Tuesday, October 24, 2006

தாஜு

இந்தியில்: சேகர் ஜோஷி
தமிழில்: மதியழகன் சுப்பையா

ஜெகதீஷ் பாபு முதல் முறையாக அவனை வலதுபுறம் அந்த பெரிய பெயர்ப் பலகை வைக்கப் பட்டிருக்கும் கேபேயில் தான் பார்த்தார். நல்ல வெள்ளை நிறம், நீல வண்ணத்தில் தெளிவான முட்டைக் கண்கள், அடர்ந்த மென்மையான முடி, அவனது நடையில் ஒரு மாறுபட்ட துள்ளலும் உற்சாகமும் இருந்தது னால் வேகம் இல்லை. தாமரை இலையில் நழுவி ஓடும் நீர்த்துளி போன்ற வேகத்தில் அவன்இயக்கம் இருந்தது. அவனது கண்களின் ஓட்டத்தைக் காணும் போது ஒன்பது பத்து வயது மட்டுமே மதிப்பிடலாம். உண்மையில் அவனுக்கு இந்த வயது தான் இருக்கும்.
பாதிவரை எரிந்த சிகரெட்டை ழமாக இழுத்தபடி ஜெகதீஷ் பாபு கேபேவில் நுழைந்தார். அப்பொழுது அவன் ஒரு டேபளில் இருந்து தட்டை எடுத்துக் கொண்டிருந்தான். அவர்கள் பக்கத்திலேயே ஒரு மூலையில் உள்ள பெஞ்சில் அமர்ந்தார்கள். அவன் முன்னால் இருந்தான். மணிக் கணக்காக அவர்களின், அந்த இடத்தில் உட்கார்பவர்களின் எதிர் பார்ப்பில் இருந்தவனைப் போல் தெரிந்தான். அவன் எதுவும் பேசவில்லை. தனது பணிவை காட்ட கொஞ்சம் குனிந்து நிமிர்ந்தான். பெரிதாய் புன்னகை நிறைத்து முகம் காட்டினான். அவனது இந்த புன்னகையில் 'மெனு' முழுவதையும் அடக்கியதைப் போல் இருந்தது. ' சிங்கிள் சாயா' என்ற டரை பெற்றவுடன் அவன் மீண்டும் ஒரு முறை புன்னகைத்தான். கண்ணிமைப்பதற்குள் சாயா கொண்டு வரப் பட்டு விட்டது.
மனிதனின் பாவனைகள் பெரும் விசித்திரமானவையாக இருக்கிறது. அரவமற்ற, ஏகாந்த இடங்களில் துணையில்லாமல் இருக்கையில் கூட பல முறை மனிதன் தனிமையை உணர்வதில்லை. ஒருவேளை இந்த தனிமையில் அனைத்தும் மிக அருகில் இருப்பது போலவும் எல்லாம் தனக்கு சொந்தம் போலவும் உணர முடிகிறது. னால் இதற்குமாறாக லட்சக்கணக்கான ண்கள் பெண்கள் என்று சூழ்ந்த ஜனசமுத்திர சூழ்நிலையில் இருந்தும் கடுமையான சூன்யத்தை உணரும்படியாகி விடுகிறது. எவையெல்லாம் சொந்தமில்லை என்று நினைக்கிறோமோ அவனை நமக்கு எத்தனை நெருக்கமானதாக இருந்து விடுகிறது! னால் இவை சாத்தியமானதாகவும் இருப்பதில்லை. எப்பொழுதும் கிடைக்கப் பெறுவதுமில்லை. இந்த தனிமையின் உணர்தல்தான் இவ்வாறு விலகி இருப்பதற்கு மூலமாக இருந்து விடுகிறது, மனக் கவலை மற்றும் சஞ்சலம் பல கதைகளுக்கு கருவாகி விடுகிறது.
ஜெகதீஷ் பாபு தூர தேஷத்தில் இருந்து வந்தவர். தனியாக இருப்பவர். இருப்பிடத்தின் ஓட்டம் பாட்டம், கேபேயின் ராவாரம் கியவைகளில் எதிலும் சுயம் உணரவில்லை. னால் கொஞ்ச நாட்கள் இருந்து பழகிப் போய் விட்ட காரணத்தால் இந்த சூழ்நிலையில் தானும் ஒரு அங்கமாகி விட்டதையும் தனிமை நீங்கியதையும் உணர்கிறார். னால் இன்று இது தனக்கு எவ்வகையிலும் சொந்தமில்லை என்றே உணர்ந்தார். சொந்தம் என்ற எல்லையை விட்டு வெகு தூரம், மிகமிக தூரத்தில் இருப்பதாக உணர்ந்தார். அவரையும் மீறி அவருக்கு தனது ஊரின் மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், அருகில் இருக்கும் நகரத்து கேபே என அனைத்தும் அனாயஷ்யமாக நினைவுக்கு வந்தது.
'' சாஹப்....., சாயா''
ஜெகதீஷ் பாபு சாம்பல் குப்பியில் சிகரெட்டை உதரினார். அவனது பேச்சொலியில் தான் ஏதோ ஒன்று உள்ளது. அதன் வெறுமைதான் தன்னை இவ்வாறு சிந்திக்க வைத்துக் கொண்டிருப்பதாக பட்டது. இவ்வாறு அவர் தனது சந்தேகத்திற்கு சமாதானாம் கொடுத்துக் கொண்டார்.
'' உனது பெயர் என்ன?''
'' மதன்''
'' சரி, மதன்! நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?''
''ஐயா, நான் மலைப் பகுதியைச் சேர்ந்தவன்''
'' பு, டார்ஜிலிங், சிம்லா, அல்மோடா இப்படி எத்தனையோ மலைகள் இருக்கிறது- இதில் உனது ஊர் எந்த மலையில் உள்ளது?''
இந்த முறை அவனுக்கு மலை மற்றும் மாவட்டத்தின் வேறுபாடு தெரிந்து விட்டது போல! புன்னகைத்துக் கொண்டே
''அல்மோடா ஐயா அல்மோடா'' என்றான்.
''அல்மோடாவில் எந்த ஊர் ?'' சரியாக தெரிந்து கொள்ள வேண்டி ஜெகதீஷ் பாபு கேட்டார்.
இந்தக் கேள்வி அவனை தயக்கத்தில் தள்ளி விட்டது. தனது ஊரின் மாறு பட்ட பெயரின் காரணமாக அவன் வெட்கப் பட்டிருக்கலாம் அதனால் அவன் பெயர் சொல்வதை தவிர்த்தபடி '' ஐயா, அது தூரத்தில் இருக்கிறது. அல்மோடாவில் இருந்து பதினைந்து இருபது மைல்களுக்கு அப்பால் இருக்கும்''
'' சரிப்பா, அதற்கு எதாவது பெயர் இருக்கும் இல்லையா?'' ஜெகதீஷ் பாபு கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கேட்டார்.
''டோட்யாலோக்'' என்று தயக்கத்துடன் சொன்னான்.
ஜெகதீஷ் பாபுவின் முகத்தில் அப்பியிருந்த தனிமை உணர்வு சட்டென மறைந்தது. அவர் புன்னகைத்துக் கொண்டே தானும் அவனுடைய ஊருக்கு அருகில் ''..........'' என்று ஊரைச் சேர்ந்தவந்தான் என்று மதனிடம் கூறினார். மகிழ்ச்சியில் மதனின் கைகளில் இருந்த 'டிரே' கீழே விழுந்து விடும் போல் இருந்தது. அவன் எவ்வளவொ விரும்பியும் அவனது வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாமல் தவித்தது. தன்னைத் தானே தொலைத்தவனைப் போல் தனக்கு தோழமையான ஒருவரை மீண்டும் மீண்டும் வந்து பார்க்கும் முயற்சியில் இருந்தான்.
ஊர்க்கார தோழர்- ஊர்........ உயர்ந்த மலைகள்...... நதி........ ஈஜா(அம்மா)....... பாபா( அப்பா)......... தீதி(அக்கா)........ முளி (தங்கை)........தாஜு (அண்ணன்)........!
மதனுக்கு ஜெகதீஷ் பாபுவின் தோற்றத்தில் யாருடைய உருவம் பொருத்தமாய் இருந்தது? ஈஜா.....? ....இல்லை.....பாபா?....... இல்லை. தீதி?........முளி?........ ம்ம்ம்ம்ம் தாஜு.....!!!!
இரண்டு-நான்கொரு நாட்களில் மதன் மற்றும் ஜெகதீஷ் பாபு இருவர் இடையிலும் இருந்த அன்னியம் என்னும் ழிப் பிளவு காணாமல் போய் விட்டது. டேபளில் உட்கார்ந்த உடன் மதனின் சத்தம் கேட்டு விடும்.
''தாஜு, நலமா...?''
''தாஜு, இன்றைக்கு குளிர் கொஞ்சம் அதிகமாக உள்ளது''
'' தாஜு, இங்கையும் 'ஹ¤யூம்' (லங்கட்டி) விழுமா?''
'' தாஜு, நேற்று நீங்கள் மிகவும் குறைவாக சாப்பிட்டீர்கள்' என்பான் அதற்குள் 'பாய்' என்று குரல் ஒலிக்கும் அக்குரலின் எதிரொலி வந்து சேரும் முன் அவன் அங்கே ஜராகி விடுவான். ர்டர் வாங்கிக் கொண்டு போகும் போது மீண்டும் ஜெகதீஷ் பாபுவிடம் ''தாஜு, வேற எதாவது வேண்டுமா?''
'' தண்ணீர் கொண்டு வா''
'' கொண்டு வந்திட்டேன், தாஜு'' அடுத்த டேபளில் இருந்து மதனின் குரல் கேட்கும்.
மதன் ''தாஜு'' என்ற வார்த்தையை நீண்ட காலமாக பிரிந்த மகனைப் பார்க்கும் தாய் '' மகனே'' என்று அழைத்து முத்திக் கொள்வது போன்றதொரு உணர்வில் உச்சரிபான்.
கொஞ்ச நாட்களில் ஜெகதீஷ் பாபுவின் தனிமை விலகிப் போய் விட்டது. தற்போது அவருடைய இருப்பிடம், இந்த கேபே மட்டுமல்ல நகரம் முழுவதும் தனக்கு தனக்கு சொந்தம் என்று தோன்றும் வகையில் உறவு வண்ணங்களைப் பூசிக் கொண்டது போல் காட்சியளித்தது. தான் தாஜு என்று அழைக்கப் படுவது கொஞ்சம் பிடிக்கவில்லை தான். னால் இந்த மதன் அடுத்த டேபளில் நின்றபடி கூட ''தாஜு'' என்று பதில் கொடுக்கத் தவறுவதில்லை.
'' மதன்! இங்கே வா''
'' இதோ வருகிறேன் தாஜு''
''தாஜு'' என்ற வார்த்தையில் ஜெகதீஷ் பாபுவின் நடுத்தர வர்க்க பண்பாடு விழித்துக் கொண்டது. சொந்தம் என்ற மெல்லிய நூல் ''ங்'' என்ற கூர்மைக்கு முன்னால் தாக்குப் பிடிக்கவில்லை.
''தாஜு, சாயா கொண்டு வரட்டுமா?''
'' சாயா வேண்டாம், னால் தாஜு -தாஜு என்று ஏன் இப்படி கத்திக் கொண்டு அலைகிறாய். மத்தவங்க 'பிரிஸ்டேஜ்' பற்றி கொஞ்சம் கூட உனக்கு அக்கரையில்லை?''
ஜெகதீஷ் பாபுவின் முகம் கோபத்தால் தக தகத்தது. தனது வார்த்தைகளை கட்டுப் படுத்த முடியவில்லை. மதனுக்கு 'பிரிஸ்டேஜ்' என்ற வார்த்தையின் பொருள் தெரியுமா என்று கூட அவனுக்கு கவனம் இல்லை.
'யாராவது மதனுக்கு 'பிரிஸ்டேஜ்' என்ற வார்த்தையின் பொருள் விளக்கினால் நன்றாக இருக்கும்.
'பிரிஸ்டேஜ்' என்றால் சுய கவுரவம், பிரிஸ்டேஜ் என்றால் வெள்ளைக் காலர், உழைப்பாளர்களின் கைகளை விட்டு விலகி இருப்பவை, பிரிஸ்டேஜ் என்றால் தன்னலம்.........னால் மதனுக்கு இவற்றை யாரும் விளக்காமலேயே அனைத்தையும் புரிந்து கொண்டான். இந்த இளம் வயதிலேயே உலகத்தைப் புரிந்து கொள்ளும் திறமை பெற்றவனுக்கு இந்த சாதாரண வார்த்தையின் பொருள் புரியாமலா போய்விடும்.?
மதனுக்கு ஜெகதீஷ் பாபுவின் இந்த செயலால் பலத்த மனக் காயம் ஏற்பட்டது. மேனேஜரிடம் தலைவலி என்று சொல்லி விட்டு தனது குடிசையில் வந்து கால் முட்டியில் முகம் புதைத்து ஏங்கியேங்கி அழுது கொண்டிருந்தான். னால் வீட்டையும் ஊரையும் விட்டு இவ்வளவு தொலைவில் மதனுக்கு ஜெகதீஷ் பாபுவின் மேல் அன்பு ஏற்பட்டது இயல்பான விஷயம்தான். அதனால்தான் இன்று இப்படி புலம்பெயர்ந்து வாழும் நிலையில் முதல் முறையாக யாரோ அவனை ஈஜாவின் மடியிலிருந்து, பாபாவின் தோளிலிருந்து மற்றும் தீதியின் அரவணைப்பிலிருந்து பலவந்தமாக இழுத்து விலக்கியது போல் உணர்ந்தான்.
னால் அவன் உணர்ச்சிவசப் பட்டுவிடவில்லை. அழுது முடிக்கும் நிலையில் மனதுள் சுழலும் கவலைகள் கண் வழியாக கண்ணீராக பெருகி வெளியே வந்து விடுகிறது. அதன் பின் மனிதன் முடிவு செய்யும் அனைத்தும் உணர்ச்சியின் பிடி விலகிய நிலையில் விவேக பூர்வமான முடிவுகளாகவே அமைந்து விடுகிறது.
மதன் அமைதியாக வேலை செய்யத் தொடங்கி இருந்தான்.
மறுநாள் கேபே செல்லும் போது ஜெகதீஷ் பாபு தனது பள்ளித் தோழன் ஹேமந்த்தை சந்தித்தார். கேபே போய் சேர்ந்ததும் ஜெகதீஷ் பாபு மதனை சைகையால் அழைத்தார். னால் மதன் அவரை விட்டு விலகி தொலைவில் இருக்கவே முயன்று கொண்டிருந்தது. தெரிந்தது. இரண்டாவது முறை கூப்பிட்டதும் மதன் வந்தான். அவன் முகத்தில் இன்று அந்த புன்னகை இல்லை மேலும் '' என்ன கொண்டு வரட்டும் தாஜு'' என்ற விசாரிப்பும் இல்லை. ஜெகதீஷ் பாபுவே பேசத் துவங்கினார் ''இரண்டு சாயா, இரண்டு ம்லேட்'' என்றார். '' கொண்டு வருகிறேன் தாஜு'' என்று வழக்கமாக சொல்வதை தவிர்த்து '' கொண்டு வருகிறேன் ஐயா'' என்று சொல்லி விட்டு சென்று விட்டான். இவர்கள் இருவரும் அறிமுகம் இல்லாதவர்களைப் போல் அவன் நடந்து கொண்டான்.
'' மலைஜாதிப் பையனா இருப்பான் போல'' ஹேமந்த் உறுதியில்லாமல் சொன்னான்.
''மாம்'' பிடிக்காமல் பதிலளித்தார் ஜெகதீஷ் பாபு, மேலும் விஷயத்தை மாற்றி வேறு விஷயம் பேசத் துவங்கினார்.
மதன் சாயா கொண்டு வந்திருந்தான்.
'' உன் பெயர் என்ன பையா?'' ஹேமந்த் அவன் மீது பரிதாபமான ஒரு பார்வையை பதித்தபடி கேட்டான்.
கொஞ்ச நேரத்திற்கு டேபளில் ழ்ந்த மௌனம் அப்பியிருந்தது. ஜெகதீஷ் பாபுவின் கண்கள் சாயா கோப்பையிலேயே கவிழ்ந்து கிடந்தது. மதனின் கண்களின் முன்னால் பழைய நினைவுகள் படமாக ஓடிக் கொண்டிருந்தது. ஜெகதீஷ் பாபு இப்படித்தான் ஒருமுறை பெயரைக் கேட்டது....... அப்புறம்....... தாஜு நீங்கள் நேற்று கொஞ்சம் தான் சாப்பிட்டீர்கள்.......இறுதியாக ஒருநாள் ''மத்தவங்க 'பிரிஸ்டேஜ்' பற்றி கொஞ்சம் கூட உனக்கு அக்கரையில்லை.........?'' .என்று சட்டம் சட்டமாக ஓடிக் கொண்டிருந்தது.
ஜெகதீஷ் பாபு கண்களை நிமிர்த்து மதனைப் பார்த்தார். அவன் இப்பொழுது எரிமலையாய் வெடிக்கப் போகிறான் என்று அவருக்குப் பட்டது.
ஹேமந்த் வற்புறுத்தும் குரலில் மீண்டும் '' உனது பெயர் என்ன?'' என்று கேட்டான்.
''என்னை ''பாய்'' என்று அழைப்பார்கள் ஐயா'', என்று பதில் சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டான். வேஷத்தில் அவனது முகம் இன்னும் சிவந்து போய் அதிக சிகப்பாக காட்சியளித்தது.
'' சரியானா முட்டாளாக இருப்பான் போல, தனது பெயரைக் கூட மறந்து விட்டான்'' என்றபடி ஹெமந்த் சாயாவை உறிஞ்சினான்.
னால் அவன் ''ஐயா'' என்று அழைத்தற்கான காரணம் ஜெகதீஷ் பாபுவுக்கு மட்டுமே புரிந்தது. இந்த வார்த்தையின் உஷ்ணத்தில் அவன் '' நான் 'பாய்''! என்னை 'பாய்' என்று அழையுங்கள்! உங்கள் 'பிரிஸ்டேஜ் மற்றும் சுயகவ்ரவ எல்லைகளுக்கு வெளியே, முற்றிலும் வெளியே நான் ஒரு 'பாய்'....!'' என்று வேஷமாய் கத்தியிருப்பதை உணர முடிந்தது.
-------------------------------------------------------------------------------------


சேகர் ஜோஷி: (பிறப்பு 1932) எழுத்தாளர் சேகர் ஜோஷி இந்திய இலக்கிய உலகில் மாறுபட்ட கதைகளை வழங்கியவர் என்ற சிறப்பிடத்தில் உள்ளார், இவரது கதைகளில் ஒருபுறம் மலைவாழ் மக்களின் வாழ்நினையும் மறுபுறம் தொழிற்சாலையின் வாழ்நிலையும் மிகச் சிறப்பாக பதிவு செய்யப் பட்டுள்ளது.
சமூக வாழ்வில் ஏழைகள், பிற்படுத்தப் பட்டோர்கள் மற்றும் தலித் மக்கள் போன்றோர்கள் ஒடுக்கப் படுவதையும் அவர்களின் வாழ்வியல் வதைகளையும் அவமானங்களையும் இயலாமையையும் உணர்வு இம்மி பிசகாமல் அப்படியே பதிவு செய்யும் அபார மொழித் திறமையை பெற்றவர் இவர். இவரது கதைகளில் மனித விழிப்புணர்வுக்கு ஊக்கம் கொட்டிக் கிடக்கும்.
மீண்டெழ நினைக்கும் சமுதாயத்திற்காக தனது கதைகளை அற்பணித்து இருக்கிறார். உயிரும் தசையும் கொண்டு உலவும் மனிதர்களின் கதைகளை இவர் எழுதி உள்ளார், அதனால் அவரது கதைகளில் அந்த உயிரோட்டம் அப்படியே இருக்கிறது.
இவரது படைப்புகள் எதார்த்த மொழியில் மக்களின் பிரச்சனைகளைச் சொன்ன காரணத்தால் இலக்கிய வட்டம் தாண்டி பொது சமூகத்திலும் பிரபலமாக இருந்தது.
பல பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்ற இவரது கதைகளில் ''கோசி கா கட்வார்'' ''சாத் கே லோக்'' ''ஹல்வாஹா'' '' மேரா பஹாட்'' ''நவ ரங்கி பிமார் ஹை'' கிய கதைத் தொகுப்புகள் பிரபலமானவை. மற்றும் '' ஏக் பேட் கி யாத்'' என்ற தொகுப்பு நூலும் பிரபலமானது.
-------------------------------------------------------------------------------------

No comments: