Monday, September 04, 2006

மாம்பழ பருவம்-----------
இந்தியில்: பிரபா கேதான்
தமிழில்: மதியழகன் சுப்பையா
----------------------------------------------------------------------------------------------------------------
சேட் ருக்மாதாஸ் மூச்சிறைக்க வெளியிலிருந்து திரும்பினார். கையில் இருந்த பழப் பையை சாப்பாட்டு மேஜையில் வைத்தார். தனது குர்தாவை கொஞ்சம் மேலே தூக்கி கைக்குட்டை எடுத்து முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தார்.
'' இப்பவெல்லாம் வியர்வை அதிகமாக வருகிறது''
''வெயில் காலம் இல்லையா அதனால்தான்'' என்று அவரது மனைவி பகவானி பதில் கொடுத்தார்.
''னால் இப்படி ஒரு சூட்டை இதுவரை கண்டதில்லை'' என்றார் அவர். அவரது உடலின் அணுவணுவிலிருந்து வியர்வை வழிந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் வீட்டில் மின் விசிறியின் காற்று சுழன்று கொண்டிருந்தது. மேஜையின் ஒரு மூலையில் உட்கார்ந்தபடி கிழவி சேட்டானி பகவானி பாயி தனது பேரனின் கிழிந்த ஸ்வெட்டரை பிரித்துக் கொண்டிருந்தாள். '' பினனி இதை தூக்கி எறியப் பார்த்தாள். இந்த காலத்துப் பெண்களுக்கு பணத்தின் மதிப்பு எங்கே தெரிகிறது. நான் தான் அதை வாங்கி பிரித்துக் கொண்டிருக்கிறேன். துவைத்து எடுத்து சாயம் பூச கொடுத்து விடுவேன். யாருக்காவது பயன் படுமே'' என்றாள் பகவானி.
சேட் மனைவியைப் பார்த்தார். '' பகவான், உனக்கு எப்பதான் விபரம் வரும்? பழைய ஸ்வெட்டரை பிரித்து பின்னுவதற்கு எவ்வளவு காலம் கிவிடும் தெரியுமா. அதுக்குள்ள உன் பேரன் இன்னும் ஒரு முழம் உயரமா வளர்ந்து விடுவான். அதை விட இந்த ஸ்வெட்டரை அப்படியே வைத்துவிடலாம்... வீட்டில் குழந்தைகளுக்கு என்ன குறைச்சல் இல்லையே....அடுத்து எதாவது விசேஷம் என்றால் ஒரு கூட்டமே கூடுமே.
'' மாம், பருவ விழாவின் போது சிதரிக் கிடக்கும் நம் குடும்பமே ஒன்று திரளும் இல்லையா. குறைந்தது ஒரு நூறு பேராவது கூடி விடுவோம் இல்லையா.'' என்று கேட்டுக் கொண்டே பகவானி பாயி கையில் அரைகுறையாக பிரிக்கப் பட்ட ஸ்வெட்டரை அப்படியே சுற்றி வைத்து விட்டார்.
''இந்தா, இந்த மாம்பழத்தை சாப்பிட்டுப் பார், நான் உனக்காத்தான் வாங்கினேன்''
''நம்ப குடும்பத்தில் இருக்கும் அனைவக்கும் இந்த கிளிமூக்கு வகை மாம்பழம் பிடிக்கும்..... நான் மட்டும் எப்படி தனியாக மாம்பழம் சாப்பிட முடியும்.....?''
'' தனியா எங்க சாப்பிடப் போற, நான் -நீ இரண்டு பேர் இருக்கிறோம் இல்லையா...... இந்தா, சாப்பிட்டுக்கோ.....''
அப்புறம் சாப்பிட்டுக் கொள்கிறேன், பேரப்பிள்ளை பொடியனுக்கும் கொடுப்பேன், ஸ்கூலில் இருந்து வந்து கொண்டிருப்பான்....''
'' அவன் வர இன்னும் நேரம் இருக்கிறது, ...இன்னும் பதினோர் மணியாகவில்லையே. நீ மாம்பழம் சாப்பிட்டுக்கோ''
'' இல்லை, அதை பிரிட்ஜில் வைத்து விடுங்கள்''

''நான் சொல்வதைக் கேள், இந்த மாம்பழத்தை உனக்காகத்தான் வாங்கினேன். கிளிமூக்கு மாம்பழத்தை யாராவது பார்த்தால், அதை சாப்பிடாமல் விட மாட்டார்கள். நான் மற்றவர்களுக்காக வேற மாம்பழம் வாங்கி வந்திருக்கிறேன்.''
''என்ன விலை கொடுத்தீர்கள்?''
'' நம்ம பஷிர் கிட்டதான் வாங்கினேன். நம்ம பழைய பழக்காரன்.... அவன் அதிகமாக விலை வைக்க மாட்டான்'''
''மாம், அது சரிதான்'' என்று பகவானி பாயி கூறிக் கொண்டிருந்தாள். சேட் ருக்மாதாஸ்ஜி கட்டிலில் மல்லாந்து படுத்தார். அங்கேயே படுத்துக் கிடந்தார். எழுந்திரிக்க மனசே இல்லை. பின் அவரால் எழுந்திருக்க முடியவே இல்லை. மூன்றாவது நாள் அவர் காலமாகி விட்டார். சேட்டானி பகவானி பாயின் தலையில் இடி விழுந்தது போலாகி விட்டது. அவளை லக்வா அடித்தது போல் கி விட்டாள். அவளது மூன்று பையன்கள், மூன்று மருமகள்கள், மூன்று மகள்கள், மூன்று மருமகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அவர்களின் குடும்பங்கள் கொள்ளுப் பேரப் பிள்ளைகள் என அனைவரும் ஓடி வந்து விட்டார்கள். வீடே நிறைந்து போனது. எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். அப்பொழுது கிழவி சேட்டானியின் உடல் தடதடவென நடுங்கத் துவங்கியது. '' ஏய்! யப்பா, ராமா, இது என்னப்பா செய்து விட்டாய்? இனி எனக்கு எந்த துக்கத்தை மிச்சம் வச்சிருக்க....'' அவள் கட்டிலின் பலகையை நகர்த்தி துடித்து அழுதாள். '' எவ்வளவு துக்கம் தர முடியுமோ தா... சீக்கிரம் தா... எல்லாத்தையும் தா...'''

ருக்மாதாஸ் மற்றும் அவரது மனைவி பகவானி பாயி இருவரும் எழுபது ண்டுகளாக ஒன்றாக இருந்தார்கள். பகவானி பாயிக்கு ஏழு வயது இருக்கும் போது அப்பொழுது கல்யாணம் முடித்து இந்த வீட்டிற்கு வந்தாள். பின் தனது தாய் வீட்டிற்குப் போய் விட்டாள். இரண்டு வருடங்கள் கழித்து அதாவது தனது ஒன்பதாவது வயதில் மீண்டும் இந்த வீட்டிற்கு வந்தாள். அதன் பின் இதுவரை தனது தாய் வீடு போகவில்லை.
இருவரும் எல்லா நிலையிலும் ஒன்றாகவே இருந்தார்கள். அவர் பூசை செய்தால், சேட்டானி பூசைக்கான பொருட்களை எடுத்து அலங்கரிப்பாள். அவர் தயிர் பூரி சாப்பிட்டால். மிச்சமிருக்கும் தயிரில் இரண்டு பூரிகளைத் தொட்டு தானும் சாப்பிட்டுக் கொள்வாள். அவர்கள் இருவரும் ஒரே படுக்கையில்தான் படுத்துக் கொள்வார்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான எண்ணம். பழக்கவழக்கம் மற்றும் உணர்வுகள்....! இவர்களில் ஒருவர் இந்த பூமியை விட்டுப் போய்விட மற்றொருவர் வாழ்வது நடக்காத காரியம் தான்.
ருக்மாதாஸின் அஸ்தியை அவரது மகன்கள் தோளில் வைத்துக் கொண்டபோது சேட்டானி பகவானி பாயின் இதயம் நின்று விட்டது. இனி தனக்கு யார் இருக்கிறார்கள் என்று கதரி துடிதுடித்து அழுதாள். அவளை சமாதானப் படுத்த யாராலும் முடியவில்லை.
கங்கையிலிருந்து திரும்பிய அனைவரும் சர்பத் குடித்தார்கள். உற்றார்-உறவினர் மற்றும் அன்பு பகிர்ந்தவர்கள் என அனைவரும் வந்திருந்தார்கள். னால் கிழவி சேட்டானி தலையைக் கவிழ்ந்து வாடிய முகத்துடன் மூலையில் உட்கார்ந்தபடி சுவற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். இனி அவளது வாழ்வில் எதுவும் மிச்சமில்லை.
தொடர்ந்த நாட்களில் கிழவி சேட்டானி மேலும் மனக் கவலைக்கு ட்பட்டாள். எல்லோரிடமிருந்தும் விலகி, தனக்குள்ளேயே மூழ்கிக் கொண்டிருந்தாள்.
வீட்டின் மூலையில் ஜன்னலில் வைக்கப் பட்ட துளசி செடி காய்ந்து விட்டிருப்பதைப் பார்த்த மருமகள் '' இதற்கு யாரும் சரியாக தண்ணீர் ஊற்றுவது இல்லை போல...?'' என்றாள்.
''துளசிக்கு விளக்கு காட்டி பூசை செய்யவில்லை என்றாள், அது தளிர்க்காது'' என்றால் நடு மருமகள்.
''வெயில்காலத்தின் இந்த உஷ்ணத்தில எந்த செடிதான் பச்சையா இருக்கும். காய்ந்துதான் போகும்'' என்றாள் கடைசி மருமகள்.
னால் சேட்டானி எதுவும் சொல்லவில்லை. எல்லோருடைய பேச்சையும் கேட்டுக் கொண்டு முகத்தை தொங்க விட்டபடி அமர்ந்து இருந்தாள். பலமுறை அவளாகவே படுக்கையில் நீட்டிப் படுத்துக் கொள்வாள்.... மிக அமைதியாக... கொஞ்சம் கூட அசையாமல். சேட் அன்று வாங்கி வந்த மாம்பழத்தை எங்கு வைத்திருப்பார் என்று அடிக்கடி அவளுக்கு நினைவுக்கு வரும். அந்த கிளிமூக்கு மாம்பழம் காய்ந்து விட்டிருக்குமா? அழுகி விட்டிருக்குமா..... இல்லை.....இல்லை. மாம்பழம்தான் பிரிட்ஜில் மாதம் இரண்டு மாதங்களுக்கு வைத்துக் கொள்ளலாமே. இப்ப எல்லாம் வெறுமையாகப் பட்டது. சேட் இறந்து எத்தனை நாட்கள்தான் கிவிட்டது. '' என்னதான் இருந்தாலும் நான் அன்று மாம்பழத்தை சாப்பிட்டிருக்க வேண்டும்'' என்று யோசித்துக் கொள்வாள். அப்பொழுது அவளுக்கு கடுமையாக பசிக்கத் துவங்கி விடும். கிளிமூக்கு மாம்பழத்தின்மினிய வாசனை அவளது மூக்கில் நிறைந்து விடும். அவள் அன்பாக தனது கடைசி பேரனைப் பார்ப்பாள், இவனுக்குக் கூட ஒரு துண்டு கிடைத்திருக்கும் '' என்று உச்சுக் கொட்டிக் கொள்வாள்.
பகவானி பாயின் குடும்பம் அவளை தனியாக விடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தது. எல்லோருக்கும் இளைய பேரன் தனது விளையாட்டுச் சாமான்களின் கூடையைத் தூக்கிக் கொண்டு சேட்டானியின் அறைக்குப் போய் விடுவான். ஸ்கூலில் இருந்து திரும்பியதும் அவன் அங்கே போய்தான் விளையாடிக் கொண்டிருப்பான். பகலில் சுமார் று -ஏழு முறையாவது பெரிய மருமகள் சேட்டானியின் அறையை எட்டிப் பார்த்து விட்டு வருவாள். சேட்டானிக்கு மருமகள் தேவைப் படுகிறாளா என்பதற்காக இவ்வாறு தொடர்வாள். இளைய மகன் ஒருநாள் சேட்டானியை வண்டியில் வைத்து கோயிலுக்கு அழைத்துச் சென்றான். சேட்டானிக்கு போக மனதில்லைதான். கடுமையான வருத்தத்துடன் '' உனது அப்பாவுக்கு மோட்டர் வண்டியில் பயணம் செய்ய நிறைய சை இருந்தது, னால் நீதான் ஏழு எட்டு மணிக்கு முன் எப்பொழுதும் வந்ததில்லையே'' என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்.
கன மழையானது உஷ்ணத்தை கழுவி துடைத்து வைத்துக் கொண்டது. பகவானி பாயி வராந்தாவில் நின்றபடி மழையின் தடித்த துளிப் பிரவாகத்தை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். திடீரென வராந்தாவின் மூலையில் ஒரு பழைய குடை வைக்கப் பட்டிருப்பது கண்ணில் பட்டது.
'' இது அவரின் குடையாயிற்றே'' என்றபடி குடையைத் திறந்து பார்க்கலானாள். அதற்குள் வராந்தாவில் நடுமகன் வந்து விட்டான் '' அம்மா, அந்தக் குடையை இப்படித் தா, நான் வெற்றிலைக் கடை வரைக்கும் போய் வருகிறேன்'' என்றான்.
''கொடுக்க மாட்டேன்.... இந்தக் குடையை கொடுக்க மாட்டேன்..... எப்பொழுதும் கொடுக்கவே மாட்டேன்.......'' என்று கத்தினாள் சேட்டானி.
மகன் அதிர்ச்சியுடன் தனது அம்மாவையேப் பார்த்துக் கொண்டிருந்தான். குடையை கையில் வைத்துக் கொண்டே பகவானி பாய் உள்ளே வந்து தனது படுக்கையில் படுத்துக் கொண்டாள். குடையின் கைப்பிடியை அப்படியே பிடித்து வைத்திருந்தாள். டாக்டர் வந்து நாடி பார்க்கையில் தனது உலர்ந்ர்த நடுங்கும் கையை முன்னுக்கு நீட்டுவாள். பெரிய மருமகள் தூக்க மாத்திரைகளைக் கொடுப்பாள். அதை அவள் சாப்பிட்டுக் கொள்வாள். நடு இரவுகளில் எழுந்து இருட்டில் தனது படுக்கையில் உட்கார்ந்து கொள்வாள் கொஞ்சமும் டாமல் அசையாமல் நிலைகுத்தியப் பார்வையுடன் உட்கார்ந்திருப்பாள்..... காலை வரை இப்படியே இருப்பாள். சின்ன மருமகள் வந்து '' அம்மா, ராத்திரி தூங்கவில்லையா?'' எனக் கேட்பாள். சேட்டானி பதில் எதுவும் சொல்லாமல் சின்ன மருமகளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பாள். குடும்பமே இறந்து போனா சேட்டின் நினைவால் வாடிக் கொண்டிருந்தது. எப்பொழுதெல்லாம் என்னென்ன வாங்கப் பட்டது என்று சேட்டானிக்கு நினைவுக்கு வந்தது. இந்த வீட்டில் எத்தனை திருமணங்கள் முடிந்தது. எத்தனை குழந்தைகள் பிறந்தது.... காது குத்துகள் நடந்தது.... குடும்பத்தின் குதூகலம்..... வீடு முழுவதும் சிரிப்பும் கூச்சல் கும்மாளமுமாய் நிறைந்து கிடக்கும். முதல் சாவு சேட்ஜியின் சாவாக இருந்தது. எதுவும் நடக்கவில்லை எனவே சேட்டானிக்கு தோன்றியது. சேட்ஜி இதோ மார்க்கெட்டுப் போயிருப்பதாகவே தோன்றியது.......பை நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு திரும்பி வருவார்..... அவருக்கு எல்லாம் நினைவில் இருக்கும்.... ங்,... அன்று கூட பருவத்தின் முதல் கிளிமூக்கு மாம்பழம் வாங்கி வந்தாரே. என்னை மாம்பழத்தை சாப்பிடும் படி எவ்வளவோ வற்புறுத்தினாரே..... னால் நான் தனியாக எப்படி சாப்பிடுவேன்.... ஒரேயொரு மாம்பழம்தானே இருந்தது. இப்படியாக அவள் நினைவு ழத்தில் மூழ்கி விடுவாள்.
ஒரு நாள் சேட்டானி காலையிலேயே வீட்டை விட்டு வெளியே போய் விட்டாள். மகன்களும் மருமகள்களும் அவளைத் தேடித் தேடி அதிகமாக கவலை அடைந்து விட்டார்கள். உறவினர் வீடுகளில் தொலைபேசியில் விசாரித்தாயிற்று. னால் எல்லா இடங்களிலிருந்தும் நிராஷைதான் கையடைந்தது. ''எங்கதான் போயிருக்க முடியும்? அதுவும் இந்த கடுமையான இருட்டில்....'' என்று அனைவரும் ஒரு சேர யோசித்துக் கொண்டிருந்தனர்.
''வீட்டின் கதவை யார் திறந்தார்கள் ?''
'' அம்மாவே அவளாக திறந்து கொண்டாள்''
'' கங்கை கரையில் பார்த்து வந்தீர்களா?''
'' கோயிலில் பூசாரியிடம் கேட்டீர்களா?''
யாருக்கும் அவள் பழச் சந்தைக்கு போயிருக்கலாம் என்று தோன்றவில்லை. பழைய பழ வியாபாரி பஷிரிடம் பழங்களின் விலையை ஏன் கூட்டினாய் எனக் கேட்டாள். கிளி மூக்கு மாம்பழம் கிலோ எடையிலா கிடைக்கும்..? நாங்கள் என்ன முதல் முறையாகவா வாங்குகிறோம் ? நான் டஜனுக்கு என்ன விலையோ அதன்படிதான் மாம்பழம் வாங்குவேன்'' என வாதாடிக் கொண்டிருந்தாள்.
மணிக்கும் மேலாக நடந்த வாக்குவாதத்தின் இறுதியில் பஷிர் மியான் '' போகட்டும்...! என்ன பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறது. இருபது முப்பது நஷ்டம் னாலும் பரவாயில்லை. டஜனுக்கு என்ன விலையோ அதன்படியே கொடுத்து விடலாம். சேட்ஜி எனது மிகப் பழைய வாடிக்கையாளர் யிற்றே. இந்த பருவத்தின் முதல் கிளிமூக்கு மாம்பழங்கள் இவர்கள் வீட்டிற்குத் தானே போகிறது.'' என்று அவன் சேட்டானியின் பேச்சுக்கு இணங்கினான்.
குறைந்த விலையில் மாம்பழங்கள் கிடைப்பது தெரிந்து பகவானி பாயியின் வயதான கண்களில் பிரகாஷம் உண்டாயிற்று. பஷிர் பழப் பெட்டியின் மீது பழைய துணியை விரித்தார். கிழவி சேட்டானி அதில் அமர்ந்து பேசத் துவங்கினாள்.
''அம்மா, ஐயா இறந்து போனதுக்கு அப்புறம் நீங்கள் கிளையிலிருந்து உதிர்ந்த இலையைப் போல் கி விட்டீர்கள் ''
''மாப்பா....''
'' ஐயா ரொம்ப நல்ல மனிதராக இருந்தார். அன்னைக்கு நானும் வீட்டிற்கு வந்திருந்தேன். உங்க குடும்பத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள்.''
பகவானி பாயி சந்தோஷமாகி விட்டாள். சேட்ஜியை நினைத்துக் கொள்வதற்கு ஒருவனாவது மிஞ்சியிருக்கிறானே. வீட்டில் இருப்பவர்கள் சேட்ஜியை மறக்கத் துவங்கி விட்டார்கள்.
'' மாம்ப்பா, சரியாத்தான் சொல்கிறாய். குடும்பம் ரொம்பப் பெரியதுதான். எனக்கு எல்லாமே நேற்று நடந்த மாதிரிதான் இருக்கு. அவரை யாரும் மறக்க முடியுமா?''
'' சரி வாங்க, நான் உங்களை வீடு வரைக்கும் கூட்டிப் போகிறேன்'' என்றபடி சேட்டானியின் நடுங்கும் கைகளை பஷிர் பாய் பிடித்தார்.
'' இல்லைப்பா, நான் போய் விடுவேன். எனக்கு வழி தெரியும்.''
'' இல்லை, வேண்டாம், நெருக்கடி மிகுந்த பாதை, குதிரை-வண்டின்னு நிறைய நெரிசல், இதில் மாம்பழங்கள் நிறைந்த கூடையும் இருக்கிறது''
வீட்டின் வாசலில் மகன்கள் கவலையுடன் நின்று கொண்டிருந்தார்கள். மருமகள்கள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தார்கள். காக்கைகளின் கூச்சலில் மகன்களின் சத்தம் மறைந்து போனது. மூத்த மகன் அம்மாவை அதட்டினான்.
நடுமகன் கொஞ்சம் அமைதியாக '' நீங்கள் இப்படி தனியாகப் போயிருக்கக் கூடாது'' என்றான்.
வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மகள் அம்மாவைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
பஷிர் பையை பிடித்தபடி '' இந்தாருங்கள் மாம்பழங்கள் '' என்றான்.
''எங்கிருந்து வருகிறீர்கள்?''
'' என்னுடைய கடையிலிருந்து''
'' உன்னுடைய கடை எங்கிருக்கிறது?''
'' இங்கதான், அந்த நாலுச்சந்தியில் தான் என் கடை இருக்கிறது. உங்களுக்குத் தெரியாதா தம்பி....''
'' டேய், நீ பிறந்ததிலிருந்து இவனுடைய கடையிலிருந்துதான் மாம்பழங்கள் சாப்பிடுகிறாய், இது கூடவா தெரியாது?....'' என்று பகவானி பாயி பஷிருக்கு தரவாகப் பேசினாள்.
'' எனக்கு என்னத் தெரியும் பழம் வாங்க அப்பாதானே போவார்.''
அம்மா தனது மகனை வருத்தம் தோய்ந்த கண்களுடன் பார்த்தாள்.
'' மாம், ஐயா இறந்ததற்குப் பின் யாரும் வருவதில்லை'' என்றான் பஷிர்.
''சரி, இனி நான் வருகிறேன் உனது கடைக்கு''
''அம்மா, நீங்க அங்கு போய் என்ன செய்யப் போகிறீர்கள்'' மகன் மீண்டும் அதட்டினான்.
பகவானி அம்மா பதிலேதும் கூறாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவள் தினமும் காலையிலேயே பஷிரின் கடைக்குப் போய் விடுவாள். பஷிர் மாம்பழக் கூடையின் மேல் பழைய துணியை விரித்து சேட்டானியை உட்கார ஏற்பாடு செய்தான். வாடிக்கயாளர்கள் வருவார்கள் போய் விடுவார்கள் னால் பகவானி அங்கேயே உட்கார்திருப்பாள். எல்லோருடைய பேச்சையும் கேட்பாள். திரும்புகையில் கையில் பழங்கள் நிறைந்த பை இருக்கும்.
ஒரு நாள் பஷிர் கிளி மூக்கு மாம்பழத்தை வெட்டி வாழையிலையில் வைத்துக் கொடுத்தான். '' அம்மா, எங்கள் கைப் பட்டதை நீங்கள் சாபிடுவீர்களா?'' என்று கேட்டான்.
'' இதுல என்னப்பா இருக்கு?'' என்றபடி பகவானி பாயி பழத்தை சாப்பிட்டு விட்டாள். அந்த பாதை வழியாக யாரும் போவதில்லை என்றோ கடைக்கு யாரும் வருவதில்லை என்றோ இல்லை னால் யாருக்கும் சேட்டானி பகவானியிடம் கேட்பதற்கு தைரியம் இல்லை. மகன்கள் சொல்வதை நிறுத்தி விட்டார்கள். சாப்பாட்டு நேரத்திற்கு வரவில்லை என்றாள் யாரையாவது விட்டு அழைத்து வரச் சொல்வார்கள் மருமகள்கள்.
சேட்டானி வீட்டிலிருந்து கிளம்புவது தொடர்ந்தது. வழியில் நான்கைந்து பேர் பழக்கமாகி விட்டார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே காலையிலேயே கடையை அடைந்து விடுவாள். அவளிடம் இப்பொழுதெல்லாம் நேரம் இருப்பதில்லை. இறந்து போன கணவனை எப்போதாவது நினைத்துக் கொள்வாள். பஷிரின் கடைக்கு இப்படி தினமும் போவது அவளது குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்பதையும் அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஒருநாள் மூன்று மகன்களும் தங்களுக்குள் விவாதம் செய்தார்கள். தங்கள் குடும்பத்திற்கு நெருங்கியவர்களுடனும் லோசனை செய்தார்கள். '' அப்பாவின் த்மா இப்பொழுது பஷிரின் கடையில் தங்கி விட்டிருக்கிறது... அதனால்தான் அம்மா அங்கே தினமும் போகிறாள்'' என பெரிய மருமகள் தெரிவித்தாள்.
'' என்ன செய்யலாம்?''
'' புனித யாத்திரை போகலாம்''
'' இல்லை, பிண்டம் வைச்சு பூசை செய்திடலாம்''
'' கடவுளை குண்பிட்டாலே போதும் எல்லாப் புண்ணியமும் கிடைத்து விடும்'' என்றாள் மூத்த மகள்.
சேட்டானி மாம்பழங்களை வெட்டி இளைய பேரனுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் வீட்டில் யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்கவில்லை. னால் வீட்டில் உள்ளவர்கள் ஏதோ மத காரியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
''குருஜி விரிந்தாவனில் இருந்து வருகிறார். அவர் பகவத்கீதையின் கதைகளைப் படிப்பார்''
'' எவ்வளவு செலவு கும்? அதிகமாகுமா?'' சின்ன மகனின் கவலையான குரல் கேட்டது. சேட்டானி திரும்பி மகனின் வெட்கமற்ற முகத்தைப் பார்த்தாள். அப்பா இவனுக்காகத்தான் அதிகம் செலவு செய்திருக்கிறார். '' எனக்கு கிளி மூக்கு மாம்பழம் அதிகம் பிடிக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன் னால் ஒன்றுக்கு மேல் சாப்பிட்டதில்லை. னால் இவனுக்கு இரண்டு மூன்று சாப்பிடாமல் வயிர் நிறையாது. மற்றப் பிள்ளைகளுக்குத் தெரியாமல் இவனுக்கு மாம்பழம் ஊட்டி விட்டிருக்கிறேன். இன்றைக்கும் அவனது பிள்ளைக்குத்தான் மாம்பழம் ஊட்டிக் கொண்டிருக்கிறேன். னால் இவன் செலவு பற்றி கவலைப் படுகிறானே?'' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். திடீரென திரும்பி '' டேய், இப்பவெல்லாம் பஷிர் மாம்பழங்களுக்கு பணம் கூட வாங்கிக் கொள்வதில்லை னால் நீங்கள் செலவு பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களா?'' என்றாள்.
'' அம்மா! உங்களுக்கு என்னவாயிற்று? எங்குள்ள பேச்சை எங்கே இழுத்துப் போகிறாய்? இந்த விஷயர்த்தில் பஷிரின் பழங்கள் எங்கே குறுக்கே வந்தது.''
''இப்பவெல்லாம் அம்மாவின் மூலை சரியக இல்லை''
சேட்டானி மீண்டும் கோபத்துடன் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள். சூப்பப்பட்ட மாங்கொட்டைகளை சேர்த்து அள்ளிக் கொண்டிருந்தாள். திடீரென '' எனக்கு இது ஒன்றும் பெரிய செலவாகப் படவில்லை. குருஜிக்கு வரப் போக செலவு கொடுங்கள். அவரது சீடர்கள் மற்றும் உடனிருப்பவர்களுக்கு தங்க இடம் ஏற்பாடு செய்யுங்கள்''
''நமக்குத்தான் இவ்வளவு பெரிய வீடு இருக்கிறதே'' என்றாள் மூத்த மகள்.
'' பணம் தேவைப் படுமில்லையா? பணம் என்ன சும்மாவா கிடைக்கிறது? அப்புறம், சொந்தம் பந்தங்களையெல்லாம் கூப்பிடனும், எல்லாம் வீணான பேச்சு.....'' பகவானி பாயி அழுத்தம் திருத்தமாக.
னால் மகன்களும் மகள்களும் பகவத்கீதை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். அப்பாவின் த்மாவுக்கு சாந்தி கிடைக்கும். வீட்டின் சூழ்நிலையும் மாறும் அம்மாவின் இந்த உளரல் பேச்சும் நின்று போகும். பரலோகத்தின் கவலை உண்டாகும். கடவுளின் பாதங்களில் கவனம் செலுத்துவாள். என அவர்கள் திட்டவட்டமாக முடிவு எடுத்துக் கொண்டார்கள்.
'' குருஜி குளிர்காலத்தின் போது வருவதாக தெரிவித்து விட்டார்''
வெகு சீக்கிரமாகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப் பட்டு விட்டது. பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப் பட்டு விட்டன. சொந்த பந்தங்களுக்கு அழைப்பு விடுத்தாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தினரும் கூடி விட்டார்கள். ஏகாதஷி அன்று குருஜி கதை படிக்கத் துவங்கி விட்டார்.
பகவானி பாயிக்கு திடீரென ஏன் சிரிப்பு வந்ததோ தெரியவில்லை. அருகில் உட்கார்ந்திருந்த மூத்த மகனைப் பார்த்து '' யப்பா, என்னப்பா மதம் எங்கிருக்கு மோட்சம்? எல்லாமே இங்கேயேதான் தேங்கி விடுகிறது'' என்றாள்.
மூத்த மகன் சிடுசிடுப்போடு '' அம்மா, குருஜியின் போதனை நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்'' என்றான். எதுவும் பேசாமல் சேட்டானி எழுந்து வீட்டிற்கு வெளியே போய் விட்டாள். மகன்களும் மருமகள்களும் ஒருவருக்கொருவர் ஜாடை காட்டிக் கொண்டு இருந்து கொண்டார்கள். நடைபாதையின் மரங்களை எண்ணிக் கொண்டே பஷிரின் கடைக்கு வந்து சேர்ந்தாள். பஷிருடன் சேர்ந்து கடந்த மாதம் தோட்டத்திலிருந்து எவ்வளவு மாம்பழங்கள் வந்தன என்று கணக்குப் பார்க்கத் துவங்கினாள். என்ன விலைவில் விற்றது, எவ்வளவு லாபம் கிடைத்தது என்றும் கணக்குப் பார்த்தார்கள். '' அம்மா, மொத்தம் றாயிரத்தி இருநூறு மாம்பழங்கள் வந்தது... அதில் சுமார் நூறு மாம்பழங்கள் அழுகி விட்டது....''
''ஏன் அழுகி விட்டது? நீ அவற்றை பாதுகாத்திருக்க வேண்டாமா? இல்லையென்றால் அவற்றினை சாறு பிழிந்து மாம்பழ அப்பளங்கள் செய்திருக்கலாமே?'
'' எங்கு வைத்து செய்வேன்? இந்த நடை பாதையிலேயா? எனக்கென்று ஊரு, வீடு வாசல், நிலமுன்னு எதாவது இருக்கிறதா என்ன?''
''மாம், அதுவும் சரிதான், நீ ஒரு வீடு வாங்கிக் கொள்ளேன்''
'' வேண்டாம் அம்மா, இன்னும் கொடுக்க வேண்டியது நிறைய இருக்கிறது. தோட்டக்காரனுக்கு வேறு கடன் அடைக்க வேண்டியிருக்கிறது''
'' மாம், அதுவும் சரிதான்''
சேட்டானி வீடு திரும்புகையில் அனைவரும் கோபமாக இருந்தார்கள். சேட்டானிக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. குருஜி அருகில் உட்காராமல் உள்ளே போய் கட்டிலில் படுத்துக் கொண்டாள். மறுநாளும் அவள் பஷிரின் கடைக்குப் போய் விட்டாள். அவளது இடம் வெறுமையாக இருப்பதை அனைவரும் பார்த்தார்கள். குருஜி கதை படித்துக் கொண்டிருந்தார். னால் குடும்பத்தாரிடையே புசுபுசுவென பேச்சுகள் நடந்து கொண்டிருந்தது.
'' அம்மாவின் மூளை குழம்பிப் போய் விட்டது''
'' அந்த பஷிர் தான் அம்மாவை இப்படி க்கி விட்டான்''
''பஷிர் மேல் என்ன தவறு இருக்கிறது. அம்மாவுக்கு தன்னுடைய மதம்-பாரம்பரியம் எல்லாம் எங்கே போய் விட்டது?''
''இபபவெல்லாம் அப்பாவைக் கூட அவள் நினைத்துக் கொள்வதில்லை. முன்பெல்லாம் நாள் முழுவதும் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பாள்''
''மாம், னால் அம்மா நோயாளி போலும் தெரியவில்லையே. அவளது முகம் முன்பைவிட பிரகாஷமாக இருக்கிறதே. அம்மா இத்தனை வயதானவள் என்றால் யாரும் நம்புவார்களா?''
''னால் பூசை-பாடங்களிலும் மதம்-வழிபாடுகளிலும் அவளின் மனம் கொஞ்சம் கூட லயிப்பதில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது''
''பாட்டி இன்று தனது தியான மாலையை ஜன்னல் வழியாக வெளியில் வீசி விட்டாள்''
''என்ன......?''
'' அம்மா உண்மையிலேயே பைய்த்தியமாகி விட்டார்கள்''
'' நான் தான் முன்னாலேயே சொன்னேனே''
'' இனி என்ன சொல்லியும் பயனில்லை''
'' அதட்டுவதனால் எந்த மாற்றமும் உண்டாகப் போவதில்லை. அவர்களுக்கு பஷிர் கடைக்கு போவது மட்டுமே முக்கியமானதாகப் படுகிறது''
''நிச்சயமாக பஷிர்தான் அம்மாவை இப்படி குழப்பி விட்டிருக்க வேண்டும்''
''பாவம், அந்த ஏழை மேல் ஏன் பழி போடுகிறாய்? அவன் என்ன செய்வான்....?''
'' இங்கே பகவத் கதை பாடிக் கொண்டிருக்கிறேன் நீங்கள் அங்கே கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்'' குருஜி கர்ஜித்தார்.
எல்லோரும் அமைதியாகி விட்டார்கள்.
நான்காவது நாள் கிருஷ்ணரின் ஜன்மாஷ்டமி இருந்தது. அம்மா காலையிலேயே மாயமாகி விட்டிருந்தாள்...... திரும்புகையில் அவள் வெறுங்கையோடு வந்தாள்.
''பஷிர் மாம்பழங்கள் கொடுத்தனுப்ப வில்லையா? இன்று படைப்பில் மாம்பழங்களின் அவசியம் இருக்கிறது.''
'' அவன் எத்தனை நாட்களுக்குத்தான் இலவசமாக பழம் கொடுத்தனுப்புவான்?''
'' நாங்கள் எப்போதிலிருந்து இலவசமாக சாப்பிடத் துவங்கினோம்?'' மூத்த மகன் உண்மையிலேயே கோபம் அடைந்தான்.
'' நாங்கள் தான் எப்பொழுதும் பணம் கொடுத்தனுப்பி விடுகிறோமே''
''மாம், டஜனுக்கான விலையில் கொடுக்கிறீர்கள். னால் பஷிர் கிலோவுக்கான விலையில் அல்லவா பழங்களை விற்கிறான். பாவம் அவனுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கும் பாருங்கள்''
பகவத் கதை முடிந்து விட்டது. குருஜி போய் விட்டார். மாம்பழங்களின் பருவமும் முடிய வந்துவிட்டது. வீட்டில் மகன்களும் மகள்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். மூத்த மகன் '' அம்மா, அப்பாவின் தெவஷம் எப்பொழுது வருகிறது?'' என்றான்.
'' நாள் எனக்கு நினைவுக்கு வரவில்லை'' சேட்டானி தனது மூளையை பலம் கூட்டி சிந்தித்துப் பார்த்தாள். னால் அவளுக்கு நினைவுக்கு வரவேயில்லை. பின் அவள் தன்னையறியாமல் '' திதி எப்பொழுதென்று எனக்கு நினைவில்லை, னால் அன்று அவர் பருவத்தின் முதல் மாம்பழத்தை வாங்கி வந்திருந்தார், பஷிரிடம் கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை அவனுக்கு நினைவு இருக்கலாம்....'' என்றாள். னால் பஷிரின் பெயரை உச்சரிக்கையில் அவளது நாக்கு குழறுவதை அவளால் உணர முடிந்தது.... '' வயசாயிடுச்சி இல்லையா, ஒன்னுமே நினைவில் இருப்பதில்லை....'' என்றாள் தனக்குத்தானே.

******************************
பிரபா கேதான்: இந்தி இலக்கிய உலகில் வெகுவாக அறியப் பட்ட எழுத்தாளர் பிரபா கேதான். இவரது நாவல்கள் ''வோ பேபே கர் சலே'', ''சின்னாமஸ்தா'' ''பீலி ந்தி'' ''அக்னி சம்பவனா'' ''தாலாபந்தி'' மற்றும் ''அப்னே அப்னே செகரே'' கியவைகள் பிரசித்தம் பெற்றவை. தத்துவ படிப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். ய்வு நூல்களையும் எழுதி உள்ளார். பிரான்ஸ் நாட்டின் பெண்ணிய எழுத்தாளர் சிமோன் தி போவுவார் எழுதிய சர்ச்சைக்குறிய புத்தகமான '' த செகண்ட் செக்ஸ்' என்ற நூலை இந்தியில் மொழிபெயர்த்தார். அவரது நூல் வெளியீட்டு கணக்கில் கவிதைகள், கதைகள் மற்றும் ய்வுகள் என எண்ணிக்கை கூட்டியிருக்கிறார். இதற்கெல்லாம் மேல் அவர் ஒரு தொழிலதிபராகவும் இருக்கிறார். பன்னாட்டளவில் தொழில் செய்கிறார். கல்கத்தா சேம்பர் ப் காமர்ஸ் அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். இத்தனை பரபரப்பிலும் இலக்கியம் போன்ற உணர்வு பூர்வமான துறையிலும் வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்.
அவரது கதைகள் பற்றி சொல்லித் தெரிவதை விட படித்துத் தெரிதல் நலமாக இருக்கும். பெண்களின் பிரச்சனைகளும், அவர்தம் அடிமன உணர்வுகளையும் கொஞ்சமும் கற்பனை கலக்காமல் தனது கதைகளில் வெளிப் படுத்தி உள்ளார். இவரது கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள் படிப்பவர்களை ஊக்கப் படுத்தியும் நம்பிக்கை அளித்தும் நலம் செய்கிறது. மிக எளிய நடையில் சிக்கலான விஷயங்களை எடுத்துச் சொல்வதும் சம்பவங்களை சலனச் சித்திரங்களைப் போல் வார்த்தைகளால் காட்சி படுத்தியிருப்பதும் இவருக்கே உரிய தனி சிறப்பு.
கைக்காப்புக்கு கண்ணாடி வேண்டுமா என்பதற்கு ஏற்ப இந்தக் கதையை படித்து அவர் குறித்த ஒரு மதிபீட்டுக்கு வரலாம்.

---------------------------------------

No comments: