Thursday, July 05, 2007
பில் கேட்ஸ் மகளுக்கு திருமணம்
----------------------------------------
தந்தை: மகனே! நான் சொல்கிறப் பெண்ணத்தான் நீ மணந்து கொள்ள வேண்டும்.
மகன்: முடியாது. நான் என் விருப்பத்திற்கேற்ப பெண் பார்த்துக் கொள்வேன்
தந்தை: ஆனால் நான் உனக்காகப் பார்த்தப் பெண் பில் கேட்ஸ்சின் மகளாயிற்றே..?
மகன்: அப்படியானால்... ஓ.கே.
அடுத்து தந்தை பில்கேட்ஸை சந்திக்கிறார்.
தந்தை: உங்கள் மகளுக்காக நான் ஒரு வரண் கொண்டு வந்திருக்கிறேன்
பில் கேட்ஸ்: ஆனால் எனது மகளுக்கு திருமண வயதுகூட ஆகவில்லையே?
தந்தை: நான் பார்த்திருக்கும் வரண் உலக வங்கியில் வைஸ் பிரசிடென்ட்டாக இருக்கிறானே...
பில் கேட்ஸ்: ஆஹ! அப்படியானால் ஓ. கே..
இறுதியாக தந்தை உலக வங்கியின் பிரசிடென்ட்டை பார்க்கச் செல்கிறார்.
தந்தை: எனக்குத் தெரிந்த ஒரு இளைஞன் உங்கள் நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட்டாக இருக்க தகுதியானவர். சேர்த்துக் கொள்ளுங்களேன்.
பிரசிடென்ட்: மன்னக்கவும். ஏற்கனவே எங்களிடம் தேவைக்கும் அதிகமான அளவு வைஸ் பிரசிடென்ட்கள் உள்ளனரே..
தந்தை: இருக்கலாம். ஆனால் நான் சொல்லும் இளைஞன் பில் கேட்ஸ்சின் மருமகனாயிற்றே...
பிரசிடென்ட்: ஆஹ! அப்படியானால் நிச்சயம் சேர்த்துக் கொள்கிறேன்.
தொழில் செய்வோர்களின் சூத்திரம் இதுதான்.
நீதி: உங்களிடம் எதுவும் இல்லையென்றாலும் செயல்கள் சிறப்பாய் நடந்தேரும் ஆனால் உங்கள் எண்ணம் மட்டும் எப்பொழுதும் பாஸிட்டிவாக இருக்க வேண்டும். அதனால் எப்பொழுதும் பாசிட்டிவாக சிந்தியுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
எல்லாம் சரிதான் ஆனால் பெண்ணின் விருப்பம் கேட்கப்படவே இல்லை.
***
நீதி:
நீங்கள் எப்போதும் உங்களைப் பற்றியே சிந்தியுங்கள். அடுத்தவரின் விருப்பம் நமக்குத் தேவை இல்லை.
ஏதோ செய்திதான்போலன்ணு வந்தா....
கத நல்லாத்தான் இருக்குது.
:))
Post a Comment