Friday, December 05, 2003

நான்........

காட்சிகள் பற்றியே
கவிதைகள் தந்தவன்
கண்கள் இல்லாதவன்

உன்னத உணர்ச்சிகளை
ஓவியமாக்கியவன்
வண்ணங்கள் இல்லாதவன்

உலகின் தூரங்களை
ஓடிக் கடந்தவன்
கால்கள் இல்லாதவன்

ஒப்பில்லாத உயர்ந்த
கருத்துகள் உரைத்தவன்
பேச்சு இல்லாதவன்

மங்கயர் மே னியின்
மகத்துவம் சொ ன்ன வ ன்
மன ங களை தெ ரயாதவ ன்

இ ம ய ச் சிகரங்களை
எட்டித் தொ டுபவ ன்
இ தயம் தொ ட ா த வ ன்

காதல் சுவைப் பட
காவியம் செய்தவன்
காதல் தெரியாதவன்

வாழும் முறைகளை
எழுதி வைத்தவன்
வாழத் தெரியாதவன்.