Tuesday, September 26, 2006

வீடு திரும்பல்

இந்தியில்: உஷா பிரியம்வத்
தமிழில்: மதியழகன் சுப்பையா


அறையில் வைக்கப் பட்டிருந்த சாமானங்கள் மீது மீண்டும் ஒருமுறை தனது பார்வையை ஓட விட்டார் கஜாதர். இரண்டு பெட்டிகள், சிறிய கூடை மற்றும் ஒரு வாளி- '' இது என்னப்பா டப்பா?'' கஜாதர் கேட்டார். படுக்கையைக் கட்டிக் கொண்டிருந்த கணேஷி கொஞ்சம் கர்வம், கொஞ்சம் கவலை, கொஞ்சம் வெட்கம் கியவைகளை கலந்து ''வீட்டுக்கார அம்மாதான் பயணத்தில் சாப்பிட கோதுமை லட்டுகள் வைச்சிருக்காங்க'' என்றான். மேலும் ''இது உங்களுக்குப் பிடிக்குமாம், வேற எதுவும் இந்த ஏழைகளால் செய்ய முடியாதுன்னாங்க'' என்று முடித்தான். தனது வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருக்கும் சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் இத்தனை நாள் பழகிய, அன்பு பாராட்டிய, தரவு கொடுத்த இந்த சிறிய உலகிலிருந்து உறவு அறுந்து கொண்டிருந்தது.
''அப்பப்போ எங்கள் நலனையும் விசாரித்துக் கொள்ளுங்கள், ஐயா'' கணேஷி படுக்கையில் கயிற்றைக் கட்டிக் கொண்டே கூறினான்.
'' எப்ப எது வேண்டுமென்றாலும் கடிதம் எழுது கணேஷி, இந்த ண்டிற்குள் மகளின் திருமணத்தை முடித்து விடு '' என்றார் கஜாதர் தளுதளுக்க.
கணேஷி தோள் துண்டால் கண்களை துடைத்துக் கொண்டே '' இப்ப நீங்களெல்லாம் உதவி பண்ணவில்லை என்றால் யார் செய்வார்கள், திருமணத்தின் போது நீங்களும் இங்கு இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் '' என்றான் கணேஷி.
கஜாதர் கிளம்புவதற்கு யத்தமாக உட்கார்ந்திருந்தார். ரயில்வே குவாட்டர்சின் அறை. இதில் அவர் எத்தனை ண்டுகளை கழித்திருக்கிறார். அவருடைய பொருட்கள் அகற்றப் பட்டவுடன் அறை நிர்வாணமாகவும் வெறுமையாகவும் பட்டது. முற்றத்தில் வைத்திருந்த தொட்டிச் செடிகளையும் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள். அங்கங்கே மண் சிதரி கிடந்தது. னால் தந்து மனைவி பிள்ளைகளுடன் சேர்ந்து வாழப் போவதை நினைத்து இவையெல்லாம் ற்றல் இல்லாத சிறிய அலை போலவே கஜாதருக்குப் பட்டது.
கஜாதர் மகிழ்ச்சியாக இருந்தார், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். முப்பத்தைந்து ண்டு கால பணிக்குப் பின் ஓய்வு பெற்று வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார். இந்தக் காலக் கட்டங்களில் பெரும்பாலும் அவர் தனியாகவே இருந்து கழித்திருக்கிரார். அந்தத் தனிமையான காலங்களில் தன் குடும்பத்துடன் வாழும் இந்த காலத்தைப் பற்றித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தார். இந்த ஒரு சையில் தான் தனது மனக் கவலையை மறந்து மகிழ்ந்திருந்தார். உலகத்தின் பார்வையில் அவரது வாழ்க்கை ஒரு வெற்றிபெற்ற வாழ்க்கை என்று சொல்லாம். நகரப் பகுதியில் ஒரு வீடு கட்டியிருந்தார். மூத்த மகன் அமர் மற்றும் மகள் காந்தி கியோரின் திருமணங்களை முடித்து வைத்திருந்தார். மேலும் இரண்டு பிள்ளைகள் பெரிய வகுப்புகளில் படித்துக் கொண்டிருந்தனர். கஜாதர் வேலையில் காரணமாக சிறிய ரயில் நிலையத்தில் தங்கியிருந்தார். அவரது பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக மனைவி மற்றும் பிள்ளைகள் நகரத்திலேயே இருந்தனர். கஜாதர் அன்பான சுவபாவம் கொண்ட மனிதர். அதே நேரத்தில் அன்புக்கு ஏங்கிய மனிதராகவும் இருந்தார். குடும்பத்துடன் வாழ்ந்த காலத்தில் பணியில் இருந்து வீடு திரும்பியதும் குழந்தைகளுடன் சிரித்துப் பேசி விளையாடுவார். மனைவியிடம் சில்மிஷங்களும் சேட்டைகளும் செய்வார். இவை அனைத்தும் இல்லாது போனது அவரது வாழ்வில் சூன்யத்தை ஏற்படுத்தி விட்டது. ஓய்வு நேரங்களில் அவரால் வீட்டில் தனியாக இருக்க முடிவதில்லை. கவிஞனின் மனநிலை இல்லையென்றாலும் மனைவியின் அந்த ஸ்னேகபூர்வமான வார்த்தைகளை அசைப்போட்டபடி மனதுள் கவிதை கோர்த்துக் கொண்டிருப்பார். மதியம் உஷ்ணமான நேரத்திலும் இரண்டு மணி வரை நெருப்பு எரிய வைத்திருப்பாள். எவ்வளவுதான் மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சம் என தட்டில் எதையாவது பரிமாறி விடுவாள். மிகவும் அன்பாக வற்புறுத்தி சாப்பிடச் சொல்வாள். அவர் கலைத்துப் போய் வீடு திரும்புகையில் அவரது வருகை உணரும் அவள் சமயலறையில் இருந்து வெளியே வந்து அவரைப் பார்த்து புன்னகைத்து நிற்பாள். கஜாதருக்கு ஒவ்வொரு சிறிய விஷயமும் நினைவுக்கு வந்து விட கடுமையான கவலையில் மூழ்கி விடுவார். தற்போது எத்தனை ண்டுகளுக்குப் பின் மீண்டும் அந்த அன்பையும் தரவையும் பெற்று வாழும் சுகமான வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
