Wednesday, April 18, 2007

மூக்குக்கண்ணாடி





இந்தியில்: பேடப் பனாரசி
தமிழில்: மதியழகன் சுப்பையா

இருபதாம் நூற்றாண்டின் அணிகலன், எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கான சான்றிதழ், படிப்பறிவு பெற்ற பெண்களின் உடலை அலங்கரிக்கும் அழகு சாதனம். குறைவாக படித்தவர்கள் தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள பயன் படுத்தும் சாதனம், செல்வந்தர்களின் அவசிய நோய்க்கு மருந்து மற்றும் கடைகளில் நூறு சதம் லாபத்திற்கான பொருள்தான் மூக்குக்கண்ணாடி. இன்று மூக்குக்கண்ணாடியின் உற்பத்தி பாரத்தில் மிக பரபரப்பாக கிக் கொண்டிருக்கிறது. கணக்கெடுப்பும் புள்ளி விபரங்களுக்கான இந்த கால கட்டத்தில் இது சாத்தியமில்லைதான். மக்கள் என் பேச்சை நம்ப மாட்டார்கள்தான். னால் அரசு சார்பாக இது குறித்து கணக்கெடுப்பு (சென்செஸ்) எடுத்தால் நகரத்தில் மூக்குக்கண்ணாடியை ஒருவர் கூட பயன்படுத்தாக குடும்பம், வீடு இதுவென ஒன்றைக் கூட காட்டி விட முடியாது. கிராமத்தில் மூக்குக்கண்ணாடி இன்னும் அதிகம் பிரபலமாகவில்லைதான். னால் கிராமங்கள் முன்னேற்றப் பாதையில் இன்னும் பின் தங்கிதானே இருக்கிறது.
ஒரு தனி மனிதனின் ளுமையை ஏத்திக் காட்ட மூன்று பொருட்கள் உள்ளன. அவை கைக்கடிகாரம், பவுண்டன்பேனா மற்றும் கண்களில் கண்ணாடி. யாரிடமெல்லாம் இந்த மூன்றும் இருக்கிறதோ அவர்கள் பர்ஸ்ட் கிளாஸ், யாரிடமெல்லாம் இதில் இரண்டு மட்டும் இருக்கிறதோ அவர்கள் செகண்ட் கிளாஸ், யாரிடமெல்லாம் இதில் எதாவது ஒன்று மட்டும் இருக்கிறதோ அவர்கள் தர்டு கிளாஸ் மனிதனாக மதிக்கப் படுகிறான். இதிலும் பல கிளைகள் உள்ளன வாசகர்களை இன்னும் ழமாக அழைத்துச் செல்ல விரும்பவில்லை. அப்படியானல் நீங்கள் கேட்கலாம். இந்த மூன்றும் இல்லாத ஒருவன் எந்தக் கிளாஸ்? என்று. நாகரீக சமூகம் அவரை மனிதனாகவே மதிக்காது. இதில் கிளாஸ் எப்படி கிடைக்கும். கையில் ரிஸ்ட்வாட்ச் கட்டிக் கொண்டு வயலில் உழுகின்றார்களோ அல்லது மூக்குக்கண்ணாடியை மாட்டிக் கொண்டு எந்தப் புல் நல்ல புல் என்று தேர்ந்து அறுத்துக் கொள்கிறார்களோ அல்லது பாமரர்கள் சாதாரண எழுதுகோலை தவிர்த்து பவுண்டன் பேனா மூலம் சித்திரகுப்தனைப் போல் செல்வந்தர்கள் மற்றும் ஜமீன்தார்களின் தலைவிதியை எழுதுகிறார்களோ அன்றுதான் கிராமத்தில் நாகரீகத்தின் காற்று வீசத் துவங்கும்.
மூக்குக்கண்ணாடி இந்தியாவிற்கு எப்பொழுது வந்தது? யாரால் சொல்ல முடியும்? ரிக் வேதத்தில் இது குறித்த குறிப்பு இல்லை. ரண்ய காலத்தில் ரிஷிகள் மூக்குக்கண்ணாடி போட்டுக் கொண்டு சோமரஷம் குடித்திருப்பார்களோ இல்லை ஹோமம் வளர்த்திருப்பார்களோ என்பது குறித்து எதுவும் விபரம் இல்லை. ஸ்வாமி தயானந்த் இது குறித்து எதுவும் சொல்லி கருணை காட்டவில்லை. சயானாச்சார்யரும் இது குறித்து சுட்டிக்காட்டவில்லை. பிதாமகர் பந்த்ஜலி இது குறித்து மகாபாஷ்யாவில் எந்த விளக்கமும் தரவில்லை. மேக்ஸ்முல்லருக்கும் இது கூளர் மலர் போன்றுதான் இருந்திருக்கிறது. அந்தக்காலத்தில் படிப்பது என்பது கிடையாதே. எல்லாம் பாடல்களாகவே இருந்தது. னால் வேதங்களில் விமானத்தின் பூர்வீகம் மற்றும் உலகின் அனைத்து ஞான-விஞ்ஞான பொருட்களின் குறிப்புகள் குறிக்கப் பட்டுள்ளது. னால் மூக்குக்கண்ணாடி பற்றித்தான் எந்தக் குறிப்பும் இல்லை. இதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஒருவேளை மூக்குக்கண்ணாடி பக்கம் யாருக்கும் கவனம் போகவில்லையா இல்லை இது குறித்து அறிவில்லையா.
இந்தி இலக்கியவாதி துளசிதாஸ் மூக்குக்கண்ணாடி பயன்படுத்தவில்லை. இன்னும் விபரமாகச் சொன்னால் அவர் மூக்குக்கண்ணாடி என்ற வார்த்தையையே பயன் படுத்தவில்லை. இந்தி மொழியின் பிரபல கவிஞர் பிகாரிலால் இந்த வார்த்தையை தனது 'தோஹே' எனப்படும் ஈரடிக் கவிதைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் அந்த கால கட்டத்திலேயே இந்தியர்கள் மூக்குக்கண்ணாடியை பயன் படுத்தத் துவங்கி விட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் சூரியனின் கதிர்கள் பிரகாஷ தேஷத்தில் துவங்கியது.அதே போல் மூக்குக்கண்ணாடியின் துவக்கம் பாரதத்தில் துவங்கி இருக்கலாமோ. ஒருவேளை அந்த காலத்தில் மூக்குக்கண்ணாடிக்கும் அதிக முக்கியத்துவம் இருந்திருக்கலாம். வாகனங்கள் இல்லாமல் மனிதனால் வாழ்க்கை நடத்திவிட முடியும். எதுவும் முடியவில்லை என்றால் அவனால் நடந்தே கூட போக முடியும். கடிகாரம் இல்லையென்றால் வெயிலின் துணையால் நேரத்தை அறிந்து கொள்ள முடியும். டைப்ரைட்டர் இல்லையென்றால் பிறரின் உதவி கொண்டு எழுதிக் கொள்ளலாம். னால் மூக்குக்கண்ணாடி இல்லையென்றால் பிறருடைய கண்களால் பார்ப்பதில் என்ன மஜா இருந்து விடப் போகிறது.
மூக்குக்கண்ணாடியால் எத்தனை நன்மைகள் உள்ளது. அதற்கு நல்லதொரு எதிர்காலமும் உள்ளது. எதுவரை என்பது குறித்து கணக்கிட்டுக் கொள்ளலாம். உங்கள் கண்களில் யாராவது மண்தூவ நினைத்தால் மூக்குக்கண்ணாடி உங்கள் கண்களை காப்பாற்றிவிடும். தொலைவிலிருக்கும் பொருட்களை பார்க்க வேண்டுமனால் அது துல்லியமாக காட்டிவிடும். அப்படியானால் அது உங்கள் எதிர்காலத்தை காட்டுவதாக கி விடுகிறது இல்லையா. கண்கள் எழ நினைத்தால் விடாது. அதே நேரத்தில் சரியாக பயன்படுத்தினால் உட்காரவும் விடாது. கண்நோயை வர விடாது வந்துவிட்டால் போக விடாது. நீங்கள் இப்பொழுதாவது தப்பானக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் உங்களை மறைத்துக் காக்கும் திரைபோல மூக்குக்கண்ணாடி விளங்கும். உங்களை யாராலும் கண்டு பிடித்து விட முடியாது. சாதாரண மூக்குக்கண்ணாடியால் பல சமயங்கள் கஷ்டங்கள் ஏற்படலாம். அதனால்தான் வெளிநாட்டின் விஞ்ஞான மேதைகள் ய்வுகளை செய்து வண்ணங்களில் கண்ணாடியை கண்டு பிடித்துக் கொடுத்து உள்ளனர். பெரிய அவைகளில், மாநாடுகளில், ரயில்களில், விழாக்களில், கேளிகை நிகழ்ச்சிகளில் என அனைத்து இடங்களிலும் நீங்கள் வண்ண மூக்குக்கண்ணாடிகளை அணிந்து கொண்டு யாரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப் படுகிறீர்களோ அவர்களை மணிக்கணக்கில் பார்த்துக் கொண்டிருங்கள். உங்கள் கண்களை யார் மீது போகஸ் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்கள் மீது போகஸ் செய்யுங்கள். அவர்களால் உங்களை கண்டு பிடிக்கவே முடியாது. னால் வெறுங்கண்ணால் இப்படிப் பார்த்தால் சரியான உதை கிடைக்கும் நிலையாகி விடும். உண்மையிலேயே வண்ண மூக்குக்கண்ணாடிகளை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் உலக மனிதர்கள் அனைவருடைய நன்றிக்கும் பாத்திரமாக விளங்குகின்றனர்.
மனித சமூகத்திற்கு மூக்குக்கண்ணாடி எத்தனை பிரியமானதாக இருக்கிறது என்ற விஷயத்தில் யாருடைய கவனமும் போகவில்லை போல. இதில் சிலர் மூக்குக்கண்ணாடி அணிந்து கொள்பவர்களைப் பார்த்து கேலி செய்வதும் உண்டு. நீங்கள் உங்கள் மூக்கின் மேல் ஈயை உட்கார அனுமதிக்க மாட்டீர்கள் னால் மூக்குக்கண்ணாடி உங்கள் மூக்கின் மேல் குதிரையின் மேல் அமர்ந்திருப்பவரைப் போல் அல்லது எருதின் முதுகில் உட்கார்ந்திருக்கும் காக்கையைப் போல் உட்கார்ந்து இருக்கும். தங்கள் மனைவிகளைக் கூட விட்டு விடுவார்கள். உலகில் விவாகரத்து என்பது நடந்து கொண்டேதான் இருக்கிறது. னால் மூக்குக்கண்ணாடியை யாரும் விட்டுவிட்டதாக கேள்வி பட்டதில்லை. இது யாருடைய கண்ணகளிலாவது மாட்டி விட்டால் வாழ்க்கை முழுவதும் மாட்டிக் கொள்ளும். உட்கார-எழ, எழுத-படிக்க, படுக்க - எழ என மூக்குக்கண்ணாடி பிரிக்கமுடியாததாகி விடும். என்னால் நிச்சயமாக சொல்ல முடியாது னால் யாருக்கெல்லாம் மூக்குக்கண்ணாடி மாட்டிக் கொள்ளும் பழக்கம் ஏற்பட்டு விடுகிறதோ அவர்கள் மூக்குக்கண்ணாடி இல்லாமல் தூங்கும்போது அவர்களுக்கு கனவு மங்கலாகத்தான் தெரியுமாம். அப்படித்தானே தெரிந்தாக வேண்டும்?
பொழுதுகளில் மூக்குக்கண்ணாடி நமக்கு நன்மை செய்து விட்டுப் போகிறது. நண்பர் ஒருவர் மிகவும் மிடுக்காக இருப்பவர். னால் அவருக்கு ங்கிலம் வாசிக்கத் தெரியாது. ஒருமுறை அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அருகில் இருந்த ஒருவன்நீதிமன்ற வழக்குத் தொடர்பாக எங்கோ போய்க் கொண்டிருந்தான். அவன் தனது பையிலிருந்து ஒரு காகித்ததை எடுத்தான். அது நீதிபதியின் தீர்ப்பாக இருக்கக் கூடும். அதை டிப்-டாப் நண்பரிடம் கொடுத்து '' இதில் என்ன எழுதியிருக்குன்னு கொஞ்சம் படிச்சி சொல்லுங்களேன்.'' என்றான். நண்பரோ அந்தக் காகிதத்தை தலைகீழாக பிடித்துக் கொண்டு தனது சட்டைப்பையில் கைகளை விட்டு அப்படியும் இப்படியும் துழாவினார். பின் '' ஐய்யோ! மூக்குக் கண்ணாடியை வீட்டிலேயே மறந்து விட்டு வந்து விட்டேனே.என்னால் படிக்க முடியாதே'' என்றார். எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மூக்குக்கண்ணாடி மட்டும் இருந்திருந்தால் அவரது மரியாதை என்னவாகியிருக்கும்?
நீங்கள் சிரியர் பணி செய்பவராக இருந்தால் உங்கள் மாணவர்களில் ஒருவர் திடீரென உங்களிடம் கேட்ட கேள்விக்கு உங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை என்றால் படாரென கண்ணாடியைக் கழற்றி விட்டு அதை துடைக்கத் துவங்குங்கள் அதைத் துடைக்கும் இடைவேளையில் பதிலை யோசித்துக் கொள்ளுங்கள். இப்படியாக உங்களின் பழகீனத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. வியாக்யானம் பேசித் திரிபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளப் பொருளாக இருக்கும். எப்பொழுதாவது எதையாவது மறந்து விட நேர்கையில் கண்ணாடியை கழற்றிக் கொள்ள வேண்டும் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு பின் கண்ணாடியை அணிந்து கொண்டு உரையை துவங்கி விட வேண்டும் அவ்வளவுதான்.
இப்படியாக பல காரணங்களால் மூக்குக்கண்ணாடி மிகவும் பயனுள்ள பொருளாகி விட்டது. வியக்கும் விஷயம் என்னவென்றால் இன்று பாரதம் முழுவதும் ஏன் மூக்குக்கண்ணாடி மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறது என்பதுதான். மூக்குக்கண்ணாடியால் இன்னுமொரு நன்மையும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன் படுத்தும்படியாக ஒரு பொருள் இல்லவே இல்லை. சிலர் கோட் அணிகிறார்கள், சிலர் வேட்டி, சிலர் குள்ளாய், சிலர் கோமனம், சிலர் சூட்டு, இன்னும் சிலர் சிலவற்றை. தலைப்பாகை மற்றும் தொப்பிகளில் கூட வேறுபாடு உள்ளது. காந்தி தொப்பியையும் எல்லோரும் அணிந்து கொள்ளவதில்லை. அனைவரும் பயன் படுத்திக் கொள்ளும்படியாக ஒரு பொருளும் இல்லை.
முக்குக்கண்ணாடி ஒரு அற்புதமான பொருள். இதனை ஏழை-பணக்காரன், தொழிலாளி-முதலாளி, ண்கள்-பெண்கள், சிறுவர்-முதியோர், இந்து- முஸ்லீம், பெளத்தர்-ஜைனர் இப்படி அனைவரும் அணிந்து கொள்ளலாம். பாரத மக்கள் முழுவதும் மூக்குக்கண்ணாடி மாட்டிக் கொண்டு திரியும் அந்த நாளைக் கடவுள் சீக்கிறமாகவே காட்டுவான். அப்பொழுது பாருங்கள் நம் நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வு படரும். அப்பொழுது ஒருவருக்கு ஒருவர் கண்ணாடி கண்களால் பார்க்க மாட்டார்கள்.

------------------------------------------------------------------------

எழுத்தாளர் பேடப் பனாரசியின் இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ணதேவ் கவுட் கும். இவர் காசியில் டி.எ.வி கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். இவர் நகைச்சுவை நையாண்டி கட்டுரைகள் எழுதுவதில் பிரபலமானவர். இந்தி எழுத்துலகில் இவரை 'ஹாஸ்யரசாவதார்' என்று அழைப்பதுண்டு. இவரது கட்டுரைகளில் நகைச்சுவை மட்டுமல்லாமல் மொழிச் செலுமையும் இருக்கிறது.
இவரது படைப்புகளில் 'பேடப் கி பெஹக்', 'காவ்ய-கமல்', பனாரசி இக்கா' கிய கட்டுரைத் தொகுப்புகளும் 'டனாடன்' என்ற கதை தொகுப்பும் ' அபினேத்தா' என்ற நாடகத் தொகுப்பும் பிரபலமானவை.

No comments: