிச்சிருக்கு அதனால் இந்த 'சூரியன் மார்க்' டார்ச்கள் வீணாய்ப்படுகிறது''
''எனக்கென்னவோ நீ சந்நியாசம் போவதாய் தெரிகிறது. எவன் த்மாவில் பிரகாசம் பரவுகிறதோ அவன் இப்படித்தான் சோம்பேறித்தனத்தை தரித்துப் பேசுவான். சரி! யாரிடமிருந்து ஞானம் பெற்று வந்தாய்?''
என் வார்த்தைகள் அவனை சுட்டிருக்க வேண்டும். ''அய்யோ! இப்படி கடுயான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். எல்லோருக்கும் த்மா ஒரே மாதிரிதான். என் த்மாவிற்குள் காயத்தை ஏற்படுத்தி விட்டு உங்கள் த்மாவையும் காயப் படுத்திக் கொள்கிறீர்கள்'' என்றான்.
'' எல்லாம் சரிதான், னால் திடீரென்று எப்படி இப்படி னாய்? ஏன் உன் பொண்டாட்டி விட்டுட்டுப் போயிட்டாளா? கடன் கொடுக்க யாரும் மறுத்து விட்டார்களா? இல்லை ஏதாவது திருட்டு விவகாரத்துல மாட்டிக்கிட்டியா? எப்படிப்பா வெளியிலிருந்த டார்ச் த்மாவுக்குள் புகுந்திருக்கும்? '' கேட்டேன் நான்.
அவன் உடனடியாக மறுத்தான் '' உங்கள் அபிப்ராயம் தவறானது. அப்படி ஒன்னுமில்லை. ஒரு சம்பவந்தான் என் வாழ்க்கையையே மாற்றி விட்டது. நான் அதை ரகசியமாக வைக்கனுமின்னு இருந்தேன். உங்ககிட்ட மட்டும் சொல்றேன்.....'''
அவன் தன் வாக்குமூலத்தைத் துவங்கினான்.
'' ஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த விஷயம். நான் என் நண்பன் ஒருவனோடு தனிமையில் உட்கார்ந்திருந்தேன். எங்கள் இருவருக்குள்ளும் வானத்தையே தொடுவதாய் ஒரு கேள்வி எழுந்தது. என்னவென்றால்- 'பணம் எப்படி சம்பாதிப்பது? நாங்கள் இருவரும் அந்தக் கேள்வியின் இரண்டு கால்களையும் பிடித்து இழுத்து தள்ளிவிடப் பார்த்தோம். வியர்வை வந்துவிட்டது. னால் அதை அசைக்க முடியவில்லை. ' அதன் கால்கள் பூமியில் ழக் காலூன்றி விட்டது, அதைப் பிடுங்கி எறிய இயலாது எனவே அதை தவிர்த்திடலாம்' என்றான் நண்பன்.
நாங்கள் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டோம். னால் அந்தக் கேள்வி மீண்டும் எங்கள் முன்னால் விஷ்வரூபம் எடுத்து நின்றது. இந்தக் கேள்வியை நாம் தவிர்க்க இயலாது. அதனால் இதை விடுவிக்கப் பார்ப்போம் என்று இருவரும் முடிவு செய்தோம். பணம் சம்பாதிக்க ஏதாவது தொழில் பார்க்கலாம் என்று உடனே வேறுவேறு திசையில் தத்தம் பலன்களை பார்க்கப் புறப்பட்டு விட்டோம். ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் இதே நாள் இதே இடத்தில் இதே சமயத்தில் சந்திப்போம் என்று நான் யோசனை சொன்னேன்.
' நாம் ஏன் சேர்ந்தே போகக் கூடாது?' என்றான் நண்பன்.
' இல்லை, நாம் சேர்ந்து போவதனால் நம் பலன்கள் ஒன்றோடொன்று மோதி உடைந்து போக வாய்ப்பு உள்ளது. மேலும் பலன் பார்க்க புறப்பட்டவர்கள் தனித்தனியே போனதாய்த்தான் புராணக் கதைகள் சொல்கின்றன.' என்றேன்.
இப்படியாக நாங்கள் இருவரும் தனித்தனியே பயணப்பட்டோம். நான் டார்ச் விற்கும் தொழிலை அரம்பித்தேன். முச்சந்தியில் மக்களைக் கூவி அழைத்து ஒன்று திரட்டி நாடக பாணியில் சொல்வேன் ' இன்று எல்லா திசைகளிலும் இருள் சூழ்ந்து விட்டது. இரவு மிகக் கருமையானதாக இருக்கும். நம் கைகளே நமக்குப் புலப்படாது. மனிதனுக்கு பாதை தெரியாது. அவன் வழி தவற வாய்ப்புள்ளது. அவன் கால்கள் முட்களில் குத்தப்படும். அவன் விழுந்து கால் முட்டியில் ரத்தம் கசிய ரம்பித்து விடும். அவனைச் சூழ்ந்து இருள் இருக்கும். சிங்கமும் சிறுத்தையும் அவனைச் சுற்றி வரும். அவன் பாதையில் பாம்புகள் ஊர்ந்து கிடக்கும். இரவு எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருக்கும். வீட்டிற்குள்ளும் இருள் இருக்கும். இரவு நேரம் மனிதன் சிறுநீர் கழிக்க எழுவான், பாம்பின் மேல் கால் வைத்து விடுவான். பாம்பு அவனை கடித்து வைக்க அவன் செத்துப் போவான்''
இப்படி நான் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என் பேச்சைக் கேட்டு மக்கள் பயந்து விடுவார்கள். நன்பகலிலும் அவர்களுக்கு இருட்டின் பயம் அப்பிக் கொண்டு நடுங்க ரம்பித்து விடுவார்கள். மனிதனை பயமுறுத்துவது எவ்வளவு பெரிய வேலைப் பார்த்தீர்களா? பயந்துபோன மக்களிடம் நான் '' இருள் இருப்பது உண்மைதான், அதே நேரத்தில் பிரகாசமும் உள்ளது. அந்தப் பிரகாசத்தைத்தான் நான் உங்களுக்கு கொடுக்க வந்துள்ளேன். 'எங்கள் சூரியம் மார்க்' டார்ச்சுகளில் அந்தப் பிரகாசம் உள்ளது. அதனால் இப்பொழுது சூரியன் மார்க் டார்ச்சுகளை வாங்குங்கள். உங்களை மிரட்டும் இருளை விரட்டுங்கள். டார்ச் வேண்டுமென்போர் கையைத் தூக்குங்கள்'' என்பேன்.
என் டார்ச்கள் விற்பனையாகி விடும். பின் நான் னந்தமாய் வாழ்ந்து வந்தேன். சொல்லி வைத்தபடி ஐந்து வருடம் கழித்து நண்பனை சந்திப்பதாய் சொன்ன அந்த இடத்தை அடைந்தேன். அங்கேயே பகல் முழுவதும் அவனுக்காக காத்திருந்தேன். னால் அவன் வரவில்லை. என்னவாகியிருக்கும்? அவன் மறந்திருப்பானோ? இல்லை அவன் இந்த உலகத்திலேயே இல்லையா?
நான் அவனைத் தேடக் கிளம்பினேன்.
ஒரு மாலை, நகரம் நோக்கிச் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். அருகில் ஒரு மைதானத்தில் மின் விளக்குகளின் ஒளி பகல் போல் காட்சியளித்தது. ஒரு புறம் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஒலி பெருக்கிகள் பொருத்தப் பட்டிருந்தது. மைதானம் முழுவதும் ண்களும் பெண்களும் அமைதியோடு தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். மஞ்சத்தில் பட்டு உடைகளை அணிந்தபடி ஒரு சாந்தமான மனிதர் அமர்ந்திருந்தார். அவர் நல்ல கொழுத்துப் பருத்திருந்தார். நல்ல முறையில் பராமரிக்கப் பட்ட நீண்டு சுருண்ட தாடி, முதுகில் புரளும் கருத்த தலைமயிர்.
நான் கூட்டத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டேன். மேடையில் சாந்த மனிதர் திரைப்பட சாது போல காட்சியளித்தார். அவர் குரு கம்பீரத்தோடு போதனையை துவங்கினார். அவர் பேசியது வானத்தின் ஒரு கோணத்திலிருந்து யாரோ காதுகளில் பேசியது போல் இருந்தது.
''இன்று நான் மனிதனை ஒரு கனத்த இருளில் காண்கிறேன். அவனுக்குள் ஏதோ ஒன்று அணைந்து விட்டது. இந்த யுகமே இருண்ட யுகம்தான். சகல கிரக இருளையும் இந்த பிரபஞ்சத்திலேயே ஒழித்து வைத்தார்போல் இருக்கிறது. இந்த இருள் நீங்க வழியில்லை எனலாம். இன்று த்மாவும் இருளில்தான் உள்ளது மனித த்மா இந்த இருளில் இறுகித்துப் போகிறது. அகக் கண்கள் ஜோதி இழந்து போய் விட்டது. மனித த்மாக்கள் பயத்தாலும் துன்பத்தாலும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன்.'' இப்படியே அவர் பேசிக் கொண்டிருக்க மக்கள் ஸ்தம்பித்துப்போய் கேட்டுக் கொண்டிருந்தனர். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இரண்டு மூன்று முறை அடக்கியும் முடியாமல் சிரித்து விட்டேன். அருகிலிருந்தவர்கள் என்னை அதட்டி வைத்தார்கள்.
மேடையின் சாந்த புருஷர் தனது போதையின் இறுதியாய் ''சகோதரர்களே! சகோதரிகளே! பயப்படாதீர்கள். எங்கு இருள் உள்ளதோ அங்குதான் பிரகாசமும் உள்ளது. ஒளியிலும் இருளின் கதிர்கள் உள்ளன. உள்ளுக்குள் அணைந்து போயிருக்கும் ஜோதியை எழுப்புங்கள். அந்த ஜோதியை உசுப்பவே நான் பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் தியான கோவிலுக்கு வந்து உங்களின் அகவிளக்கை உசுப்பி உயிர்ப்பியுங்கள்'' என்றதும் நான் குலுங்கி குலுங்கி சிரிக்கும் நிலையை அடைந்து விட்டேன். அருகே அமர்ந்திருந்தவர்கள் என்னைப் பிடித்து தள்ளாத குறையாய் விரட்டினர். நான் மேடையின் அருகில் போய் நின்று கொண்டேன்.
சாந்த மனிதர் மேடையிலிருந்து இறங்கி காரை நோக்கி நடக்கலானார். நான் அவரை மிக அருகிலிருந்து உற்றுப் பார்த்தேன். அவருடைய தாடி அடர்த்தியாய் வளர்ந்திருந்தது. அதனால் நான் சற்று தடுமாறியிருந்தேன். னால் எனக்குத்தான் தாடியில்லையே நான் முன்பிருந்த அதே தோற்றத்தில்தான் இருந்தேன். அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டார் போலும்.
''அடேய்! நீயா?'' என்று நான் அவரை அடையாளம் கண்டு கொள்ளும் முன் அவரே என் கைகளைப் பிடித்து காரில் உட்கார வைத்துக் கொண்டார். நான் வலாய் பேச ரம்பித்தபோது என்னை தடுத்து 'பங்களாவரை வேறெதுவும் பேச வேண்டாம் அதே ஞான உபதேசங்களை மட்டுமே பேசுவோம்'' என்றார் முனுமுனுப்பாய்.
நான் அப்பொழுதுதான் காருக்குள் மூன்றாவதாக டிரைவரும் இருப்பதை உணர்ந்தேன். பங்களாவுக்குள் நுழைந்ததும் அவரின் அதட்டலைக் கண்டு மிரண்டு போனார்கள். நானும் அவர் கம்பீர பேச்சுகளால் சற்றே மிரண்டேன். னாலும் நான் மனம் திறந்து பேச ரம்பித்து விட்டேன்.
''யப்பா நீ ரொம்ப மாறிட்ட'' என்றேன்.
'மாற்றம்தானே வாழ்க்கையில் அடிப்படை' என்றான் கம்பீரத்தோடு.
''டேய், பில்லாசபி பேசாம எப்படி இந்த அஞ்சு வருடத்துல இவ்வளவு வசதிய சம்பாதிச்சன்னு சொல்லு?'' என்றேன் உரிமையோடு.
''நீ இத்தன வருசமா என்ன செஞ்சுக்கிட்டிருந்த?' என்று மறுகேள்வி கேட்டான் என் கேள்விக்கு பதிலளிக்காமல்.
'நான் சுற்றி சுற்றி டார்ச் விற்றுக் கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லு நீயும் டார்ச் வியாபாரிதானே' என்றேன்.
' உனக்கேன் அப்படித் தோனுது?' என்றான்.
' நீயும் நான் பேசுவது போலத்தான் பேசுகிறாய். நானும் இருளைக் காட்டி பயமுறுத்திதான் டார்ச் வியாபாரம் செய்வேன். நீயும் மக்களிடம் இருட்டைப் பற்றி சொல்லித்தானே பயமுறுத்திக் கொண்டிருந்தாய். அப்படியானால் நீயும் டார்ச் விற்கும் தொழில்தான் செய்கிறாய் இல்லையா? என்ன ஒன்று, நான் சத்தமாய் பேசுவேன், நீ அமைதியாய் பொறுமையாய் பேசுகிறாய்' என்றேன்.
''யப்பா! நீ என்னை அறியமாட்டாய். நான் ஏன் டார்ச் விற்கப் போகிறேன். நான் ஞானி, சாமி, கடவுள் என்றெல்லாம் அழைக்கப் படுகிறேன்' என்றான்.
' நீ என்னமோ சொல்லுப்பா னாலும் நீ டார்ச்தான் விக்குற. உலகம் முழுவதும் வெளிச்சம் பரவி கிடக்குது. னா இருட்டு இருட்டுன்னு எப்படி பயமுறுத்துற, ஏன் டார்ச் விக்கனுமுன்னுதானே? நான் கூட நல்ல பகல்லேயும் இருட்டைப்பத்திதான் பேசி டார்ச் விற்பேன். உண்மையைச் சொல்லு எந்த கம்பெனி டார்ச் விக்குற? என்றேன் நான் மிக ர்வமாய்.
என் பேச்சால் அவன் ஒரு நிலைக்கு வந்துவிட்டான்.
' உன் கேள்வி சரிதாம்ப்பா என் கம்பெனி புதுசு' என்றான்.
'உங்கக் கம்பெனி கடை எங்குள்ளது. சேம்பிளுக்கு ஏதாவது டார்ச் காட்டேன். பார்க்கிறேன். 'சூரியம் மார்க்' டார்ச்சை விட அதிகம் விற்கக் கூடியதா அது?' என வினவினேன்.
'அந்த டார்ச்சுக்குன்னு பஜாரில் கடை எதுவும் கிடையாது. அது மிகவும் சூட்சமமானது. னால் அதற்கு நல்ல விலை கிடைக்குது. ஒன்றிரண்டு நாட்கள் இங்கேயே தங்கியிருந்து பார் எல்லாம் புரிந்து கொள்வாய்' என்றான்.
இப்படியாய் நான் அவன்கூட இரண்டு நாட்கள் இருந்தேன். மூன்றாவது நாளே 'சூரியன் மார்க்' டார்ச் பெட்களை நதியில் வீசிவிட்டு புது வேலையைத் தொடங்க ரம்பித்து விட்டேன்.' என்று நினைவு திரும்பியவனாய் மீண்டும் அவன் தன் தாடியை தடவி விட ரம்பித்தான்.
''இன்னும் ஒரு மாதம்தான் அப்புறம்!'' என்று கற்பனை செய்து பார்த்துக் கொண்டான்.
''அப்ப, என்ன வியாபாரம் செய்யப் போற?'' நான் கேட்டேன்.
''வியாபாரம் அதேதான்- அதாவது டார்ச் விற்பது னால் கம்பெனியை மாத்திக்கிட்டேன் அவ்வளவுதான்'' என்றான் நம்பிக்கையோடு.

