Wednesday, October 11, 2006

கோடி

இந்தியில்: பிரேம்சந்த்
தமிழில்: மதியழகன் சுப்பையா

குடிசையின் வாசலில் அப்பா மற்றும் மகன் இருவரும் நீர்த்துப் போன நெருப்புக் கங்குகளுக்கு அருகில் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றனர். உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வேதனையால் துடித்து புரண்டு கொண்டிருந்தாள். சிறு-சிறு இடைவெளிகளில் இதயத்தை உளுக்கும் படியான சத்தங்களை அவள் எழுப்ப இந்த இருவருக்கும் நொடிகளுக்கு இதயம் நின்று இயங்குகிறது. குளிர்கால இரவு. இயற்கை அமைதியில் மூழ்கிப் போயிருந்தது. ஊர் முழுவதும் இருளில் லயித்துப் போயிருந்தது.
'' பொளைக்க மாட்ட போல தெரியுது. நாள் முழுசும் ஓடியோடிப் பார்த்தாச்சு. போ, போய் பார்த்துட்டு வா'' என்றான் கீசு.
'' சாகனுமுன்னா சீக்கிரம் செத்துத் தொலைய வேண்டியதுதானே? இப்ப பார்த்து என்ன பன்றது?'' என்று சிடுசிடுத்தான் மாதவ்.
'' நீ கொஞ்சம் கூட இரக்கமில்லாதவண்டா! வருசம் முழுதும் அவகிட்ட கொஞ்சிக் குலாவி சந்தோஷப் பட்டுக்கிட்டிருந்த, இப்ப இவ்வளது பெரிய துரோகமா!''
'' அவள் துடிக்கிறதை, கை கால்களை போட்டு உதைக்கிறதை என்னால பார்க்க முடியலை.''
கீசுவின் குடும்பத்தின் பெயர் ஊர் முழுவதும் அவமானப் பட்டுக் கிடந்தது. கீசு ஒரு வேலை செய்தால் இரண்டு நாட்கள் ஓய்வு எடுப்பான். மாதம் சரியான சோம்பேரியாக இருந்தான். அரைமணி நேரம் வேலை பார்த்தால் அரைமணி நேரம் புகைப்பான். இதனால் இவர்களுக்கு எங்கும் வேலை கிடைப்பதில்லை. வீட்டில் கைப்பிடியளக்கும் அரிசி இல்லாமல் போய் விடும் நிலை வந்தால் கீசு மரத்தில் ஏறி கட்டைகள் வெட்டி வருவான் மாதவ் அவற்றை சந்தையில் விற்று வருவான். எப்பொழுது வரை அந்தப் பணம் இருக்குமோ அதுரை இருவரும் அங்கும் இங்கும் அலைந்து திரிவார்கள். ஊரில் வேலைக்கு பஞ்சமில்லைதான். அது விவசாயிகளின் ஊராக இருந்தது. நல்ல உழைப்பாளிக்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வேலைகள் தயாராய் இருந்தது.
னால் இவர்கள் எப்பொழுது கூப்பிடப் படுவார்கள் என்றால் இரண்டு பேர் செய்ய வேண்டிய வேலையில் ஒருவர் செய்யும் வேலையாவது முடியுமே என்று சந்தோஷப் படும் நிலை இருந்தால் அல்லது வேறு வழியே இல்லை என்று இருந்தால் மட்டுமே இவர்கள் அழைக்கப் படுவார்கள். இவர்கள் இருவரும் சாதுக்களாக இருந்திருந்தால் சந்தோஷம் தைரியம் மற்றும் காலம் கடமை போன்றவைகளுக்கான அவசியம் சிறிதும் இருந்திருக்காது. இது இவர்களின் இயல்பாக இருந்தது. இவர்களின் வாழ்க்கை விசித்திரமானதாக இருந்தது.
வீட்டில் இரண்டு மூன்று மண் பாத்திரங்களைத் தவிர வேறெந்த சொத்தும் கிடையாது. கிழிந்து போன துணித் துண்டுகளை வைத்து தங்கள் நிர்வாணத்தை மறைத்துக் கொண்டு திரிந்தார்கள். உலக வாழ்வின் கவலைகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெற்றிருந்தார்கள். எக்கச்சக்கமான கடன்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். திட்டு வாங்கிக் கொள்வார்கள், அடி வாங்கிக் கொள்வார்கள். எந்த பாதிப்பும் மாற்றமும் இருக்காது. இவர்களிடமிருந்து எதுவும் திரும்ப கிடைக்காது என்று தெரிந்தும் மக்கள் இவர்களுக்கு எதாவது கடன் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
மற்றவர் வயல்களில் இருந்து பட்டானி மற்றும் உருளைக் கிழங்குகளை திருடி வந்து சுட்டு சாப்பிட்டுக் கொள்வார்கள். அல்லது நான்கைந்து கரும்புகளை பிடுங்கி வந்து வைத்துக் கொண்டு இரவில் அவற்றை சவைத்து உறிஞ்சிக் கொள்வார்கள்.
கீசு இவ்வாறான வானம் பார்த்த வாழ்க்கையை அறுபது வயது வரை கழித்து விட்டான். மாதவ் தந்தை வழி செல்லும் மகன் போல தனது அப்பாவின் அடிச் சுவடுகளை அப்படியே பின்பற்றி வாழ்ந்து வந்தான். அது மட்டுமல்லாமல் தன் அப்பாவின் பெயரை இன்னும் ஒளிரச் செய்து கொண்டிருந்தான். இப்பொழுதும் அவர்கள் ஏதோ வயலில் இருந்து பிடுங்கி வந்திருந்த உருளைக் கிழங்குகளை நெருப்புக்கு முன் உட்கார்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர். கீசுவின் மனைவி காலமாகி வெகு நாட்களாகி விட்டது. மாதவ்க்கு திருமணம் கடந்த வருடம்தான் கியிருந்தது. இந்தப் பெண் வந்ததிலிருந்து இந்தக் குடும்பத்தில் வேலைக்கான அடித்தளத்தை போட்டு இருந்தாள். இந்த பொறுப்பற்ற இருவரின் துருத்திகளையும் நிரப்பிக் கொண்டிருந்தாள். அவள் வந்த பின் இவர்கள் இருவரும் இன்னும் சௌகரியமாக வாழத் துவங்கி விட்டனர். மேலும் கொஞ்சம் அதிகாரமும் செய்யத் துவங்கினார்கள். யாராவது வேலைக்குக் கூப்பிட்டால் கூலியை இரண்டு மடங்கு கூட்டிக் கேட்டார்கள். இன்று அந்தப் பெண் பிரசவ வேதனையில் செத்துக் கொண்டிருக்கிறாள். னால் இவர்கள் இருவரும் இதையே எதிர் பார்த்தபடி அவள் செத்துப் போய் விட்டாள் நிம்மதியாக இருக்கும் என்றும் கவலையில்லாமல் தூங்கலாம் என்றும் நினைத்திருந்தார்கள்.
கீசு உருளைக் கிழங்கை எடுத்து உரித்தபடி '' போடா, அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்று பாருடா? ராக்ஷசி செத்துப் போய்ட்டாளா?. இப்பவெல்லாம் வெடியான் ஒரு ரூபாய் கூலி வாங்குறான்.'' என்றான் கீசு பொறுமையாக.
மாதவ்க்கு பயம் தொற்றிக் கொண்டது. அவன் குடிசைக்குள் நுழைந்தால் கீசு உருளைக் கிழங்களின் பெரிய பங்கை முழுங்கி விடக் கூடும். '' எனக்கு அங்க போக பயமாக இருக்கிறது'' என்று மாதவ் சாமார்த்தியமாக மறுத்து விட்டான்.
'' என்னடா பயம்? நான் தான் இங்க இருக்கேன்ல''
'' அப்படின்னா நீயே போய் பார்த்துட்டு வர்றது தான?''
'' என் பொண்டாட்டி செத்தப்போ நான் மூன்று நாள் அவ பக்கத்திலிருந்து நகரவே இல்லை, தெரியுமா? இது வரைக்கும் அவ முகத்தக் கூட பார்காத நான் அவள திறந்த மேனியா எப்படி பார்க்கிறது, எனக்கு வெட்கமா இருக்காது? அது மட்டுமல்லாம அவள் உடம்பு உணர்வில்லாம இருக்கும் இந்த நேரத்தில நான் போனா அவளால சுதந்திரமா கைய கால உதைச்சுக்க முடியாது?'' என்றான் கீசு.
'' எனக்கு கவலை என்னன்னா, ஒரு புள்ளக்குட்டின்னு பொறந்திட்டா என்ன பண்ண? வீட்டில் எண்ணெய், வெள்ளம் இப்படி எதுவுமே இல்லையே?'' மாதவ் கவலைப் பட்டான்.
'' எல்லாம் வந்திடும். கடவுள் கொடுப்பான். இப்ப ஒரு பைசா கூட கொடுக்காதவங்க அப்புறம் கூப்பிட்டுக் கொடுப்பாங்க. எனக்கு ஒன்பது பையன்கள் பிறந்தார்கள். வீட்டில் எப்பவும் எதுவும் இருந்ததில்லை. னால் கடவுள் எப்படியாவது எங்களை கரையேத்திட்டார்"'
இந்த சமுதாயத்தில் இரவு பகல் வேலைப் பார்ப்பவர்களின் நிலை இவர்களின் நிலையை விட ஒன்றும் அதிகம் நலமாக இல்லை. விவசாயிகளோடு ஒப்பிடும் போது விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டத் தெரிந்தவர்கள் நல்ல வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். இப்படியான சமூகத்தில் இவ்வாறான எண்ணம் உண்டாவது ஒன்றும் வியப்பான விஷயம் அல்லவே. நாம் சொல்லப் போனால் கீசு விவசாயிகளை விடவும் நன்கு சிந்திப்பவனாக இருந்தான். மேலும் சிந்தனையில் சூன்யமாக இருந்த விவசாயிகளின் சமூகத்தில் கலக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களின் அரட்டைக் கும்பளில் சென்று கலந்து கொள்வான். னால் அவனிடம் இவ்வகை உட்கார்ந்து உண்பவர்களின் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை பின் பற்றும் சக்தியும் சாமர்த்தியமும் கீசுவிடம் இல்லைதான். அதனால் தான் இவன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் சிலர் ஊர்த் தலைவராகவும் தலையாரியாகவும் இருந்து வந்தார்கள். ஊரே அவனை விரல் நீட்டிப் பேசினாலும் அவனுக்கு அது அவமானமாகப் படவில்லைதான். அவன் நலிந்து போன நிலையில் இருந்தாலும் மற்ற விவசாயிகளைப் போல் இப்படி மாடாய் உழைக்க வேண்டிய அவசியமில்லையே. மேலும் இவனது வெகுளித்தனத்தையும் ஏமாளித்தனத்தையும் யாரும் தவறாக பயன் படுத்திக் கொள்ள மாட்டார்களே.
இரண்டு உருளைக் கிழங்குகளை எடுத்து சுடச்சுட திண்று கொண்டிருந்தான். நேற்றிலிருந்து எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. அவை றிப் போகும் வரை அவனால் பொறுத்திருக்க முடியவில்லை. பல முறை இருவரின் வாயும் வெந்துப் போனது. உறித்தவுடன் உருளைக் கிழங்கின் வெளிப்பாகம் அவ்வளவு சூடாக இருக்கவில்லை னால் வாயில் போட்டுக் கொண்டவுடன் அவை நாக்கு மற்றும் மேல்தாடையை சுட்டு விடும். அந்த சூட்டோடு கிழங்கை வாயில் வைத்திருப்பதை விட அவற்றை உள்ளே செல்ல அனுமதித்து விடலாம்தான். கிழங்கின் சூட்டைத் தணிக்க உள்ளே நிறைய பொருட்கள் இருந்தது. அதனால் இருவரும் வேகமாக விழுங்கிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான முயற்சியின்போதும் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்த போதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
கீசுவுக்கு டாக்கூர்ஜியின் வீட்டில் திருமண ஊர்வலம் நினைவுக்கு வந்தது. இருபது ண்டுகளுக்கு முன் அவன் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தான். அந்த திருமண விருந்தில் அவனுக்கு ஏற்பட்ட திருப்தி அவனது வாழ்க்கையில் என்றென்றும் நினைவில் வைக்கும் படியானதாக இருந்தது. இன்றும் அவனது நினைவு பசுமையாக இருந்தது. அன்று அவன் உண்ட விருந்தை மறக்க முடியாது என்று கூறினான். மேலும் '' அதற்குப் பின் அவன் வயிறு நிறைய அப்படியொரு விருந்தை நான் உண்டதில்லை.பெண் வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் வயிறுமுட்ட பூரிக்களை கொடுத்து இருந்தார்கள். அனைவருக்கும்! சின்னவங்க பெரியவங்க எல்லாரும் பூரிக்களை உண்டார்கள். அவை சுத்தமான நெய்யில் செய்யப் பட்டதாக இருந்தது. அதனுடன் சட்ணி, ராயத்தா,மூன்று வகை கட்டியான கூட்டு, ஒரு காய்கரி பொரியல், தயிர் அப்புறம் மிட்டாய் இப்படி அந்த விருந்தில என்னென்ன சுவைகள் இருந்துச்சுன்னு சொல்லிமாளாது. எந்தவிதமான தடையோ தடுப்போ கிடையாது. என்ன வேண்டுமென்றாலும் கேட்டுக் கொள்ளலாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம். மக்களெல்லாம் அப்படிச் சாப்பிட்டாங்க. யாராலும் தண்ணீர் குடிக்கக் கூட முடியவில்லை. பரிமாறுகிறவர்கள் அனைவரின் இலைகளிலும் சுடச்சுட உருண்டை உருண்டையான நல்ல மனக்கும் கச்சோரிகளை வைத்து விடுவார்கள். நாங்களெல்லாம் வேண்டாம் என்று சொன்னாலும் இலையில் கையை வைத்து மறைத்துக் கொண்டு தடுத்தாலும் அவர்கள் அவர்கள் கொடுத்துக் கொண்டே போனார்கள். அனைவரும் கையையும் வாயையும் கழுவிக் கொண்ட பின் இலவங்கமும் வெற்றிலையும் கிடைத்தது. னால் எனக்கு வெற்றிலை வாங்கிக் கொள்ள எங்கே உணர்வு இர்ந்தது. என்னால் நிற்கக் கூட முடியவில்லை. அப்படியே நகர்ந்து வந்து எனது போர்வைக்குள் படுத்துக் கொண்டேன். இப்படி பரந்த இதயம் கொண்டவராக இருந்தார் அந்த டாக்கூர்.
மாதவ் இவற்றையெல்லாம் கேட்டு மனதளவில் மகிழ்ந்து கொண்டிருந்தான் மேலும் ''இப்பவெல்லாம் யாரும் அப்படி விருந்து கொடுப்பதில்லை'' என்று சலித்துக் கொண்டான்.
'' இப்ப எவண்டா அப்படி சாப்பாடு போடுவான். அந்த காலம் வேற. இப்ப எல்லாருக்கும் மிச்சம் பிடிக்கிற சை வந்திடுச்சு. கல்யாணம் கச்சேரிகளில் செலவு செய்யக் கூடாது என்று முடிவெடுத்து விட்டார்கள். ஏழைங்க பணத்தை கொள்ளையடிச்சு எங்க வைக்கப் போறாங்கங்கு கேட்கனும்? புடுங்குறதுல கஞ்சத்தனம் காட்டுவதில்லை னா செலவு செய்யிறதுல மட்டும் இப்ப கடும் கஞ்சத்தனம் பண்ணுறாங்க'' என்றான் கீசு சற்றே சிடுசிடுப்புடன்.
'' நீ குறைஞ்சது இருபது இருபத்தோர் பூரிகளை திண்ணுருப்பல்லா? ''
'' இருபதுக்கும் அதிகமா திண்ணேன்'' கீசு
'' நானாயிருந்தா ஐம்பது பூரி திண்ணுருப்பேன்'' மாதவ்
'' நானும் ஐம்பதுக்கு குறைவா திண்ணுறக்க மாட்டேன். நல்ல கட்டுமஸ்தான வாலிபனா இருந்தேன். நீ எனக்கு பாதி கூட இல்லையே.'' என்று பெருமையடித்துக் கொண்டான் கீசு.
உருளைக் கிழங்குகளை திண்று தண்ணீர் குடித்துக் கொண்டார்கள். நெருப்பின் அருகேயே தங்கள் வேஷ்டிகளால் மூடிக் கொண்டு கால்களை வயிற்றில் சொறுகிக் கொண்டு தூங்கிப் போனார்கள். அவர்கள் அங்கனம் படுத்திருந்தது இரண்டு மலைப்பாம்புகள் தங்கள் இரையை விழுங்கி விட்டு அப்படியே சுருண்டு கொண்டது போல் இருந்தது.
புதியா இன்னும் வழி பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டிருந்தாள்.

************************************************************
காலையில் மாதவ் குடிசைக்குள் சென்று பார்த்தான், அவனது மனைவியின் உடல் குளிர்ந்து போயிருந்தது. அவளது முகத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. நல்ல பெரிய கண்கள் மேலே சொறுகிக் கொண்டிருந்தது. உடல் முழுவதும் தூசியால் அழுக்கடைந்து கொண்டிருந்தது. அவளது வயிற்றில் குழந்தை இறந்து விட்டிருந்தது.
மாதவ் வேகமாக ஓடி கீசுவிடம் வந்தான். உடனே இரண்டு பேரும் அய்யோ அய்யோ என்று அலரியபடி மார்பில் அடித்து அழத்துவங்கினார்கள். இந்தக் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள். பழைய வழக்கப்படி இந்த இரு அற்பர்களையும் அவர்கள் சமாதானப் படுத்தினார்கள்.
அப்பனும் மகனும் அழுதுகொண்டே ஜமிந்தாரிடம் ஓடினார்கள். அவர் இந்த இருவரின் முகத்தை கொஞ்சமும் பார்க்க விரும்பாதவர். திருடியதற்காகவும், கொடுத்த வாக்குப் படி வேலைக்கு வராத காரணத்தாலும் பல முறை தனது கையால் இவர்களை பலமாக அடித்தும் உள்ளார். '' என்னடா கீசுவா ஏண்டா அழுகிறாய்? இப்பவெல்லாம் உன்னை பார்க்கவே முடியலை. இந்த ஊர்ல இருக்கவே பிடிக்காத மாதிரி தெரியுது என்ன செய்தி.'' என்று ஜமீன்தார் கேட்டார்.
கீசுவின் கண்கள் பூமியைப் பார்த்தபடி இருந்தது. அவனது கண்களில் கண்ணீர் நிரம்பி வழியத் தயாராய் இருந்தது. ''முதலாளி! இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன். மாதவின் மனைவி நேற்று இரவு செத்துப் போய் விட்டாள். எங்களால் முடிந்த மருந்து மாத்திரைகளை கொடுத்துப் பார்த்தோம், முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்து பார்த்தோம் னால் அவள் எங்களை ஏமாற்றி விட்டுப் போய் விட்டாள். இப்ப எங்களுக்கு ஒரு ரொட்டித் துண்டு கொடுக்கக் கூட ளில்லை ஐய்யா. நாங்கள் எல்லாத்தையும் இழந்துட்டோம் சாமி. எங்க குடும்பம் சிதைஞ்சு போச்சு ஐயா. நாங்க உங்க அடிமை சாமி. உங்களை விட்டா அவளுக்கு மண் அள்ளிப் போட வேற யார் இருக்கிறார்கள்?.எங்க கையில் இருந்த எல்லாம் மருந்து மாத்திரைக்கே சரியாப் போச்சு. முதலாளி தயவு பண்ணினா அவள் பிணத்தை எடுத்திடலாம். உங்களை விட்டால் நான் யார் வாசலில் போய் நிற்பது?'' என்று புலம்பினான் கீசு.
ஜமீன்தார் ஐயா இரக்க சுபாவம் உள்ளவராக இருந்தார். னால் கீசுவுக்கு உதவுவது கருப்பு கம்பளியில் வண்ணம் ஏற்றுவது போன்ற செயலாகும். சீ! போடா இங்கிருந்து என்று சொல்லும்படி மனம் ஊந்தியது. கூப்பிட்டா கூட வரமாட்டன். இப்பொழுது காரியம் க வேண்டும் என்பதனால் வந்து மரியாதை செலுத்துகிறான். நன்றி கெட்டவன். திருட்டுப்பயல்! னால் இது கோபம் கொள்ளவோ தண்டிக்கவோ ஏற்ற நேரமில்லை. மனசுக்குள் திட்டிக் கொண்டே இரண்டு ரூபாயை எடுத்து வீசினார். னால் றுதலாம் ஒரு வார்த்தை கூட அவரது வாயிலிருந்து வரவில்லை. அவன் பக்கம் அவர் திரும்பி கூடப் பார்க்கவில்லை. தலைபாரம் இறங்கியது போல் உணர்ந்தார்.
ஜமீன்தார் இரண்டு ரூபாய் கொடுத்தப் பின் மற்ற வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் என்ன மறுப்பு தெரிவிக்க முடியும். கீசு ஜமீன்தாரின் பெயரைச் சொல்லி தண்டோரா அடிக்கத் தெரிந்தவன் தான். சிலர் இரண்டு அனாக்கள், சிலர் நான்கு அனாக்கள் கொடுத்தார்கள். கொஞ்ச நேரத்தில் கீசுவிடம் ஐந்து ரூபாய் ரொக்கப் பணமாக ஒரு நல்ல தொகை சேர்ந்து விட்டது. சிலரிடமிருந்து கொஞ்சம் தாணியங்களும் கிடைத்து விட்டது. சில இடங்களில் கட்டைகள் கிடைத்தன. மதியம் கீசுவும் மாதவும் சேர்ந்து சந்தையில் இருந்து கோடித் துணி வாங்கச் சென்றனர். இங்கு மக்கள் அப்படி இப்படி பேசி பொழுதை கழித்தனர்.
ஊரில் இருந்த மென் இதயம் கொண்ட சில பெண்கள் பிணத்தை பார்க்க வந்தார்கள். அவர்கள் கடமைக்கு இரண்டு சொட்டு கண்ணீரை சிந்தி விட்டுப் போய் விட்டார்கள்.
சந்தைக்கு சென்றடைந்தனர் கீசுவும் மாதவும். ''அவளை எரிக்கிற அளவுக்கு கட்டைகள் வந்து சேர்ந்து விட்டது, என்ன மாதவ்?'' என்றான் கீசு
''மாம், கட்டைகள் அதிகமாகவே உள்ளன, இப்பொழுது கோடி வாங்க வேண்டும் அவ்வளவுதான்''
'' அப்ப வா, எதாவது மெல்லியதா ஒரு துணியில கோடி வாங்கிடலாம்''
'' மா, வேறு என்ன செய்வது! பிணத்தை எடுப்பதற்கு எப்படியும் இரவு கி விடும். இரவுல கோடித் துணியை யார் பார்க்கப் போகிறார்கள்?''
'' இது என்ன மோசமான வழக்கம் இது தெரியல. ஒருவர் வாழும் காலத்தில் அவர்கள் உடுக்க துண்டு துணி கூட கிடைப்பதில்லை னால் செத்துப் போய்ட்டா புதுசா கோடி தேவைப் படுது.''
''கோடி பிணத்தோட சேர்த்து எரிஞ்சு போய் விடுகிறது''
'' வேற என்ன இருக்கு? இந்த ஐந்து ரூபாயும் முன்னாடியே கிடைச்சிருந்தா எதாவது மருந்து மாத்திரையாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம்''
இரண்டு பேரும் ஒருவர் மனதில் உள்ளதை மற்றொருவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். சந்தையில் அங்கும் திரிந்து கொண்டிருந்தனர். இந்தக் கடையில் சிறிது நேரம் அந்தக் கடையில் சிறிது நேரம் என அலைந்து கொண்டிருந்தார்கள். வகை வகையாக பல துணிகளைப் பார்த்தார்கள் எதுவும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இப்படியே மாலையாகி விட்டது. அந்த இருவருக்கும் எந்த கடவுள் இட்ட கட்டளை என்றுத் தெரியவில்லை இருவரும் மதுக்கடையின் முன்னால் வந்து சேர்ந்தார்கள். ஏது நிச்சயிக்கப் பட்ட செயல் போல அவர்கள் இருவரும் மதுக்கடையின் உள்ளே சென்றனர். உள்ள சிறிது நேரத்திற்கு சலனமில்லாமல் இருவரும் அப்படியே நின்று கொண்டிருந்தனர். பின் கீசு கல்லா அருகில் சென்று ''ஐயா, எங்களுக்கும் ஒரு பாட்டில் கொடுங்க'' என்றான்.
இதன் பின் தொட்டுக் கொள்ள ஏதோ கொடுத்தார்கள். பொறித்த மீன் வந்தது. இருவரும் வராண்டாவில் உட்கார்ந்து அமைதியாக குடித்துக் கொண்டிருந்தனர்.
பல குப்பிகளை வேகவேகமாக குடித்தப் பின் இருவரும் உணர்வுக்கு வந்தார்கள்.
கீசு துவங்கினான் '' கோடித் துணி போர்த்தி விடுறதால என்ன பயன் கிடைக்கப் போவுது? கடைசியில எரிந்துதானே போகப் போவுது. மருமக கூடவா அது போகப் போவுது.
கடவுள்களை தனது பாவமற்ற செயலுக்கு சாட்சியாக்கும் பாவனையில் மாதவ் வானத்தைப் பார்த்தபடி ''பெரிய மனிதர்களிடம் செல்வம் கொட்டிக் கிடக்கு அவங்க அழிச்சிட்டுப் போகட்டும். எங்க கிட்ட என்ன இருக்கு அழிக்க?'' என்றான் தெளிவாக.
'' னால் ஊர் மக்களுக்கு என்ன பதில் சொல்வது. கோடியை எங்கே என்று அவர்கள் கேட்க மாட்டார்களா?''
''அடேய், மடியிலிருந்து பணம் நழுவி விட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். அவர்கள் நம்ப மாட்டார்கள். னால் பின்பு அவர்களே மீண்டும் பணம் தருவார்கள்'' என்றான் கீசு நம்பிக்கையோடு.
தனது இந்த எதிர்பாராத அதிர்ஷ்டத்தை நினைத்து மாதவ் சிரித்தான். '' ரொம்ப நல்லவளா இருந்தாள், பாவம்! செத்தாலும் செத்தா நமக்கு எதாவது சாப்பிடவும் குடிக்கவும் வழி செய்து விட்டுப் போய் இருக்கிறாள்'' என்றான் மாதவ்.
அரை பாட்டிலுக்கும் அதிகமாக குடித்து முடித்து விட்டார்கள். கீசு இரண்டு செட் பூரி வாங்கி வரச் சொன்னான். சட்னி, ஊறுகாய் மற்றும் ஈறல் வாங்கி வரச் சொன்னான். மதுக் கடையின் எதிரிலேயே சாப்பாட்டுக் கடையும் இருந்தது. மாதவ் விரைந்து சென்று இரண்டு இலைகளில் அனைத்தையும் வாங்கி வந்தான். மொத்தம் இரண்டரை ரூபாய் செலவாகி விட்டிருந்தது. இப்பொழுது கொஞ்சம் தான் பணம் மிச்சமிருந்தது.
காட்டில் மிருகம் ஒன்று தனது வேட்டையை ரசித்துத் திண்பது போல் இருவரும் பூரியை ரசித்துத் திண்று கொண்டிருந்தார்கள். யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவமானத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இந்த மாதிரியான உணர்வுகளை அவர்கள் என்றைக்கோ தொலைத்து விட்டார்கள்.
கீசு தத்துவார்தமாகவும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் '' நமது த்மா மகிழ்ச்சி அடைகிறது என்றால் அவளுக்கு புண்ணியம் கிடைக்காதா ?''
மாதவ் மெதுமாக தலையை தாழ்த்தி அதனை ஏற்றுக் கொண்டபடி '' நிச்சயமாக கண்டிப்பாக அப்படித்தான் கும். கடவுளே, நீ முக்காலமும் உணர்ந்தவன். அவளை கண்டிப்பாய் வைகுந்தத்திற்கு அழைத்துப் போ. நாங்கள் இருவரும் எங்கள் மனப்பூர்வமான சிர்வாதத்தை வழங்குகிறோம். இன்று எங்களுக்கு கிடைத்த உணவு இந்த யுசுக்கும் இது வரை கிடைக்கவில்லை.
கொஞ்ச நேரத்தில் மாதவ்க்கு சிறிய சந்தேகம் எழுந்தது. '' ஏம்ப்பா, நாமும் என்றைக்காவது ஒரு நாள் அங்கே தானே போவோம்?'' என்று மழலையாய் மொழிந்தான்.
இந்த குழந்தைத் தனமான கேள்விக்கு கீசு எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த மாதிரியான பரலோக விஷயங்களை சிந்தித்து இந்த னந்தத்திற்கு தடை போட விரும்பவில்லை.
'' எனக்கு ஏன் கோடி போடவில்லை என்று அங்கே கேட்டால் என்ன சொல்வது?''
'' உன் தலை என்று சொல்லலாம்''
'' கண்டிப்பாக கேட்பாள்''
''அவளுக்கு கோடி கிடைக்காது என்று எப்படி முடிவு செய்தாய்.? நீ என்ன அப்படிப் பட்ட கழுதைன்னு நினைத்துக் கொண்டாயா? அறுபது வருஷமா நான் இந்த உலகத்தில் புல் புடுங்கிக்கிட்டு இருந்தேனா? அவளுக்கு கோடி கிடைக்கும் ரொம்ப நல்ல கோடி கிடைக்கும்''
மாதவ்க்கு இதில் நம்பிக்கை வரவில்லை. ''யார் கொடுப்பார்கள்? இருந்த பணத்தையெல்லாம் நீ காலிபண்ணிட்ட. அவள் என்னிடம் தான் கேட்பாள். அவளுடைய நெற்றியில் குங்குமம் இட்டவன் நான் தானே.
கீசு சற்றே சூடாகி விட்டான். ''நான் சொல்லுகிறேன் அவளுக்கு கண்டிப்பாய் கோடி கிடைக்கும் நீ ஏன் என்னை நம்ப மாட்டேன் என்கிறாய்?''
'' இப்ப யாரெல்லாம் பணம் கொடுத்தார்களோ அவர்கள் தான் கொடுப்பார்கள். னால் இந்த முறை பணம் நம் கைக்கு வராது அவ்வளவுதான்.''
இருள் கொஞ்சம் கொஞ்சமாக அடர்த்தியாகிக் கொண்டே போக நட்சத்திரங்கள் இன்னும் பிரகாசமாய் தெரியத் துவங்கியது. மதுக் கடையின் அழகு மேலும் கூடியது. சிலர் பாடினார்கள். சிலர் தாளம் தட்டினார்கள். சிலர் தங்கள் தோழர்களின் தோல்களைக் கட்டிக் கொண்டார்கள். சிலர் தனது நண்பர்களுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்கள்.
மதுக்கடையில் சூழ்நிலையில் கண்டிப்பாய் எதோ இருந்தது. காற்றில் போதை இருந்தது. எத்தனையோ பேர் இங்கு வந்து ஒரு குப்பி குடித்தவுடனேயே பறக்கவும் பாசை மாற்றவும் செய்து விடுகிறார்கள். சாராயத்தை விடவும் இங்கு பரவியுள்ள காற்று கடுமையாக போதை ஏற்றியது. வாழ்க்கையின் தடைகளும் கஷ்டங்களும் இவர்களை இங்கு இழுத்து வருகிறது. இங்கு வந்தபின் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லை செத்துப் போய் விட்டார்களா என்று எல்லாம் மறந்து விடுகிறார்கள். இவர்கள் வாழ்வதும் இல்லை செத்துப் போவதுமில்லை இரண்டும் கெட்ட நிலையில் இருக்கிறார்கள்.
தந்தையும் மகனும் இன்னும் னந்தமாக உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். மதுக்கடையின் அனைவர் பார்வையும் இவர்கள் மேல் பதிந்து இருந்தது. இருவரும் பாக்கியத்திற்கு பலியானவர்கள்தான். இருவருக்கு இடையில் முழு பாட்டில் வைக்கப் பட்டிருந்ததை அனைவரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பிச்சைக்காரன் வெகு நேரமாக மாதவ் சாப்பிடுவதையே பசியான கண்களோடு கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு இலையில் மீந்து போனதை பிச்சைக் காரணுக்கு தூக்கிக் கொடுத்து விட்டான். கொடுப்பதனால் கிடைக்கும் னந்தம், உல்லாசம், பெருமை கியவற்றை தனது வாழ்க்கையில் முதல் முறையாக அனுபவித்தான்.
பிச்சைக்காரனை நோக்கி '' எடுத்துட்டுப் போய் நல்ல சாப்பிடு, சிர்வாதம் கொடு. இதை யார் சம்பாதித்துக் கொடுத்தார்களோ அவள் செத்துப் போய் விட்டாள். னால் உனது சிர்வாதம் அவளை நிச்சயம் சென்று அடையும். பெரிய அளவில் மனம் திறந்து சிர்வாதம் வழங்கு மிகவும் கடினப்பட்டு பைசா பைசாவாக சேர்த்தது'' என்று முடித்தான் கீசு.
மாதவ் வானத்தைப் பார்த்தபடி '' அப்பா, அவள் வைகுந்தம் போவாள். வைகுந்தத்தின் ராணியாக இருப்பாள்''
கீசு எழுந்து நின்று உல்லாசத்தின் அலைகளில் மிதந்தபடி '' மகனே! அவள் வைகுந்தம் கண்டிப்பாய் போவாள். யாருக்கும் எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. யாரையும் கஷ்டப் படுத்தவில்லை. செத்தப் பிறகும் நமது வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷத்தை வழங்கி விட்டுப் போய் இருக்கிறாள். அவள் வைகுந்தம் போகவில்லை என்றாள் மக்களின் ரத்தங்களை உரிஞ்சும் இந்த தடியர்களும் குண்டர்களுமா போவார்கள்? தங்கள் பாவங்களை கங்கையில் கழுவியும் கோயில்களில் அபிஷேகம் செய்தும் இவர்களால் வைகுந்தம் நிச்சயம் போக முடியாது.''
பக்தியின் இந்த நிறம் உடனேயே வெளுத்து விட்டது. நிலையின்மை என்பதே போதையின் சிறப்பு. துக்கம் மற்றும் நிராசைகள் மாறி மாறி வந்து போனது.
'' னால் அப்பா, அவள் வாழ்க்கையில் எவ்வளவு துன்பங்களை அனுபவித்து இருக்கிறாள். எத்தனை துக்கங்களை சகித்து செத்துப் போய் இருக்கிறாள்.
அவன் தனது கண்களில் கையை வைத்துக் கொண்டு அழத் துவங்கினான். கூச்சலிட்டு கதரி அழுதான்.
கீசு மாதவை சமாதானப் படுத்தினான். '' மகனே ஏன் அழுகிறாய்? அவள் இந்த மாயாஜாலத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள். அவள் இந்த தொல்லைகளின் வலைப் பின்னலில் இருந்து முக்தி அடைந்து விட்டாள். அவள் பெரும் பாக்கியம் செய்தவள்தான் இத்தனை சீக்கிரமாக இந்த மாயா மோக உலகின் பந்தங்களை உடைத்து விட்டு போய் விட்டாள்'' என்று கீசு மாதவை சுவாசப் படுத்தினான்.
இருவரும் எழுந்து நின்று பாடத் துவங்கினார்கள்.
'அடியே சதிகாரி, கண்களை ஏன் சுலட்டுகிறாய்! அடியே சதிகாரி ''
குடிகாரர்களின் கண்கள் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருந்தார்கள். பின் இருவரும் டத் துவங்கினார்கள். துள்ளினார்கள். குதித்தார்கள். விழுந்தார்கள், உருளவும் செய்தார்கள். பாவங்களை காட்டினார்கள், அபினயம் செய்தார்கள். இறுதியாக போதை தலைக்கு ஏறி கிறுகிறுக்க அங்கேயே விழுந்து கிடந்தார்கள்.

பிரேம்சந்த்: ( 1880- 1936) இந்தி இலக்கிய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பிரேம்சந்தின் இயற் பெயர் தன்பத்ராய் கும். இவர் பனாரசின் லம்ஹி கிராமத்தில் பிறந்தார். இவர் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களை எதிர் கொண்டு வாழ்ந்து வந்தார். காந்தியடிகளின் வார்த்தைகளால் ஈர்க்கப் பட்டு அரசுப் பணியை விட்டு விலகினார். பின் தனது இலக்கியம் மூலமாக மக்களிடையே தேசிய உணர்வுகளை வளர்த்தார். மக்களின் பிரச்சனைகளை அதன் இயல்பில் கற்பனை கலக்காமல் எழுதினார்.
பிரேம்சந்த் மனித மனங்களின் ழத்திற்குச் சென்று அவர்களது மன உணர்வுகளையும் பிரச்சனைகளையும் மிகச் சரியாக எடுத்துக் காட்டி உள்ளார். சமூகத்தின் பலவகையான மனித அவலங்களையும் அவர் தனது எழுத்துகளில் பதிவு செய்து உள்ளார். பாரத விவசாயிகள் மற்றும் உழைப்பாளர்களின் துயரங்களையும் பிரச்சனைகளையும் அவர் காட்சிப் பதிவுகளாக தனது எழுத்துகளில் வெளிப்படுத்தி உள்ளார்.
எந்த பயமும் இல்லாமல் தான் சொல்ல வந்த கருத்தை எடுத்துச் சொல்லும் துணிவை அவரது எழுத்தைப் படிக்கும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அவர் கதைகளினூடாக மெல்லிய நகைச்சுவையோடு சொல்லிவிட்டுப் போவது அவரது சிறப்பு எனலாம்.
இவரது படைப்புகளில் 'பிரேமாஷ்ரம்' 'கர்மபூமி' 'நிர்மலா' 'காயகல்ப்' 'சேவாதன்' 'கபன்' மற்றும் 'கோதன்' போன்ற நாவல்களையும் 'பிரேம்துவாதஷி', 'பிரேம்பச்சாசி' 'மான்சரோவர்' மற்றும் 'கபன்' போன்ற கதைத் தொகுதிகளும் பிரபலமானவை.
சிறுகதையோ அல்லது நாவலோ இரண்டிலும் அவரது கதாபாத்திரங்கள் மிக எதார்த்தமாக நாம் காணும் மக்களே என்பது படிப்பவர்கள் கண்டு கொள்ளும் விஷயம்.
இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. பல்வகை மொழியில் இலக்கியம் படைப்பவர்களில் பிரேம்சந்தை தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
இவரது நாவல்கள் மற்றும் சிறுகதைகளை சாகித்திய அகடமி பல்வேறு மொழிகளில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

---------------------------------------------------------------------------------

2 comments:

மனசு... said...

நல்ல கதை. கதை படித்த மாதிரி தெரியவில்லை. ஏதோ கூட இருந்து அந்த காட்சியை பார்த்த மாதிரி ஒரு உணர்வு. பல கிராமங்களில் இந்த கதைகளில் வரும் ஊதாரிகள் மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதே நிஜம்.

உங்களின் அடுத்த கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்,
மனசு...

மதியழகன் சுப்பையா said...

வணக்கம். மிக்க நன்றி தோழா
மிகவும் உற்சாகமாக இருக்கிறது.
தொடர்பில் இருங்கள்.
மீண்டும் நன்றி.

தோழன்,
மதியழகன் சுப்பையா