Saturday, May 12, 2007

மேதமை கடந்த கவிஞன்- விந்தா



மராட்டி இலக்கிய உலகில் 1947ம் ண்டு பா.சி. மண்டேகரின் ' காஹி கவிதா' என்ற தொகுதி புதுக் கவிதையின் துவக்கமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து புதுக் கவிதைகள் அசூர வேகத்தில் எழுதப் பட்டு வந்திருக்கிறது. புதுக் கவிதையின் வேக வளர்ச்சியும் அது கடந்து வந்த காலத்தையும் கவனத்தில் கொள்கையில் அதனை புதுக் கவிதை என விழித்தல் தகுமா என்பது விவாதிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. புதுக்கவிதையின் இன்றைய வயது மூன்று தலைமுறையாகி விட்டது. னால் இந்த தலைமுறைக் கவிதைகள் புதிய இலக்கு தேடி வேகமெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பலமுறை தேக்க நிலையும் கண்டிருக்கிறது. இடையிடையே நித்திய பிரவாகமாகவும் பாய்ந்திருக்கிறது. இந்த ஓட்டங்கள் க்கமான திசைகள் நோக்கியும் பல இதற்கு நேர் எதிர் திசையை நோக்கியும் பயணித்துக் கொண்டிருந்தது. இலக்கிய மற்றும் சமூகத்தில் இந்த புதுக் கவிதைகளுக்கு தரவும் வெறுப்பும் சமமாகவே இருந்தது. மராட்டி புதுக் கவிதைகள் துவக்கக் காலத்தில் அழமான அடித்தளம் அமைத்துக் கொண்ட காரணத்தால் இன்று அவை அசைக்க முடியாத அளவுக்கு பலம் பெற்று நிற்கின்றன. மராட்டி புதுக் கவிதைகளின் முதல் தலைமுறைக் கவிஞர்களில் விந்தா கர்ந்திகர் சிறப்பிடம் பிடித்தவர். கோவிந்த் வினாயக் கரந்திகர் என்ற தனது பெயரில் கோவிந்த் மற்றும் வினாயக் என்ற சொற்களை பொதுப்படையாக கருதாத காரணத்தால் 'விந்தா' என்று சுறுக்கிக் கொண்டார். மேலும் இப்பெயர் பெண்பாலாக ஓலிப்பது இவருக்கு அதிகம் பிடித்திருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். விந்தா மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் பகுதியில் சிந்துதுர்கா மாவட்டத்தின் கால்வான் கிராமத்தில் கஸ்டு 23ல், 1918ம் ண்டு பிறந்தார். வறுமையான சூழலில் பல தடைகளை மீறி கல்வி கற்றார். இயல்பாகவே அவருக்குள் இருந்த அறிவு தாகம் அவரைத் தேடிப் படிக்கச் செய்தது. 1949 முதல் 1981 வரையிலான காலக் கட்டம் விந்தாவின் படைப்புகள் உச்சத்தில் இருந்த காலக் கட்டமாகும். ஸ்வேத்கங்கா (1949), மிருதகந்த் (1954), துருப்பத் (1959), ஜாதக் (1968) மற்றும் விருபிக்கா(1981) கியவைகள் இவரது கவிதைத் தொகுதிகளாகும். இவை மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கான கவிதைகளையும், சிறுகதைகளையும் மற்றும் ய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு உள்ளார். மேலும் 'அரிஸ்ட்டடால் காவ்யசாஸ்த்ர' கோத்தேயின் 'பாவுஸ்ட்' மற்றும் ஷேக்ஸ்பியரின் 'ராஜா லியர்'' கிய மொழி பெயர்ப்புகளையும் செய்து உள்ளார். விந்தா தனது கவிதைகளையும் ங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இவ்வாறு இவரது இலக்கியப் பணி விதவிதமாக அலங்காரப் பட்டிருக்கிறது. ஞானபீட விருது பெற்றிருக்கும் விந்தா கராந்திகர் 87 வயதில் அனுபவச் சுறுக்கங்களை உடல் முழுவதும் பெற்றிருக்கும் மேதை. அவரை மராட்டி மொழி கவிஞராகவும் எழுத்தாளராகவும் மட்டுமே குறிப்பிடுவது சிறப்பாக இருக்காது. உலக இலக்கியத்தில் இடம் பிடித்த மராட்டிக் கவிஞன் என்று கூறுவது மிகையாக இருக்காது. இலக்கியத்தில் இலக்கு இதுவென நிர்ணயிக்காமல் மொழியையும் நாட்டையும் தாண்டி பயணப் படுபவனை இலக்கியவாதி என்று குறிப்பிட்டுக் கொள்ளலாம். கவிதையாகவோ உரைநடையாகவோ தான் சார்ந்த மக்களின் வாழ்நிலையை பதிவு செய்யும் படைப்பாளியை மொழி மற்றும் மாகாண எல்லைகளால் தடுத்து நிறுத்த முடியாது. விந்தா கரந்திகர் இந்த இலக்கை தொட்ட கவிஞன் என்பது ய்வின் முடிவு. அவரது படைப்பூக்கம், உலக வாழ்வின் போராட்டங்கள் மற்றும் தனித்துவத்தை அடைய முனையும் உழைப்பு கியன மொழி மற்றும் நாடு என்ற சிறிய வட்டத்தில் அவரை அடைத்து வைக்க முடியவில்லை. மும்பையின் புறநகர் பாந்திராவின் மேற்குப் பகுதியில் சாஹித்திய வாசாகத் அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வருகிறார். விந்தா கரந்திகர் வயோதிகம் காரணமாக மிக மெதுவாக நடக்கும் கம்பீரக் கவிஞன். தினமும் காலையில் காய்கறி மற்றும் பழங்களை வாங்க தனது மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி வருகிறார். இதுவரை தனது காய்கறிப் பையை எவரையும் தூக்கிக் கொள்ள அனுமதித்ததில்லை. சிக்கனமாகவும் எளிமையாகவும் வாழும் விந்தா கரந்திகர் லட்சக்கணக்கான ரூபாய்களை பொதுநலத்திற்காக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இளையவர்கள் காலில் விழுந்து சி பெற முனைந்தால் கடுமையாக மறுத்து விடும் இவர் சமவுடமைக் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு அதன்படி வாழ்ந்து வந்தவர். தனது வாழ்வில் வணக்கத்திற்குறியவர்களாக சானே குருஜி, சேனாபதி பாபட் மற்றும் பாபா அம்டே கியோரைக் குறிப்பிடும் இவர் இதுவரை எவர் காலிலும் விழுந்ததில்லை. மேற் குறிப்பிட்டவர்களில் முதல் இருவர் காலமாகி விட்டனர். பாபா அம்டே தனது இறுதிகாலங்களை நாக்பூர் அருகில் கழித்து வருகிறார். னால் விந்தா கரந்திகருடன் தொடர்பில் இல்லை. வறுமைச் சூழலில் வளர்ந்த விந்தா மும்பையின் ருயியா கல்லூரி மற்றும் ஐஏஇஎஸ் கல்லூரியில் ங்கில இலக்கியப் பேராசிரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எப்பொழுதும் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருக்கும் இவர், வீட்டில் தச்சுப் பணிகளையும் செருப்பு தைத்தலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்துள்ளார். தற்போது ங்கில இலக்கிய பேராசிரியராக பணியாற்றி வரும் அவரது மாணவர்களில் ஒருவர் '' விந்தா மிகச் சிறந்த சிரியராகவும் தெளிவான சிந்தனையாளராகவும் இருந்தார்'' என்று குறிப்பிட்டுள்ளார். ''அவர் எங்களுக்கு ஷேக்ஸ்பியரின் 'மெர்சன்ட்ஸ் ப் வெனிஸ்' மற்றும் 'மேக்பெத்' நாடகங்களை நடத்தினார். அந்த நாடகங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலவ விட்டது போல் இருக்கும் அவர் பாடம் நடத்துகையில்'' என்று நினைவு கூர்கிறார். சிகாகோ பல்கலைக் கழகத்திலும் சிறிது காலம் பணியாற்றி உள்ளார். இந்த காலக் கட்டதில்தான் ங்கிலதிலிருந்து மராட்டியில் மொழி பெயர்ப்புகளையும் செய்தார். 'விந்தாவின் கவிதைகள்' என்றும் 'இன்னும் கொஞ்சம் கவிதைகள்-விந்தா' என்றும் தனது கவிதைகளை ங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளார். இந்த கவிதைத் தொகுதியை ஏ.கே ராமானுஜத்திற்கு அற்பணம் செய்துள்ளார். சிகாகோவில் இருக்கும் போது ஏ,கே ராமானுஜரின் தமிழ் மற்றும் கன்னட பழங்கவிதை மொழி பெயர்ப்புகளால் பெரிதும் கவரப் பட்டார். மழலைகளுக்காக மிகச் சிறந்த மராட்டி 'ரைம்களையும்' எழுதியுள்ளார். தனது தாய் மொழியின் இனிமையை மராட்டி குழந்தைகள் பால்ய வயதிலேயே உணர வேண்டும் என்பதற்காகவும் மொழியின் வளர்ச்சியில் எங்கும் இடைவெளி விழுந்து விடக் கூடாது என்பதற்காகவும் அவர் கடுமையாக போராடினார். குழந்தைகளையும் சிறுவர்களையும் கண்டால் குதூகலம் அடையும் விந்தா மிகச் சமீபம் வரை தனது மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் பட்டம் விட்டு விளையாடியிருக்கிறார். இலக்கியம் மட்டுமல்லாமல் பொதுநலப் பணிகளையும் செய்து உள்ளார். குடும்பக் கட்டுப்பாடு மற்றும் எயிட்ஸ் தடுப்பு போன்ற பணிகளுக்காக நிதி உதவியும் தரவும் தெரிவித்திருக்கிறார். ஹைதராபாத்தில் நிஜாமின் ட்சியின் போது விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப் பட்டு நான்கு மாதங்கள் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார். தனது முப்பதாவது வயதில் எழுதத் துவங்கிய விந்தா கரந்திகர் தனது கவிதைகளில் மார்க்ஸிச சிந்தனைகளை கலந்து எழுதினார். தனது கவிதைகளில் சமூக அநீதிக்கு எதிரான கோபத்தையும் எதிர்ப்புகளையும் அழுத்தமாக வெளிப்படுத்தினார். மராட்டி கவிதைகளில் புதுமையையும் சோதனைகளையும் அறிமுகப் படுத்தினார். கவிஞராக, கட்டுரையாளராக, விமர்சகராக, மொழிபெயர்ப்பாளராக அவர் இயங்கி உள்ளார். கவிதைகளில் தனி முத்திரைப் பதித்த கரந்திகர் தற்போது வெளிவராத ''சத்யகதா' என்ற இதழில் 1973ம் ண்டு 'வக்ரகுண்ட மகாகாய'' என்ற தலைப்பில் கடவுள் கணபதியின் துந்திக்கையை ண்குறியாக கண்டு அதன் மேல் சைப் படுவது போல் கவிதை எழுதியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது, மராட்டி இலக்கிய கூட்டங்களில் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. இவரது 'ஸ்வேத்கங்கா'' 'தொழிலாளர்களின் வியர்வை கங்கை' என்ற பொருள் படும் தலைப்பில் வெளியிடப் பட்ட முதல் கவிதைத் தொகுதியின் கவிதைகள் அதிகம் கொண்டாடப் பட்டவை. மராட்டிய பாட்டாளிக் கவிஞன், மில் தொழிலாளி, சாலை வாசகன் என்று அறியப்பட்ட நாராயண் சுர்வே கரந்திகரின் கவிதைகள் தனக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளாதாக தெரிவித்து உள்ளார். முற்போக்கு கவிதைகளை எழுதிய வசந்த் பாபட் மற்றும் மங்கேஷ் பட்காங்கர் கியோருடன் மூன்றாவது மூர்த்தியாக விந்தா கரந்திகரும் இணைந்து கொண்டார். முற்போக்கு எழுத்தில் இந்த மூம்மூர்த்திகள் நீக்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். யிரக்கணக்கான கவிதை பிரியர்களுக்கு பல ண்டுகள் இந்த மூவரும் கவிதை விருந்து படைத்தவர்கள். மதங்களை கடுமையாக வெறுக்கும் கரந்திகர் அயோதயாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதைத் தொடர்ந்து அப்பொழுது சத்தாரா மாவட்டத்தில் நடந்த மராட்டி சாஹித்ய சம்மேளன மாநாட்டில் மதவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஒரே கவிஞர் கரந்திகர்தான். மாநாட்டுக் கூட்டத்தில் வேறு எவரும் இவருக்கு தரவு தெரிவித்து குரல் கொடுக்கவில்லை. அது ஊமைகளும் செவிடர்களும் கலந்து கொண்ட மாநாடு என்று கவிஞர் சுரேஷ் பாட் பின்னர் தெரிவித்து உள்ளார். இவ்வாறான இலக்கியக் கூட்டங்களில் எந்த முன்னேற்றத்தையும் இன்றவும் காணாத அவர் மராட்டி சாஹித்ய சம்மேளனத்தின் தலைமை பொறுப்பு கொடுக்கப் பட்டபோது மறுத்ததோடு அல்லாமல் மாநாட்டிற்கு செல்வதையும் தவிர்த்தார். கரந்திகர் வசிக்கும் இலக்கியவாதிகள் குடியிருப்பு கட்டிடம் அருகில் கலா நகரில் ஓவியர்களும் கலைஞர்களும் இருக்கும் இடத்தில் சிவ சேனா தலைவர் பால்தாக்ரேவின் வீடு இருந்தது. (பால் தாக்ரே பத்திரிக்கையில் அரசியல் கார்டூனிஸ்டாக இருந்தவர்). கட்சி துவங்கி கோஷங்களுடன் கரந்திகரின் வீடு கடக்கையில் மாடியிலிருந்து '' டேய் பாலா, என்னடா சத்தம்? உன் அரசியல் பிரச்சாரத்தை காம்பவுண்டை தாண்டி வைத்துக் கொள். மனுஷன நிம்மதியா இருக்கவிடு'' என்ற அதட்டலில் மௌன ஊர்வலம் நடத்தி உள்ளார் சிவசேனாவின் சிங்கம் பால்தாக்ரே. அந்த அளவுக்கு கம்பீரமும் தைரியமும் உள்ள கவிஞர் கரந்திகர். இவர் சிவசேனா மற்றும் ர் எஸ் எஸ் போன்ற பாசிச கொள்கை அமைப்புகளுக்கு எதிராக இருந்தவர். சமூகத்தை சீர் கெடுக்கும் கொள்கைகளையும் அதனை ஏற்று நடக்கும் அமைப்புகளையும் வெறுத்தார் னால் மனிதர்களை வெறுக்கவில்லை. மராட்டி நாடக உலகின் உச்ச நட்சத்திரம் விஜய் டெண்டுல்கர் சிவசேனா கட்சியின் கொள்கைகள் பிடிக்காமல் அப்பொது முதல்வராக இருந்த மனோகர் ஜோஷியின் கைகளால் விருது பெறுவதை தவிர்த்தார். னால் கரந்திகருக்கு ஞானபீட விருது வழங்கப் பட்டதும் மனோகர் ஜோஷியின் கைகளால் பூங்கொத்து வாங்குவது போல் த டைம்ஸ் ப் இந்தியா நாளிதழ் புகைப் படம் வெளியிட்டது. இதற்கு '' தேடி வந்த விருதை எப்படி மறுக்க முடியவில்லையோ அப்படியே வீடு தேடி வந்து வாழ்த்துபவர்களை விரட்டவும் முடியவில்லை'' என்று மட்டும் சொல்லி வைத்தார். கரந்திகர் கேஷவ்சுத் பரிசு, சோவித் நாட்டின் நேரு இலக்கிய விருது, கபீர் சம்மான் விருது மற்றும் இந்திய சாஹித்ய அகதமியின் சீனியர் பெல்லோசிப் விருது கிய அவர் பெற்ற பல விருதுகளுள் குறிப்பிடத்தக்கவை. விருதுகளில் பெரிய விருது வாசகர்களின் அன்புதான் மற்றவைகள் எல்லாம் சம்பிரதாயமானவைகள் என தெரிவித்து உள்ளார். இலக்கியவாதி வி.எஸ் காண்டேகர், மற்றும் 'குசுமக்ராஜ்' என்று அழைக்கப் பட்ட கவிஞர் வி.வி ஷிர்வாட்கர் கியோர் வரிசையில் விந்தா கரந்திகருக்கும் ஞானபீட விருது வழங்கப் பட்டுள்ளது. சமீபமாக விந்தாவின் நினைவு மங்கி வருவதாகவும் யாருக்கும் பேட்டியளிப்பதில்லை எனவும் சந்தித்தவர்கள் தெரிவிக்கிறார்கள். னால் தனக்கு ஞானபீட விருது அறிவிக்கப் பட்டதும் '' இந்த விருது எனக்கு சொந்தமாக இருக்காது. இது மராட்டி மொழிக்கும் கவிதைக்கும் வழங்கப் பட்டது. இந்த விருது மராட்டி மண்ணை பெருமை படுத்துவது. இதனை எனக்கு வழங்கப் பட்டதாக குறிப்பிடாதீர்கள்'' என்று வாய்மொழிந்துள்ளார்.


மதியழகன் சுப்பையா

Tuesday, April 24, 2007

' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்'

அன்புள்ள எழுத்தாள நண்பர்களுக்கு,
வணக்கத்துடன் பாண்டித்துரை நான் பல்வேறு எழுத்தாளர்களிடம் ஒரே கேள்வி கேட்டு அதன் பதிலை அறிந்து தொகுப்பாக வெளியிடும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்களிடமிருந்தும் பதிலை எதிர்நோக்குகிறேன்.

கேள்வி
1. நவின இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?
2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?
3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யுனிகோடு வடிவில் எமுதிடவும்உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்இந்த சிறுவனின் முயற்சிக்கு உங்கள் பேனாவும் செவிசாய்க்கும் எனும் நம்பிக்கையில்
ப்ரியமுடன்
பாண்டித்துரை
சிங்கப்பூர்
006597345497
------------------------------------------------------------------------------
அன்பு சிறுவன் பாண்டித்துரைக்கு,
வணக்கம். உங்களின் ஆர்வமும் பணிவும் பாராட்டத்தக்கது.
வாழ்த்துகள். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பதில்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.திருப்தியாயின் மகிழ்வேன்.

1. நவீன இலக்கியம் இன்று எதை நோக்கி பயனப்படுகியது?

நவீன இலக்கியம் என்று எதைக் குறிப்பிடலாம். இல்லக்கண மரபுப் படி செய்யுள்கள் இயற்றப் பட்டு வந்த கால கட்டத்தில் புதுக் கவிதைகள் நவீன எழுத்து வடிவமாக கருத்தப் பட்டது. அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நம் அனைவரின் கண்கூடு. தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை அல்லது தான் சொல்ல வந்த விஷயத்தை தனக்கான மொழியில் பதிவு செய்து விடுதல் படைப்பாகி விடுகிறது. கவிதை என்று தலைப்பிட்டு இரண்டு வார்த்தைகள் வீதம் வரிகளை ஒன்றுக்கு கீழ் ஒன்றாக அமைத்து விட்டாள் அது கவிதை. பத்தியாக்கி விட்டாள் கட்டுரை. சிறிய இடைவெளிகளில் வசனம் எழுதி விட்டால் சிறுகதை எதுமை மோனை போட்டு விட்டால் பாட்டு இப்படி படிப்புகள் வடிவம் கொள்கிறது. ஆனால் அவை நவீன இலக்கியம் நவீன படைப்பு என்று அடையாளம் காண்பது எப்படி? புரியாமல் ஒரு படைப்பை படைத்து விட்டு இதை புரிந்து கொள்ள நீங்கள் இன்னும் பக்குவப் படவில்லை என்று பதில் சொல்லிக் கொள்வது நவீன படைப்பின் அடையாளமா? வெள்ளைத்தாளில் ஓவியர் ஒருவர் ஒரு கரும்பொட்டு வைத்து அதை சட்டமிட்ட கண்காட்சியில் வைத்து விடுகிறார். என்னப்பா ஒரு கருப்பு பொட்டு மட்டும் வச்சிருக்க, இதுவா ஓவியம் என்று கேட்டால். உங்களுக்கு கருப்பு பொட்டாகத் தெரிகிறது எனக்கு அது வானத்தில் பறக்கும் காக்கையாகத் தெரிகிறது அவருக்கு வேறு எதுவாகவும் தெரியலாம் என விளக்கம் தருகிறான். என்ன செய்ய? இது தான் நவீன படைப்பு அவரவர் அறிவிக்கு தகுந்த படி புரிந்து கொள்ள வேண்டியதுதான். இது இன்னும் எதை நோக்கிப் பயணப் படும் என்பது குறித்து நீங்களே முடிவுக்கு வரலாம். மாங்காய் புளிக்கும்
மரகதம் ஜொலிக்கும்
பலூனில் தண்ணீர்
சொட்டுகிறது.
பறக்கிறான் மனிதன்

இது ஒரு நவீன கவிதை.
யார் எழுதினார்கள் என்பது வேண்டாம். ஆனால் படித்து முடித்தவுடன். இதை ஏன் எழுதினார் என்று தான் கேட்கத் தோன்றியது. எழுதியவரிடம் கேட்டால். பீயை பார்ப்பது போல் பார்ப்பார். விளக்கமா தருவார். இன்று தமிழ் இலக்கியத்தின் நவீன படைப்பாளிகள் இப்படித்தான். நவீன படைப்புகளும் இப்படித்தான்.

உங்கள் கேள்விக்கு பதில் :

நவீன இலக்கியங்கள் எண்ணிக்கையில் முந்த ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நல்ல படைப்பு என்று குறிப்பிட நூற்றாண்டுகளுக்கும் ஒன்றும் இல்லாமல் போகும் நிலையை உருவாக்கப் போய் கொண்டிருக்கின்றன.

2. பெண் எழுத்தாளர்களின் இன்றைய நிலை (எழுத்தில்)?

பெண் எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகளின் வருகை மிகச் சிறப்பானது, அவர்களிடமிருந்து மிகச் சிறந்த படைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆதிக்க ஆண் வர்க்கம் அதனை பிரபலமாகமல் தனது பலத்தால் தடுத்து வருகின்றன. மிக நுணுக்கமான விஷயங்களை எளிமையாக குழப்பமில்லாமல் சொல்லும் ஆற்றல் பெண்களுக்கு இயல்பாக உள்ளது. எங்கே இவர்கள் நம்பை முந்தி விடுவார்களோ என்ற பேரச்சத்தின் காரணமாக ஆண் வர்க்கம் அதை முடக்கி வைத்து உள்ளது. பெண்களுக்கு நல்ல ஆதரவு கொடுக்கும் அமைப்புகள் முன் வந்தால் பெண்ணெழுத்து ஒரு புதிய சாதனைப் பாதையை உண்டாக்கித் தரும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கேள்விக்கு பதில்:

மிக மோசமாக வரவேற்கப் பட்டு. முடிக்கி வைக்கப் பட்டுள்ளது.

3. பாரதி பாரதிதாசனுக்குப் பின் ஒரு சமூக எழுச்சி ஏற்படுத்ககூடிய கவிஞர்கள் உருவாததன் காரணம் என்ன?

யார் சொன்ன தகவல் இது. மிகக் கசப்பான உண்மை. இன்று பாரதியையும் பாரதிதாசனையும் மிஞ்சும் அளவுக்கு சமூக எழுச்சித் தரக்கூடிய கவிஞர்கள் படைப்பாளிகள் உள்ளனர். ஆனால் யார் ஏற்றுக் கொள்வது. இவர்களின் கவிதைகளை போகட்டுமே! என்று தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற முத்திரையோடு வரும் சிறு பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. இந்தப் பத்திரிக்கைகளை படிப்பது யார். ஒரு சிறு வட்டம். அந்த வட்டமும் இவர் மீதான் அன்பு மிகுதியால் இவரை படைப்புகளை மேலோட்டமாகப் பார்த்து பாரட்டி விட்டு விலகி விடுகின்றன. அல்லது தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். சரக்கு உள்ளே வேலை செய்யும் வரை ' தலைவா ! நீதான் மகாகவி. பாரதி என்ன புடுங்கி. நீ அவனையும் மிஞ்சிட்ட என்பார்கள்' இப்படி ஒவ்வொரு வட்டத்திலும் நிறைய குட்டிப் பாரதிகள் உள்ளனர். இவர்களின் படைப்புகள் அந்தந்த வட்டத்தில் சிறப்பானதாக கொள்ளப் படுகிறது. ஒரு வட்டம் இன்னொரு வட்டத்திற்கு வாசகராகவும் இல்லை ஒரு வட்டத்தில் உள்ளவர் இன்னொரு வட்டத்தவரை மதித்து ஏற்றுக் கொள்வதும் இல்லை.


உங்கள் கேள்விக்குப் பதில்:

பாரதியும், பாரதிதாசனையும் விடவும் சமூக அக்கரை கொண்டு எழுச்சி மிக்க படைப்புகளைத் தரும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். வாருங்கள் அவர்களை நேரில் காட்டுகிறேன்.

Monday, April 23, 2007

என்னுள்

இருக்கை அபகரித்தவனை
திட்டித் தீர்க்கிறேன்
உரசிச் செல்பவனை
ஓங்கி அரையத் துடிக்கிறேன்
சிறப்பு வாகன ஏற்பாடு
குறித்துப் பேசுகிறேன்
டை மறைக்காத
வயிற்றிலும்
விம்மி புடைத்த
மார்பிலும்
பதிந்த கண்களை
பறித்துவிட துடிக்கிறேன்
இத்தனையும்
நிகழ்ந்து விடுகிறது
எதிர் நிற்பவளின்
புட்டம் உரச
நீளும் முழங்கையை
கட்டுப் படுத்த முடியாத
என்னுள்.


மதியழகன் சுப்பையா,மும்பை

பதிவாகும் தாராவி வணச் சித்திரம்

உலகெங்கிலும் பரவி கிடகும் விபரங்களை வணப் படுத்தி பாதுகாத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று வணப் படுத்துதல் தீவிரமடைந்து உள்ளது. வணங்கள் தான் இன்று ஒரு நாட்டின் சொத்து எனலாம். வணங்கள் ஒரு நாட்டின் காலப் பதிவுகள் எனலாம். அவை மிகச் சிறப்பாக செய்யப் படவேண்டும். செய்யப் பட்டும் வருகின்றன.
னால் இன்று வணப் படுத்துதலில் ஈடு பட்டுள்ளவர்கள் அரசு அமைப்புகள் , அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள். இதில் அரசு தனக்கு சாதகமானவற்றை செய்கின்றன அல்லது அரசு சார்பாக நியமிக்கப் பட்டவர் தனக்கு சவுகரியமானவற்றை வணப் படுத்துகிறார். தனியார் அமைப்புகள் அவர்களுக்கு நிதி திரட்டும் எண்ணத்தில் அதற்கு தகுந்தார்போல் செய்கின்றன. விதிவிலக்குகளும் உண்டு. இறுதியாக தனி நபர்கள் பெயரும்-புகழும் பணமும் பெறவேண்டி வணப் படங்களை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் உண்மைகள் பதிவு செய்யப் படாமல் போய் விடுகின்றன. மேலும் நல்ல பல விஷயங்கள் சரியாக பதிவு செய்யப் படாமல் இருக்கின்றன. மேல் நாட்டு வணப் பட உத்திகளை பார்த்து காப்பி அடித்து இங்கு செய்யப் பட்டு வருவது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான். மேலும் இந்திய நாட்டின் மிக முக்கிய விஷயங்கள் குறித்த பல வணப் படங்களை வெளிநாட்டவர்கள் உருவாக்கி உள்ளனர். வெளிநாட்டவர்களின் படக்குழு இங்குள்ள சுற்றுலா கைடுகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் கொடுக்கும் விபரங்களை கொண்டு வணப் படங்களை தயாரித்து இதுதான் இந்தியாவின் நிலை பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி.
தாராவி குடிசைப் பகுதி குறித்தும் இவ்வாறு பல வணப் படங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. னால் அவை அனைத்தும் தாராவியின் உண்மை நிலையை வெளிக்காட்டவில்லை.
மும்பை மாநகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் சியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதி தாராவி என்று அறிமுகப் படுத்த அவசியமில்லை. இந்தக் குடிசை பகுதி குறித்து பலருக்கும் பலவிதமான தனித்தனி கருத்துகள் உண்டு. னால் இங்கு வாழும் மக்களுக்குத்தான் தாராவியின் உண்மையான உருவம் தெரியும். மும்பையின் பிற எந்த குடிசைப் பகுதியிலும் இல்லாத பல விஷயங்கள் இங்கு உண்டு. பதினைந்து நிமிடங்கள் தொலைவில் மும்பையின் முக்கிய மூன்று ரயில்பாதையின் ரயில் நிலையங்களான மாஹிம், சயான், குருதேக்பஹாதூர், கிங் சர்கிள், மாட்டுங்கா மற்றும் பாந்திரா கிய ரயில் நிலையங்களை அடையலாம்.
குடிசைப் பகுதி வாழ்க்கை குறித்தும் அங்கு வாழும் மக்கள் குறித்தும் குறை மதிப்பீடு செய்து விட முடியாது. குடிசைப் பகுதியில் இருக்கும் பல கொண்டாட்டங்கள் வேறு எந்த மக்கள் இருப்பிட அமைப்பிலும் காண முடியாது. தாராவி குடிசை பகுதி தனித்துவம் மிக்கது. மிகப் பழமையான வரலாற்றைக் கொண்டது. பல்வேறு வகை மக்கள் விரவிய சமுதாயத்தை உடையது. பெரிய அளவில் நடக்கும் வியாபாரங்களுக்கான உற்பத்தி பொருட்கள் தயாராகும் சிறு தொழில் நகரமாகும்.
புறாக் கூண்டுகளில் மனித வாழ்க்கை சாத்தியம் என நிறுபிக்க தாராவி மக்களின் வீடுகளைக் காட்ட முடியும். துணிமணிகளை மட்டுமல்ல சமையல் பாத்திரங்கள் அடுப்பு முதலியன உட்பட அனைத்தையும் மேலே தொங்க விடுவதனால் வீட்டின் உட்பகுதியில் உண்டாகும் பரப்பில் படுத்துக் கொள்ளும் மக்களின் வாழ்க்கை முறை புதுமை அல்ல. அதுவே அவர்களின் நாகரீகமாகி விட்டது.
அப்பளங்கள் உருட்டுவது, ஈக்கம் மாறுகள், பூ விளக்குமாறுகள் செய்வது, பூசணி விதைகள் உடைப்பது, வளையல்கள், காதணிகள், கழுத்துச் சங்கிலிகள். ஸ்டிக்கர் பொட்டுகள் கியவைகளில் வண்ணம் நிரப்புவது (மீனா), சேலைகளுக்கு பால் தைப்பது, ரெடிமேட் டைகளுக்கு பட்டன் தைப்பது, ஜிகினா தைப்பது ஊறுகாய் தயாரிப்பது, இப்படி சிறு பணிகள் பலவற்றை வீட்டிலிருக்கும் குடும்பப் பெண்கள் மதிய வேளைகளில் செய்து கொண்டிருப்பதை குறுகிய தாராவி குடிசைப் பகுதியின் முடுக்குகளில் (கல்லி) காண முடியும்.
இவை தவிர பயந்தர் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் ஸ்டீல் வீட்டு உபயோகப் பொருட்களை பளபளப்பாக்க பாலீஸ் செய்ய பயன் படும் துணி சக்கரங்கள் (ப·ப்) தாராவி குடிசைகளில் தான் தயாராகின்றன. இன்று மும்பை மட்டுமல்லாது உலகெங்கும் இருக்கும் மால் எனப்படும் நவீன அங்காடிகளில் விற்பனைக்கு வைக்கப் படும் உயர்ரக யத்த டைகள் (ரெடிமேட்) தயாராவது தாராவியின் தகர வீடுகளில் தான். கம்யூட்டரின் மிக நுண்ணிய பாகங்களையும் மொபைல் போன்ற நவீன தொலைபேசி சாதங்களிலும் பயன் படும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஜப்பான் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு கண்டெய்னர்களில் நிரப்பி கழிவு பிளாஸ்டிக்களை அனுப்புவது தாராவியின் குப்பை வியாபாரிகள் தான்.
அறுபது ண்டுகளுக்கும் முன்னதாக குஜராத் மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்த பானைகள் மற்றும் மண் பாண்டங்கள் செய்யும் 'கும்பார்' எனப் படும் இனத்தினர் மட்டுமல்லாமல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இங்கு வந்து தோல் பதனிடும் லைகளை நிறுவிய முஸ்லீம் மக்களும் இப்பகுதியின் பூர்வகுடி மக்களான கோலி எனப் படும் மீனவ இன மக்களும் தாராவியின் பல வண்ண மாற்றங்களைக் கண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நவநாகரீக யுகத்தின் இளைஞர்கள் கொஞ்சமும் சலித்துக் கொள்ளாது தங்களின் பிறப்பிடங்களை விட்டு விலக எண்ணாமல் இங்கிருந்தபடியே மேதமைப் படிப்புகளைப் படித்தும் தாங்கள் வசிப்பது அழுக்கும் சாக்கடையும் புடை சூழ்ந்த ஒரு மாபெரும் குடிசைப் பகுதி என்ற கூச்சமோ தாழ்வுமனப்பாண்மையோ இல்லாது வாழ்ந்து வருவதும் வியக்கத்தக்கது. இங்கு இருந்து கொண்டு மேன்மைக் கனவுகளை கண்டு கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கு தலைமை அலுவலகங்களும் தமிழகத்தின் அனைத்து பொருட்களையும் கிடைக்கும் படி வசதி செய்யப் பட்டு ஒரு குட்டி தமிழ்நாடு போலவே காட்சியும் அளிக்கிறது. தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி மும்பை வருபவர்கள் குறைந்த செலவில் தங்கி உண்டு உறங்க வசதியாக பொங்கள் வீடுகள் என்ற பெயரில் இயங்கி வருபவற்றை என்ன வென்று சொல்வது. மும்பையில் தமிழர்களைத் தவிர வேறு எந்த மொழியினரும் ஏற்படுத்தாத ஒரு சேவை இது.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் என விரவி கிடக்கும் தாராவியில் கூடவே ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பின்னித்தான் கிடக்கிறது. இந்து மதத்தினர் ஊர்வலம் வருகையில் தங்கள் கடைகளின் வெளியில் இருக்கும் அசைவ உணவுகளை மூடி வைக்கும் முஸ்லீம்களின் நாகரீகத்தை தாராவியில் காணலாம்.
வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட சர்ச்கள், மசூதிகள் மற்றும் கோயில்களையும் காணலாம்.
இவ்வாறான கொண்டாட்டங்களை படச்சுருளில் பதிவு செய்யப் பட வேண்டும். இதற்கு முன் பலரும் தாராவியை பல்வேறு வகையில் வணப் படுத்த முயற்சி செய்துள்ளனர். னால் யாரும் தாராவியை முழுமையாக வணப் படுத்த வில்லை. பல திரைப்படங்களில் தாராவியின் குடிசை அமைப்புகள் காட்டப் பட்டுள்ளதே தவிர மக்களின் வாழ்நிலை காட்டப் படவில்லை.
இங்குள்ள மக்கள் அழுக்கானவர்கள் என்றும் சாக்கடைகளில் வசிப்பவர்கள் என்று மட்டுமே வெளியுலகுக்கு காட்டப் பட்டுள்ளது. இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் தான் னால் உழைப்பாளிகள். குடிசைகளில் வாழ்பவர்கள்தான் னால் வாழ்வை கொண்டாடுபவர்கள். இவர்களின் உண்மையான வாழ்வையும் பிரச்சனைகளையும் பதிவு செய்ய வேண்டியது அதியவசியமானது.
இவ்வாறு இன்னும் ஏராளமாக எழுதி குவிக்கலாம். இவற்றை மிகுந்த அக்கரையோடு வணப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மதியழகன் சுப்பையா மற்றும் இதன் தயாரிப்பாளர் முருகானந்தம் கியோர் ஈடு பட்டுள்ளனர்.
மும்பையின் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் அடுக்குமாடிக் கட்டிடங்களாக கி வருகிறது. குடிசை வாழ் மக்களின் சையும் அதுதான். னால் அடுக்கு மாடி கட்டிடங்களில் இருந்து கொண்டு இப்பொழுது கிடைக்கும் வருமானம் கொண்டு இந்த மக்கள் எப்படி வாழ்க்கை நடத்தி விட முடியும். சாலையில் கூறு வைக்கப் பட்ட காய்கறிகளை வாங்கி வந்து சமைத்து உண்ணும் மக்கள் அடுக்கு மாடி கட்டிடங்கள் கி விட்டால் செலவுகளை எங்கனம் சமாளிப்பார்கள். மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டியது அவசியம் தான் னால் அதனுடன் அவர்களின் பொறுளாதார நிலையும் உயர்ந்தால் மட்டுமே இது சாத்தியம் இல்லையெனில் மீண்டும் இந்த மக்கள் வேறு இடங்களுக்கு நகர்ந்து புதிய தாராவி ஒன்றை உருவாக்க நேரிடும்.
'தாராவி- எ சிட்டி வித்தின் எ சிட்டி' என்ற பெயரில் உருவாகும் இந்த வணப் படத்தின் மூலம் மக்களின் வாழ்நிலையும் தாராவியின் உண்மையான வண்ணமும் காட்சி படுத்தப் படும் என்று இப்படத்தின் இயக்குனர் தெரிவித்து உள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச்-25 முதல் துவங்கியது. பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். இப்படத்திற்கு மக்களின் தவும் வரவேற்பும் கிடைத்துள்ளது. னால் இதனால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா என்பது கேள்வியாக உள்ளது. னால் தாராவி குறித்து மிகச் சரியான வணப் படம் ஒன்று அவசியம் அதற்காகவேனும் நாம் இந்த படக்குழுவினருடன் கை குளுக்கி அவர்களுக்கு தேவையான விபரங்களை கொடுத்து தரவளிக்கலாம்.

Saturday, April 21, 2007

டிவைன் லுனாடிக் மிஷன் (தெய்வீக பைத்தியங்களின் மிஷன்)





இந்தியில்: ஹரிசங்கர் பர்சாயி
தமிழில்: மதியழகன் சுப்பையா


இனி அமெரிக்காவுக்கு என்ன அனுப்புவது? என்ற மிகப் பெரிய கேள்வி இந்திய நாட்டின் முன் நின்றது. காமசாத்திரத்தை அவர்கள் படித்து விட்டார்கள். யோகிகளை அவர்கள் பார்த்து விட்டார்கள். புனிதர்களையும் பார்த்து விட்டார்கள். சாதுக்களையும் பார்த்து விட்டார்கள். கஞ்சா மற்றும் சரஸ் அங்குள்ள இளைஞர்கள் குடித்து விட்டார்கள். இந்தியாவின் நாகப்பாம்பை அவர்கள் பார்த்து விட்டார்கள். இந்திய சிங்கத்தைப் பார்த்து விட்டார்கள். நடைபாதையில் புராதன சிலைகளையும் வாங்கி விட்டார்கள். ன்மீகம் மற்றும் தெய்வீகங்களையும் அவர்கள் தேவைக்கு அதிகமாகவே பெற்று வழிபட்டு வருகிறார்கள் அதற்குப் பதிலாக கோதுமை தந்து கொண்டிருக்கிறார்கள். ஹரே கிருஷ்ணா! ஹரே ராமா என்றும் தொண்டை கிழித்தாயிற்று.
மகேஷ் யோகி, பால் யோகேஷ்வர், பால் போகேஷ்வர் போன்றவர்களுக்குப் பின் இனி என்ன? நான் ஒரு தேச பக்தன். னால் அமெரிக்காவின் குடிமக்களையும் அறிவேன். அவர்கள் கடுமையாக '' போர்'' கி விட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதாவது அதிகம் போரானா மனிதர்கள். பங்கு சந்தைகள் அவர்களுக்கு தேடி வந்து டாலர்களை கொடுத்துவிட்டுப் போகிறது. வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது, மதுபான பாட்டில்கள் இருக்கிறது. ஒவ்வொரு மாலையும் அவர்கள் குறைந்தது பத்து பதினைந்து பேர்களுடன் ''ஹவ் டு யு டூ'' செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களின் போரடிப்பு போய் விடுவதில்லை. பிறநாடுகள் மீது அமெரிக்கா எவ்வளவுதான் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினாலும் அது உற்சாகம் கொள்ளவில்லை. அதற்கு எதே தேவையாய் இருக்கிறது. அதுவும் இந்தியாவிலிருந்துதான் எதே தேவையாய் இருக்கிறது.
எனக்கு அமெரிக்கா குறித்து எவ்வளவு கவலை உண்டானதோ அதே அளவில் இந்தியர்கள் குறித்தும் ஏற்பட்டது. இந்தியர்களுக்கும் ஏதே தேவையாய் இருந்தது.
நமத இந்திய சகோதரர்கள் அங்கு டாலருக்காகவும் இங்கு ரூபாய்களுக்காகவும் எதை கொண்டுச் செல்வது.? ரவிசங்கரிடமும் அவர்கள் போராகி விட்டார்கள். யோகிகள், புனிதர்கள் போன்றவர்களிடமும் அவர்கள் கடும் போராகி விட்டார்கள். இனி அவர்களுக்கு புதிதாக எதாவது தேவைப் படுகிறது. போரடிப்பை முடித்துக் கொள்வதற்கும் உற்சாகப் பட்டுக் கொள்வதற்கும். இவைகளுக்குப் பதிலாய் அவர்கள் டாலர்கள் தர தயாராய் இருக்கிறார்கள்.
இந்த முறை இந்தியாவிலிருந்து ''டிவைன் லுனடிக் மிஷன்'' அழைத்துச் செல்லலாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் கும். இப்படியொரு மிஷன் இன்றுவரை போகவில்லை. 'டிவைன் லுனாடிக் மிஷன்' அதாவது 'தெய்வீக பைத்தியங்களின் மிஷன்' என்பது இந்தியாவிலிருந்து இது புது விஷயமாக இருக்கும்.
எனக்குத் தெரியும். அமெரிக்கர்கள் கண்டிப்பாக ''வீ ஹேவ் சீன் வன். ஹிஜ் நேம் இஸ் கிருஷ்ண மேனன்.'' (நாங்கள் ஒரு பைத்தியத்தைப் பார்த்திருக்கிறோம். அவருடையப் பெயர் கிருஷ்ண மேனன்) என்று சொல்வார்கள். அப்பொழுது நமது ஏஜென்ட் நீங்கள் பார்த்தவர் ''டிவைன்'' (தெய்வீகமானவர்) இல்லை. மேலும் அவர் பைத்தியமாகவும் இல்லை. அதனால் இந்த முறை உண்மையாக தெய்வீக பைத்தியங்கள் இந்தியாவிலிருந்து வருகிறார்கள்.
தெய்வீக அமைப்புகள் ஸ்மகலிங் (கள்ளக் கடத்தல்) செய்து கொண்டிருக்கின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியும். னால் இந்திய அரசுக்கும் மக்களுக்கும் ' சொர்கத்தில்' கூட ஸ்மகலிங் ( கள்ளக் கடத்தல்) செய்ய முடியும் என்பது தெரியாது தான்.
இது தெய்வீக துறையின் மூலமாக நடக்கக் கூடியது. இந்த பவித்திரமான இந்திய தேசத்தில் குஜராத் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் ஒருவன் புனித நீரைக் கொடுத்து ஊரையே அழித்து விட்டான். இப்படிப்பட்ட ஒருவன் அமெரிக்கரை சொர்க்கத்திற்கு கடத்திச் செல்ல முடியாதா?
பொருட்களை திருடுவது மட்டுமல்ல திருட்டு, தெய்வீக திருட்டும் இருக்கிறது. ஒருவன் நீளமாக தாடி வளர்த்துக் கொண்டு தன்னுடன் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு அமெரிக்கா போய் '' எனது வயது யிரம் ண்டுகள். நான் யிரம் காலமாக இமய மலையில் நான் தவம் செய்து கொண்டிருந்தேன். ஈஷ்வரனுடன் நன் மூன்று முறை பேசியிருக்கிறேன்.'' என்று முகத்தில் பிரகாஷம் காட்டினார். இதனை நம்பத் தயங்கிய கூடியிருந்த அமெரிக்கரில் ஒருவர் சீடனிடம் ''ஏனப்பா, உனது குரு உண்மையைச் சொல்கிறாரா? அவரது வயது உண்மையிலேயே யிரம் ண்டுகள் தானா? '' என்று கேட்டான். அதற்கு சீடன் ''என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. காரணம் நான் இவருடன் கடந்த ஐநூறு ண்டுகளாகத்தான் இருக்கிறேன்'' என்றான்.
சீடனுக்கு ஐநூறு ண்டுகள் ஏற்கனவே கி விட்ட காரணத்தால் அவர் தனது தனி கம்பெனியை திறக்கலாம். னால் காமசாத்திரம், தெய்வீகம், யோகிகள், மற்றும் சாதுக்கள் என இந்தியாவின் அனைத்து சிறப்புகளும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி விட்டது. இனி நாம் ஒரேயொரு பொருளைத்தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதுதான் இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷன்- டிவைன் லுனாடிக் மிஷன்.
எனது அவசரமான மற்றும் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் 'இந்தியன் டிவைன் லுனாடிக் மிஷனை' உடனடியாக அமைக்க வேண்டும். என்னைவிட பெரியவர்கள் இந்த நாட்டில் உள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். னால் நான் இந்திய நாட்டிற்கு சேவை செய்ய விரும்புகிறேன். மேலாக அமெரிக்க சகோதரர்களின் போரடிப்பை போக்க கண்டிப்பாய் எதையாவது செய்ய விருப்பப் படுகிறேன்.
எனக்குத் தெரியும் யிரம் ண்டுகளாய் ' ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா' என்று சதா ஜெபித்தப் பின்னாரும் ரேஷன் கடையில் சர்க்கரை கிடைக்காமல் பிளாக்கில் வாங்க வேண்டிய நிலையாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்கர்கள் ''ராமா! கிருஷ்ணா!'' என்று பஜனை செய்து கொண்டிருப்பதால் என்ன கிடைத்து விடப் போகிறது? னாலும் செல்வம் மற்றும் அதிகாரம் கொண்ட மனிதர்கள் நிரைந்த வல்லரசு நாட்டு மக்கள் அமைதிக்கான வழிகள் கொஞ்சம் வித்தியாசமானதுதான். இந்த அமைதி இந்தியாவிலிருந்து கிடைத்து விட்டால் இந்தியாவுக்கும் பெரு¨மைதானே. இந்தியாவின் கௌரவம் கூடிவிடுமே.
''அமெரிக்க நாடு அடித்தளத்திலிருந்து காய முன்னேற்றத்திற்கு ஒரே தாவலில் சென்று விட்டது. அது இடையில் பண்பாட்டு நிலை வழியாக கடக்கவில்லை'' என்று பெட்டரண்ட் ரஸ்ஸல் தெரிவித்து உள்ளார். ஒரு நிலையை மறந்து விட்டுள்ளது. எனக்கு ரஸ்ஸலுடன் என்ன பேச்சு இருக்கிறது? 'டிவைன் லுனாடிக் மிஷன்' என்ற சர்வதேசிய வியாபாரத்தை துவக்க இருக்கிறேன். உலகத்தின் பைத்தியங்கள் சுத்தமான பைத்தியங்கள். னால் இந்திய பைத்தியங்களோ தெய்வீக பைத்தியங்கள்.
நான் 'டிவைன் லுனாடிக் மிஷன்' அமைப்பை ஏற்படுத்த நினைக்கிறேன். இதன் உறுப்பினர்களாக பைத்தியக்கார விடுதியில் சேர்க்கப் படாதவர்கள் மட்டுமே இருக்க முடியும். எங்களுக்கு பைத்தியக்கார விடுதிக்கு வெளியே இருக்கும் பைத்தியங்கள் வேண்டும் அவர்கள் தான் உண்மையான பைத்தியங்களைப் போல் நடிக்க முடியும். யோகிகளைப் போல் நடிப்பது மிகவும் எளிது. கடவுளைப் போல் நடிப்பது மிக மிக எளிது. னால் பைத்தியங்களைப் போல் நடிப்பதுதான் மிகக் கடினம். அதனால் மிகச் சரியானவர்களைத் தேடி வருகிறேன். எனது நண்பர்களான இரண்டொரு பேராசிரியர்கள் கண்ணில் பட்டார்கள். இவர்களை இந்த மிஷனுக்கு நான் பரிந்துரை செய்கிறேன்.
மிஷன் உருவாகும், கண்டிப்பாய் உருவாகும். அமெரிக்காவில் நமது ஏஜென்சி இது குறித்து பிரச்சாரம் செய்யும். ''சீ ரியல் இண்டியன் டிவைன் லுனாடிக்ஸ்' (இந்திய தெய்வீக பைத்தியங்களைப் பாருங்கள்) நாங்கள் நியுயார்க் விமான நிலையத்தில் இறங்கியதும் நாங்கள் இறங்கும் விபரம் செய்தித்தாள்களில் அச்சாகும். தொலைக்காட்சிகள் தயாராய் இருக்கும்.
திருமதி ராபர்ட் திருமதி சிம்ஷனிடம் ' நீங்கள் உண்மையில் இந்திய தெய்வீக பைத்தியங்களைப் பார்த்தீர்களா?'' என்று கேட்பார்.
திருமதி சிம்ஷன் ''நோ!, இஸ் தேர் வன் இன் திஸ் கன்டரி, 'அண்டர் காட்?'' என்று சொல்வார்.
திருமதி ராபர்ட் ''மாம். நாளை இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷன் நியுயார்க் வருகிறது. வாருங்கள் நாம் பார்க்கலாம். 'இட் வில் பி எ ரியல் ஸ்பிரிச்சுவல் எக்ஸ்பிரியன்ஸ். (அது ஒரு நல்ல தெய்வீக அனுபவமாக இருக்கும்)''
நியாயார்க் விமான நிலையத்தில் யிரக்கணக்கில் ண்களும் பெண்களும் இந்திய தெய்வீக பைத்தியங்களின் மிஷனை காண கூடி நிற்பார்கள். அவர்களுக்கு வாழ்கையின் போரடிப்பிலிருந்து விடுதலை கிடைக்கும். எங்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும். மாலைகள் அணிவிக்கப் படும். நாங்கள் தங்குவதற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப் படும்.
நாங்கள் தெய்வீக பைத்தியங்களின் நிகழ்ச்சியை வழங்குவோம். பைத்தியமல்லாத ஒவ்வொருவரும் உண்மையான பைத்தியங்களைப் போல் எப்படி நடிப்பது என்று ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கும். நுழைவுக் கட்டணம் ஐம்பது டாலர்களாக இருக்கும். அமெரிக்கர்கள் யிரக்கணக்கில் பனம் செலவு செய்து 'இந்திய தெய்வீக பைத்தியங்களை' தரிஷனம் செய்ய வருவார்கள்.
எங்கள் வியாபாரம் மிகச் சிறப்பாக நடக்கும். மிஷனின் தலைவனான நான் உரையாற்றுவேன். '' வி ர் ரியல் இந்தியன் டிவைன் லுனாடிக்ஸ். அவர் ரிஷிகல்ஸ் என்ட் முனிவர்ஸ் தவுசன்ட் இயர்ஸ் அகோ செட் தேட் தி வேய் டு ரியல் இண்டர்னல் பீஸ் என்ட் சால்வேஷன் லாயிஸ் துரு லுனான்சி''. (நாங்க உண்மையான இந்திய தெய்வீக பைத்தியங்கள். நமக்குள் அமைதியும் விடுதலையும் பைத்தியக்கார நிலையில் தான் இருக்கிறது என்று நமது ரிஷிகளும் முனிவர்களும் யிரம் ண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டிருக்கிறார்கள்.
அதன் பின் எனது தோழர்கள் விதவிதமான பைத்தியக்கார வித்தைகளை செய்து காட்டுவார்கள் டாலர் மழை பொழியும்.
இந்த மிஷனில் பங்கு பெற விரும்புவோர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும். அவர்கள் உண்மையான பைத்தியமாக இருக்கக் கூடாது என்பதுதான் நிபந்தனை. உண்மையான சாதுக்களை சாதுக்கள் குழுவில் எப்படி சேர்த்துக் கொள்ள மாட்டர்களோ அதே போல் உண்மையான பைத்தியங்களை இந்த மிஷனில் சேர்த்துக் கொள்ள இயலாது.
அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் டெல்லியின் ராம்லீலா மைதானம் அல்லது செங்கோட்டை மைதானத்தில் மிகச் சிறப்பாகவும் பிரமான்டமாகவும் வரவேற்பு கொடுக்கப் படும். பிரதம மந்திரியை இதற்கு தலைமை தாங்க அழைத்துவர முயற்சி செய்வேன்.
அப்படி பிரதமருக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் அரசியல் வனவாசத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் அமைச்சர்கள் பலர் கிடைத்து விடுவார்கள்.
டெல்லியில் உள்ள ''கடத்தல்காரர்கள்' எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுப்பார்கள்.
கஸ்டம் மற்றும் என்போர்ஸ் துறையினருடனும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு எங்கள் மிஷனுக்கு தரவளிப்பார்கள் என நம்புகிறோம்.
வரவேற்பு நிகழ்ச்சியின் போது ''இது இந்திய தெய்வீகத்தன்மைக்கு கிடைத்த மற்றொரு வெற்றியாகும். நமது தெய்வீக பைத்தியங்கள் உலக மக்களுக்கு அமைதியையும் மோட்சத்தையும் பற்றிய செய்திகளை கொடுத்து விட்டு வருகின்றனர். நமது நாட்டில் இந்த தெய்வீக பைத்தியங்களின் இயக்கம் மேன்மேலும் வளரும் ''என்று உரையாற்றுவேன்.
''டிவைன் லுனாடிக் மிஷன்'' கண்டிப்பாய் அமெரிக்கா போக வேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அரசியல் உறவு பலப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்த பைத்தியங்களின் மிஷன் கண்டிப்பாய் போயாக வேண்டும்.