Monday, June 18, 2007

திருமணத்திற்கு முன்......திருமணத்திற்குப் பின்:

திருமணத்திற்கு முன்......

அவன்: ஆமாம், ரொம்பதான் பொறுத்தாச்சு
அவள்: அப்படின்னா நான் உன்னை விட்டுப் போகனுமா?
அவன்: அப்படியில்லை! அப்படி நினைக்கக் கூட செய்யாதே
அவள்: என்னை நேசிக்கிறாயா?
அவன்: நிச்சயமாக
அவள்: எனக்கு துரோகம் செய்திருகிறாயா?
அவன்: இல்லை. இவ்வாறேல்லாம் எப்படி கேட்கிறாய்?
அவள்: எனக்கு முத்தம் கொடுப்பாயா?
அவன்: ஆமாம்.
அவள்: என்னை அடிப்பாயா?
அவன்: கண்டிப்பாக இல்லை! நான் அப்படியானவன் இல்லை.
அவள்: நான் உன்னை நம்பலாமா?
அவன்: ம்...
அவள்: செல்லமே!

திருமணத்திற்குப் பின்:
கீழிருந்து மேலாக வாசியுங்கள் (திருமணத்திற்குப் பின் எல்லாம் தலைகீழாக ஆகி விடும் இல்லையா)

Saturday, June 09, 2007

இரண்டு பதிவுகள்

நட்டப் படுகையில்
நேரம் சரியில்லை

மரணம் நேர்கையில்
நேரம் சரியில்லை

விபத்து நிகழ்கையில்
நேரம் சரியில்லை

பொழுது என்பது
பொன்னாயில்லை

காலம் என்பது
மதிப்பாயில்லை

சமயம் என்பது
சாதகமாயில்லை

நடக்கக் கூடியது
நடந்தே தீர்கிறது

கடக்கக் கூடியது
கடந்தே முடிகிறது

காலத்தை திட்டினால்
காரியம் குமா

காலத்தை வெல்லலாமே
காரியத்தால்

------------------------------------------


சிகரம் போகும்
வளைவுச் சாலைகள்

விரைந்து போக
விரைவுச் சாலைகள்

நிலைத்து இருக்கும்
பக்கா சாலைகள்

அழகு சேர்க்கும்
தார்ச் சாலைகள்

ஒற்றைச் சாலைகள்
உவமைக் குறிகள்

விரிந்த சாலைகள்
கண்னிறைக்கும் வெளிகள்

இணைப்பு சாலைகள்
பேனப்படல் வேண்டும்

நெடுஞ்சாலைகள்
அவசியங்கள் தாரங்கள்

மண் சாலைகள்
தாய்ச் சாலைகள்

உயிர்ப்பான சாலைகள்
ஓற்றையடிப் பாதைகள்

சாலைகள் வேண்டும்
பயணம் செய்ய

சாலைகள் வேண்டும்
இடப்பெயர்ச்சி கொள

சாலைகள் வேண்டும்
வரலாறு படைக்க

சாலைகள் வேண்டும்
சாலைகளை இணைக்க



மதியழகன் சுப்பையா

இரண்டு பதிவுகள்

நட்டப் படுகையில்
நேரம் சரியில்லை

மரணம் நேர்கையில்
நேரம் சரியில்லை

விபத்து நிகழ்கையில்
நேரம் சரியில்லை

பொழுது என்பது
பொன்னாயில்லை

காலம் என்பது
மதிப்பாயில்லை

சமயம் என்பது
சாதகமாயில்லை

நடக்கக் கூடியது
நடந்தே தீர்கிறது

கடக்கக் கூடியது
கடந்தே முடிகிறது

காலத்தை திட்டினால்
காரியம் குமா

காலத்தை வெல்லலாமே
காரியத்தால்





---------------------------------------------------------------------------------







சிகரம் போகும்
வளைவுச் சாலைகள்

விரைந்து போக
விரைவுச் சாலைகள்

நிலைத்து இருக்கும்
பக்கா சாலைகள்

அழகு சேர்க்கும்
தார்ச் சாலைகள்

ஒற்றைச் சாலைகள்
உவமைக் குறிகள்

விரிந்த சாலைகள்
கண்னிறைக்கும் வெளிகள்

இணைப்பு சாலைகள்
பேனப்படல் வேண்டும்

நெடுஞ்சாலைகள்
அவசியங்கள் தாரங்கள்

மண் சாலைகள்
தாய்ச் சாலைகள்

உயிர்ப்பான சாலைகள்
ஓற்றையடிப் பாதைகள்

சாலைகள் வேண்டும்
பயணம் செய்ய

சாலைகள் வேண்டும்
இடப்பெயர்ச்சி கொள

சாலைகள் வேண்டும்
வரலாறு படைக்க

சாலைகள் வேண்டும்
சாலைகளை இணைக்க


மதியழகன் சுப்பையா

Saturday, May 12, 2007

மேதமை கடந்த கவிஞன்- விந்தா



மராட்டி இலக்கிய உலகில் 1947ம் ண்டு பா.சி. மண்டேகரின் ' காஹி கவிதா' என்ற தொகுதி புதுக் கவிதையின் துவக்கமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து புதுக் கவிதைகள் அசூர வேகத்தில் எழுதப் பட்டு வந்திருக்கிறது. புதுக் கவிதையின் வேக வளர்ச்சியும் அது கடந்து வந்த காலத்தையும் கவனத்தில் கொள்கையில் அதனை புதுக் கவிதை என விழித்தல் தகுமா என்பது விவாதிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. புதுக்கவிதையின் இன்றைய வயது மூன்று தலைமுறையாகி விட்டது. னால் இந்த தலைமுறைக் கவிதைகள் புதிய இலக்கு தேடி வேகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பலமுறை தேக்க நிலையும் கண்டிருக்கிறது. இடையிடையே நித்திய பிரவாகமாகவும் பாய்ந்திருக்கிறது. இந்த ஓட்டங்கள் க்கமான திசைகள் நோக்கியும் பல இதற்கு நேர் எதிர் திசையை நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்தது. இலக்கிய மற்றும் சமூகத்தில் இந்த புதுக் கவிதைகளுக்கு தரவும் வெறுப்பும் சமமாகவே இருந்தது. மராட்டி புதுக் கவிதைகள் துவக்கக் காலத்தில் அழமான அடித்தளம் அமைத்துக் கொண்ட காரணத்தால் இன்று அவை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெற்று நிற்கின்றன. மராட்டி புதுக் கவிதைகளின் முதல் தலைமுறைக் கவிஞர்களில் விந்தா கர்ந்திகர் சிறப்பிடம் பிடித்தவர். கோவிந்த் வினாயக் கரந்திகர் என்ற தனது பெயரில் கோவிந்த் மற்றும் வினாயக் என்ற சொற்களை பொதுப்படையாக கருதாத காரணத்தால் 'விந்தா' என்று சுறுக்கிக் கொண்டார். மேலும் இப்பெயர் பெண்பாலாக ஓலிப்பது இவருக்கு அதிகம் பிடித்திருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். விந்தா மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் பகுதியில் சிந்துதுர்கா மாவட்டத்தின் கால்வான் கிராமத்தில் கஸ்டு 23ல், 1918ம் ண்டு பிறந்தார். வறுமையான சூழலில் பல தடைகளை மீறி கல்வி கற்றார். இயல்பாகவே அவருக்குள் இருந்த அறிவு தாகம் அவரைத் தேடிப் படிக்கச் செய்தது. 1949 முதல் 1981 வரையிலான காலக் கட்டம் விந்தாவின் படைப்புகள் உச்சத்தில் இருந்த காலக் கட்டமாகும். ஸ்வேத்கங்கா (1949), மிருதகந்த் (1954), துருப்பத் (1959), ஜாதக் (1968) மற்றும் விருபிக்கா(1981) கியவைகள் இவரது கவிதைத் தொகுதிகளாகும். இவை மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கான கவிதைகளையும், சிறுகதைகளையும் மற்றும் ய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு உள்ளார். மேலும் 'அரிஸ்ட்டடால் காவ்யசாஸ்த்ர' கோத்தேயின் 'பாவுஸ்ட்' மற்றும் ஷேக்ஸ்பியரின் 'ராஜா லியர்'' கிய மொழி பெயர்ப்புகளையும் செய்து உள்ளார். விந்தா தனது கவிதைகளையும் ங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு இவரது இலக்கியப் பணி விதவிதமாக அலங்காரப் பட்டிருக்கிறது. ஞானபீட விருது பெற்றிருக்கும் விந்தா கராந்திகர் 87 வயதில் அனுபவச் சுறுக்கங்களை உடல் முழுவதும் பெற்றிருக்கும் மேதை. அவரை மராட்டி மொழி கவிஞராகவும் எழுத்தாளராகவும் மட்டுமே குறிப்பிடுவது சிறப்பாக இருக்காது. உலக இலக்கியத்தில் இடம் பிடித்த மராட்டிக் கவிஞன் என்று கூறுவது மிகையாக இருக்காது. இலக்கியத்தில் இலக்கு இதுவென நிர்ணயிக்காமல் மொழியையும் நாட்டையும் தாண்டி பயணப் படுபவனை இலக்கியவாதி என்று குறிப்பிட்டுக் கொள்ளலாம். கவிதையாகவோ உரைநடையாகவோ தான் சார்ந்த மக்களின் வாழ்நிலையை பதிவு செய்யும் படைப்பாளியை மொழி மற்றும் மாகாண எல்லைகளால் தடுத்து நிறுத்த முடியாது. விந்தா கரந்திகர் இந்த இலக்கை தொட்ட கவிஞன் என்பது ய்வின் முடிவு. அவரது படைப்பூக்கம், உலக வாழ்வின் போராட்டங்கள் மற்றும் தனித்துவத்தை அடைய முனையும் உழைப்பு கியன மொழி மற்றும் நாடு