கஜாதர் தனது தொப்பியை கட்டிலின் மேல் வைத்தார். காலணிகளை கழற்றி கீழே தள்ளி விட்டார். உள்ளேயிருந்து சிரிப்பொலி விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அன்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தது. அவருடைய பிள்ளைகள் அனைவரும் கூடி சிற்றுண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காஜதரின் காய்ந்துபோன உதட்டில் ஈரம் பரவியதுபோல் புன்னகைப் பூத்தது. அப்படியே புன்னகைத்தபடி இருமிக் கொள்ளாமல் அவர் உள்ளே நுழைந்து விட்டார். உள்ளே நரேந்தர் இடுப்பில் கை வைத்து இரவில் பார்த்த திரைப்பட நடனத்தை டிக் காட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். வசந்தி குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள். மூத்த மருமகள் தனது உடல், டை என எதையும் பொருட்படுத்தாமல் உணர்வே இல்லாமல் சிரித்து உருண்டு கொண்டிருந்தாள். கஜாதரைப் பார்த்ததும் நரேந்தர் சடக்கென உட்கார்ந்து கொண்டான். வேகமான சாயாவின் கோப்பையை கையிலெடுத்து வாயில் வைத்துக் கொண்டான். மருமகள் உணர்வுக்கு வந்தாள். முந்தானையை இழுத்து நெற்றி மறைத்து அடங்கினாள். வசந்தி சிரிப்பை அடக்க முடியாமல் உடலைக் குலுக்கிக் கொண்டிருந்தாள்.
கஜாதர் நீண்ட புன்னகையோடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின் '' என்னப்பா நரேந்தர், என்ன ட்டம் நடக்குது'' என்றார் புன்னகை மாறாமல்.
''ஒன்னுமில்லை, அப்பா!'' நரேந்தர் முகத்தை திருப்பிக் கொண்டு பதிலளித்தான். கஜாதருக்கு இந்த மாதிரியான விளையாட்டிலும் சிரிப்பிலும் கலந்து கொள்ள அதிக விருப்பம் தான் னால் அவர் வந்ததும் அனைவரும் பேயரைந்தவர்களைப் போல் அமைதியாகி விட்டனர். இதனை உணர்ந்த அவரது மனதில் சின்னதாய் வேதனை முளை விட்டது. உட்கார்ந்தபடி '' வசந்தி, எனக்கும் கொஞ்சம் சாயா கொடு, உனது அம்மா இன்னும் பூசை செய்து கொண்டிருக்கிறாளா?'' என்று மகளிடம் கேட்டார்.
வசந்தி அம்மாவின் அறையை நோக்கிப் பார்த்தாள். '' அம்மா, வந்து கொண்டுதான் இருப்பாள்'' என்றபடி கிண்ணத்தில் சாயாவை வடி கட்டினாள். மருமகள் சத்தமில்லாமல் முதலிலேயே போய் விட்டிருந்தாள். இப்பொழுது நரேந்தரும் சாயாவின் இறுதி சொட்டை உறிஞ்சி விட்டு எழும்பி விட்டான். வசந்தி மட்டும் அங்கேகே உட்கார்ந்தபடி அம்மாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கஜாதர் சாயாவை ஒருமுறை உறிஞ்சினார். பின் '' வசந்தி, சாயா சப்புன்னு இருக்கும்மா?'' என்றார்.
''கொடுங்கப்பா சர்க்கரை போட்டுத் தருகிறேன்'' என்று அசைந்தாள் வசந்தி.
'' இருக்கட்டும்மா. உன் அம்மா வந்ததும் குடித்துக் கொள்கிறேன்'' என்றார் கிண்ணத்தை கீழே வைத்தபடி.
கொஞ்ச நேரத்தில் கஜாதரின் மனைவி அறையை விட்டு ஒரு தாமிரச் செம்பில் நீருடன் வெளியே வந்தாள். வாய்க்குள் எதையோ முனுமுனுத்தபடி நீரை துளசி செடிக்கு ஊற்றினாள். அம்மாவைப் பார்த்து வசந்தி எழுந்து போய் விட்டாள். மனைவி வந்து கஜாதரைப் பார்த்தாள். பின் ''என்னங்க, நீங்க மட்டும் தனியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? இவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள்? என்றாள் மிகச் சாதரணமாக. கஜாதரின் மனதில் சுருக்கு மாட்டிக் கொண்டது போல் இருந்தது. அவர் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டு '' அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள் போலும், நம்ம பிள்ளைங்கதானே பார்த்துக்கலாம்'' என்று அமைதியானார்.
மனைவி வந்து பலகையில் உட்கார்ந்து கொண்டாள். அவள் முகத்தையும் மூக்கையும் தூக்கிக் கொண்டு எச்சில் பாத்திரங்களை பார்த்தாள். பின் '' வீடெங்கும் எச்சில் பாத்திரங்களாகக் கிடக்கிறது. இந்த வீட்டில் யாருக்காவது நல்ல புத்தி நாகரீகமுன்னு எதாவது இருக்கிறதா. பூசையை முடித்துக் கொண்டு இந்த எச்சில் அறைக்குள் நுழைவதா?'' என்று அம்மா சிடுசிடுத்தாள். பின் அவள் வேலைக்காரனை அழைத்தாள். அவனிடமிருந்து பதிலெதுவும் கிடைக்காமல் மீண்டும் ஒருமுறை உச்ச ஸ்வரத்தில் அழைத்தாள். பின் தந்து கணவனை நோக்கி '' மருமகள் அவனை மார்க்கெட்டுக்கு அனுப்பி இருப்பாள்'' என்றபடி ஒரு ழமான மூச்சு இழுத்தபடி அமைதியாகிவிட்டாள்.
கஜாதர் அமைதியாக உட்கார்ந்தபடி சாயா மற்றும் சிற்றுண்டிக்காக காத்துக் கொண்டிருந்தார். அவருக்கு உடனடியாக கணேஷியின் நினைவு வந்தது. தினமும் காலை, பயணிகள் வரும் முன் சுடச்சுட பூரிகளையும் சாயாவையும் கொண்டு வந்து வைத்து விடுவான். அவன் கொண்டு வரும் சாயா கண்ணாடி கிளாசில் விழிம்பு வரை தழும்ப தழும்ப கொண்டு வந்து வைப்பான் ஒன்றரைக் கரண்டி சர்க்கரையும் வெண்ணெய்யும் கலந்து அப்படியிருக்கும். பயணிகள் வேண்டுமானால் ராணிப்பூர் ரயில் நிலையத்திற்கு தாமதமாக வரலாம் னால் கணேஷியின் சாயா வந்து சேர்வதற்கு எப்பொழுதுமே தாமதம் னதில்லை. அவனிடம் எதுவும் சொல்லும்படி வைத்துக் கொள்ள மாட்டான்.
மனைவியின் புகார் சொல்லும் தொணியிலான அந்த பேச்சொலி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. அவள் மேலும் '' நாள் முழுவதும் இப்படி கத்தி கத்தியே கழிந்து விடுகிறது. இந்த குடும்ப பாரத்தை சுமந்து சுமந்தே வயசு கழிஞ்சு போச்சு. யாரும் எந்த ஒத்தாசையும் செய்யமாட்டேன் என்கிறார்கள்'' என்று புலம்பினால்.
''மருமகள் என்ன செய்கிறாள்?'' கஜாதர் கேட்டார்.
'' படுத்து கிடப்பாள். வசந்திய ஒன்னும் சொல்ல முடியாது அவள் காலேஜ் போகிறாள்'' என்றாள் மனைவி.
கஜாதர் கொஞ்சம் கோபத்திலும் எரிச்சலிலும் வசந்தியை கூப்பிட்டார். வசந்தி அண்ணியின் அறையில் இருந்து வெளியே வந்ததும் ''வசந்தி, இன்னையிலிருந்து இரவு சாப்பாடு செய்ய வேண்டியது உன்னுடைய வேலை. காலை சாப்பாட்டை உனது அண்ணி செய்யட்டும்'' என்றார் கஜாதர். வசந்தி முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு '' அப்பா, படிக்கனுமே'' என்றாள்.
கஜாதர் மிக அன்பாக '' நீ காலையில் படித்துக் கொள். உனது அம்மாவுக்கு வயதாகி விட்டது. அவளிடம் முன்பு இருந்தது பலம் இப்போது இல்லை. நீ இருக்கிறாய், உனது அண்ணி இருக்கிறாள். நீங்கள் இருவருமாக சேர்ந்து வேலையை பகிர்ந்து கொண்டாள் நல்லது இல்லையா '' என்று விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
வசந்தி அமைதியாக இருந்தாள். அவள் போன பின் அம்மா அமைதியாக '' படிக்கனுமிங்கிறது எல்லாம் ஒரு சாக்குத்தான். எப்பவும் படிப்பில அக்கரையில்லை. எப்படி இருக்கும். ஷீலா வீடே கதின்னு கிடக்குறா. அந்த வீட்டில் பெரிய பெரிய பையன்கள் வேறு இருக்கிறார்கள். எப்பப் பார்த்தாலும் அங்கே புகுந்து கிடப்பது எனக்கு ஒன்றும் சரியாகப் படவில்லை. போகாதேன்னு சொன்னாலும் கேட்பதில்லை'' என்று மெல்ல முனுமுனுத்தாள்.
சிற்றுண்டியை முடித்துக் கொண்டு கஜாதர் வரவேற்பறைக்கு சென்று விட்டார். வீடு சிறியதாக இருந்த காரணத்தால் கஜாதருக்கென தனியாக இடம் ஒதுக்கிக் கொள்ள எந்த வாய்ப்பும் இல்லாதபடி இருந்தது. திடீர் விருந்தாளிகள் வந்தாள் தங்குவதற்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்யப் படுவதைப் போல் கஜாதருக்கு வரவேற்பறையில் இருந்த நாற்காலிகளை சுவர் பக்கமாக தள்ளி விட்டு ஒரு கட்டில் போட்டு விட்டார்கள். அந்த அறையில் தனியாகப் படுத்துக் கொண்டிருக்கையில் பல முறை கடுமையான தனிமையை உணர்ந்தார். அவருக்கு ரயில் வண்டிகளின் நினைவு வந்தது. ரயில் வண்டிகள் வரும், கொஞ்ச நேரம் நிற்கும் பின் மீண்டும் எதாவது இலக்கு நோக்கி விரைந்து விடும்.
வீடு சிறியதாக இருந்த காரணத்தால் வரவேற்பறையில் தான் தங்க முடிவு செய்து விட்டார் கஜாதர். அவரது மனைவிக்கென உள்ளே ஒரு சிறிய அறை இருந்தது. னால் அதில் ஒரு புறம் ஊறு செய்ய வேண்டிய பொருட்கள், பருப்பு, அரிசி, கோதுமை மற்றும் நெய் டப்பாக்கள் என நிறைந்து கிடந்தது. மற்றொரு புறம் பழையத் துணிகள் பாத்திரங்கள் என துணிகளில் வைக்கப் பட்டு கயிறுகளால் கட்டப் பட்டிருந்தது. ஒரு பெரிய தகர டப்பாவில் கம்பளித் துளிகள் இருந்தது. இதற்கு இடையில் ஒரு தடுப்பு கட்டப் பட்டிருந்தது. அதில் வசந்தியின் துணிகள் கண்டபடி இறைந்து கிடந்தது. அவர் அந்த அறைக்கு எப்பொழுதுமே போனதில்லை. எதிரே இருந்த அறை மருமகள் வசம் இருந்தது. கஜாதர் பாபு வருவதற்கு முன் அமரின் மாமனார் வீட்டில் இருந்து கொடுக்கப் பட்டிருந்த நான்கு நாற்காளிகள் இருந்தது. அந்த நாற்காளிகளில் பஞ்சு மெத்தையும் மருமகள் கையால் பின்னப் பட்ட பூத்துணி விரிக்கப் பட்டிருந்தது.
கஜாதரின் மனைவிக்கு அவரிடம் பெரிதாக எதாவது பேச வேண்டியிருக்கையில் அவள் பாயை எடுத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்து படுத்துக் கொள்வாள். அவள் ஒரு நாள் பாயை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள். கஜாதர் குடும்பப் பிரச்சனைகளை பேசத் துவங்கினார். அவர் வீட்டின் தற்போதைய நிலை குறித்துப் பேசினார். இனி வீட்டில் வருவாய் குறைவாக இருக்கும் அதனால் செலவுகளை கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டும் என்று அவளிடம் கூறினார்.
''வீட்டில் செலவு கண்டபடி இருக்கிறது. அவரவர் இஷ்டப்படி செலவுகளை செய்கிறார்கள்'' என்றபடி கஜாதரின் மனைவி அவரைப் பார்த்தாள். அவரால் தனது நிலையை மறைத்துக் கொள்ள முடியவில்லை. அவரது மனைவியோ சலித்துக் கொண்டவளைப் போல் இதனை தவிர்த்து விட்டாள். இது இயல்பானதுதான் னால் இவ்வாறான நேரங்களில் கஜாதர் மிகப் பொறுமையை கடைபிடித்துப் பழகி விட்டிருந்தார். தனது மனைவியிடம் லோசனைகளைக் கேட்பது அவருக்கு பிடிக்கும். இதனால் கவலை குறைவதாகவும் பிரச்சனைகளின் கனம் குறைவதாகவும் அவர் உணர்ந்தார். னால் இவரது இந்த லோசனைப் பேச்சுகள் அவளுக்கு பிரச்சனைகளை பூதகாரப் படுத்துவது போலவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இவரே காரணம் போலவும் உணர்த்தியது.
'' உன்னிடம் எப்பொழுதாவது எதாவது பேசியிருக்கேனா அமரம்மா, வீட்டில் மருமகள் இருக்கிறாள், மகன்கள்-மகள் இருக்கிறார்கள். வெறும் பணத்தால் மட்டும் மனிதன் சந்தோஷமடைந்து விட மாட்டன் தான்'' என்று கஜாதர் சொல்லிக் கொண்டு அதனை உணர்ந்தும் கொண்டார். இது அவரது உள்மன எண்ணம் தான் தனை அவரது மனைவியால் புரிந்து கொள்ள முடியாது. னால் அவளுக்கு பணம், செலவு இவ்வாறான பேச்சுகள் எதிலுமே ர்வம் இல்லாதவள் போல் இருந்தாள்.
'' மா மருமகளால் ரொம்ப பெரிய சந்தோஷம் கிடைக்குது? இன்னைக்கு சமைக்க போகிறாள். என்ன செய்கிறாள் என்று பார்க்கலாம்?'' என்று மனைவி கண்களை மூடினால். சற்று நேரத்திற்குள் தூங்கிப் போனாள். கஜாதர் உட்கார்ந்தபடி மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தார். இது தான் தனது மனைவியா? அவளது கைகளின் மெல்லிய தொடுதல். அவளின் இனிமையான தரவான பேச்சு இவைகளை நினைத்துக் கொண்டே இத்தனை ண்டுகளை கழித்து விட்டிருந்தார். னால் மனைவி இப்பொழுது புது மனுஷியாக இருந்தாள். வாழ்வில் நீண்ட பாதையில் அவரது அந்த சை மனைவி எங்கேயோ தொலைந்து போய் விட்டாள். இப்பொழுது இங்கிருப்பது அவரது உயிருக்கும் உடலுக்கும் கொஞ்சமும் அறிமுகமில்லாத ஒரு பெண்ணாக இருந்தாள். ழ்ந்த தூக்கத்தில் இருந்த அவளது பருத்த உடல் பார்க்க சகிக்காமல் கொடுரமாக இருந்தது. பெண்மை இழந்து ஏதோ ஜடமாக காணப் பட்டது. கஜாதர் வெகு நேரமாக மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தார். பின் படுத்துக் கொண்டு வீட்டின் உத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென சமையல் கட்டிலிருந்து சத்தம் சத்தம் வந்தது. திடுக்கிட்டு எழுந்தாள் கஜாதரின் மனைவி '' உள்ளே ஏதோ விழுந்து விட்டது போல'' என்றபடி சமயலைக்குள் ஓடினாள். கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தவளின் முகம் உப்பிப் போய் இருந்தது. ''பாத்திங்களா நம்ம மருமகள, பின் கதவ திறந்து விட்டுட்டா, பூனை பருப்புக் கிண்ணத்தை கவிழ்த்து விட்டது. இனிமே சாப்பிட இருக்கிறவர்களுக்கு என்னத்தை கொடுப்பேன். ?'' அவள் மூச்சு வாங்கிக் கொள்ள பேச்சை நிறுத்தினாள் பின் ''ஒரு கூட்டும் நான்கு பரோட்டாவும் செய்ய ஒரு டப்பா நெய்யையும் கொட்டிட்டா. கொஞ்சமாவது வலி தெரியுதா. சம்பாதிக்கிறவங்க படுறபாடு என்ன னால் அவள் பொருளை எல்லாம் வீணடிக்கிறாள். எனக்கு முன்னமே தெரியுமே, இந்த வேலையெல்லாம் இவங்களுக்கு சரிபட்டு வராதுன்னு'' என்று கடுகாய் பொரிந்து கொண்டிருந்தாள். கஜாதருக்கு தனது மனைவி வேறு எதாவது விஷயம் பேசினால் அவரது காதுக்கு நன்மை செய்வதாய் இருக்கும் என்று பட்டது. இழுத்து போர்த்திக் கொண்டு மனைவிக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டார்.
இரவு சாப்பாட்டை வசந்தி செய்திருந்ததது அதனை தொண்டை வரைக் கூட விழுங்க முடியாது என்பது போல் இருந்தது. கஜாதர் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்து எழுதும் விட்டார். நரேந்திர சாப்பாட்டுத் தட்டை முன்னுக்கு தள்ளி விட்டு எழுந்து '' நான் இப்படிபட்ட சாப்பாட்டை சாப்பிட மாட்டேன்'' என்றான் கடுமையாக.
'' சாப்பிடலைன்னா போ, உன்னை யாரு இப்பொழுது கட்டாயப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்'' என்றாள் வசந்தி மிகச் சாதாரணமாக.
''உன்னை சமைக்கும்படி யார் சொன்னார்கள்?'' நரேந்திர கத்தினான்.
''அப்பாதான்'' வசந்தி அமையாகவே பதில் சொன்னாள்.
'' அப்பாவுக்கு சும்மா இருந்து இந்தமாதிரி தான் எண்ணன் வருதா?'' நரேந்திர இன்னும் கத்திக் கொண்டிருந்தான்.
வசந்தியை அவ்விடத்தை விட்டுப் போகச் சொல்லி விட்டு அம்மா அவள் கையால் சமைத்துக் கொடுக்க நரேந்திர சாப்பிட்டு எழுந்தான். பின் கஜாதர் தனது மனைவியிடம் ''இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டாள், அவளுக்கு இன்னும் சமைக்கக் கூடத் தெரியாதா?''
'' அய்யோ, அவளுக்கு நல்லா சமைக்கத் தெரியும் னால் செய்ய விரும்பவில்லை அவ்வளவுதான்'' மனைவி முகத்தை கோணலாக்கி பதிலளித்தாள்.
மறுநாள் மாலை அம்மா சமைத்துக் கொண்டிருப்பதைக் கண்ட வசந்தி உடை மாற்றிக் கொண்டு கிளம்பினாள் அப்பொழுது கஜாதர் முட்டுக்கட்டையாக '' எங்கே போகிறாய்?'' என்று கேட்டார்.
''பக்கத்தில் ஷீலா வீட்டிற்குத்தான்'' வசந்தி எரிச்சலுடன் பதிலளித்தாள்.
'' ஒன்னும் அவசியம் இல்லை, போ, உள்ளே போய் படி'' என்று கஜாதர் கடுமையான சொற்களில் உத்தரவிட்டார். கொஞ்ச நேரத்திற்கு என்ன செய்வதென்றும் என்ன சொல்வதென்றும் தோன்றாமல் நின்று கொண்டிருந்த வசந்தி பின் உள்ளே போய் விட்டாள். கஜாதர் தினமும் மாலை உலாவ கிளம்பி விடுவார். அன்று உலாவிவிட்டு திரும்பியதும் மனைவி '' வசந்தியை என்ன சொல்லி விட்டீர்கள். சாயங்காலத்திலிருந்து முகத்தை சுருட்டி வைத்துக் கொண்டு கிடக்கிறாள். சாப்பிடக் கூட இல்லை'' என்றாள்.
கஜாதருக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. மனைவியின் பேச்சுக்கு அவள் பதிலளிக்கவில்லை. அவர் மனதுக்குள் வசந்தியின் திருமணத்தை விரைவில் முடித்து விட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார். அன்றைக்குப் பின் வசந்தி அப்பாவிடமிருந்து மறைந்து மறைந்து இருந்தாள். வெளியில் போக வேண்டுமென்றாள் பின் வழியாக போய் விடுவாள். கஜாதர் இரண்டொருமுறை அவள் பற்றி விசாரிக்கையில் '' கோபப் பட்டிருப்பாள், எல்லாம் சரியாகி விடும்'' என்றாள் மனைவி. கஜாதருக்கு த்திரம் இன்னும் அதிகமானது. மகளின் இந்த பிடிவாதம் அவருக்குப் பிடிக்கவில்லை. வெளியில் போக வேண்டான் என்று சொன்னதற்கு அப்பாவிடமே பேசமல் இருப்பதா. இந்நிலையில் அவரது மகன் அமர் தனிக் குடித்தனம் போக விரும்புவதாய் அவரது மனைவி செய்தி சொன்னாள்.
'' ஏன்?'' கஜாதர் வியப்புடன் கேட்டார்.
மனைவி தெளிவாக பதில் சொல்லவில்லை. மகன் அமர் மற்றும் அவனது மனைவிக்கு கஜாதர் குறித்து நிறைய புகார்கள் இருந்தது. அவர்களின் படி கஜாதர் எப்பொழுதும் வரவேற்பறையிலேயே படுத்துக் கிடக்கிறார். யாராவது வந்தால் போனால் உட்கார வைக்க இடமில்லை. அமரை அவர் இன்னும் சின்னப் பையனாகவே நினைத்து நடத்துவது. சந்தர்ப்பங்களில் அதட்டுவதும் மிரட்டுவதும் கூட பிடிக்கவில்லை. மருமகளுகு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மாமியாரும் அவ்வப்போது தாடையை இடித்து வேலையுல் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படி அவரவருக்கு தனித்தனி புகார்கள்.
'' நான் வருவதற்கு முன் இப்படி பேச்சுகள் நடந்து இருக்கிறதா?'' கஜாதர் கேட்டார்.
மனைவி தலையை அசைத்து இல்லையென்றாள். முதலில் அமர் வீட்டின் தலைவனாக இருந்தான். மருமகளுக்கு எந்த தடையும் தடுப்பும் இல்லை. அமரின் கூட்டாளிகள் கூடும் இடமாக இந்த வீடு இருந்தது. அவர்கள் வந்து விட்டால் இங்கிருந்து சிற்றுண்டி சாயா என உபசரணை நடக்கும். வசந்திக்கும் இதுதான் விருப்பமாயிருந்தது.
கஜாதர் அமைதியாக தன் மனைவிடம் '' அமரை அவசரப் பட வேண்டிய அவசியமில்லை என்று சொல்'' என்றார்.
மறுநாள் வழக்கம்போல் உலாவி விட்டு வந்தபோது வரவேற்பறையில் அவரது கட்டில் இல்லை. சமையலறையில் மனைவி தெரிந்தாள். உள்ளே வந்து இது பற்றி கேட்கலாம் என்றிருந்தார். கேட்கவில்லை. மருமகள் எங்கே என்று கேட்கவும் வாயைத் திறந்தார் னால் ஏதோ நினைவுக்கு வர வாயை மூடிக் கொண்டார். மனைவின் அறையைப் பார்த்தார் ஊறுகாய் மற்றும் சாமான்களுக்கு மத்தியில் அவரது கட்டில் போடப் பட்டிருந்தது. கஜாதர் தனது கோட்டைக் கழற்றினார். அதை மாட்டுவதற்கு சுற்றில் எங்கும் இடம் கிடைக்கவில்லை. பின் அதனை மடித்து தடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த துணிகளை ஓரமாகத் தள்ளி விட்டு தனது கோட்டைப் போட்டார். எதுவும் சாப்பிடாமல் தனது கட்டிலில் படுத்துக் கொண்டார். என்னதான் இருந்தாலும் உடல் கிழடாகவே இருந்தது. காலை மாலை இரண்டு வேளையும் தவறாமல் உலாவ கிளம்பி விடுவார். வீடு திரும்புகையில் கலைத்துப் போய் விடுவார்.
கஜாதருக்கு அவரது பெரிய பரந்து விரிந்த ரயில்வே குவாட்டர்ஸ் நினைவுக்கு வந்தது. திட்டமிட்ட வாழ்க்கை. காலையில் பயணிகள் ரயில் வந்ததும் நிலையத்தின் பரபரப்பு, பார்த்து பழகிய, பழகாத முகங்கள். மேலும் தண்டாவாளங்களில் கடகட வென தாள கதியில் இசைத்தபடி ஓடும் ரயிலின் சங்கீதம். புயலும் மெயில் வண்டிகளும், இஞ்ஜினின் கர்ஜனையும்தான் அவரது தனிமை இரவுகளில் துணைகளாக இருந்தன. சேட் ராம்ஜிலாலின் மில் தொழிலாளிகள் எப்பொழுதாவது வந்து அவருடன் உட்கார்வதுண்டு. அவர்கள் தான் தரவாகவும் நலம் விசாரிப்பவர்களாகவும் இருந்தனர். அவரது வாழ்க்கை ஒரு விதியின் வசம் சிக்கிக் கொண்டு நிச்சயிக்கப் பட்டிருந்தது. அந்த வாழ்க்கை அழிந்து போனதை உணர்ந்தார். அவர் தனது வாழ்க்கையின் விரும்பியவற்றில் ஒரு துளியைக் கூட பெறவில்லை.
வீட்டில் படுத்துக் கிடந்தபடியே உள்ளேயிருந்து வரும் விதவிதமான சத்தங்களை கேட்டுக் கொண்டிருந்தார். மகள் மற்றும் மருமகளின் பேச்சொலிகள், வாளியில் கொட்டும் குழாய் நீரின் ஓசை, சமயலறையில் சாமான்களின் உருட்டல் சத்தம் மற்றும் அக்கம்பக்கதாரின் உரையாடல்கள் என அவரது காதில் விழுந்து கொண்டே இருக்கும். இனி யாருடைய விஷயத்திலும் தலையிடக் கூடாது என முடிவு செய்து விட்டார். குடும்பத்தின் தலைவனுக்கு வீட்டில் ஒரு கட்டில் போடக் கூட இடமில்லை. அவர் இங்கேதான் கிடக்கவேண்டும். வேறு எங்கும் எடுத்துப் போட்டு விட்டால் அங்கே போய் விட வேண்டும்.
தனது பிள்ளைகளின் வாழ்வில் தனக்காக இடமில்லை என்ற போது தனது வீட்டிலேயே ஒரு பரதேஷியைப் போல் கிடக்க வேண்டியதுதான். உண்மையில் அந்த நாளுக்குப் பின் கஜாதர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. நரேந்திர கேட்டால் காரணம் கேட்காமல் பணம் கொடுத்தார். வசந்தி இரவு வெகு நேரம் வரை பக்கத்து வீட்டில் இருந்து விட்டு திரும்புவாள் அவர் எதுவும் கேட்கவில்லை. னால் அவருக்கு மிகுந்த கவலை கொடுத்த விஷயம் என்னவென்றால் அவரது மனைவி கூட அவரது நிலையில் மாற்றத்தை உணராததுதான். அவர் தனது மனதில் எவ்வளவு பாரத்தை சுமந்து கொண்டிருந்தார் என்பது பற்றி அவரது மனைவிக்கு தெரியாது. தனது கணவன் வீட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எப்பொழுதாவது அவள் ''சரிதானா, நீங்கள் இதிலெல்லாம் தலையிடாமல் இருப்பது நல்லதுதான். பிள்ளைகள் பெரியவர்களாகி விட்டார்கள். ஏதோ நம் கடமை செய்து கொண்டிருக்கிறோம். படிக்க வைக்கிறோம். கல்யாணமும் முடித்துக் கொடுத்திடலாம்'' என்று ழமாக மூச்சு விடுவாள்.
இவ்வாறான பொழுதுகளில் கஜாதர் தன் மனைவியை நிலை குத்திப்பார்த்துக் கொண்டிருப்பார். அவர் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பணம் காய்ச்சும் மரமாகத்தான் இத்தனை நாள் இருந்திருக்கிறார். இன்னும் இருக்கிறார்.
ஒரு பெண் தான் சுமங்கலி என்றும் சமுதாயத்தில் தாய்மை மதிப்போடு உலவும் அதிகாரத்தையும், குடும்பத்தலைவி என்ற பட்டம் பெற அமைத்துக் கொண்ட குடும்பத்தின் இன்னொரு சரிபங்கு கூட்டாளியை பெற்றதற்கும் இத்தனைக்கும் மேலாய் அவளது வாழ்க்கையின் துணையாக வந்து அவளை அத்தனை நிலைகளிலும் தாங்கி காத்து நின்றவனுக்கு இரண்டு வேளை தட்டில் சாப்பாடு வைத்து விடுவதால் மட்டும் தனது கடமை முடிந்து விட்டதாக எண்ணி விலகிப் போய் விடுகிறார்கள். நெய் மற்றும் சர்க்கரை டப்பாவில் மாட்டிக் கொண்டவளுக்கு அதுவே அவளது உலகமாகி விட்டது. கஜாதர் அவளது வாழ்வின் ஒரு அங்கமாக இருக்க முடியாது. அவளுக்கு தனது மகளின் திருமணத்தில் கூட நாட்டமிழந்து போய் விட்டிருந்தாள். எந்த விஷயத்திலும் தலையிடாமல் இருந்து கொண்டிருந்த சூழ்நிலையிலும் அவர் அவ்வீட்டின் ஒரு அங்கமாகவே உணரப் படவில்லை. அலகாரம் செய்த இருக்கையில் வைக்கப் பட்ட கட்டிலைப் போல் அவரது வாழ்க்கை பொருத்தமில்லாமல் இருந்தது. அவரது மகிழ்ச்சி கவலை ழிக்குள் மூழ்கி விட்டிருந்தது.
இத்தனை முடிவுகளுக்கும் விலகளுக்கும் பின் ஒருநாள் கஜாதர் வீட்டு விஷயத்தில் தலையிட்டு விட்டார். மனைவி வழக்கம் போல் வேலைக்காரனைப் பற்றி புகார் சொல்லிக் கொண்டிருந்தாள். '' சரியான திருட்டுப் பயல், மார்க்கெட் போனால் ஒவ்வொரு பொருளிலும் பணம் திருடுகிறான். சாப்பிட உட்கார்ந்தான் என்றால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான்.'' என்றாள். கஜாதருக்கு தங்களின் வாழ்வு முறைக்கும் வருவாய்க்கும் தகுதிக்கும் வேலைக்காரனை வைத்து வேலை வாங்குவது அதிகமாகவே பட்டது. இப்பொழுது மனைவியின் பேச்சை கேட்டதிலிருந்து வேலைக்காரனின் சம்பளம் வீண் செலவாகவேப் பட்டது. சின்னச் சின்ன வேலைகள்தான் வீட்டில் மூன்று ண்கள் இருக்கிறார்கள் யாராவது ஒருவர் செய்து விடலாம். அதனால் கஜாதர் அன்றே வேலைக்காரனுக்கு கணக்கு முடித்து விட்டார்.
அமர் வேலையிலிருந்து வந்ததும் வேலைக்காரனை கூப்பிட்டான். அமரின் மனைவி '' உங்கப்பா வேலைக்காரனை நிறுத்திட்டாரு'' என்று அறிவித்தாள்.
''ஏன்'' அமர் முகம் முழுக்க த்திரத்தோடு கேட்டான்.
'' செலவு அதிகமாகுதாம்'' மருமகள் பதிலளித்தாள்.
இந்த உரையாடல் மிகவும் சரியானதாகவும் நேரடியாகவும்தான் இருந்தது. னால் மருமகள் இத்தனையையும் சொன்ன தொனி கஜாதருக்கு பயத்தை உண்டு பண்ணியது. அன்று மனசுக்கு சரியில்லாமல் அவர் உலாவ போகவில்லை. சோம்பலாக எழுந்து விளக்கும் பற்றவைக்கவில்லை. இதனை உணராத நரேந்திர '' அம்மா, நீ ஏன் அப்பாக்கிட சொல்ல மாட்டேன் என்கிறாய்? சும்மா இருக்க முடியலைன்னுட்டு வேலைக்காரனை நிறுத்திட்டார். நான் சைக்கிளில் மூட்டையை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் மாவு அரைத்துவிட்டு வருவேன் என்று அப்பா நினைத்தால் அது நடக்காது'' என்று நரேந்திர அம்மாவிடம் தனது அத்தனை கோபத்தையுன் பொழிந்தான்.
''மாம்மா'' வசந்தியின் குரல் ஒலித்தது. '' நான் காலேஜ்க்கும் போகனும் திரும்பி வந்து வீட்டில் குப்பையும் கூட்டனும் என்றால் என்னால் முடியாது'' என்று வசந்தி வெடித்தாள்.
'' வயசாயிடுச்சில்ல அமைதியா கிடந்தா என்ன. எல்லா விஷயத்திலும் தலையிட்டால் எப்படி'' அமர் தனது பங்கு திருப்தியை கொட்டினான். ''மாம் அவருக்கு எதுதான் சரியாத் தெரியுது. உன் மனைவியை சமைக்க சொல்லி விட்டார், அவள் பதினைந்து நாளுக்கு சமைக்க பயன் படும் அரிசி பருப்பை ஒரே நாளில் காலி பண்ணி விட்டாள்'' என்றாள் அம்மா தன் பங்குக்கு. மருமகள் எதுவும் சொல்லும் முன் அம்மா சமையலறைக்குள் புகுந்து கொண்டாள். கொஞ்ச நேரம் கழித்து தனது அறைக்குத் திரும்பியவள் விளக்கை பொறுத்தினாள். கஜாதர் படுத்துக் கிடந்ததைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். கஜாதரின் முகபாவங்களால் அவள் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் வெறுமனே கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கிடந்தார்.
மறுநாள் கஜாதர் கையில் ஒரு கடிதத்துடன் வீட்டிற்குள் நுழைந்து மனைவியை அழைத்தார். அவள் ஈரமான கைகளுடன் வந்தாள். கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டு அருகில் நின்றாள். கஜாதர் எந்தவித உணர்வும் இன்றி '' எனக்கு ராம்ஜிலால் சர்க்கரை லையில் வேலை கிடைத்திருக்கு. சும்மா இருக்கிறதவிட நாலு பைசா வீட்டுக்கு கொண்டு வரலாமே அதுதானே நல்லது. அவர் முன்னாலேயே சொல்லியிருந்தார் நான் தான் வேண்டாம் என்றிருந்தேன் இப்பொழுது...'' என்று எரியும் நெருப்பிலிருந்து கிளம்பும் தீப்பொரி போல் மெல்லிய குரலில் '' பல வருஷமா உங்களை எல்லாம் பிரிந்து இருந்ததுக்கப்புறம் அவகாசம் கிடைச்சா உங்களோட மகிழ்ச்சியா காலத்தை கழிக்கலாம் என்று நினைத்தேன்.. சரிவிடு. நாளைமறுநாள் நான் வேலைக்குப் போக வேண்டும். நீ என்னுடன் வருகிறாயா?'' என்று அவளைப் பார்த்தார். ''நானா?'' மனைவி திடுக்கிட்டுக் கேட்டாள். '' நான் உங்களோட வந்திட்டா இங்க யார் பார்த்துக் கொள்வார்? இவ்வளவு பெரிய குடும்பம், வயசுக்கு வந்த பொண்ணு...'' என்று அவள் அவரது கண்களை விட்டு விலகினாள்.
அவள் பேசி முடிப்பதற்குள் கஜாதர் குறுக்கிட்டு ஏமாற்றமான குரலில் '' சரி! நீ இங்கேயே இருந்துகொள். நான் சும்மாதான் கூப்பிட்டேன்'' என்றபடி ழ்ந்த மௌனத்தில் உரைந்து விட்டார்.
நரேந்திர மிகப் பொறுப்பாக படுக்கையை கட்டி முடித்து விட்டு ரிக்ஷா அழைத்து வந்தான். கஜாதரின் தகரப் பெட்டியும் அதன் மேல் சுருட்டிக் கட்டப் பட்ட படுக்கையும் வைத்தாயிற்று. சாப்பிட லட்டுவும் கொஞ்சம் பலகாரங்களையும் கையில் பொட்டலமாக வைத்தபடி கஜாதர் ரிக்ஷாவில் உட்கார்ந்து கொண்டார். தனது குடும்பத்தார் மேல் ஒரு பார்வையை வீசினார். பின் எதிர் திசையில் பார்க்க ரிக்ஷா கிளம்பியது. அவர் போனதும் அனைவரும் வீட்டிற்குள் போய் விட்டார்கள். மருமகள் அமரிடம் '' சினிமாவுக்குப் போகலாமா?'' என்று கேட்டாள். வசந்தி '' அண்ணா நாங்களும் வருவோம்'' என்று துள்ளினாள்.
கஜாதரின் மனைவி சமயலறைக்குள் நுழைந்து கொண்டாள். மீதி இருந்த பலகாரங்களை கிண்ணத்தில் எடுத்து தனது அறையில் வைத்துக் கொண்டாள். பின் வெளியே வந்து '' யப்பா நரேந்திர, அப்பாவின் கட்டிலை அந்த அறையிலிருந்து எடுத்து வெளியில் போடு, உள்ளே நடக்கக் கூட இடமில்லை'' என்று சத்தமிட்டாள்.
-------------------------------------------------------------------------------------

உஷா பிரியம்வத்: இந்தி இலக்கிய உலகில் தனது சிறுகதைகள் மூலம் தனியிடம் பிடித்துள்ள உஷா அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் இருந்து ங்கில இலக்கியத்தில் பி எச் டி பட்டம் பெற்றவர். டெல்லியின் லேடி ஸ்ரீராம் கல்லோரியிலும் அலஹபாத் பல்கலைக் கழகத்திலும் மூன்று ண்டுகள் பேராசிரியராக பணியாற்றியப் பின் புல்பிரைட் ஸ்காலர்சிப் பெற்று அமெரிக்கா சென்று விட்டார். அங்கு புளுமிங்டன் மற்றும் இந்தியானா கிய பல்கலைக் கழகங்களில் முதுகலை டாக்டர் பட்டங்களை பெற்றார். தற்போது அவர் விஸ்காசின் பல்கலைக் கழகத்தில் தெற்கு சியப் பிரிவில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
உஷாவின் கதைகள் பரும்பாலும் நகர்ப்புறத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்து மக்கள் மற்றும் மிகச் சாதாரண குடும்பத்து மக்களின் வாழ்வியல் மற்றும் மன உணர்வுகள் குறித்து அமைந்துள்ளது. இவ்வாறான குடும்பங்களின் நவீன வாழ்க்கைகான ஏக்கம், தனிமை கிய உணர்வுகளை பிரதிபளிக்கும் கதைகளை எழுதி உள்ளார். அவரது மொழி மெல்லிய உணர்வுகளையும் சிதையாமல் பதியும் யதார்த்தம் கொண்டது.
பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்ற இவரது கதைகள் ங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
'மேரே பிரிய காஹானியான்'' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'ருக்கேகி நஹ¤ ராதிகா'' மற்றும் ''ஷேஷ் யாத்ரா'' கிய நாவல்களும் ''ஜிந்தகி அவுர் குலாப் கா பூல்'' மற்றும் ''ஏக் கோயி தூஸ்ரா'' என்ற நூல்களும் குறிப்பிடத் தகுந்தது.


மிகக் குறைவாகவே எழுதும் உஷாவுக்கு மனித வாழ்க்கையில் ஒருவரிடம் ஒருவர் பகிராத கனவுகள் குறித்தும் சைகள் குறித்தும் தனது கதைகளில் பதிவு செய்வதை விரும்புகிறார். செய்தும் வருகிறார்.

No comments: