Tuesday, October 03, 2006

சைக்கிளை திருடு கொடுத்த சுகம்

இந்தியில்: அசோக் சுக்லா
தமிழில்:மதியழகன் சுப்பையா

முதலில் நானும் சைக்கிளை திருடு கொடுத்து நிற்கும் ஒரு மாறுபட்ட சுகத்திற்கு பரிச்சயமற்றிருந்தேன். னால் அதிர்ஷ்டவசமாக கடந்த நாளொன்றில் என் சைக்கிள் திருடு போகாமல் இருந்திருந்தால் வாழ்க்கை முழுவதும் இந்த விசித்திர னந்தத்தை அனுபவிக்காமலேயே போயிருப்பேன். என் சைக்கிளை திருடி எனக்கிந்த தேவ சுகத்தைத் தந்த அந்த மகா புருஷனின் முன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். உண்மையிலேயே நான் பெரிய பாக்கியசாலி. இல்லையெனில் உலகில் இத்தனை பேரிடம் சைக்கிள் இருக்கையில் என் சைக்கிள் மட்டும் திருடு போவானேன்.? நிச்சயம் இது என் பாக்கியத்தின் பயந்தான்.
தன்னல எண்ணங்களை மீறி பற்றுகளை விட்டு சிந்திக்கையில் எனது சைக்கிள் திருட்டுப் போனதாய் கருதவில்லை. அது இடமாற்றம் செய்யப் பட்டுள்ளது எனலாம். மேதைகளும் புரட்சியாளர்களும் நாடு கடத்தப்பட்டதற்கு வருத்தப் படாத நாம் சைக்கிள் இடமாற்றம் பெற்றதற்கு ஏன் கவலைப் பட வேண்டும். நிச்சயம் சைக்கிளை திருடியவனுக்கு அது மிக அவசியமானதாய் இருந்திருக்கலாம். யதார்த்தமாய் சொல்ல வேண்டுமானால் எனது சொத்து நஷ்டமாகியது எனலாம்.
இளைஞன் என்ற காரணத்தினால் காவல்துறை அதிகாரிகளிடம் நிறைய பயப்படுவேன். எப்படி தர்மாத்மாக்கள் கடவுளிடம் பயப்படுவதை விட சாத்தானிடம் பயப்படுவார்களோ அப்படியே திருடர்களை விட காவலாளிகளிடம் பயப்படுதலே இளைஞனின் இயல்பு எனலாம். என் சைக்கிள் திருட்டுப் போனதற்கான புகார் கொடுக்க பயந்து பயந்து காவல் நிலையத்தை அடைந்தேன். நானே சைக்கிளை திருடியவனைப் போல பயந்து போனேன். சைக்கிளின் எண் எனக்கு நினைவில்லை. நான் நிறையவே குழம்பிப் போயிருந்தேன். ஒரு சிப்பாயி ' இப்படி எண்களை மறந்து போவதால்தான் காணமல் போவதாயும்' கருத்து சொன்னார். புகார் எழுதிக் கொண்ட காவலாளியின் கேள்விகள் என் சைக்கிள் திருடு போனதை மட்டும் சந்தேகிக்கவில்லை. என்னிடம் சைக்கிள் இருந்ததா என்பதையே சந்தேகமாய் கேட்டார்.
நான் வீடு திரும்புவதற்குள் சைக்கிள் திருட்டுப்போன செய்தி அப்பகுதி முழுவதும் பரவி இருந்தது. வழியில் கிடைத்தவர்களெல்லாம் என்னை தடுத்து நிறுத்தி சைக்கிள் திருடு போனதைப் பற்றியே விசாரித்தார்கள். வீட்டை வந்தடைவதற்குள் ஒரு நூறு பேருக்காவது பதில் சொல்லியிருப்பேன். அன்றுதான் நான் இவ்வளவு பிரபலமானவன் என்பதையே அறிந்தேன்.
வீட்டிற்கு செய்தி எட்டியிருந்தது. என் மனைவி குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தாள். அவள் மற்றப் பெண்களோடு சேர்ந்து ஒப்பாரி வைப்பதில் அலாதி விருப்பமுடையவள். அற்பமான விஷயங்களுக்காகக் கூட மணிக்கணக்கில் அழும் ற்றல் கொண்டவள். அவளைப் போல கண்ணீர் விட்டு அழ வேறு எவரும் எங்கள் எல்லையில் இல்லை என்று அடித்துக் கூறுவேன்.
வீட்டிலிருந்து சற்றுத் தூரத்தில் சிறுவர்களின் கூட்டம் நின்றது. எனது மகன் கர்வத்துடன் சைக்கிள் திருடு போன செய்தியை நேரில் பார்த்தவனைப் போல் சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு முதல் முதலாக கர்வப்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவனைச் சூழ்ந்திருந்த அப்பகுதியின் சிறுவர்கள் பொறாமையோடு அவன் கர்வப்பட்டுக் கொள்வதை பார்த்து நின்றனர். நிச்சயம் அவர்கள் தந்தையர்களின் சைக்கிள் திருட்டுப் போகாதது குறித்து வருத்தப்பட்டு கொண்டிருக்கலாம்.
நான் வந்து திண்ணையில் அமர்ந்தேன். அக்கம்பக்கத்தார் வந்து துக்கம் விசாரிக்க ரம்பித்தார்கள். நமது நாட்டில் துக்கம் விசாரிப்பது மிகப்பெரிய கலையாக உள்ளது. செருப்பு பிய்ந்து போனதை அப்பா செத்துப் போனதற்கான சம கம்பீரத்தோடு துக்கம் விசாரிப்பவர்களையும் காண முடியும். இதில் நிறைய கவனம் வேண்டும். ஏனெனில் வருபவர்கள் அளவுக்கு அதிகமாய் துக்கப் பட்டு நம்மை படுத்தி விடலாம். சிலர் தொடர்ந்து மூன்று நான்கு இடங்களில் துக்கம் விசாரித்த வணணம் இருக்கலாம். னாலும் திருப்தியடைய மாட்டார்கள்.
னால் சைக்கிள் திருடு போன துக்கம் மற்றவற்றை விட மாறுபட்டது. இதற்கான விசாரிப்புகள் இழவு வீட்டு விசாரிப்புகளுக்கு எதிரானவை. யினும் என் சுற்றத்தார் சமாளித்து விட்டனர். சைக்கிள் திருட்டுப் போனதால் நான் ஒன்றும் பெரிதாய் கவலைப் பட வில்லைதான். னால் துக்க விசாரணைக்குப் பின் நானும் கவலைப்படும்படியாகி விட்டேன். என் சுற்றத்தார் இவ்வளவு துக்கப்படாமலிருந்தால் சைக்கிள் திருட்டுப் போனது ஒரு பெரிய சம்பவமாகவே எனக்குப் பட்டிருக்காது.
விசாரிக்க வந்தவர்களின் பேச்சுகள் சற்று விபரீதமானவையே. '' ம்......ம்ம்! சரி எது நடக்கனுமோ அது நடந்துதானே கும். கவலைப்பட்டா எப்படி? எழுந்திருப்பா! போய் குளி! எதாவது சாப்பிடு!'' அல்லது ''நேரமுன்னு ஒன்னு இருக்குல்ல நமக்குன்னு எவ்வளவு நாள் எழுதிருக்கோ அவ்வளவு நாள் தானே இருக்கும். நேரம் வந்திடுச்சி போயிட்டு, எழுந்திருப்பா! போய் வேலைகீலையைப் பாரு!'' அல்லது ''கழுத, போவனுமுன்னு இருந்துச்சு, போச்சு. இப்ப என்ன வாழ்க்கையா போச்சு! வருத்தப்படுற கடவுள் நினைச்சா இது மாதிரி லட்சம் வந்து காலத்தொடும்...'' இதையெல்லாம் நீங்கள் கவனித்துப் பார்த்தால் இது சைக்கிள் திருடு போனதற்கான சமாதானமாகப் படலாம். புதிதாய் யாரேனும் வந்தால் நிச்சயம் என் மனைவி ஓடிப் போனதாய்த்தான் சந்தேகப்படுவார்கள்.
இப்படியாய் மாட்டிக் கொண்டேன். சிலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவதை பார்த்து நான் அவர்களுக்கு சமாதானம் சொல்லி வைப்பேன். நான் இவர்களை தவிர்த்து வீட்டிற்குள் போய் விடலாம்தான். னாலும் உள்ளே போனால் மனைவி கட்டிப்பிடித்து அழ ரம்பித்து விடுவாள் என்ற பயம். அபிப்ராயம் சொல்லவும் சளைக்கவில்லை சிலர். என் சைக்கிளை இரவல் வாங்கி ஓட்டிய ஒருவர், அதன் வேகத்தைப் பற்றி நிறைய பாராட்டினார். சிலர் அதன் வண்ணத்தையும் தோற்றத்தையும் வியந்து பாராட்டினார்கள். வாரம் சென்றாலும் அதில் காற்று குறையாமலிருந்ததாக பலர் ச்சர்யப் பட்டு பேசினார்கள்.
சிலர் துக்கத்தை குறைத்துக் காட்ட இன்னும் அப்பகுதியில் காணாமல் போன சைக்கிள்களைப் பற்றி பேசத் துவங்கினார்கள். எனக்குத் தெரியும் என் மனைவி என் மனைவி ஓடிப்போயிருந்தால் கூட இவர்கள் ராமன், சுக்ரீவன் கதைகளைச் சொல்லியிருப்பார்கள். ஒரு சிலர் சைக்கிள் கிடைத்துப்போக வாய்ப்பிருப்பதாய் சை வார்த்தைகளைக் கூறினார்கள்.
இன்னும் சிலர் இனி எப்படிப்பட்ட சைக்கிள் வாங்க வேண்டும் என்பதைப் பற்றிய லோசனைகளையும் வழங்கினார்கள். அதாவது மனைவி ஓடிப்போனவுடன் புதுப்பித்துக் கொள்ளும் புதிய உறவுகள் போல.
வருகின்ற ஒவ்வொருவருக்கும் சைக்கிள் எப்படித்தான் திருடு போனது என்ற கேள்வி அவசியமாகிப் போனது. நான் நிரம்ப பொறுமையுடன் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஏற்கனவே வந்தவர்கள் உதவியால் சிலதை சொல்லிக் கொண்டிருந்தேன். வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவர்கள் என்னை எட்டிப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச கொஞ்சமாய் சைக்கிள் பற்றிய பேச்சு மறைந்து என்னைப் பற்றி பேச ரம்பித்து விட்டனர். எனக்கென்னவோ என் சைக்கிள் திருடு போனதாகவே பட்டது. என் நல்ல பல குணங்களைப் பற்றி எல்லோரும் உச்... கொட்டிப் பேசினார்கள். அதைக் கேட்டு இவ்வளவு நற்குணங்கள் என்னிடம் உள்ளதா என வியந்தேன்.
ஓரிரு நாட்கள் சுற்றுப் புரத்தில் சைக்கிள் திருட்டுப் போன சோகம் அப்பியிருந்தது. நான் எங்கே போனாலும் தொடர்ந்திருக்கும் அரட்டைகள் அப்படியே நின்று விடும். எல்லோரும் என்னை அனுதாபப் பார்வை பார்த்து பேச ரம்பித்து விடுவார்கள். இப்படியாய் சாகாமல் செத்துப் போனவனின் நிலையை அனுபவிப்பேன். இறந்தபின் நான் என்னைப் பற்றிய பேச்சுகளை கேட்க இயலாதுதான். னால் சக்கிளை இழந்ததின் காரணமாய் நான் அதை அனுபவித்து விட்டேன். என் சைக்கிளை திருடி எனக்கு இந்த அற்புத சுகத்தின் அனுபவத்தை தந்த அந்த மகராசனை மீண்டும் வணங்கி மண்டியிடுகிறேன்.
------------------------------------------------------------------
அசோக் சுக்லா: (பிறப்பு 1940)
இந்தி இலக்கிய உலகில் எழுத்தாளர் அசோக் சுக்லா மிகவும் பிரபலமானவர். இவருடைய சமூக விமர்சனக் கட்டுரைகளை படிக்க மிகப் பெரிய வாசகர் வட்டம் ஒன்றை ஏற்படுத்தி வைத்துள்ளார்.
இந்தி இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெற்ற சுக்லா விமர்சனங்கள், கட்டுரைகள், கதைகள், புதினங்கள் என பலதரப்பட்ட படைப்பாக்கங்களில் தனது திறமையை வெளிப் படுத்தியுள்ளார். இவருடைய எழுத்தில் உள்ள அங்கதமும், நகைச்சுவையும் யாரையும் கவரக் கூடியது. மிகக் கடினமான விஷயங்களையும் தத்துவங்களையும் பிரச்சனைகளையும் மிக எளிமையான மொழியிலும் நகைச்சுவை கலந்தும் சொல்லி விடுவார். அரசு மற்றும் அரசியல்வாதிகள் சமூக அவலங்கள் என அனைத்தையும் தனது நகைச்சுவை சாட்டையால் விலாசி விடுகிறார்.
கட்டுரையாளராக அதிகம் அறியப் பட்ட இவரின் 'புரொபேசர் புராண்' என்ற நாவல் பிரச்சித்தம். மேலும் ' ஹட்தால் ஹரிகதா' என்ற சிறுகதைத் தொகுப்பும் பரபரப்பாக பேசப் பட்டவை. கட்டுரைத் தொகுப்புகள் அனைத்தும் குறிப்பிடத் தக்கது.
தற்போது இந்தி மொழியில் வெளியாகும் முன்னனி பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

1 comment:

Unknown said...

Arummai...
A simple and superb story..
Please place the Aa in the proper place.. I think your story writing is Aa Aa...