என்ற சிறிய வட்டத்தில் அவரை அடைத்து வைக்க முடியவில்லை. மும்பையின் புறநகர் பாந்திராவின் மேற்குப் பகுதியில் சாஹித்திய வாசாகத் அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். விந்தா கரந்திகர் வயோதிகம் காரணமாக மிக மெதுவாக நடக்கும் கம்பீரக் கவிஞன். தினமும் காலையில் காய்கறி மற்றும் பழங்களை வாங்க தனது மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி வருகிறார். இதுவரை தனது காய்கறிப் பையை எவரையும் தூக்கிக் கொள்ள அனுமதித்ததில்லை. சிக்கனமாகவும் எளிமையாகவும் வாழும் விந்தா கரந்திகர் லட்சக்கணக்கான ரூபாய்களை பொதுநலத்திற்காக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இளையவர்கள் காலில் விழுந்து சி பெற முனைந்தால் கடுமையாக மறுத்து விடும் இவர் சமவுடமைக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தவர். தனது வாழ்வில் வணக்கத்திற்குறியவர்களாக சானே குருஜி, சேனாபதி பாபட் மற்றும் பாபா அம்டே கியோரைக் குறிப்பிடும் இவர் இதுவரை எவர் காலிலும் விழுந்ததில்லை. மேற் குறிப்பிட்டவர்களில் முதல் இருவர் காலமாகி விட்டனர். பாபா அம்டே தனது இறுதிகாலங்களை நாக்பூர் அருகில் கழித்து வருகிறார். னால் விந்தா கரந்திகருடன் தொடர்பில் இல்லை. வறுமைச் சூழலில் வளர்ந்த விந்தா மும்பையின் ருயியா கல்லூரி மற்றும் ஐஏஇஎஸ் கல்லூரியில் ங்கில இலக்கியப் பேராசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எப்பொழுதும் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருக்கும் இவர், வீட்டில் தச்சுப் பணிகளையும் செருப்பு தைத்தலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்துள்ளார். தற்போது ங்கில இலக்கிய பேராசிரியராக பணியாற்றி வரும் அவரது மாணவர்களில் ஒருவர் '' விந்தா மிகச் சிறந்த சிரியராகவும் தெளிவான சிந்தனையாளராகவும் இருந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார். ''அவர் எங்களுக்கு ஷேக்ஸ்பியரின் 'மெர்சன்ட்ஸ் ப் வெனிஸ்' மற்றும் 'மேக்பெத்' நாடகங்களை நடத்தினார். அந்த நாடகங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டது போல் இருக்கும் அவர் பாடம் நடத்துகையில்'' என்று நினைவு கூர்கிறார். சிகாகோ பல்கலைக் கழகத்திலும் சிறிது காலம் பணியாற்றி உள்ளார். இந்த காலக் கட்டதில்தான் ங்கிலதிலிருந்து மராட்டியில் மொழி பெயர்ப்புகளையும் செய்தார். 'விந்தாவின் கவிதைகள்' என்றும் 'இன்னும் கொஞ்சம் கவிதைகள்-விந்தா' என்றும் தனது கவிதைகளை ங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இந்த கவிதைத் தொகுதியை ஏ.கே ராமானுஜத்திற்கு அற்பணம் செய்துள்ளார். சிகாகோவில் இருக்கும் போது ஏ,கே ராமானுஜரின் தமிழ் மற்றும் கன்னட பழங்கவிதை மொழி பெயர்ப்புகளால் பெரிதும் கவரப் பட்டார். மழலைகளுக்காக மிகச் சிறந்த மராட்டி 'ரைம்களையும்' எழுதியுள்ளார். தனது தாய் மொழியின் இனிமையை மராட்டி குழந்தைகள் பால்ய வயதிலேயே உணர வேண்டும் என்பதற்காகவும் மொழியின் வளர்ச்சியில் எங்கும் இடைவெளி விழுந்து விடக் கூடாது என்பதற்காகவும் அவர் கடுமையாக போராடினார். குழந்தைகளையும் சிறுவர்களையும் கண்டால் குதூகலம் அடையும் விந்தா மிகச் சமீபம் வரை தனது மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் பட்டம் விட்டு விளையாடியிருக்கிறார். இலக்கியம் மட்டுமல்லாமல் பொதுநலப் பணிகளையும் செய்து உள்ளார். குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எயிட்ஸ் தடுப்பு போன்ற பணிகளுக்காக நிதி உதவியும் தரவும் தெரிவித்திருக்கிறார். ஹைதராபாத்தில் நிஜாமின் ட்சியின் போது விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப் பட்டு நான்கு மாதங்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார். தனது முப்பதாவது வயதில் எழுதத் துவங்கிய விந்தா கரந்திகர் தனது கவிதைகளில் மார்க்ஸிச சிந்தனைகளை கலந்து எழுதினார். தனது கவிதைகளில் சமூக அநீதிக்கு எதிரான கோபத்தையும் எதிர்ப்புகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தினார். மராட்டி கவிதைகளில் புதுமையையும் சோதனைகளையும் அறிமுகப் படுத்தினார். கவிஞராக, கட்டுரையாளராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக அவர் இயங்கி உள்ளார். கவிதைகளில் தனி முத்திரைப் பதித்த கரந்திகர் தற்போது வெளிவராத ''சத்யகதா' என்ற இதழில் 1973ம் ண்டு 'வக்ரகுண்ட மகாகாய'' என்ற தலைப்பில் கடவுள் கணபதியின் துந்திக்கையை ண்குறியாக கண்டு அதன் மேல் சைப் படுவது போல் கவிதை எழுதியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது, மராட்டி இலக்கிய கூட்டங்களில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இவரது 'ஸ்வேத்கங்கா'' 'தொழிலாளர்களின் வியர்வை கங்கை' என்ற பொருள் படும் தலைப்பில் வெளியிடப் பட்ட முதல் கவிதைத் தொகுதியின் கவிதைகள் அதிகம் கொண்டாடப் பட்டவை. மராட்டிய பாட்டாளிக் கவிஞன், மில் தொழிலாளி, சாலை வாசகன் என்று அறியப்பட்ட நாராயண் சுர்வே கரந்திகரின் கவிதைகள் தனக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளாதாக தெரிவித்து உள்ளார். முற்போக்கு கவிதைகளை எழுதிய வசந்த் பாபட் மற்றும் மங்கேஷ் பட்காங்கர் கியோருடன் மூன்றாவது மூர்த்தியாக விந்தா கரந்திகரும் இணைந்து கொண்டார். முற்போக்கு எழுத்தில் இந்த மூம்மூர்த்திகள் நீக்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். யிரக்கணக்கான கவிதை பிரியர்களுக்கு பல ண்டுகள் இந்த மூவரும் கவிதை விருந்து படைத்தவர்கள். மதங்களை கடுமையாக வெறுக்கும் கரந்திகர் அயோதயாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அப்பொழுது சத்தாரா மாவட்டத்தில் நடந்த மராட்டி சாஹித்ய சம்மேளன மாநாட்டில் மதவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஒரே கவிஞர் கரந்திகர்தான். மாநாட்டுக் கூட்டத்தில் வேறு எவரும் இவருக்கு தரவு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. அது ஊமைகளும் செவிடர்களும் கலந்து கொண்ட மாநாடு என்று கவிஞர் சுரேஷ் பாட் பின்னர் தெரிவித்து உள்ளார். இவ்வாறான இலக்கியக் கூட்டங்களில் எந்த முன்னேற்றத்தையும் இன்றவும் காணாத அவர் மராட்டி சாஹித்ய சம்மேளனத்தின் தலைமை பொறுப்பு கொடுக்கப் பட்டபோது மறுத்ததோடு அல்லாமல் மாநாட்டிற்கு செல்வதையும் தவிர்த்தார். கரந்திகர் வசிக்கும் இலக்கியவாதிகள் குடியிருப்பு கட்டிடம் அருகில் கலா நகரில் ஓவியர்களும் கலைஞர்களும் இருக்கும் இடத்தில் சிவ சேனா தலைவர் பால்தாக்ரேவின் வீடு இருந்தது. (பால் தாக்ரே பத்திரிக்கையில் அரசியல் கார்டூனிஸ்டாக இருந்தவர்). கட்சி துவங்கி கோஷங்களுடன் கரந்திகரின் வீடு கடக்கையில் மாடியிலிருந்து '' டேய் பாலா, என்னடா சத்தம்? உன் அரசியல் பிரச்சாரத்தை காம்பவுண்டை தாண்டி வைத்துக் கொள். மனுஷன நிம்மதியா இருக்கவிடு'' என்ற அதட்டலில் மௌன ஊர்வலம் நடத்தி உள்ளார் சிவசேனாவின் சிங்கம் பால்தாக்ரே. அந்த அளவுக்கு கம்பீரமும் தைரியமும் உள்ள கவிஞர் கரந்திகர். இவர் சிவசேனா மற்றும் ர் எஸ் எஸ் போன்ற பாசிச கொள்கை அமைப்புகளுக்கு எதிராக இருந்தவர். சமூகத்தை சீர் கெடுக்கும் கொள்கைகளையும் அதனை ஏற்று நடக்கும் அமைப்புகளையும் வெறுத்தார் னால் மனிதர்களை வெறுக்கவில்லை. மராட்டி நாடக உலகின் உச்ச நட்சத்திரம் விஜய் டெண்டுல்கர் சிவசேனா கட்சியின் கொள்கைகள் பிடிக்காமல் அப்பொது முதல்வராக இருந்த மனோகர் ஜோஷியின் கைகளால் விருது பெறுவதை தவிர்த்தார். னால் கரந்திகருக்கு ஞானபீட விருது வழங்கப் பட்டதும் மனோகர் ஜோஷியின் கைகளால் பூங்கொத்து வாங்குவது போல் த டைம்ஸ் ப் இந்தியா நாளிதழ் புகைப் படம் வெளியிட்டது. இதற்கு '' தேடி வந்த விருதை எப்படி மறுக்க முடியவில்லையோ அப்படியே வீடு தேடி வந்து வாழ்த்துபவர்களை விரட்டவும் முடியவில்லை'' என்று மட்டும் சொல்லி வைத்தார். கரந்திகர் கேஷவ்சுத் பரிசு, சோவித் நாட்டின் நேரு இலக்கிய விருது, கபீர் சம்மான் விருது மற்றும் இந்திய சாஹித்ய அகதமியின் சீனியர் பெல்லோசிப் விருது கிய அவர் பெற்ற பல விருதுகளுள் குறிப்பிடத்தக்கவை. விருதுகளில் பெரிய விருது வாசகர்களின் அன்புதான் மற்றவைகள் எல்லாம் சம்பிரதாயமானவைகள் என தெரிவித்து உள்ளார். இலக்கியவாதி வி.எஸ் காண்டேகர், மற்றும் 'குசுமக்ராஜ்' என்று அழைக்கப் பட்ட கவிஞர் வி.வி ஷிர்வாட்கர் கியோர் வரிசையில் விந்தா கரந்திகருக்கும் ஞானபீட விருது வழங்கப் பட்டுள்ளது. சமீபமாக விந்தாவின் நினைவு மங்கி வருவதாகவும் யாருக்கும் பேட்டியளிப்பதில்லை எனவும் சந்தித்தவர்கள் தெரிவிக்கிறார்கள். னால் தனக்கு ஞானபீட விருது அறிவிக்கப் பட்டதும் '' இந்த விருது எனக்கு சொந்தமாக இருக்காது. இது மராட்டி மொழிக்கும் கவிதைக்கும் வழங்கப் பட்டது. இந்த விருது மராட்டி மண்ணை பெருமை படுத்துவது. இதனை எனக்கு வழங்கப் பட்டதாக குறிப்பிடாதீர்கள்'' என்று வாய்மொழிந்துள்ளார்.


மதியழகன் சுப்பையா

Tuesday, April 24, 2007

' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்'

அன்புள்ள எழுத்தாள நண்பர்களுக்கு,
வணக்கத்துடன் பாண்டித்துரை நான் பல்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே கேள்வி கேட்டு அதன் பதிலை அறிந்து தொகுப்பாக வெளியிடும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களிடமிருந்தும் பதிலை எதிர்நோக்குகிறேன்.

கேள்வி
1. நவின இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?
2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?
3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யுனிகோடு வடிவில் எமுதிடவும்உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்இந்த சிறுவனின் முயற்சிக்கு உங்கள் பேனாவும் செவிசாய்க்கும் எனும் நம்பிக்கையில்
ப்ரியமுடன்
பாண்டித்துரை
சிங்கப்பூர்
006597345497
------------------------------------------------------------------------------
அன்பு சிறுவன் பாண்டித்துரைக்கு,
வணக்கம். உங்களின் ஆர்வமும் பணிவும் பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதில்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.திருப்தியாயின் மகிழ்வேன்.

1. நவீன இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?

நவீன இலக்கியம் என்று எதைக் குறிப்பிடலாம். இல்லக்கண மரபுப் படி செய்யுள்கள் இயற்றப் பட்டு வந்த கால கட்டத்தில் புதுக் கவிதைகள் நவீன எழுத்து வடிவமாக கருத்தப் பட்டது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நம் அனைவரின் கண்கூடு. தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை அல்லது தான் சொல்ல வந்த விஷயத்தை தனக்கான மொழியில் பதிவு செய்து விடுதல் படைப்பாகி விடுகிறது. கவிதை என்று தலைப்பிட்டு இரண்டு வார்த்தைகள் வீதம் வரிகளை ஒன்றுக்கு கீழ் ஒன்றாக அமைத்து விட்டாள் அது கவிதை. பத்தியாக்கி விட்டாள் கட்டுரை. சிறிய இடைவெளிகளில் வசனம் எழுதி விட்டால் சிறுகதை எதுமை மோனை போட்டு விட்டால் பாட்டு இப்படி படிப்புகள் வடிவம் கொள்கிறது. ஆனால் அவை நவீன இலக்கியம் நவீன படைப்பு என்று அடையாளம் காண்பது எப்படி? புரியாமல் ஒரு படைப்பை படைத்து விட்டு இதை புரிந்து கொள்ள நீங்கள் இன்னும் பக்குவப் படவில்லை என்று பதில் சொல்லிக் கொள்வது நவீன படைப்பின் அடையாளமா? வெள்ளைத்தாளில் ஓவியர் ஒருவர் ஒரு கரும்பொட்டு வைத்து அதை சட்டமிட்ட கண்காட்சியில் வைத்து விடுகிறார். என்னப்பா ஒரு கருப்பு பொட்டு மட்டும் வச்சிருக்க, இதுவா ஓவியம் என்று கேட்டால். உங்களுக்கு கருப்பு பொட்டாகத் தெரிகிறது எனக்கு அது வானத்தில் பறக்கும் காக்கையாகத் தெரிகிறது அவருக்கு வேறு எதுவாகவும் தெரியலாம் என விளக்கம் தருகிறான். என்ன செய்ய? இது தான் நவீன படைப்பு அவரவர் அறிவிக்கு தகுந்த படி புரிந்து கொள்ள வேண்டியதுதான். இது இன்னும் எதை நோக்கிப் பயணப் படும் என்பது குறித்து நீங்களே முடிவுக்கு வரலாம். மாங்காய் புளிக்கும்
மரகதம் ஜொலிக்கும்
பலூனில் தண்ணீர்
சொட்டுகிறது.
பறக்கிறான் மனிதன்

இது ஒரு நவீன கவிதை.
யார் எழுதினார்கள் என்பது வேண்டாம். ஆனால் படித்து முடித்தவுடன். இதை ஏன் எழுதினார் என்று தான் கேட்கத் தோன்றியது. எழுதியவரிடம் கேட்டால். பீயை பார்ப்பது போல் பார்ப்பார். விளக்கமா தருவார். இன்று தமிழ் இலக்கியத்தின் நவீன படைப்பாளிகள் இப்படித்தான். நவீன படைப்புகளும் இப்படித்தான்.

உங்கள் கேள்விக்கு பதில் :

நவீன இலக்கியங்கள் எண்ணிக்கையில் முந்த ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நல்ல படைப்பு என்று குறிப்பிட நூற்றாண்டுகளுக்கும் ஒன்றும் இல்லாமல் போகும் நிலையை உருவாக்கப் போய் கொண்டிருக்கின்றன.

2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?

பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகளின் வருகை மிகச் சிறப்பானது, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆதிக்க ஆண் வர்க்கம் அதனை பிரபலமாகமல் தனது பலத்தால் தடுத்து வருகின்றன. மிக நுணுக்கமான விஷயங்களை எளிமையாக குழப்பமில்லாமல் சொல்லும் ஆற்றல் பெண்களுக்கு இயல்பாக உள்ளது. எங்கே இவர்கள் நம்பை முந்தி விடுவார்களோ என்ற பேரச்சத்தின் காரணமாக ஆண் வர்க்கம் அதை முடக்கி வைத்து உள்ளது. பெண்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கும் அமைப்புகள் முன் வந்தால் பெண்ணெழுத்து ஒரு புதிய சாதனைப் பாதையை உண்டாக்கித் தரும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கேள்விக்கு பதில்:

மிக மோசமாக வரவேற்கப் பட்டு. முடிக்கி வைக்கப் பட்டுள்ளது.

3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யார் சொன்ன தகவல் இது. மிகக் கசப்பான உண்மை. இன்று பாரதியையும் பாரதிதாசனையும் மிஞ்சும் அளவுக்கு சமூக எழுச்சித் தரக்கூடிய கவிஞர்கள் படைப்பாளிகள் உள்ளனர். ஆனால் யார் ஏற்றுக் கொள்வது. இவர்களின் கவிதைகளை போகட்டுமே! என்று தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற முத்திரையோடு வரும் சிறு பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இந்தப் பத்திரிக்கைகளை படிப்பது யார். ஒரு சிறு வட்டம். அந்த வட்டமும் இவர் மீதான் அன்பு மிகுதியால் இவரை படைப்புகளை மேலோட்டமாகப் பார்த்து பாரட்டி விட்டு விலகி விடுகின்றன. அல்லது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். சரக்கு உள்ளே வேலை செய்யும் வரை ' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்' இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் நிறைய குட்டிப் பாரதிகள் உள்ளனர். இவர்களின் படைப்புகள் அந்தந்த வட்டத்தில் சிறப்பானதாக கொள்ளப் படுகிறது. ஒரு வட்டம் இன்னொரு வட்டத்திற்கு வாசகராகவும் இல்லை ஒரு வட்டத்தில் உள்ளவர் இன்னொரு வட்டத்தவரை மதித்து ஏற்றுக் கொள்வதும் இல்லை.


உங்கள் கேள்விக்குப் பதில்:

பாரதியும், பாரதிதாசனையும் விடவும் சமூக அக்கரை கொண்டு எழுச்சி மிக்க படைப்புகளைத் தரும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். வாருங்கள் அவர்களை நேரில் காட்டுகிறேன்.