மதியழகன் சுப்பையா கவிதைகள்
Saturday, December 27, 2003
அவளும் மல்லிகையும்
வாங்கிச் சென்ற
மல்லிகைப் பூவை
வேண்டாம் என்ற போது
ஏன் ? என்று கேட்க வில்லை
வீசி எறிந்து
கோபப் படவில்லை
கசங்காமல் வீட்டிற்கு
எடுத்து செல்வது பற்றி
சிந்தித்திருந்தேன்
அடுத்த சந்திப்பின் போதும்
மல்லிகையுடன் வருவேன்.
Newer Post
Older Post
Home