Saturday, April 07, 2007

வகைவகையாய்....

பாலாமணிக்கு ரொம்ப நீளம்
குண்டிக்கு கீழே தொங்கும்

மல்லிகாவுக்கு மோதிரம் மாதிரி
சுருள் சுருளாயிருக்கும்

எஸ்தருக்கு பப்பு கட்டு
டவுசர் சட்டைக்காரிக்கு
அதான் சரி

மீனாவுக்கு நல்ல அடர்த்தி
சடை போட்டானா
அட! போடலாம்

ராணிக்கு குதிரவாலு
ஒன்னுக்கும் உதவாது

கீதாவுக்கு ரெட்டைச் சடை
முடியருவி போல முலைதட்டும்

இசக்கிப் பாட்டிக்கு
எழுவது வயசு
ஒத்தமுடி உதிரல
பத்துக்கு ஒன்னுல மட்டும் நரை

கோவிந்திக்கு சிக்கு முடி
அத்துப்போட ள்தேடுவா

பார்வதிக்கு பஞ்சுமுடி
கோதி விட கை துடிக்கும்

கவிதாவுக்கு செம்பட்டை

பாத்திமாவுக்கு எப்படியோ?
மூடிக்கிட்டுத்தான்
வலம்-இடம் வருவா.

ராஜத்துக்கு சவுரிதான்
குளிக்கவே மாட்ட ஊத்தநாறி

மாலாவுக்கு கம்பிமுடி
எப்படியும் நிக்கும்

கோமதிக்குத்தான் கச்சிதம்
குளிச்சி முடிச்சி
சைடு முடியெடுத்து
பின்னிக்கிட்டான்னா
அம்மன்சாமி அசந்திடுமில்ல



மதியழகன் சுப்பையா

மும்பை

2 comments:

நண்பன் said...

Your hair fetish is interesting to read!!!

கல்லூரிக் கால கனவுகள் மீண்டும் வரக்கூடும் வாசிப்பவர்களுக்கு-

கல்லூரியில் தான் இருக்கிறார்கள் என்றால் கூர்ந்து நோக்கக் கூடும், தன் சூழலை.

உங்களின் கவனிப்புக்கு ஒரு பாராட்டு.

நண்பன்

Lovechennai said...

கோமதி யாருங்கோ?.