Wednesday, November 08, 2006

அவரவர் பாக்கியம்

இந்தியில்: ஜைனேந்திர குமார் தமிழில்: மதியழகன் சுப்பையா

வெகுநேரம் சுற்றித் திரிந்தபின் சாலையின் ஓரத்தில் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டோம்.
நைனிதானின் மாலை கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கிக் கொண்டிருந்தது. பட்டு நூல் பந்தைப் போலும் நீராவியைப் போலும் மேகம் எங்கள் தலைக்கு மேலே நீற்காமல் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மெல்லிய ஒளியில் மற்றும் இருளில் வண்ணம் பூசிக் கொண்டு நீலமாகவும் வெள்ளையாகவும் மாறிக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்தில் சூரிய ஒளி வெளிப்பட்டும் கொண்டிருந்தது. அவைகள் நம்முடன் விளையாட வேண்டும் விருப்பம் தெரிவிப்பதாய் இருந்தது.
எங்களுக்குப் பின்னால் போலோ விளையாட்டு மைதானம் இருந்தது. எதிரில் வெள்ளையர்களுக்கான மனமகிழ் அரங்கம் இருந்தது. அங்கும் மேற்கத்திய மெல்லிசை ஒளித்துக் கொண்டிருந்தது. மேலும் மிக அருகிலேயே சுரங்களின் மென்மையைப் போல் இருந்தது நைனிதால்.
நைனிதாலில் தனது பறக்கும் வெள்ளை அலைகள் ஓரிரு வெள்ளையர்களை சுமந்து கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. ஒரு சில வெள்ளையர்கள் தங்கள் முன் ளுக்கொரு தேவியர்களை வைத்துக் கொண்டு ஊசி போன்ற முகம் கொண்ட படகுகளை போட்டிக்கு ஓட்டுவதைப் போல் வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தனர். கரையோரங்களில் சிலர் தங்கள் தூண்டில்களை நீரில் போட்டபடி நம்பிக்கையோடும், ஒருமுனைப்போடும், தனியாகவும் அமர்ந்தபடி மீன் சிக்க வேண்டி தவமிருந்து கொண்டிருதனர்.
பின்னால் , போலோ மைதானத்தில் சிறுவர்கள் கூச்சலிட்டபடி ஹாக்கி விளையாண்டு கொண்டிருந்தார்கள். உரக்கக் கத்துதல், அடிதடி, கெட்டவார்த்தைகள் மற்றும் சாபம் கினவும் விளையாட்டின் அங்கமாகி விட்டிருந்தது. தங்களுக்கு தெரிந்த விளையாட்டை ஒரே மூச்சில் தங்கள் மனம், உடல் என பலத்தைக் கூட்டி தங்களுக்கு தெரிந்த வித்தைகளை காட்டி அன்றே விளையாட்டை விளையாடி முடித்து விட திட்டமிட்டுருந்தார்கள். அவர்களுக்கு எதிர்காலம் பற்றி அக்கரையில்லை. வருங்காலம் பற்றி எந்தக் கவலையும் இல்லை. அவர்கள் நிகழ்காலத்தை மற்றுமே உணரும் ஜீவன்களாக இருந்தனர். அவர்கள் வார்த்தைகளின் முழுமையான உண்மையோடு வாழ்ந்து கொண்டிருந்தனர்.
சாலையில் ண்கள் மற்றும் பெண்கள் தொடர்ந்து வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். அவர்களின் இந்த நடை பயணத்திற்கு திசையும் இல்லை இலக்கும் இல்லை. இந்த மக்கள் பிரவாகம் எங்கிருந்து வந்தது. எங்கு செல்கிறது, யாரால் சொல்ல முடியும்? எல்லா வயதைச் சேர்ந்தவர்களும், எல்லா வகையைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனர். அவர்களைப் பார்க்கும் போது மனிதர்களின் சந்தையில் அலங்கரிக்கப் பட்ட மாதிரிகளாக உலாவர கிளம்பி விட்டவர்களைப் போல் நடந்து கொண்டிருந்தனர்.
அதிகார-கர்வத்தில் திளைத்த ங்கிலேயர்களும் இருந்தார்கள். அவர்கள் அலங்காரம் செய்யப் பட்ட குதிரைகளைப் பிடித்தபடி மலைவாழ் மக்கள் ங்கியேர்களுக்கு விசுவாசம் பாராட்டினார்கள். இம்மக்கள் தங்களின் பெருமையையும் மரியாதையையும் சிதைத்து சூன்யமாக்கி விட்டிருந்தார்கள். மேலும் மிகச் சிறப்பாக வாலாட்டவும் கற்றுக் கொண்டார்கள்.
ஓடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், சேட்டைகள் செய்து கொண்டும் சிகப்பாக இருந்தார்கள் ங்கிலேயக் குழந்தைகள். மஞ்சளான கண்களை அகல விரித்துக் கொண்டு தந்தையின் கைவிரல்களை பிடித்தபடி இந்தியக் குழந்தைகளும் நடந்து கொண்டிருந்தது.
ங்கிலேயர்கள் அவர்களின் குழந்தைகளுடன் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஓடிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தார்கள். னால் இந்திய தந்தைகள் முன்னோர்களை தங்களின் நான்கு புறங்களிலும் சுற்றிக் கொண்டும் தங்களின் செல்வ செழிப்புகளை காட்டிக் கொண்டும் நடந்து கொண்டிருந்தார்கள்.
ங்கிலேய அழகிகள் இருந்தார்கள். அவர்கள் மெதுவாக நடக்கவில்லை, வேகமாக நடந்தார்கள். அவர்கள் நடக்காத போது கலைப்பை உணர்ந்தார்கள். உரக்கச் சிரிக்கவில்லை என்றால் சிரமமாக இருந்தது. உடற்பயிற்சி என்ற பெயரில் உட்கார்ந்து கொள்ளலாம். மேலும் குதிரையுடன் சேர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் அவர்கள் ஏதேனும் இந்தியர்களை மோதி விட்டுப் போகலாம். அவர்கள் இரண்டிரண்டாக மூன்றுமூன்றாக நான்குநான்காக என சிறு குழுக்களைப் போல் சந்தேகமின்றி, கவலையின்றி இந்த பிரவாகத்தில் தங்கள் இலக்குகளை தெரிந்தவர்களைப் போல் நடந்து கொண்டிருந்தார்கள். னால் பாரதத்தின் குலலட்சுமிகள் சாலையில் மிக ஓரத்தில் தங்கள் சேலை முந்தானைகளை இறுகப் பிடித்துக் கொண்டு மிகத் தயக்கமாகவும் சேலையின் பலப்பல மடிப்புகளில் தங்களைப் பொதிந்து கொண்டு, நாணம், பெண்மை மற்றும் பாரதத்தின் பெருமைகளை தங்கள் அசைவுகளில் மறைத்துக் கொண்டு தயங்கித் தயங்கி நிலத்தில் கண்களை புதைத்தபடி ஓவ்வொரு அடியாக நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
இவைகளோடு சேர்த்து பாரதத்தின் மற்றொரு உதாரணமும் அங்கு இருந்தது. தங்கள் கருமையை சுரண்டி சுரண்டி அழித்து விட சை கொண்டிருக்கும் ங்கிலேய மோகம் கொண்ட புருஷோத்தர்களும் இருந்தார்கள். இவர்கள் இந்தியர்களைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டும் ங்கிலேயர்களைக் கண்டால் தங்கள் பார்வைகளை பாத விரிப்பாக்கி வாலாட்ட துவங்கி விடுவார்கள். பாரத பூமியின் மிடுக்கை மிதித்து சிதைத்தபடி நடப்பதற்கு அதிகாரம் பெற்றவர்களைப் போல் விரைப்பாக நடந்து கொண்டிருந்தார்கள்.

********************************

நேரம் கடந்து கொண்டிருக்கிறது. இருள் அடர்த்தியாகி விட்டிருந்தது. மேகம் வெள்ளையாகி உறைந்து போனது. மனிதர்களின் அந்தக் கும்பள்கள் மற்றும் குழுக்கள் மெல்ல மெல்ல சிதரி காணாமல் போய் விட்டது. இப்பொழுது சாலையில் ஒருவர் இருவர் என குடைகளைப் பிடித்தபடி போய்க் கொண்டிருந்தார்கள். நாங்கள் அங்கேயேதான் உட்கார்ந்து இருந்தோம். குளிர் அதிகமாவதை உணர்ந்தோம். எங்களின் ஓவர்கோட் நனைந்து விட்டிருந்தது. பின்னால் திரும்பி பார்த்தோம் அந்த புல்வெளி பனிக்கட்டியால் செய்யப் பட்ட போர்வையைப் போல் சலனமின்றி கிடந்தது.
எங்கும் அமைதி அப்பியிருந்தது. ஏரியின் கரைகளில் மின்விளக்குகளின் வெளிச்சம் தீபமாலிகையைப் போல் மின்னிக் கொண்டிருந்தது. இந்த மினுமினுப்பு இரண்டு மைல் தொலைவுக்கு பரந்துள்ள இயற்கை நீர் கண்ணாடியில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. அசைந்து கொண்டிருக்கும் இந்த நீர்க் கண்ணாடியில் அலைகள் அசைந்து கொண்டு தன்னில் தெரியும் மின்விளக்கு பிரதிபலிப்புகளை நூறு மடங்காக, யிரம் மடங்காக க்கி அவற்றில் ஒளியை இன்னும் பெரிதாக்கிக் காட்டியது. சிதரியோடும் ஒளித் துண்டுகளை சேகரிக்க இந்த அலைகள் ஓடுவது போலும் காட்சி அளித்தது. மலையின் மேல் தெரிந்த வெளிச்சம் விண்மீன்களைப் போல் காட்சியளித்தது.
இவற்றையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு அடர்த்தியான திரை வந்து மறைத்துக் கொண்டது. வெளிச்சம் மொத்தமாய் செத்துப் போனது போல் இருந்தது. மினுமினுப்பு பொசுக்கென மறைந்து அணைந்து போனது. பேய்களைப் போன்ற அந்த பெரிய பெரிய மலைகளும் இந்த வெள்ளைத் திரைக்குப் பின்னால் மறைந்து விட்டது. அருகில் இருக்கும் பொருட்கள் கூட கண்ணுக்கு தெரியவில்லை. இடந்த அடர்ந்த பேய் பிரலயம் போல் இருந்தது. எல்லாமும் இந்த அடர்ந்த கடுமையான வெண்மையில் மறைந்து போனது. ஒரு மகாசமுத்திரத்தின் நீர் பொங்கி வந்து நில உலகின் அழகை மூழ்கடித்துக் கொண்டது போல் இருந்தது. கீழே மேலே அக்கம்பக்கம் என எல்லா இடங்களிலும் அந்த சூன்யமான வெண்மை படர்ந்து இருந்தது.
இவ்வாறான அடர்ந்த பனியை நாங்கள் இதுவரைக் கண்டதில்லை. பனி டப்டப்பென பொழிந்து கொண்டிருந்தது.
சாலையில் மனித ரவாரமே இல்லாமல் அமைதியாக இருந்தது. இது வரை இருந்த மனித பிரவாகம் எந்த கூட்டில் போய் அடந்ததோ தெரியவில்லை.
தொலைவில் எங்கோ இடுகாட்டில் இருந்து வருவது போல் அந்த சலனமில்லாத வேளையில் எங்கிருந்தோ டன் டன் என பதினோர் முறை மணி ஒலித்தது.
நாங்கள் அவரவர் ஹொட்டல்களுக்கு கிளம்பி விட்டோம்.

*******************************************

வழியில் நண்பர்கள் இருவர் தங்கியிருந்த ஹோட்டல்கள் இருந்தது. அவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள், விடுப்பு எடுத்துக் கொண்டு இங்கு வந்திருந்தார்கள். நாங்கள் இருவரும் முன்னுக்கு நடந்தோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் இன்னும் கொஞ்சம் தொலைவில் இருந்தது.
ஏரியின் கரையோரமாக நாங்கள் நடந்து போய்க் கொண்டிருந்தோம். எங்களின் ஓவர்கோட் நனைந்து போய் விட்டிருந்தது. அங்கு மழை பெய்யவில்லைதான் னால் மேலே கீழே என காற்று முழுவதும் மழையால் நிரம்பி இருந்தது. ஓவர்கோட்டுக்கு மேலே ஒரு போர்வை இருந்தால் நலமாக இருக்கும் என்பது போல் குளிரடித்துக் கொண்டிருந்தது.
வழியில் ஏறிக் கரையோரத்திரத்தில் ஒரு பெஞ்ச் கிடந்தது. என் மனது கொஞ்சம் கவலைப் பட்டுக் கொண்டிருந்தது. வெகு விரைவாக ஹோட்டல் சென்று இந்த நனைந்துபோன டைகளிடமிருந்து விடுதலை பெற்றுக் கொண்டு, வெதுவெதுப்பான படுக்கையில் மறைந்து கொள்ள வேண்டுமென நினைத்தபடி நடந்தேன். னால் உடனிருக்கும் நண்பரின் விருப்பம் என்னவோ தெரியவில்லை. அவருக்கு இந்த இரவு உலா எப்போது சலிப்புத் தட்டுமோ தெரியவில்லை. அது பற்றி எந்த உறுதியும் இல்லை. அவர் மேலும் என்ன செய்வார் எங்கு அழைப்பார் என்பது பற்றி கற்பனை செய்ய முடியவில்லைதான். இதற்குள் அவர் ''வாங்க, இப்படி கொஞ்சம் உட்காரலாம்'' என்றார்.
அதிகாலை சரியாக ஒரு மணி, கொட்டும் தீவிரப் பனியில் ஏறிக் கரையோரம் நனைந்த, ஐஸ் கட்டி போல் குளிர்ந்த இரும்பு பெஞ்சில் அமர்ந்தோம்.
ஐந்து- பத்து- பதினைந்து நிமிடங்கள் கி விட்டது. எனது நண்பருக்கு எழுந்திரிக்கும் எண்ணம் இல்லை போல் தெரிந்தது. நான் குளிரில் நடுங்கும் குரலுடன்
'' கிளம்புங்க, போகலாம்......'' என்றேன்.
எனது கையைப் பிடித்து கொஞ்சம் உட்காரும்படி செய்கை காட்டி இருத்தி விட்டார். வேறு வழியில்லாமல் உட்கார்ந்த் விட்டேன். விருப்பமில்லாமல் உட்கார்ந்து இருக்கும்படி கி விட்டது. இதிலிருந்து விடுதலை எளிதல்ல என்பது புரிந்தது. கொஞ்சம் உட்காருங்கள் என்ற கொஞ்சம் கொஞ்சமல்ல.
வெறுமையாக இப்படி உட்கார்ந்து இருந்து சலிப்பும் கடுப்பும் வந்தது. திடீரென நண்பர் ''அது என்னவென்றுப் பாருங்கள்?'' என்றார்.
வெண்மை பனிமூட்டத்தில் கைகளும் கருத்த முகமுமாக ஒரு உருவம் நெருங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. ''யாராவது இருப்பாங்க'' என்றேன் நான்.
மூன்று கஜம் தொலைவில் அந்த உருவம் தெரிந்தது. ஒரு சிறுவன் நீளமான தலைமுடியை விரித்துப் போட்டபடி நடந்து கொண்டிருந்தான். வெறும் கால்கள், வெறும் தலை. ஒரு அழுக்கான சட்டை அணிந்தபடி நடந்து கொண்டிருந்தான். அவன் தடுமாறியபடி கால்கள் ஒருபுறமும் அவன் ஒருபுறமும் போய்க் கொண்டிருந்தார்கள். அவன் எங்கே போக விரும்புகிறான் என்றும் தெரியவில்லை. அவனது கால்களில் முன்னும் இல்லை பின்னும் இல்லை இடதும் இல்லை வலதும் இல்லை.
அருகில் இருந்த தெரு விளக்கின் சிறிய ஒளியில் அவனை பார்க்க முடிந்தது. அவன் ஒரு பத்து வயது சிறுவன். வெள்ளை நிறமாக இருக்கிறான். னால் கடுமையாக அழுக்குப் படிந்து உள்ள காரணத்தால் கருத்துக் காணப் படுகிறான். கண்கள் பெரிதாக இருந்தது னால் சோர்ந்து இருந்தது. நெற்றி இப்பொழுதே சுருக்கம் கண்டு விட்டது போல் இருந்தது.
அவனால் எங்களைப் பார்க்க முடியவில்லை.அவன் எதையுமே பார்க்கவில்லை. கீழேயுள்ள பூமி மட்டுமல்லாது நாலாபுறமும் சூழ்ந்திருக்கும் பனிமூட்டம் என எதையும் அவன் பார்க்கவில்லை. எதிரில் இருக்கும் ஏறி மற்றைய இந்த உலகம் என அவன் எதையும் பார்க்கவில்லை. அவன் தனக்கும் மிக அருகாமையில் உள்ளவைகளை மட்டும் உணர்ந்து கொண்டிருந்தான்.
நண்பர் ''ஏ....'' என சத்தமிட்டு அழைத்தார்.
விழித்துக் கொண்டு எழுந்தவனைப் போல் திடுக்கிட்டான். பின் எங்களை நோக்கி வந்தான்.
'' நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?''
அவன் தனது சோர்ந்து போன விழிகளை அகல விரித்தான்.
'' உலகமே தூங்கிக் கிடக்கிறது, நீ மட்டும் ஏன் இப்படி அலைகிறாய்?''
சிறுவன் மௌனமான முகத்துடன் நின்றான். னால் அவன் பேச தயாராய் இருப்பது தெரிந்தது.
'' எங்கே தூங்குவாய்?''
'' இங்கேதான் எங்கையாவது''
''நேற்று எங்கே தூங்கினாய்?''
''கடையில் தூங்கினேன்''
'' இன்னைக்கு ஏன் அங்கே போகவில்லை?''
'' வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள்''
'' என்ன வேலைப் பார்த்தாய்?''
'' எல்லா வேலையும்தான். ஒரு ரூபாயும் எச்சில் உணவும் கிடைக்கும்''
'' திரும்பவும் வேலை பார்ப்பாயா?''
''மாம்''
''வெளியே வருகிறாயா?''
''ஹாங்....'''
'' இன்னைக்கு என்ன சாப்பிட்டாய்?''
''எதுவும் இல்லை''
'' இப்ப சாப்பாடு கிடைக்குமா?''
'' இல்லை, கிடைக்காது''
''இப்படியே தூங்கிடுவியா''
''மாம்.....''
''எங்கே படுப்பாய்?''
'' இங்கதான் எங்கையாவது..''
'' இந்த துணியோடதான் படுத்துக்குவியா?''
சிறுவன் மீண்டும் கண்களை அகல விரித்தபடி அமைதியாக நின்றான். '' இது என்ன முட்டாள்தனமான கேள்வி'' என்று அவனது கண்கள் கேட்பது போல் இருந்தது.
''அம்மா-அப்பா இருக்காங்களா?''
''இருக்காங்க''
''எங்கே?''
'' பதினைஞ்சு மைல் தொலைவில் இருக்கும் கிராமத்தில்''
''நீ ஓடி வந்திட்டாயா?''
''மாம்''
''ஏன்?''
''எனக்கு தம்பி தங்கைகள் இருக்கிறார்கள்-அதனால்தான் ஓடி வந்து விட்டேன். அங்கே வேலையும் இல்லை சாப்பாடும் இல்லை. அப்பா பட்டினியாக இருப்பார் எங்களை எல்லாம் அடிப்பார். அம்மாவும் பட்டினி கிடப்பாள் அழுது கொண்டிருப்பாள். அதனால்தான் ஓடி வந்து விட்டேன். என்னுடன் ஒரு கூட்டாளியும் வந்திருக்கிறான். எங்கள் ஊரைச் சேர்ந்தவன்தான். என்னைவிட பெரியவன். நாங்கள் இருவரும் சேர்ந்துதான் வந்தோம். அவன் இப்பொழுது இல்லை''
'' எங்கே போயிட்டான்''
''செத்துப் போயிட்டான்''
இந்த இளம் வயதில் இவன் மரணத்தை இவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டது எனக்கு வியப்பாக இருந்தது. அவனது நிலையைப் பார்த்து மனது கஷ்டப்பட்டது.
'' செத்துப் போயிட்டானா?'' என்று கேட்டுவிட்டு அமைதியானேன்.
'' சரி, எங்களுடன் வா''
என்றதும் அவன் எங்களுடன் வந்து விட்டான். நாங்கள் வழக்கறிஞர் நண்பர்கள் தங்கிய ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.
'' வக்கில் ஐயா''
வழக்கறிஞர் நண்பர்கள் இருவரும் ஹோட்டலின் மாடி அறையில் இருந்து இறங்கி வந்தார்கள். காஷ்மீரி சால்வைப் போர்த்தி இருந்தார்கள். சாக்ஸ் மாட்டிய கால்களில் செருப்பு போட்டிருந்தார்கள். குரலில் மெல்லிய நடுக்கம் இருந்தது. மேலும் சிடுசிடுப்பும் இருந்தது.
''ஓ.. ஹோ, நீங்கதானா! என்ன சொல்லுங்க?''
'' உங்களுக்கு வேலைக்காரன் தேவைப் பட்டது இல்லையா? பாருங்க இந்தப் பையன் போதுமா?''
'' எங்கிருந்து கூட்டி வந்தீர்கள், இவனை உங்களுக்குத் தெரியுமா?''
'' எனக்குத் தெரியும். இவன் உங்களை ஏமாற்ற மாட்டான்''
'' யப்பா, இந்த மலையில இருக்கிறவங்க படு மோசமானவங்க. சின்ன குழந்தைகள் கூட சரியான திருடங்களா இருப்பாங்க. ஒன்னும் தெரியாத ளாக இருக்கீங்களே. ' இந்தா வேலைக்காரன்னுட்டு வந்து நிக்கிறீங்க' இவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. எங்கிருந்து இவனை புடிச்சீங்க''
'' ஐய்யா நம்புங்க, நீங்க நினைக்கிறமாதிரி இவன் இல்லை. இவன் மிகவும் நல்லவன்''
' அட என்னைய்யா, முன்ன பின்ன தெரியாதவன வேலைக்கு சேர்த்துக்கிட்டா மறுநாளே அவன் இருக்கிறத எல்லாம் சுருட்டிக்கிட்டு ஓடிட்டா என்ன பண்ணுறது?''
'' ஐய்யா உங்களை எப்படி நம்ப வைக்கிறதுன்னே தெரியல''
'' என்னத்தை நம்புறது.? என்னைய்ய விளையாடுறியா. போய்யா போ. எங்களை நிம்மதியா தூங்க விடு''
படபடவென பேசி விட்டு ஒரு நாளைக்கு நான்கு ரூபாய் வாடகையில் அவர்கள் தங்கியிருக்கும் அறையின் வெதுவெதுப்பான படுக்கைக்குப் போய் விட்டார்கள்.
வழக்கறிஞர் நண்பர்கள் மேலே சென்றதும் ஹோட்டலுக்கு வெளியே வந்து எனது நண்பன் தனது சட்டைப் பையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் நிராசையான முகத்துடன் பையிலிருந்து கைகளை வெளியே எடுத்தபடி என்னைப் பார்த்தார்.
'' என்ன யிட்டு?'' என்று நான் கேட்டேன்.
'' இவனுக்கு சாப்பிட எதாவது கொடுக்கலாம் என்று விரும்பினேன். னால் எல்லாம் பத்து ரூபாயாக இருக்கிறது'' என்று ங்கிலத்தில் சொன்னான் நண்பன்.
'' என்னிடமும் நோட்டுகளாகத்தான் இருக்கும் சில்லரை இல்லை, இரு பார்க்கிறேன்''
உண்மையில் எனது பையிலும் ரூபாய் நோட்டுகள் தான் இருந்தது. நாங்கள் இருவரும் ங்கிலத்திலேயே பேசிக் கொண்டோம். அந்தச் சிறுவனின் பற்கள் கடகடவென அடித்துக் கொண்டது கேட்டது. கடுமையான பனி பெய்து கொண்டிருந்தது.
''அப்புறம்?'' நண்பன் கேட்டான்.
'' பத்து ரூபாய் நோட்டையே கொடுத்து விடலாம்'' என்றேன் நான். அதிர்ச்சியடைந்தவனைப் போல் நண்பன் எனது முகத்தைப் பார்த்தான். '' யப்பா, நம்ம பட்ஜெட் கெட்டுப் போயிடும். இதயத்தில் எவ்வளவு இரக்கம் இருக்கிறதோ அந்த அளவுக்கு நம்மிடம் பணம் இல்லையே'' என்றான்.
'' அப்ப போகட்டும் விடு, இந்த அளவுக்கு இரக்கம் காட்டினதே பெரிய விஷயம்தான். '' என்றேன். நண்பன் சற்று நேரம் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். பின் சிறுவனைப் பார்த்து அவனிடம் '' யப்பா, இன்னைக்கு இதுக்கு மேல எதுவும் காது. நாளைக்கு பார்க்கலாம். ஹோட்டம் 'டீ-பவ்'' தெரியுமா? அங்க காலையில பத்து மணிக்கு வந்து எங்களை பார்'' என்றான்.
'' கண்டிப்பா வர்றேன், எதாவது வேலை கொடுப்பீங்களா ஐய்யா?'' சிறுவனின் வார்த்தைகள் நடுங்கி விழுந்தது.
'' மாம், கண்டிப்பாக தேடித் தருகிறேன்'' என்றான் நண்பன்
''அப்படின்னா நான் போகட்டுமா ஐயா '' என்று நிராசையுடன் சிறுவன் கேட்டான்.
''ம்'' என்று கூறிவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டபடி '' இப்பொழுது எங்கே போவாய்?'' நண்பன் கேட்டான்.
'' இங்கதான் எங்கையாவது. மரத்தடியில், இரும்பு பெஞ்சில் அல்லது எதாவது கடைத் திண்ணையில் '' என்றான் சிறுவன்.
சிறுவன் கிளம்பினான். சற்று நின்றான். காற்றில் எதையோ கைகளால் தேடினான். பின் ஒரு நிதானமான வேகத்துடன் நடந்து பனி மூட்டத்தில் கலந்து விட்டான். நாங்களும் ஹோட்டலை நோக்கி நடக்கலானோம். காற்று கனமாக இருந்தது. எங்கள் ஓவர் கோட்டுகளை துளைத்துக் கொண்டு உடம்பில் குத்தியது குளிர்.
கைகளை இருக்கிக் கட்டிக் கொண்டு நண்பன் '' கடுமையான குளிராக இருக்கிறது. அந்தப் பையனிடம் துணியே இல்லை பாவம்..''
''இதுதான்பா உலகம்!, வா முதலில் படுக்கையில் போய் நல்ல போர்த்திக் கொள்ளலாம் கொஞ்சம் சூடு கிடைச்சதும் உலகத்தைப் பற்றி கவலைப்படலாம்'' என்று நான் சுயநலத்தின் தத்துவத்தை சொன்னேன்.
மிகுந்த கவலையுடன் '' சுயநலம்..... தான் மட்டுமே வாழ நினைக்கும் குணம், கொடுமைன்னும் சொல்லலாம் ஈரமில்லாத்தன்மை....'' இப்படி உளரிக் கொண்டிருந்தான்.

***********************************************
மறுநாள் நைனிதால்- என்ற அந்த சொர்க்கத்தில் அடிமை ஒருவனின் செல்லப் பிள்ளையான அந்த சிறுவன் சொன்ன நேரத்தில் நாங்கள் தங்கியிருந்த 'ஹோட்டம் டீ-பவ்'க்கு வரவில்லை. நாங்கள் எங்கள் நைனிதால் உல்லாச பயணத்தை மகிழ்ச்சியுடன் முடித்துக் கொண்டு கிழம்பினோம். அந்த சிறுவனின் வேலைக்கான சை பற்றிய எந்த கவலையும் இல்லாமல் இருந்தோம்.
வண்டியில் ஏறி அமர்ந்த மாத்திரத்தில் அந்த செய்தி கிடைத்தது. கடந்த நாள் இரவு சாலையோரம் இருந்த பெஞ்சில் படுத்தபடி ஒரு மலைவாழ் சிறுவன் செத்துப் போய் விட்டதாக இருந்தது அந்த செய்தி.
செத்துப்போவதற்கு அவனுக்கு அந்த இடம், அந்த பத்து வயது மற்றும் அந்த கிழிந்து போன சட்டை போதுமானதாக இருந்ததா? மனித சமுதாயம் அவனுக்கு இவ்வளவு தான் வாழ்க்கையை கொடுத்ததா?
அவனது முகத்தில், மார்பில், கைகளில் மற்றும் கால்களில் மெல்லிய பனிக்கட்டி போர்வையைப் போல் உறைந்து இருந்ததாக பார்த்தவர்கள் சொன்னார்கள். இந்த சுயநலமான உலகில் அவனுக்கு சாவு கோடி போட ள் இருக்காது என்று இயற்கையே பனியால் கோடி போர்த்தி விட்டது.
எல்லோரும் ஒட்டுமொத்தமாக கேட்டுக் கொண்டதும் சொல்லிக் கொண்தும் இதுதான் '' எல்லாம் அவரவர் பாக்கியம்''

*************************************************






ஜைனேந்திர குமார்: (1905-1988) இந்தி இலக்கி உலகில் கதைகளுக்கு ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்தவர்களில் ஜைனேந்திரகுமாரின் பங்கு குறிப்பிடத் தக்கது. சிறுகதைகள் மட்டுமல்லாமல் நாவல்களும் எழுதி உள்ளார். மனித மனங்களின் பலகீனங்களையும் அவர்தம் எதார்த்த செயல்பாடுகளையும் தனது கதைகளில் சிறப்பாக சொல்லி இருக்கிறார். நடுத்தர வர்க்கத்தின் பணக் கஷ்டம் மற்றும் அவர்களது சைகள் என இரண்டுக்கும் உள்ள இடைவெளியை தனது பெரும்பாலான கதைகளில் வெளிப் படுத்தி உள்ளார். இதனால் இவரது கதைகளைப் படிக்கும் பொது அவை நம் வாழ்வின் அங்கமாக நிகழ்வாக உணர முடிகிறது. மேலும் கதையை சொல்லும் விதம் அவை நம் முன் காட்சியாக மட்டுமல்லாமல் கதைச் சூழலில் ஒரு மூலையில் நாமும் நின்று கொண்டிருப்பது போல் உணரும்படியாக இருக்கிறது இவரது கதைகள்.
இவரது கதைகளைப் படிக்கும் எவரும் மனித உணர்வுகளின் ழம் வரை போய் எட்டிப் பார்த்து வருவதை கட்டாயம் உணர்வார்கள். கற்பனை கலக்காமல் நிகழ்ந்து கொண்டிருப்பதை படம் பிடித்து ஓட்டிக் காட்டுவது போல் இருக்கும் இவரது கதைகள். மொழியில் ஒரு மாறு பட்ட நடையை பயன் படுத்தினார். வாக்கியங்களை மிக நீளமாக அமைப்பது இவருடைய சிறப்பு.
பல பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ள இவரது படைப்புகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்டுள்ளது.
இவரது படைப்புகளில் 'முக்திபோத்' 'பரக்' ' தியாக்பத்ர' 'கல்யாணி' ' சுனிதா' ' விவர்த்' ' வியாதித்' 'ஜெயவர்தன்' கிய நாவல்கள் பிரபலமானவை. மேலும் 'சமய அவுர் ஹம்' ' பூர்வோதயா' 'சோச் விசார்' 'சாகித்ய கா ஷ்ரேய அவுர் பிரேய' என்ற கட்டுரைத் தொகுப்புகளும் ஜைனேந்திரரின் சிறுகதைகள் தொகுப்பு-1, 2 கியனவும் குறிப்பிடும் படியான நூல்களாகும்.
இவர் கதைகளில் அறிமுகமாகும் கதாபாத்திரங்கள் நம்முடம் பேசிக் கொண்டிருப்பதை போன்றும் அவர்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருப்பது போலும் உணர்வதை தவிர்க்க முடியாது. இந்தி இலக்கிய உலகில் இவர் பிடித்த இடம் மகத்தானது.
------------------------------------------------------------------------------------

No comments: