
மிளகுரசம் இல்லையென்றால்
சாப்பிடமாட்டாய்
குறைதலும் மிகுதலும்
குற்றமே உன்னகராதியில்
அடுப்பு தெய்வத்தை
அன்றாடம் வேண்டியே
சமைக்கத் துவங்குவேன்
குறைசொல்லிக் கொண்டே
கும்பி நிறைக்கிறாய்
கையை நக்குகிறாய்
ரசம் தெளித்து
வசை மொழிவாய்
தினம் தினம்
ஊறுகாய் தொட்டு
உண்டு படுக்குமென்
கால் நக்கி களிப்பாய்
மதியழகன் சுப்பையா
மும்பை
1 comment:
புரிஞ்ச மாதிரியும் இருக்கு . புரியாத மாதிரியும் இருக்கு :) பின் நவீனத்துவக் கவிதையா :)
Post a Comment