Thursday, November 23, 2006

புதன்கிழமை

இந்தியில்: குருமித் பேடி
தமிழில்: மதியழகன் சுப்பையா

டெலிபோன் மணி ஒலித்ததும் மிக அதீரத்தோடு ரிசிவரை எடுத்தாள். யார் போன் செய்திருப்பார்கள் என்று அவளுக்கு முன்னதாகவே தெரிந்து இருந்தது. ''சாரி, சர்! நீங்கள் எனக்காக காத்துக் கொண்டிருப்பீர்கள். னால் நான் இங்கு கடுமையான வேலையில் சிக்கிக் கொண்டேன். நீங்கள் மாலை எத்தனை மணி வரை அலுவலகத்தில் இருப்பீர்கள்? என்னால் மாலை நாலரை மணிக்கு வர இயலும்.'' என்று ரிசிவரில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
''நான் மாலை ஐந்தேகால் ஐந்தரை மணி வரை அலுவலகத்தில் தான் இருப்பேன். இதற்கிடையில் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.'' என்றபடி ரிசிவரை வைக்கையில் அவனது உதடுகளில் புன்னகை பூத்துக் கொண்டது. அவன் சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். அப்பொழுது மதியம் இரண்டு மணியாக இருந்தது. நாலரை மணிக்கு இன்னும் இரண்டரை மணி நேரம் இருந்தது. அவள் வேலைப் பார்க்கும் இடத்திலிருந்து அவனது அலுவலகத்திற்கு நடந்து வருவதென்றால் அதிகப்பட்சமாக பத்து நிமிடங்கள் கலாம். 'அவளது அலுவலகத்திலிருந்து நாலரை மணிக்கு கிளம்பினாலும் இங்கே நான்கே முக்கால் மணிக்கு வந்து சேர்ந்து விடலாம்.' அவன் மணிக் கணக்குகளை மனதில் பார்த்துக் கொண்டான்.
அவன் மணியடித்து பியுன் ஹெம்ராஜ்ஜை அழைத்தான். அவனிடம் நூறு ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு ''என்னைச் சந்திக்க ஒருவர் வருகிறார். நீ நாலரை மணிக்குப் போய் கோல்டிரிங்க் வாங்கி வா, அப்படியே நல்ல பிஸ்கட்டும் வாங்கி வா'' என்றான். ''சர்! என்ன கோல்டிரிங்க் வாங்கி வரட்டும்?'' அவன் ரூபாயை கையில் வாங்கிக் கொண்டு கேட்டான். ''பெப்சி வாங்கிக்கோ இல்லையென்றால் லிம்கா வாங்கிக்கொள். அதைக் குடிச்சதும் தொண்டையில் இருந்து புகை கிளம்ப வேண்டாமா?'' பியுனை உற்சாகப் படுத்த வேடிக்கை பேசினான்.
ஹெம்ராஜ் வெளியே போனதும் கேஷியர் உள்ளே நுழைந்தார். ''சர்! நான் திங்கள் கிழமை லீவு எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் இந்த பில்களில் கையெழுத்து போட்டுத் தந்தால் கஷ்மிரா திங்களன்று வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொள்வான். டேக்சிகாரனுக்கும் பேமென்ட் கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்களது போனும் வரத் துவங்கி விட்டது. உங்களுக்கும் கொஞ்சம் பேமென்ட் இருக்கிறது'' என்றபடி பில்கள் அடங்கிய பைலை அவன் முன் வைத்தான்.
அவன் கண்களை மூடிக் கொண்டு பில்களில் கையெழுத்திட துவங்கினான். இன்று அவன் அனைத்து வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக் கொள்ள விரும்பினான். காரணம் மாலை நாலரை மணிக்குள் அவன் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு சுமையின்றி இருக்க வேண்டும். அந்த நேரத்தில் அவனுக்கு முன் எந்த பைலும் கொண்டுவரப் பட்டுவிடக் கூடாது என எண்ணினான். இதற்கிடையில் தொலைபேசியின் மணி இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. அதிகமாக பத்திரிக்கைகாரர்களின் அழைப்பாக இருந்தது. அவர்கள் அனைவரும் இன்று பிரஸ்நோட் என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்பதே கேள்வியாக இருந்தது. சில போன் அழைப்புகள் ஒன்றுக்கும் உதவாததாக இருந்தது. சில அழைப்புகளின் போது இவன் ''ஹலோ'' என்று சொன்னதும் எதிர்முனையில் தொடர்பை துண்டித்துக் கொள்ளப் பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு பெண் இவனது குரலைக் கேட்பதற்காக மட்டுமே இவனுக்கு போன் செய்வதாக சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அது முதல் அலுவலகத்திற்கு வரும் பிளாங்க் கால்கள் அனைத்தும் அவள் செய்வதாகவே பட்டது. அந்தப்பெண் இதனை எத்தனைத் தெளிவாக சொல்லி விட்டாள். அவனது குரலை கேட்பதற்காக மட்டுமே அவனுக்கு போன் செய்வதாக மிக அழுத்தம் திருத்தமாகச் சொன்னாலே. இந்த விஷயத்தை நினைத்து அவன் பலமுறை மண்டை உடைத்திருக்கிறான். னால் இன்று கேள்விச் சூறாவளியில் சிக்க அவன் விரும்பவில்லை.
இன்று அவன் கடிகார முட்கள் நாலரை மணியை எப்பொழுது தொடும் என்ற கடுமையான எதிர்பார்ப்பு இருந்தது. மிகச் சின்னச் சின்ன இடைவெளியில் சுவற்றில் தொங்கும் கடிகாரத்தினை நோக்கி அவன் பார்வை எழுந்து விடும். இன்று வினாடி காட்டும் முள் மெதுவாக சுற்றுவது போல் அவனுக்கு சந்தேகமாக இருந்தது. இவ்வாறு சந்தேகம் எழும் போதெல்லாம் சுவர் கடிகாரத்துடன் தனது கைக் கடிகாரத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வான். இரண்டிலும் ஒரே மாதிரியான நேரத்தைப் பார்த்து அவனது கவலை இன்னும் அதிகரித்து விடும்.
கடிகாரம் நாலரை மணியைக் காட்டியதும் அவன் சுழல் நாற்காலியில் சுழன்று தனது அறையின் கதவுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்தான். ஜன்னல் திரையை விலக்கி விட்டு எதிரே தெரியும் குன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். இந்த குன்றைக் கடந்துதான் அவன் தனது அலுவலகத்திற்கு வர வேண்டும். அவளும் இந்த குன்றைத் தாண்டித்தான் இந்த அலுவலகத்தை வந்தடைய வேண்டும். நாலரையிலிருந்து ஐந்தேகால் மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் அவள் வரலாம். இந்தக் கணக்கை அவன் ஏற்கனவே போட்டு வைத்திருந்தான். னால் அவன் கணக்கிட்ட நேரத்தை கடந்து நேரமாகிக் கொண்டிருந்தது. அவன் பொறுமை இழந்து கொண்டிருந்தான்.
''கோல்டிரிங்க்ஸ் வாங்கி வரட்டுமா சார்?'' பியுன் கேட்டான்.
அவன் அந்த குன்றையேப் பார்த்தபடியே '' கொஞ்சம் பொறு'' என்றான். பியுன் அறையை விட்டு வெளியே போய் விட்டான்.
கடிகாரத்தின் முட்கள் ஐந்து மணியாகிறது என்று சாட்சியம் சொல்லியது. அவனது பொறுமையின்மை தற்போது கவலையாக மாறி விட்டது. அலுவலக ஊழியர்கள் ஒவ்வொருவறாக தங்கள் சாப்பாட்டு டப்பாக்களை மற்றும் பைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். அவன் தனது அறையை விட்டு எழுந்து ஹாலில் அங்குமிங்கும் நடைப் பழகிக் கொண்டிருந்தான். அவனுக்கு இங்கே குன்று மட்டுமல்ல அந்த குன்றினை இணைக்கும் சாலையும் தெரிந்தது. அவனது கண்கள் குன்றினைப் பார்க்காமல் சாலையில் அவளைத் தேடியது.
கவலை கொஞ்சம் கொஞ்சமாக படபடப்பாகவும் கோபமாகவும் மாறிக் கொண்டிருந்தது. '' இனி நான் அவளுடன் எப்பொழுதும் பேசவே மாட்டேன். அவள் என்னைப் பற்றி என்னத்தான் நினைத்திருக்கிறாள். அவளுக்காக நான் இங்கே இரவு முழுவதும் காத்திருப்பேன் என்று நினைத்தாலா? அவள் வேண்டுமென்றே இப்படி செய்கிறாளா இல்லை மறந்து விட்டாளா?'' இதை நினைத்து நினைத்து அவன் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.
அந்தேகால் மணிக்கு ஹாலிலிருந்து கிளம்பி தனது அறைக்குள் வந்தான். நாற்காலியில் உட்கார்ந்து நிமிர்ந்தான். கடிகாரத்தின் முட்கள் அவனைப் பார்த்து கேலி செய்வது போல் இருந்தது. சற்று நேரத்திற்கு முன் ஸ்டெனோவால் டைப் செய்யப் பட்டு மேஜையில் வைக்கப் பட்டிருந்த காகிதங்கள் மேல் அவனது பார்வை பதிந்தது. அருகே கண்ணாடிக் குடுவை ஒன்றும் கிடந்தது. இந்தக் காகிதங்களில் அவனது கதை டைப் செய்யப் பட்டிருந்தது. இந்தக் கதையை அவன் இன்றுதான் எழுதி முடித்திருந்தான். அவன் இந்தக் கதையை இன்று நாலரை மணிக்கு வருவதாய் இருந்த அந்தப் பெண்ணிடம் படித்துக் காட்ட விரும்பினான். னால் அவள் வரவில்லை. அவன் மீண்டும் மீண்டும் காகிதங்களின் பக்கங்களை அப்படி இப்படி புரட்டிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது காலடி சத்தத்தால் அலுவலகத்தின் அமைதி உடைந்தது கூடவே நீண்டு கொண்டிருந்த அந்த காத்திருப்பு கயிறும்தான். கோபம், வெறுப்பு, படபடப்பு எனது இதுவரை அவனைப் அப்பிக் கொண்டிருந்த அனைத்தும் எந்த சவக்குழிக்குள் போய் புதைந்து கொண்டதோ தெரியவில்லை. அவள் முன்னால் நின்றபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.
''சாரி. சர்! கொஞ்சம் லேட்டாகி விட்டது. கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது'' தாமதமாக வந்ததற்கான வெட்கவுணர்வு அவளது வார்த்தைகளில் இருந்தது. அத்தோடு சமாளிப்பும் தெரிந்தது.
'' எனக்கு உங்கள் மேல் கடுமையாக கோபமாக இருந்தது'' என்று சொன்னபடி அவன் புன்னகைத்தான்.
அவள் அவனையே நிலை குத்திப் பார்த்துக் கொண்டிருந்தாள். அறையில் காற்று வீச மறந்து விட்டது போலவும் நேரம் நகராமல் அப்படியே நின்று போனதைப் போலவும் பட்டது. கொஞ்ச நேரத்திற்கு அங்கு எந்த சலனமும் இல்லாமல் இருந்தது. இயற்கை வண்ணங்களுக்கு மத்தியில் அவனது புன்னகைப் பூ வண்ணத்தையும் அவள் ஒரு ஓவியத்தைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த வண்ணம் அழகாகவும், கவர்ச்சியாகவும் சுண்டியிழுக்கும்படியாகவும் இருந்தது. எந்த வண்ணமும் குறைவாக இல்லை. எல்லா வண்ணங்களிலும் வாழ்வின் கனவுகள் இருந்தது. அவன் அவளது முகத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தான். இயற்கையின் வண்ணம் அவளது முகத்தில் பூரித்து தெரிந்தது. அந்த அறை முழுவதும் அந்த வண்ணங்களின் ஒலி பரவி பிரகாசித்தது போல் இருந்தது. அந்த பிரகாசத்தில் மிக மெல்லிய வாசனையும் உணர முடிந்தது. இந்த வாசனை எந்த மலருடையதாக இருக்கும் அவன் யோசிக்கலானான். ஹெம்ராஜ் கோல்டிரிங்க்ஸ் வைத்து விட்டுச் சென்றான். கூடவே ஒரு தட்டில் உப்புசுவையுடைய பிஸ்கெட்டும் வைத்திருந்தான்.
''கோல்டிரிங்க்ஸ் குடியுங்கள்'' அவன் பேச்சற்ற நிலையை உடைத்தான். அவள் உரிஞ்சத் துவங்கினாள். அவள் எதுவும் பேசவில்லை. அவள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. மிகவும் வர்புறுத்திய நிலையில் இரண்டு முறை ஒவ்வொன்றாக உப்புச்சுவை பிஸ்கெட்களை எடுத்துக் கொண்டாள். மூன்றாவது முறை தட்டை அவளிடம் நீட்டுகையில் '' நீங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்னை மட்டும் சாப்பிட வற்புறுத்துகிறீர்கள்'' என்றாள். அவன் அதிர்ந்து விட்டான்.
பற்களால் பிஸ்கெட்டை கடிக்கும் சத்ததால் அறையின் அமைதி கிழிந்து கொண்டிருந்தது. '' எனது வாழ்வில் மிகச் சிலரால்தான் நான் கவரப் பட்டிருக்கிறேன். அப்படி என்னைக் கவர்ந்த சிலருள் நீங்களும் ஒருவர். உங்களின் உருவம், உங்கள் எளிமை, உங்கள் மரியாதை குணம் போன்றவைகள் என்னை வசியப் படுத்தி விட்டன. எனக்கு நீங்கள் ஒரு திறந்த புத்தகமாகப் படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்தது என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்.'' என்று அவன் அறையின் அமைதி கிழிய பேசத் துவங்கியவன் பேசிக் கொண்டே போனான்.
அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் எந்தவிதத்திலும் எதிர்விணை புரியவில்லை. ''நான் ஒரு நாவல் எழுத எண்ணியிருக்கிறேன். அந்த நாவலின் ஒரு பாத்திரமாக நீங்களும் இருப்பீர்கள். சொல்லப் போனால் நாவலின் முக்கியப் பாத்திரமாக இருப்பீர்கள். சில ண்டுகளில் உங்களுக்கு அந்த நாவல் படிக்கக் கிடைக்கலாம்.'' அவன் பேசுவதைத் தொடர்ந்தான்.
அவளது கண்களில் குழப்ப ரேகைகள் துளிர்த்தன.
''கடந்த வாரம் நீங்கள் படித்த கதையில் எனது கல்லூரி வாழ்க்கையை வரிவரியாக வடித்து வைத்திருந்தேன். கதையில் சும்மி என்ற பெயரில் வரும் பெண்ணின் உண்மையாக பெயர் சுனிதா என்பதாகும். கல்லூரி நாட்களில் அவளிடம் நீண்ட உரையாடல் நடந்திருக்கவில்லை, சின்னதாக ஒரு அறிமுகப் பேச்சு அல்லது ஏதேச்சையாக என்று கூட எதுவும் நடந்திருக்கவில்லை. னால் அவள் பற்றிய நிறைய நினைவுகள் மட்டும் என்னுடன் உள்ளது. அந்த நினைவுகளில் மழைச்சாரலின் குளுமை உள்ளது. நான் இப்பொழுது எழுத உள்ள நாவலில் பாரதி என்ற பெயரில் ஒரு பெண் பாத்திரம் இருக்கிறது. ''' என்றபடி அவன் பேச்சை பாதியில் நிறுத்திக் கொண்டான்.
அவளது கண்களில் கற்பனையின் அருவி வழிந்து கொண்டிருந்தது. அந்த அருவியின் ஓசை அறையில் தவழும் காற்றில் உணர முடிந்தது. ''நீங்கள் எதுவும் பேச மாட்டேன் என்கிறீர்கள்? வெறுமனே கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடம் எதாவது கேள்வி கூடவா இல்லை?'' அவன் அவளது கண்களைப் பார்த்தபடி கேட்டான்.
''நான் கேட்பதையே அதிகம் விரும்புகிறேன். நல்ல வாசகி இல்லையா அதனால்தான்'' என்று அவள் சிரித்து விட்டாள்.
''இல்லை. எதாவது விஷயம் இருக்குமில்லையா?'' அவன் கிண்டினான்.
''இன்று புதன் கிழமைதானே! புதன் கிழமை எனக்கு அதிர்ஷ்ட நாள். எனது மாமியார் வீட்டார் என்னை பெண் பார்க்க புதன் கிழமைதான் வந்திருந்தார்கள். எனது நிச்சயதார்த்தமும் புதன்கிழமைதான் நடந்தது. இந்தமுறை எனது பிறந்தநாளும் புதன்கிழமையில் தான் வருகிறது.'' என்றபடி அவள் அமைதியாகி விட்டாள்.
இனி பேச்சை எப்படித் தொடர்வது என்று அவனுக்கும் குழப்பமாகவே இருந்தது. கடிகார முட்கள் மாலை றரை மணியைக் காட்டிக் கொண்டிருந்தது.அவள் வந்து ஒன்னேகால் மணி நேரமாகி விட்டிருந்தது. ''நான் கிளம்ப வேண்டும்'' என்றபடி அவள் அவனைப் பார்த்தாள். '' மாம். நாம் கிளம்பலாம்'' என்று அவனும் உடன்பட்டான்.
கேட்டுக்கு வெளியே வந்தபடி கடுமையான தயக்கத்துடன் '' நீங்கள் என்னுடன் வர விருப்பப் படுகிறீர்களா இல்லை தனியாக போகப் போகிறீர்களா?'' என்று எச்சில் விழுங்கினான்.
''நான் டெப்போ வரை உங்களுடன் வருகிறேன். அதற்கு முன் எனது அலுவலகத்தில் இருந்து என் பையை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று அவள் மிக இயல்பாய் பதிலளித்தாள்.
அவளது பேச்சைக் கேட்டு அவனுக்கு வியப்பாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. அவள் அவனுடன் வண்டியில் செல்ல ஒத்துக்கொள்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையில்லை. ''சார்! நீங்கள் போங்கள். எனக்கு மார்க்கெட்டில் கொஞ்சம் பொருட்கள் வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது'' என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்வாளோ என்றும் எண்ணினான். னால் அவள் அப்படி எதுவும் சமாளிக்கவும் இல்லை. அவள் மரியாதைக்காக வண்டியில் வருகிறாளோ இல்லை மறுப்பதற்கு வெட்கப் பட்டுக் கொண்டு வருகிறாளோ என்று வண்டி போய்க் கொண்டிருக்கையில் அவன் யோசிக்கலானான். ஒருவேலை அவள் உண்மையான நண்பனாக நினைக்கிறாளோ. னால் நண்பனை ''சார்'' என்று ஏன் அழைக்கவேண்டும். அவன் தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டான். ஒருவேலை அவள் அவனை ''சார்'' என்று மரியாதைக்காக அழைக்கலாம் இல்லையா. மேலும் வயது வித்தியாசமும் இருக்கிறது இல்லையா. அதுமட்டுமில்லாமல் அவனை ஒரு பெரிய எழுத்தாளனாக அவள் நினைக்கிறாள் இல்லையா. அவன் தனக்குத்தானே கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொல்வதை தொடர்ந்து கொண்டிருந்தான்.
அவளை பஸ் ஸ்டாப்பில் விட்டுத் திரும்புகையில் வண்டியை ஓட்டிக் கொண்டே அவன் மீண்டும் கேள்வி பதில் சூறாவளியில் சிக்கினான். 'அவள் தனது அலுவலத்திற்கு வருகிறாள் என்று தெரிந்ததும் ஏன் அப்படி மகிழ்ந்தான்.? அவள் வருவதற்கு தாமதமாகிய போது அவன் ஏன் கவலை கொண்டான்? கவலை கோபமாகவும் த்திரமாகவும் மாறியது ஏன்? நாவலில் அவளைப் பற்றி ஏன் எழுத விரும்பினான். அப்படியே எழுதுவதாய் இருந்தாலும் முன்னதாகவே அவளிடம் ஏன் தெரிவிக்க வேண்டும். இறுதியாக அவன் அவளிடம் என்னதான் எதிர்பார்க்கிறான்?'
கேள்விகளின் இந்த சூறாவளியில் சிக்கிய ஒரு துறும்பை போல அவன் சுழன்று கொண்டே எப்பொழுது வீடு வந்து சேர்ந்தான் என்பதை உணரவேயில்லை. கேள்விக்குறிபோல் அமைந்த கொக்கியில் தனது டைகளை தொங்கவிட்டு பின் படுக்கையில் படுத்துக் கொள்கிறான். சுவரெங்கும் கேள்விக் குறிகளாய் தெரிந்தது. 'உண்மையில் அவள் இவனை மிக நல்ல நண்பனாக கொண்டிருக்கிறாளோ? இதற்கானத்தான் அவள் காத்திருந்தாளோ? ஒருவேளை அவள் எனது தோற்றத்தால் கவரப் பட்டிருப்பாளோ? ஒருவேளை அவனது வாழ்வின் வெறுமையான மூலையை நோக்கி அவனது கற்பனை அவனை இழுத்துக் கொண்டு போகிறதோ? இல்லை அவன் தன்னிடமே ஏமாந்து கொண்டிருக்கிறானோ?' சுவற்றில் ஒவ்வொரு கேள்விக் குறியும் மின்னிக் கொண்டிருந்தது. அவற்றிடையே புகை எழும்பிக் கொண்டிருந்தது. அவன் புரண்டு படுத்தான். தலையனையை தனது நெஞ்சோடு வைத்துக் கொண்டு படுத்தான். அவனது மூச்சு பேரிரைச்சலைப் போல் வந்து கொண்டிருந்தது. வியர்வைத் துளிகள் அவனது நெற்றியில் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அப்பொழுது டெலிபோன் ஒலித்தது. அவன் துள்ளிக் குதித்து ரிசிவரை பிடுங்கினான். ''சார்! நான் ரிது பேசுகிறேன். புதன்கிழமை எனக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியை அள்ளிக் கொண்டு வந்துள்ளது. கடந்தவாரம் நான் ஒரு கதை எழுதினேன். அந்தக் கதை திருப்பி அனுப்பப் படவில்லை மாறாக அதனை தேர்வு செய்து கொண்டதாக சிரியரின் கடிதம் வந்திருக்கிறது. அந்தக் கதையை நான் இரண்டு காரணங்களுக்காக உங்களிடம் படித்துக் காட்டவில்லை. அந்தக் கதை வெளியானதும் உங்களுக்கு ச்சரியம் கொடுக்க எண்ணியிருந்தேன். திரும்ப வந்திருந்தால் உங்களிடம் அதனை திருத்தி வாங்கலாம் என்றிருந்தேன். நான் ஒரு நாவல் எழுதப் போகிறேன். அதில் முக்கியப் பாத்திரமாக ஒரு எழுத்தாளன் இருப்பான். அவன் தனது வாசகி ஒருத்திக்குள் இருக்கும் எழுத்தார்வத்தை உசுப்பி அவளை எழுத்தாளர் வரிசையில் கொண்டு போய் நிறுத்தி விடுவதாக எழுத இருக்கிறேன். '' உணர்ச்சியின் வசப் பட்டு அவள் பேசிக் கொண்டே போனாள்.
''சரி! தேர்வாகி இருக்கிறதே அந்தக் கதையின் கரு என்ன?'' அவன் மிகுந்த ர்வத்துடன் கேட்டான்.
''ஒன்றுமில்லை சார்! கதை அப்படியே நகர்ந்து கொண்டிருக்கும் அவ்வளவுதான்'' என்றாள்.
''கதையின் முடிவு என்ன?'' அவன் கொஞ்சம் பொறுமையிழந்து கேட்டான்.
''சார்! அதைக் கேட்டால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். கதையின் முடிவு எப்படியென்றால் கதை இப்பொழுதுதான் துவங்கியது போல் இருக்கிறது'' என்றபடி அவள் கலகலவென சிரித்தாள்.
தொலைபேசியில் வெகுநேரமாக அவளது சிரிப்பொலி கேட்டுக் கொண்டே இருந்தது. சிரிப்பின் அந்த ஒலியதிர்வு அவனது அறையெங்கும் பரவி விடுகிறது. சுவற்றில் இதுவரை தெரிந்த கேள்விக் குறிகள் இதற்கு முன் எப்பொழுதும் தோன்றியது இல்லை என்பது போல் மறைந்து போய் விட்டது.
-------------------------------------------------------------------------------

குருமித் பேடி: பிரபல எழுத்தாளர் குருமித் பேடி இந்தி இலக்கிய உலகில் மிகவும் அறியப்பட்டவர். இவர் ஹரியானா மாநிலம் ஷஹாபாத் மார்கன்புராவில் டிசம்பர் மாதம் 21ம் தேதி 1963ம் ண்டு பிறந்தார். இமாச்சலப் பிரதேச பல்கலைக் கழகத்தில் பத்திரிக்கை மற்றும் மக்கள் தொடர்பு துறையில் பட்டம் பெற்றார்.
இவர் 1983 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் ஜலந்தரில் இருந்து வெளியான ''வீர்பிரதாப்'' என்ற இந்தி மொழி தினசரியின் துணை சிரியராகவும் தொகுப்பாளராகவும் இருந்தார்.
1991ல் இமாச்சலப் பிரதேசத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையில் அதிகாரியாக பணியாற்றினார். 1996 முதல் 1998 வரை இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகள் இடையேயான திட்ட அதிகாரியாகவும் மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றினார். 2000ம் ண்டு முதல் இமாச்சலப் பிரதேச மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இவரது படைப்புகளில் '' மைசம் கா தகஜா'' என்ற கவிதைத் தொகுதியும் ''குஹசே மேய்ன் ஏக் செகரா'' என்ற சிறுகதைத் தொகுப்பும் பிரபலமானவை. மேலும் ''ஸ்ரதா வ சவுந்தர்ய கா சங்கம் பைஜ்நாத்'' என்ற நூலும் '' நக்ஷத்திர கே கேரே மேய்ன்'' '' சர்ஹத் கே உஸ் பார்'' மற்றும் '' காலே சஸ்மா வாலா தமி'' கிய நாவல்களும் வெளியாகி உள்ளது.
பலதரப்பட்ட தலைப்புகளில் இவருடைய படைப்புகள் நாட்டின் பல்வேறு முக்கிய செய்தித்தாள்களில் வெளியாகி உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் சாகித்திய அகதமி விருது இவரது ''மோசம் கா தகாஜா'' என்ற கவிதை தொகுதிக்கு கிடைத்துள்ளது. மேலும் பஞ்சாப்பின் கலா சாஹித்திய அகதமி விருது, ராஜஸ்தான் பத்திரிக்கை அமைப்பின் இலக்கிய விருது, இமாச்சல கேசரி விருது, ஹிம்மோத்கர்ஷ் விருது என பல இலக்கிய அமைப்புகளின் விருதுகளையும் வாங்கி குவித்து உள்ளார்.
இவரது எழுத்தில் ஒரு புதுமையைக் காணலாம். வார்த்தையும் வாக்கியமும் வெளிப்படுத்த வேண்டிய உணர்வை மிகச் சரியாக வெளிப்படுத்தி வாசிப்போரை அவ்வுணர்ச்சிக்குள் சிக்க வைத்துவிடும் இயல்பை தன் எழுத்தில் தர வல்லவர். இவரது இந்த தனிப்பட்ட மொழி நடைக்காக பெரும்பாலான வாசகர்களை கொண்டுள்ளார்.
சம்பவங்களின் மிகச் சிறிய இடை வெளியையும் அவர் பக்கம் பக்கமாய் விவரிப்பது மிகச் சிறப்பான ஒன்று எனலாம்.

No comments: