Monday, October 09, 2006

தேவாவின் அம்மா

இந்தியில்: கம்லேஷ்வர் தமிழில்:மதியழகன்சுப்பையா


தேவாவின் அம்மா கம்பளம் நெய்பவள் னால் அவன் வெட்டியாகத்தாகம் இருந்தான். கம்பளம் நெய்வது ஒன்றும் தொடர்ந்து நடைபெறுவது இல்லை. அதனால் அதனை ஒரு வேலை என்று கூட சொல்ல முடியாது. எப்போதாவது சிலர் தங்கள் தேவைக்காக அல்லது தேவையில்லாமல் கூட நெய்து கொள்வார்கள். அவளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட கொடுத்து விடுவார்கள். அல்லது பழைய போர்வை நைந்து விட்டாலோ, மேல் துணி அல்லது அஸ்தர் கிழிந்து போய் உள்ளே இருக்கும் அழுக்கு வண்ணம் வெளியே பல்லிளிக்க துவங்கினாலோ அவற்றை மீண்டும் பயன் படுத்த வேண்டுமெனில் தேவாவின் அம்மாவிடம் கொடுத்து சரி செய்யச் சொல்வது தான் நல்ல வழி. மாதம் இருமாதங்களில் அவற்றை தறியில் நெய்து கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுவாள். அவளின் கூலி கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப் பட்டுவரும்.
தேவா தனக்கு நான்கு திசைகளிலும் பார்வையை சுழற்றும் போது இவை அனைத்தும் அவனுக்குப் பிடிபடும். அம்மாவின் ஏமாற்று வேலை அவனுக்குள் தைக்கும். அவள் தறிக்காக நூல் வாங்கும் போது அரைப் பங்கு அதிகமாக வாங்கும் பழக்கத்தை வைத்திருந்தாள். பல முறை இதனை சண்டைப் போட்டு வாங்குவாள். மேலும் தான் வாங்கிய அதிகபடியான நூலை சேர்த்து வைத்து ஒரு பத்து பதினைந்து கம்பளிகள் செய்தற்குப் பின் ஒரு அழகான கம்பளம் ஒன்றை செய்து விற்று விடுவாள். அவன் நாலாபுறமும் பார்க்கும் போது அவனது பார்வையில் படும் அனைவரின் முகத்திலும் வெறுப்பு, அன்பு, பாராட்டு அல்லது வசவு என எந்த உணர்வும் வெளிப் படுவதாக அவன் உணர்ந்தது இல்லை. இது ஒரு மாறுபட்ட ஒருமித்த சூழ்நிலையாக இருந்தது. இவர்களெல்லாம் கடங்கள் சிவனை விடவும் மேலான யோகிகளைப் போல் விஷம் குடித்து விட்டு கண்களை மூடி அசையால் இருப்பது போல் இருந்தார்கள்.
அதனால் அவன் எப்பொழுதும் வீட்டில் தங்குவதே இல்லை. மதியம் னதும் அவன் வீட்டிற்கு வந்தால் அவனது மனது சுருங்கிப் போகும். இவ்வளவு நேரத்தை வீணாக கழித்து விட்டோமே என மனம் வருந்தும். இதைவிட அம்மாவின் வேலைகளில் அவளுக்கு உதவியாக இருந்திருக்கலாமே எனத் தோன்றும். எதுவும் இல்லையென்றால் பஞ்சினை சுத்தப் படுத்தியிருக்கலாம், அதனால் அவற்றை காய வைக்க முடிந்திருக்கும், இல்லையேல் நூல்களை சாயம் பூச தயார் செய்து இருக்கலாம் எதுவுமில்லாமல் போயிற்று. வீட்டிற்கு வந்தான். முற்றமே அலங்காரமாக இருந்தது. நூல்கள் வலையாக பரப்பப் பட்டிருந்தது. சாயம் பூசப் பட்ட நூல்பந்துகள் அங்கும் இங்கும் சிதரி உருண்டுக் கிடந்தன. ராட்டு ஒரு புறம் இருக்க அம்மா உட்கார்ந்தபடி நூல்களை சுற்றிக் கொண்டிருப்பாள் அல்லது பஞ்சினை பதப் படுத்திக் கொண்டிருப்பாள். இவன் வரும் ஓசைக் கேட்டவுடன் அவனை ஏறிட்டுப் பார்க்காமல் எழுந்து குடிசைக்குள் புகுந்து கொள்வாள். பெட்டியிலிருந்து சங்கிலி போட்ட கடிகாரத்தை கையில் எடுப்பாள். கடிகாரத்தை கையில் வைத்து அதனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பாள். கடிகாரத்தின் சங்கிலி தொங்கி ஊஞ்சலாடும்.
அப்போதுதான் தேவாவுக்கு மனது கஷ்டமாக இருக்கும். அவனது பொறுப்பின்மை மற்றும் சோம்பேரித்தனம் குறித்து அதிக கவலை ஏற்படும். அம்மா அங்கு இங்கு என போவதில்லை வருவதில்லை. வீட்டிலேயே கிடக்கிறாள். அவள் மனம் அலையாதா? சோர்ந்து போகாதா. என் மேல் கோபம் வராதா? எப்பொழுதும் எதுவும் சொன்னதில்லை. கேட்டதில்லை. நான் தாமதமாக வந்தால் சத்தம் போடுவதில்லை. திட்டுவதில்லை. ஏன் எதுவும் கேட்பதில்லை. எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவளைப் போல் இருக்கிறாள். னால் அவள் கடுமையான வலியுடன் கூடிய மௌனத்தால் அதை கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்குப் படும். அவள் குடிசைக்குள் சென்று கடிகாரத்தைப் பார்க்கும் போது 'தேவா இவ்வளவு நேரம் எங்கு இருந்தாய்' என்று கேட்பதாகவே படும். பின் ஊசிகள் மற்றும் நூலில் பார்வையைப் பதித்தபடி 'உங்கள் தேவா எப்படி கெட்டுப் போய் விட்டான் என்று பாருங்கள், எந்த கவனமும் இல்லை, அக்கரையும் இல்லை, இவன் மீதும் நம்பிக்கை இழந்து விடவா? என்று கேட்பதாக உணர்வான்.
அப்பொழுது அவனது கண்கள் ஈரமாகி விடும். எல்லா பிரச்சனைக்கும் தானே காரணம் என நினைத்துக் கொள்வான். அவனுக்கு அப்பாவின் நினைவு வரும். அப்பாவை அவன் பார்த்திருக்கிறான் னால் எப்பொழுதும் உணர்ந்ததே இல்லை.
அம்மா குடிசையிலிருந்து வெளியே வருவாள். இருக்கை விரிப்பாள். உணவு பரிமாறிவிட்டு தேவாவை கூப்பிடுவாள் '' வாப்பா தேபு, ரெண்டு கிளாச் தண்ணி வைச்சுக்கோ....'' என்று மெலிதாய் கத்துவாள்.
அப்பொழுதுதான் அம்மாவும் அதுவரை எதுவும் சாப்பிடாமல் இருக்கிறாள் என்பதை உணர்வான். '' அம்மா, நீ சாப்பிட்டிருக்கலாம் இல்லையா, நான் வாத்தியார் வீடு வரைக்கும் கொஞ்சம் போயிருந்தேன். அவர் கிட்ட எப்பவும் ஐம்பது அறுபது பேருக்கான வேலைக்கான வாய்ப்பு பற்றியத் தகவல் இருக்கிறது. இனி ஸ்கூல் திறக்கும் போது எதாவது செய்தாலும் செய்யலாம். ....'' என்றான். இப்படி பொய் சொல்லும் போது அவனுக்கு எதுவும் தோன்றாது னால் அதற்குப் பின் அம்மாவின் முகம் இருகிப் போய் விடுவது கண்டு அவன் தனக்குள் முடங்கிப் போவான். அம்மா மெதுவாக புன்னகைத்து விட்டு ''ராம்லாலுக்கு ஒரு கம்பளம் செய்ய வேண்டியிருக்கு, நூல் தயாராய் இருக்கிறது. நீ நாளைக்கு அதுக்கு லையில போய் சாயம் மட்டும் பூசிட்டு வந்திடு. சீக்கிரமா அந்த நெஞ்சிடலா....'' என்றாள் அம்மா.
'' அம்மா, வீட்டிலேயே சாயம் பூசிக்கலாம், பாஜாரில் சாயம் பூச செலவு கும்''
''அடர்த்தியான சாயங்களை நான் தயாரித்துக் கொள்வேன் னால் என்னால் அவற்றை அரைக்க முடியவில்லை. மேலும் அரைக்காமல் சாயம் பிடிக்காது. எனக்கு தோள் வழி தாங்காது. இல்லையின்னா.......'' என்றாள் அம்மா.
'' நான் அரைக்கிறேம்மா....... நாளைக்கு நீ எல்லாத்தையும் எடுத்து வை மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்''
இப்படியேத்தான் நாட்களைக் கடத்திக் கொண்டே போவான். இவை எல்லாம் எப்படி நடக்கிறது என்று தேவா எப்பொழுதும் உணர்ந்ததே இல்லை. அம்மா எந்த நினைவுகளில் மூழ்கி இருக்கிறாள் என்றோ என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்றோ அவனால் கேட்க முடியாது. அப்படி அவன் கேட்கும் வாய்ப்பு ஏற்படும் போது சாஅந்தக் கடிகாரமும் அதன் தங்கச் சங்கிலியியும் குறுக்கே வந்துவிடும். அம்மா கவலையாகக் காணப் படுவாள் அவனும் தனக்குள் சந்தோஷமில்லாமல் தவித்துக் கொண்டிருப்பான்.அப்படியே அவன் முயற்சி செய்தாலும் அவனுக்கு தைரியம் பத்தாமல் போய் விடும். காரணம் அந்தக் கடிகாரத்திலும் அந்தச் சங்கிலியிலும் அவனது அப்பாவின் வரலாறு பிணைந்து இருந்தது. அவன் எங்கோ ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். அவர் வேறு திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். ஐந்து வருடங்களுக்கு முன் சில மணி நேரங்களுக்காக அம்மாவை பார்க்க வந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருந்தான். அப்பொழுது அவருக்கு இரண்டாம் திருமணம் முடிந்து விட்டிருந்தது. அம்மா யாரிடமோ கடன் வாங்கி சமையல் செய்து இருந்தாள். னால் அவர் சாப்பிடவில்லை. அந்த நேரம் அக்கம்பக்கத்துப் பெண்கள் எல்லாம் சேர்ந்து தனக்கும் மகன் தேவாவுக்கும் ஜீவனாம்சம் என்று எதாவது கேட்டு வாங்கும் படி அம்மாவைத் தூண்டினார்கள். னால் அம்மா அந்தப் பேச்சை எடுக்கவே இல்லை. அடிக்கடி கடிகாரத்தின் தேவையாகி விடுவதாக அப்பா சொன்னார். அதைக் கொடுத்து விட்டால் நலமாக இருக்கும் என்று கூறினார். இந்த ஒரு பொருள் தான் நினைவுக்கு என்று இருந்து போனது அது மட்டுமல்லாமல் தேவாவுக்கும் அவனது நேரம் குறித்து தெரிவிக்க உதவியாக இருக்கிறது. வேண்டுமானால் அதில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கச் சங்கிலியை வேண்டுமானால் எடுத்துச் செல்லலாம் என்று தெரிவித்தார். இந்த விஷயத்தை துவங்கி விட்ட காரணத்தாலும் கடிகாரத்தை கேட்டது அதில் தொங்கும் தங்கச் சங்கிலிக்காகத்தான் என்று தெரிந்து கொண்டார்களோ என வெட்கத்தாலும் அவர் மேற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை. அவர் போய் விட்டார்.
அவர் போன பின் பக்கத்து வீட்டுக் கிழவி நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து விசாரிக்க வந்தார். ஏனெனில் அந்த சமயத்தில் எல்லோர் வீட்டிலும் அந்தப் பேச்சாகவே இருந்தது. கூடவே தேவாவின் அம்மாவின் நடத்தைப் பற்றியும் நேர்மையாக விவாதிக்கப் பட்டது. நடத்தையை விடவும் அவளின் நேர்மை குறித்தும் கவலையை விட அதிகமான பொறுமை குறித்தும் அவளின் சந்தோஷம் மற்றும் கஷ்டங்கள் குறித்தும் தீவிரமாக பேசப் பட்டு வந்தது. பக்கத்து வீட்டுக் கிழவி வந்து அங்கேயே உட்கார்ந்து இருந்தாள் பின் '' ஏண்டி, தேவா அம்மா, அவர் பேச்சு பழக்கம் எப்படி இருந்தது?'' என்று கேட்டாள்.
'' அப்படியேதான் இருந்தது பாட்டி, உண்மையில் கொஞ்சம் கூட மாற்றமில்லை......நான் எப்படி நடந்து கொள்வது என்றுகூட தடுமாற்றமாக இருந்தது. னால் குணம் இன்னும் மாறவில்லை. உடம்பு ரொம்பவே மாறிவிட்டது. நான் அவரை முதல் பார்வையில் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இப்பவே அவரது முன்பற்கள் இரண்டை மாற்றிக் கொண்டுள்ளார். போகும் போது என்னிடம் கடிகாரத்தை கேட்டார். னால் எனக்கு கொடுக்க மனசில்லை. என்னமோ தெரியல்ல அந்த கடிகாரத்து மேல அப்படி ஒரு விருப்பமாகி விட்டது.
'' அப்படின்னா அவருடைய அக்கரை கவலை எல்லாம் அந்த கடிகாரத்து மேலதான் இருந்திருக்கு. அதனுடைய சங்கிலி தங்கத்தால் னதுல்ல'' என்று கிழவி தனது தங்கத்தை வெளிப்படுத்தினாள்.
'' அப்படி இல்லை பாட்டி, அப்படி அவருக்கு அதுதான் வேண்டுமென்று வந்திருந்தால் என்னால் தடுத்திருக்க முடியுமா. நான் கூட கேட்டேனே அதில் இருக்கும் தங்கச் சங்கிலியை வேண்டுமென்றால் எடுத்துப் போங்கல் என்று, னால் அதற்குப் பின் அவர் கடிகாரத்தைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே.'' என்றாள் தேவாவின் அம்மா.
'' தைரியம் இருந்திருக்காது, இல்லைன்னா இப்ப உங்க நிலைமை என்னவென்றாவது புரிந்திருப்பான் இல்லையா'' என்றாள் கிழவி.
'' அப்படி இல்லை பாட்டி, நீ சொல்கிற மாதிரி எதுவும் இல்லை''
'' அடியே, இப்படி யோசிச்சா வேலைக்கு காது, சமயத்தில மேலேயும் கிழேயும் பார்த்துக்கனும் தேபு அம்மா! ம்பிள்ளைங்கள இவ்வளவு நேர்மையானவனாக நினைக்கக் கூடாது. ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் அசைவுக்குப் பின்னும் அர்த்தம் இருக்கும். நீ உனது ஜீவானாம்பசம் பற்றி பேசியிருக்க வேண்டியதுதானே'' என்று கிழவி தான் பேச இருந்த விஷயத்தின் கம்பியை மீண்டும் பிடித்தபடி கேட்டாள்.
'' அதான் சொன்னேனே..... அப்படி என்னத்தான் பேசிடப் போறேன். நான் தான் திருப்தியா இருக்கேனே. இன்னும் ஒன்று இரண்டு வருடங்கள் தான் அப்புறம் தேபு வேலை வெட்டிக்கு தயார் கி விடுவான். இதுக்கப்புறம் நான் ஏன் அவங்கக்கிட்ட வாய் கொடுக்கப் போறேன் ?'' என்றாள் அம்மா தீர்மானமாக.
அதிலிருந்து அம்மாவின் கவனம், அன்பு மற்றும் அக்கரை என அனைத்தும் தேவாவின் மேல் பதிந்து விட்டது. தனது வயிற்றைக் காயப் போட்டு தேவாவை படிக்க வைத்தாள். னால் இப்பொழுது அவன் படித்து முடித்து வெட்டியாக வீட்டில் இருக்கிறான் இந்த நிலையிலும் அவள் அவன் மீதான அன்பு மாறாமல் அப்படியே இருந்தாள். அவன் அங்கும் இங்கும் அலைவதையும் திரிவதையும் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதெல்லாம் வீட்டிற்கு தாமதமாக வருகிறானோ அப்பொழுதெல்லாம் கண்டிப்பாய் பொய் சொல்லி அவளை ஏமாற்றுவான் அந்தப் பொழுதுகளில் அவள் எப்படி அவனது போலித்தனத்தை உடைத்து உண்மையைக் காட்ட முடியும். இந்த விஷயத்தை அவள் நன்கு அறிவாள்.
ஒரு நாள் அவன் வீடு திரும்புகையில் வழக்கம் போலவே தாமதமாகி விட்டது. அன்று அவனுடன் வேறு ஒரு ள் இருந்தான். அவனது சைக்கிளின் பின்னால் புத்தகக் கட்டுகள் இருந்தது. முன்னால் கைப்பிடியில் தொங்கிக் கொண்டிருந்த பையில் செய்தித்தாள்கள் நிரம்பி இருந்தது. அந்த மனிதனின் கண்களில் ஒரு மாறுபட்ட நம்பிக்கை ஒளி இருந்தது. அவனது முகத்தில் கடின உழைப்பின் குரூரமும் கடுமையும் படிந்து இருந்தது. தேவா வாசலில் நின்றபடி அவனுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான். பேசி முடித்து விட்டு உள்ளே நுழைந்த அவன் பேச்சில் தயக்கமோ சோர்வோ இல்லை. மனதின் கவலையை வெளியே விட்டு வந்தவன் போலும் தனது சுயத்தை உணர்ந்தவனைப் போலும் உற்சாகமாக '' அம்மா, நீ நேரத்துக்கு சாப்பிட்டுக்கோ. என்னை எதிர்பார்த்து உட்கார்ந்து இருக்க வேண்டாம். எனக்குத்தான் கால்கள் முளைத்து விட்டதே...'' என்றான் தேவா.
அவனுடைய இந்த உற்சாகப் பேச்சைக் கேட்கும் போது உடைந்து போன அவளது மனது நிரம்பி வழிந்தது. னால் கொஞ்சம் கவலையும் இருந்தது. இவன் தன்னை விட்டு முற்றிலும் விலகி விடக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டாள். அவன் ஒவ்வொரு நாளும் பகல் முழுவதும் பரதேசிகளைப் போல் அலைகிறான். இரவில் வெகு நேரம் வரை குப்பி விளக்கொளியில் என்னனென்னவோ படித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுதெல்லாம் அவன் தாமதமாக வீடு திரும்புகையில் அவன் தயங்காமல் இருப்பது அம்மாவின் இதயத்தில் ஊசி குத்தலாக இருந்தது. அவளுக்கு கஷ்டமாகவும் இருந்தது. கவலையாகவும் இருந்தது. னாலும் ஒரு மாறுபட்ட மகிழ்ச்சியும் இருக்கத்தான் செய்தது. தேவா ஏதோ நல்ல விஷயத்தில் ஈடு பட்டுள்ளதாகவே அவனுக்குப் பட்டது. னால் இப்படி அக்கரையில்லாமல் இருப்பதும் கொஞ்சம் சரியாகப் படவில்லை.
தேவா அரசியல்வாதிகளுடன் பழக்கிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிய வருகிறது. அவர்களுடன் பைகளைத் தோளில் மாட்டிக் கொண்டு அலைந்து திரிகிறான் என்பது தெரிய வருகிறது. இப்பொழுதெல்லாம் அவன் தன்னைப் பற்றியும் தனது வீடு பற்றியும் எந்தக் கவலையும் கொள்வதில்லை. அவனுக்கு அதிக கவலை தருவது தொலைவில் இருப்பவர்கள் அல்லது நகரத்தில் இருப்பவர்கள் பற்றியதுதான். பல முறை இரவுகளிலும் வெளியில் தங்கி விடுவான். தேவா செய்தித்தாள் விற்கிறான் என்று வீடுகளில் பேச்சுகள் பேசப் பட்டது. தாழ்த்தப்பட்டவர்களைப் போல் வீடு வீடாக அலைந்து நாலு பைசாவுக்கு செய்தித்தாள் விற்றுக் கொண்டிருந்தான். கெட்டது பற்றிய விவாதம் நடக்கையில் தேவா மற்றும் அவனது அம்மா பற்றி இன்னும் கடுஞ்சொற்களால் கரி பூசி விடுவார்கள். னால் நல்லது பற்றிய விவாதம் வந்தால் அவர்கள் இருவரின் வாழ்க்கை சக்திக்கு முன்னால் அனைவரும் தலை குணிந்து கொள்வார்கள்.
தேவாவின் அம்மா மனதில் இந்த விஷயம் இன்னும் இருக்க முடியாது என்றாகி விட்டது. கடைசியாக இதற்கெல்லாம் என்னதான் முடிவு. சிந்தித்து சிந்தித்து இந்த விஷயம் அவளது வாயிலிருந்து வெளியே வந்து விட்டது. தேவா செய்தித் தாள்களை விணியோகித்து விட்டு வந்திருந்தான். அவன் சாப்பிடும் போது ''தேபு, நீ இப்படி பத்திரிக்கை விக்கிறது நல்லாயில்லை....''
தேவா அமையாக இருந்தான். அவன் சாப்பிட்டு முடித்ததும் கிளம்புகையில் அம்மா அவனை தடுத்துக் கேட்டாள். '' இதோ இந்த நூல்களை எல்லாம் எடுத்திட்டு எதிரில் போய் எடை போட்டுக் கொண்டு வா, இவற்றை கண்டிப்பாய் சாயம் பூசிக் கொண்டு வா.''
இதனைக் கேட்ட தேவா ஒரு பையில் நூல்களை அள்ளிக் கொண்டான். '' என்ன சாயம் பூச வேண்டும்'' என்று தேவா கேட்டான்.
'' நாலு பங்கு நீலச்சாயம் ஒரு பங்கு மஞ்சள்சாயம் 'பார்டருக்கு'' என்றாள் அம்மா.
நடக்கத் துவங்கியதும் அவனுக்கு திடீரென ஒன்று நினைவுக்கு வந்தது ''அம்மா, எனக்கு நேரம் கிடைக்காது. அதனால் என்னுடைய குர்த்தாவை துவைத்துப் போட்டுவிடு. இச்திரி நான் செய்து கொள்கிறேன். நாளைக்குப் போட்டுக் கொள்ள குர்த்தா எதுவும் இல்லை'' என்றான். அம்மா' ''ஹ¥ம்'' என்றதும் அவன் போய் விட்டான்.
அம்மா அவனது குர்த்தாவை சோப்பு போட்டு துவைத்தாள். அதில் நீலம் மற்றும் கஞ்சி போட்டாள். கம்பியில் பரப்பி வைத்து காத்திருந்தாள். னால் தேவா இன்னும் வரவில்லை. சாப்பாடு சமைத்து முடித்துக் காத்திருந்தாள் னால் தேவா இன்னும் வரவில்லை. இரவு வந்தது போய் விட்டது. னால் தேவாவின் காலடிச் சத்தம் இன்னும் கேட்கவில்லை. துளசி மாடத்தில் மேலாக கட்டப் பட்டுள்ள கொடியில் அவனது குர்த்தா காய்ந்து சுருங்கிப் போய் கிடந்தது. னால் அவன் இன்னும் திரும்பி வரவில்லை. அம்மாவின் கண்களில் இருந்து தூக்கம் பறந்து அவனைத் தேடிக் கொண்டிருந்தது. னால் அவன் அமைதியான அதிகாலைப் பொழுதிலும் அவன் திரும்பி வரவில்லை. அம்மா இதையும் ஏற்றுக் கொண்டாள். கொடியிலிருந்து குர்த்தாவை இறக்கி மடித்து பெட்டியில் வைத்து விட்டாள். எப்பொழுது வந்து அதை கேட்டு நிற்பானோ தெரியவில்லை.
மூன்றாவது நாள் பண்டித் தனது கம்பளம் வாங்க வந்திருந்தார். அப்பொழுது '' று ஏழு நாட்களில் கொடுத்து விடுவேன். தேவாவிடன் சாயம் பூச கொடுத்து அனுப்பி உள்ளேன். எந்த சாயக்காரனிடம் நூல்களை கொடுத்தான் என்றுத் தெரியவில்லை. தேவா நாளை அல்லது நாளை மறுநாள் கண்டிப்பாக வெளியிலிருந்து வந்து விடுவான். இரண்டு - நான்கு நாட்களில் அதை நெய்து நானே கொண்டு வந்து கொடுத்து விடுவேன். நீங்கள் கவலைப் படாதீர்கள்'' என்று அம்மா தெரிவித்தாள்.
'' நாளை அல்லது நாளை மறுநாள் தேவா திரும்பி வந்து விடுவான்? என்று யாரிடம் சொல்லிட்டுப் போயிருக்கிறான்? என்று சிடுசிடுத்தார். அவன் வர ஒரு வருடத்துக்கும் அதிகம் னாலும் கும். அவனை கைது பண்ணியிருக்காங்கன்னா சும்மாவா........?'' என்று பண்டித் முடித்தார்.
''கைதா.......?'' அம்மா திடுக்கிட்டு நின்றாள்.
'' போராட்டம் நடத்தினா தண்டனை அனுபவித்துதான் கனும்..''
இதனைக் கேட்டதும் அம்மா அமைதியாகி விட்டாள். னால் எது எப்படியோ உங்கள் கம்பளம் கிடைத்து விடும் எப்படியானாலும் நான் அதை தந்து விடுகிறேன் என்று மட்டும் அம்மா சொன்னாள்.
தேவா ஜெயிலுக்குப் போன செய்தி தெரு முழுவதும் பரவி விட்டது. அவன் இங்கிலருந்து சிலரோடு சேர்ந்து கர்ஹல் தாசிலுக்கு சென்றுள்ளான். அங்குதான் அவன் கைது செய்யப் பட்டுள்ளான். ஒரு வருடத்திற்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. னால் இருநூறு ரூபாய் அபராதம் கட்டினால் தண்டனைக் காலம் பாதியாக குறைக்கப் பட வாய்ப்பு உள்ளது. னால் அவனது கூட்டாளிகள் யாருக்கும் அபராதம் கட்டுவது சரியெனப் படவில்லை.
தேவா என்ன குற்றம் செய்தான் என்பது பற்றி யாருக்கும் சரியாக தெரியாது. அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை அதனால் அவள் மிகுந்த கவலையில் இருந்தாள். தெருவில் உள்ளவர்கள் யாரும் இந்த விஷயம் பற்றி அம்மாவிடம் பேச வருவதில்லை காரணம் பணத்திற்கான ஏற்பாட்டை அவர்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடக் கூடாது என பயந்தார்கள். இனி அவள் யாரிடம் தான் சொல்வாள். தனியாக அமர்ந்து யோசிக்கையில் தேவாவின் அப்பா அடிக்கடி நினைவுக்கு வந்து போகிறார்.அவன் தேவா குறித்து மிகுந்த அக்கரை கொள்பவர். அவருக்கு தெரிந்தால் எனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என கோபப் பட்டாலும் படுவார். அவன் எனக்கும் மகன் தானே. என்னை விட்டால் அவனுக்கு வேறு யார் செய்வார். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இரத்தம் மற்றும் பாச பந்தம் என்பது முறிந்து போகுமா என்ன? என்று அவர் கண்டிப்பாய் தங்கப் படுவார் என்றும் அம்மா யோசித்தாள்.
அதனால் அம்மா அவருக்கு ஒரு கடிதம் எழுதினாள். அப்பா இருக்கும் பகுதிக்கு ஒருவர் வேலையாக செல்ல நேர்ந்தது அவரிடமே அம்மா கடிதத்தை கொடுத்து அனுப்பினாள். னால் திரும்பி வருகையில் இரண்டு சொல் எழுதிய கடிதம் என்று எதுவும் கொண்டு வரவில்லை.
இதைக் கேட்ட தேவாவின் அம்மாவுக்கு நம்பிக்கை வரவில்லை. ஒருவேளை சரியில்லாத சந்தர்ப்பத்தில் கடிதம் அவர் கைகளில் கிடைத்திருக்கலாம். அவருடைய மனது எந்த மாதிரியான கவலைகளில் சிக்கிக் கொண்டுள்ளதோ தெரியவில்லை. இதில் இந்த விஷயம் தெரிந்ததும் அவர் மனம் என்ன பாடு பட்டதோ. அமைதியான மன நினையில் அவர் இருந்தால் நிச்சயம் தபாலில் கடிதம் அனுப்புவார். வீட்டு விஷயம் அடுத்தவர் கைகளில் கொடுத்து விடுதல் கூடாது என்ற மனப்பான்மையில் தபாலில் அனுப்பினாலும் அனுப்பியிருக்கலாம்.
னால் ஒரு மாதத்திற்கும் அதிகமாகி விட்டது. னால் இதுவரை கடிதம் எதுவும் வந்தபாடில்லை. அவள் குடிசைக்குள் சென்றாள், கடிகாரத்தை கைகளில் ஏந்தி நின்றாள். அதன் தங்கச் சங்கிலி ஒரு பக்கமாக தொங்கிக் கொண்டிருந்தது. னால் இப்பொழுது யாரும் வந்திருக்கவில்லை. கடிகாரத்தின் முட்கள் மணியை மாற்றிக் கொண்டு நகர்ந்தன. அனால் அந்த அமைதியின் கனங்கள் நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தன. தனிமையின் பொழுது நகராமல் நின்று கொண்டிருந்தது. அதன் முட்கள் நகரவே இல்லை. அதை நகர்த்த முடியவும் இல்லை.
மெதுவாய் இருள் பரவியது. வீட்டின் அனைத்து மூலையிலும் இருள் நிரம்பிக் கொண்டிருந்தது. ஒரு ழமான பெரு மூச்சு விட்டபடி அம்மா எழுந்தாள். ராட்டையின் சுழற்சி நின்றவுடன் அமைதி இன்னும் கூர்மையாகி விட்டது.
அவள் இருட்டில் அமர்ந்து இருக்க உண்மை அவள் முன்னால் மலைப்பாம்பு போல் இருக்கத் துவங்கியது. இதுவரை அவள் எந்த நிழல் மீது நம்பிக்கை வைத்திருந்தாலோ........அதான் தேவாவின் அப்பா மீது...... அது எவ்வளவு முட்டாள் தனம். எவ்வளவு பெரிய துரோகத்தை அவர் இத்தனை வருடங்களாக செய்து வந்திருக்கிறார். எவ்வளவு தெளிவாக அனைத்துப் பொறுப்புகளையும் அவர் உதரி விட்டு போய் விட்டார். எவ்வளவு அழகாக அவர் அம்மாவின் பெண்மை மற்றும் அவளின் மனைவி என்ற உறவை திருப்தி படுத்திக் கொண்டிருப்பதாக நினைத்திருக்கிறார். அவள் வேறு எதையுமே சிந்திக்கக் கூடாது என்று க்கி விட்டார். அவர் இதைத் தானே எதிர் பார்த்தார். அவள் நொண்டிக் கொண்டும், நகர்ந்து கொண்டும் இறுதிவரை கணவனின் நிழலில் தன் வாழ்வை மாய்த்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்றுதானே நினைத்துள்ளார். அதைத் தானே பெருமையாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் நினைத்து உள்ளார். அவள் கீழே இறங்கி பூமியை தொட்டு உணரக் கூடாது என்று நினைத்திருக்கிறாரோ?. தேவா உன்னைப் போல் வளர்ந்து விடுவான் என்றும் குறை பட்டுக் கொண்டாரே. இந்த விஷயத்தில் அவளது குணத்தைப் பற்றி எவ்வளவு அவதூராக எண்ணியிருக்கிறார். இப்படியெல்லாம் எண்ணும் போது அவரது கண்களில் என்னமாதிரியான திரை மூடி இருக்கும்? அம்மா அனைத்தையும் நினைத்து குழம்பினாள்.
திடீரென அம்மா அந்த இருள் சூழ்ந்த குடிசையில் இருந்து வெளியே கிளம்பினாள். குங்குமத்தின் டப்பா அவளது கைகளில் இருந்தது. துளசி மாடத்தில் நிலவொளி மின்னிக் கொண்டிருந்தது. நாலாபுரமும் பால் போல் வெளிச்சம் சிந்திக் கிடந்தது. மிக மாறுபட்ட ஒரு அமைதியையும் அழகையும் உணர்ந்தாள். அவள் குங்கும டப்பாவை கையில் வைத்தபடி துளசி செடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளே புயலடிப்பது போல் இருந்தது. நடுங்கும் கைகளால் அவள் டப்பாவைத் திறந்தாள். குங்குமத்தை துளசிச் செடியின் நீல இலைகளில் கொட்டி தனது மங்கலத்தை அதற்கு ஒப்படைத்தாள். கண்கள் இமைக்காமல் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். துளசிமாடத்தில் தலை வைத்து வணங்கினாள். அந்த கருத்த இரவில் தனது தனிமையை நினைத்து வெடித்து சிதரி அழுதாள். பயத்தால் துடித்தாள். அவநம்பிக்கையால் நொருங்கிப் போனால். எதோ ஒன்று எங்கிருந்தோ அவளை அழ வைத்துக் கொண்டிருந்தது. அவளை தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ள முயன்று தோற்றுப் போனாள். அவள் கண்களில் கண்ணீர் சாரையாய் வழிந்து கொண்டிருந்தது. கண்ணீர் வரவைத்த காரணம் எங்கிருந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை.
அன்றிலிருந்து தான் சுமங்கலி என்பதற்கு அடையானமாக நெற்றியின் மேல் வகிட்டில் பூசிக் கொள்ளும் குங்குமத்தை அவன் பூசிக் கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் கடிகாரத்தின் தங்கச் சங்கிலியை விற்று நூல் வாங்கிக் கொண்டாள். பண்டித்தின் கம்பளம் நெய்து அவரிடம் கொடுத்து விட்டாள்.
இதோ ஒரு ண்டு முடிந்து விட்ட நிலையில் தேவா அம்மாவின் முன் வந்து நின்றான். அம்மா இன்னும் அந்த ராட்டைதான் சுற்றிக் கொண்டிருந்தாள். அதன் கைப்பிடி கண்ணாடியைப் போல் மின்னிக் கொண்டிருந்தது. அம்மாவின் முகத்தில் அதே இருக்கம் இருந்தது. கடுமையான பக்தி நிலையில் கிடைக்கக் கூடிய ஒரு சாந்தம் அது. நூல்களை வெட்டிக் கொண்டிருக்கையில் ஏற்படும் அமைதி- ராதனையின் போது ஏற்படும் அந்த மவுனம் கியவைகளை உணர முடிந்தது. தேவா அமைதியாக நின்று கொண்டிருந்தான். அம்மாவுக்கு அவனது வெட்க உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது. அவளது கண்களில் தாய்மை பொங்கி விட்டது. ''தேபு, நீ வந்திட்டியாப்பா..??'' என்று தழுதழுத்தாள்.
'' அம்மா, ......'' என்று அழைத்து நிறுத்தி விட்டான். '' எனக்கு ரொம்பப் பசிக்கிறது '' என்றான் மழலையாக.
'' பசியா....'' என்றாள் முகத்தை கேள்வி உணர்வாள் நிரப்பினாள்.
'' ஒரு ண்டு காலமாக பசியாகவே இருக்கிறேன். ..... அம்மா, ஒரு ண்டு காலமாக பசி.....''' என்றான் தேவா.
அப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது. எல்லாம் இயல்புக்கு திரும்பி விட்டது. அம்மா உணவு பரிமாறினாள். தேவா தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். அம்மாவும் மகனும் நேரமற்ற நேரத்தில் சாப்பிட உட்கார்ந்தார்கள். தேவா வேகமாக சாப்பிட்டுக் கொண்டே '' அப்பா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்'' என்றான்.
'' என்ன யிற்று?'' அம்மாவின் முகத்தில் எல்லா உணர்வு நரம்புகளும் ஒருங்கே புடைத்து நின்றந்து.
'' வண்டியில் எனக்கு பழக்காமான ஒருவர் கிடைத்து விட்டார். என்னை அடையாளம் கண்டு கொண்ட அவர்தான் இந்தத் தகவலை எனக்குச் சொன்னார். அப்பாவுக்கு கடுமையான காய்ச்சலாம். அவருடைய நிலை மிகவும் மோசமாகி அவர் சுமார் இருபத்நான்கு மணி நேரமும் மயக்கத்தில் இருந்தாராம். பின்பு நிலமை கொஞ்சம் தேறி உள்ளது. பின் இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உடல் நிலை பாதிக்கப் பட்டு விட்டதாம். சிறிய மருத்துவமனையில் இருந்து பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்களாம்'' என்றான் தேவா.
'' எப்பொழுதிலிருந்து உடல்நிலை சரியில்லை? '' அம்மா கேட்டாள்.
'' ஒரு மாத காலமாக, நான் வேண்டுமானால் நாளைக்குப் போய் பார்த்து வரவா?'' என்றான் தேவா.
அம்மா அமைதியாக இருந்தாள். இன்னும் நான்கைந்து கவளம் உண்டால். கடகடவென தண்ணீர் குடித்தாள். பின் எழுந்து விட்டாள்.
கண்னிமைத்து திறக்கும் முன் அம்மா நூல் கண்டுகளின் நடுவே ராட்டை அருகில் தலை கவிழ்ந்து உட்கார்திருந்தாள். அன்பு என்னும் இருளுணர்வு அவளைச் சுற்றிச் சூழ்ந்தது. இந்த இருளில் அவள் உணர்வற்றவாளாய் முடங்கிக் கிடந்தாள். வைத்துக் கொள்வதா- விட்டுவிடுவதா என்ற பெரும்குழப்பம் அவளை பிடித்து ட்டியது. னால் அவளால் வைத்துக் கொள்ளவும் முடியாது வெறுத்து ஒதுக்கவும் முடியாது. அவள் எழுந்து விளக்கை அணைத்தாள். தேவாவின் கண்களை மூடி இருந்தான். அம்மா கண்டிபாய் படுத்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவன் தூங்கிப் போயிருந்தான்.
காலையில் மெல்லிய குளிர் காரணமாக அவன் சீக்கிரமாகவே எழுந்து விட்டான். சுவற்றில் இருந்த துவாரத்தில் இருந்து வெளிச்சக் கீற்று வந்து கொண்டிருந்தது. குடிசைக்குள் இருந்த இருள் குறைந்து மறைந்து போயிருந்தது. அவனுக்கும் என்னவோ நல்லதாகப் பட்டது. அம்மாவின் கட்டில் வெறுமையாக இருந்தது. அவனது மனதில் எதோ ஒருமாதிரி பட்டது. எழுந்து குடிசையின் முன்புறம் வந்தான்.
வெளியே முற்றத்தில் புனிதம் பொழிந்து கிடந்தது போல் இருந்தது. மெல்லிய குளிரும் மனதின் மென்மையைப் போல் தண்மை ஒளியும் பரவிக் கிடந்தது. முற்றத்தில் துளசிமாடம் ஏதோ ஒரு நம்பிக்கையில் திடமாக நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் மண் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் துளசி செடி தன் நெற்றியில் குங்குமம் பூசி மிக அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.
இத்தனை அழகான நிறைந்த ஒரு காலைப் பொழுதை தன்னால் கிரகித்துக் கொள்ள இயலாத மன நிலையில் அந்த காலையில் முழுமையை வாங்கிக் கொள்ளும் பொருட்டு கண்களை மூடி ஒரு யந்திரத்தைப் போல் கட்டிலில் படுத்துக் கொண்டான். கொஞ்ச நேரத்தில் அவனால் தன் கண்களை திறக்க இயலவில்லை. தான் கண்ட பூர்ணம் கலைந்து போய் விடக் கூடாது என்று பதறுவதாய் பட்டது.
'' தேபு.... தேபு... '' அம்மா அழைத்தாள். '' விடிந்து விட்டது தேபு, எழுந்திரிப்பா....'' என்றால் அம்மா.
எழுந்து அவன் வெளியே முற்றத்திற்கு வந்து விட்டான். அம்மா குடிசையில் இருந்தால். அம்மா வெளியே வந்ததும் '' அம்மா, நாம் இன்றே போய் அப்பாவை பார்த்து வரலாம்'' என்றான்.
அவன் உண்மையிலேயே இப்படித்தான் சொல்கிறானா என்று அம்மா அவனையே பார்த்தாள். அவன் தனக்காக மட்டுமல்லாமல் அவனுக்காகவும் தான் அப்படிச் சொல்கிறானா என்று யோசித்தாள். அம்மாவின் அமைதியைப் பார்த்து '' நீ புரப்படும்மா, நாம் காலை பத்து மணிக்குப் போய் இரவு வண்டிக்கு திரும்பி வந்து விடலாம் '' என்ரான்.
'' நான் வர மாட்டேன்'' என்று அம்மா குடிசைப்பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
'' நீ வரமாட்டாயா"' அவன் அம்மா சொன்னதை புரிந்து கொள்ள வேண்டி மீண்டும் அதையே திருப்பிக் கேட்டான்.
'' இல்லை'' அம்மாவின் குரலில் உறுதி இருந்தது.
'' அப்படின்னா நான் போய்ட்டு வரவா..?'' என்று தேவா இயல்பாக சொல்லி விட்டான்.
'' வேண்டாம்'' அம்மா அதே உறுதியுடன் சொன்னாள். சொல்லிவிட்டு தனது வேலையில் மும்முரமானாள்.

------------------------------------------------------------------------------------
கம்லேஷ்வர்: ( பிறப்பு 1932) பிரபல எழுத்தாளர் கம்லேஷ்வர் இந்தி மொழி இலக்கியத்தில் நவீன கதைகளின் முன்னோடியாகவும் சமகாலக் கதைகளின் துவக்கக்கர்த்தாவாகவும் அறியப் படுகிறார்.
இவரது கதைகள் சாதாரண மனிதனின் வாழ்வியலோடு இரண்டற கலக்கும்படியானது. இயல்பு வாழ்க்கையின் அவலங்களுக்கு புதிய பாதைகளையும் பரிணாமங்களையும் இவரது கதைகள் ஏற்படுத்துகின்றன.
முற்போக்கு எழுத்துகள் துவங்கிய காலக் கட்டத்தில் அவற்றிற்கு புது வேகம் பெறச் செய்ய காரணமாய் இருந்தது கம்லேஷ்வரின் எழுத்துகளின் எனப்படும்.
இவரது கதைகளின் மாந்தர்களும் அதில் பதிவு செய்யப் பட்ட நிகழ்வுகளும் குடும்பச் சூழலை மையமாகவும் யதார்த்த மொழி மற்றும் கதைப் போக்கிலும் காட்சிகளைப் பதிவு செய்யும் ற்றல் இவருக்கேயுரிய தனிச் சிறப்பு எனலாம்.
இவரது கதைகளில் உர்து மற்றும் ங்கில சொற்களின் பிரயோகம் மிகையாக உள்ளதாக் ஒரு குற்றச்சாட்டு உண்டு. னால் தனது மொழி நிகழ் மக்களின் சிதைந்து போனதாக கருத்தப் படும் ஒரு பண்பட்ட யதார்த்த மொழி. எழுத்துக்கும் பேச்சுக்கும் என நான் இரு மொழிகளோடு இயங்க முடியாது. மேலும் மக்களோடு பழகப் பழக அவர்களின் சரள மொழி எனக்கு சவுகரியமாகவும் நான் வளர்த்துக் கொள்ளத்தக்கதாயும் இருக்கிறது. சொல்ல வந்த விஷயத்தை எந்த சிதைவும் இல்லாமல் அதிக புனைவும் இல்லாமல் சொல்ல முடிகிறது. என்று மொழி கலப்பு விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
இவரது படைப்புகள் விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளது. இவரது முக்கியப் படைப்புகளில் 'ராஜா நரசிம்யா' , கம்பே கா தாமி' ' மாஸ் கா தரியா' மற்றும் ' ஜிந்தா முர்தா' போன்ற கதைத் தொகுப்புகளும் 'டாக் பங்களா' 'சமுத்ர மேன் கோயா ஹ¤வா தமி' 'காலி ந்தி' கிய நாவல்கள் , 'சாரு லதா' மற்றும் 'அதுரி வாஜ்' என்ற நாடகங்கள், ' கன்டித் யாத்ராயேன்' மற்றும் 'பங்களாதேஷ் கி டயரி' கிய பயணக் கட்டுரைகள் மற்றும் 'நயி கஹானி கி பூமிகா' மற்றும் 'மேரா பன்னா' கிய ய்வுக் கட்டுரைகளும் பிரபலமானவைகள்
---------------------------------------------------------------------------------

No comments: