அவளும் மல்லிகையும்-II
ஜாக்கெட் ஊக்கை
மாட்டிக் கொண்டிருந்த
உன் கைகள்
உதிர்ந்த மல்லிகைகளை
பொறுக்கிய என் கைகளை
தட்டி விட்டது
காரணம் சொல்லாமல்
அப்படி செய்யக் கூடாது என்றாய்
பாவாடை நாடாவை இறுக்கியபடி
ஆனாலும்
வாசனை மூளையிலும்
மல்லிகை புத்தகத்திலும்
பத்திரமாய் இருக்கிறது.